இணைப்பேராசிரியர், மா. மன்னர்கல்லூரி(த), புதுக்கோட்டை. ஒற்றுமை என்பது உலக ஒற்றுமை, நாட்டின் ஒற்றுமை, இனத்தின் ஒற்றுமை, குழுவின் ஒற்றுமை என்று பகுக்கப் பகுக்க சிறுபிரிவாய் குறுகும் தன்மையை உடையது. இச்சிறு சிறு பிரிவுகள் ஒன்றாக்கப் பெற்றால் மட்டுமே உலக ஒற்றுமை என்பது பெறப்படும். ஆனால் இனத்தால், மொழியால், நிறத்தால் பாகுபட்டு நிற்கும் சமுகத்தை எவ்வளவுதான் ஒன்றிணைத்தாலும் அது தன்னுடைய இயல்பான பிரிதலை நோக்கியே செல்லும். இந்தப் பிரிதலைத் தடுத்து ஒற்றுமையை நிலைநாட்ட இந்தியத் தத்துவங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிதான் […]
பக்தி என்பது அறிதல், அறிவித்தல், அனுபவித்தல் அனுபவித்ததை பகிர்தல் போன்ற நடைமுறைகளைச் சார்ந்தது. பக்தியை அறிந்தவர்கள் அறியாதவர்களுக்கு அறிவிக்கும் பேறு பெறுகிறார்கள். பக்தியை அனுபவித்தவர்கள் அனுபவிக்காதவர்களுக்கு அனுபவிக்கக் கற்றுத்தருகிறார்கள். தொடர்ந்து உருவாகிவரும் இந்த பக்தி இழை அவ்வப்போது சிக்குண்டு, சிதறுண்டு, நெருக்குண்டு கிடந்ததும் உண்டு. நெருக்குதல்கள் பற்பல இருந்தாலும் அதன் தொடர் இழை அறுந்துபோகாலமல் ஞானிகள் காத்தார்கள், காத்து வருகிறார்கள். காத்துவருவார்கள். அவர்களின் சொற்கள்,இலக்கியங்கள் காட்டாதனவற்றைக் காட்டும். கேட்காதனவற்றைக் கேட்கச் செய்யும். புரியாதனவற்றைப் புரியச் செய்யும். அறியாதனவற்றை […]
இணைப்பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி புதுக்கோட்டை தமிழ் இலக்கியப் பரப்பில் இளங்கோவடிகள் காப்பிய வடிவத்தையும், காப்பிய மரபுகளையும் தொடங்கி வைக்கும் முதன்மையாளராக விளங்குகின்றனார். காப்பியம் என்ற நீண்ட வடிவத்தின் இழுவைத் தன்மை குன்றாமல், சுவைத்திறன் மாறாமல் படைத்துச் செல்லும் திறன் மிக்க காப்பியப் படைப்பாளராகவும் இளங்கோவடிகள் விளங்குகின்றார். தன் காப்பியத்தை ஒரு தழுவலாகவும், வேறுமொழி இலக்கியச் சாயல் உள்ளதாகவோ அவர் படைத்துக்காட்டாமல் சுயம்புத் தன்மை மிக்கதாக தன் படைப்பினை உருவாக்கியிருப்பது கண்டுகொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். இலக்கிய வகைகளை முதன் […]
முனைவர் பட்ட பொது வாய்மொழித்தேர்வு அறிவிப்பு முனைவர் மு. பழனியப்பன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் திரு ஜி.பி முருகானந்தம் என்பவர் தன்வரலாற்று இலக்கியங்கள் ஒரு மதிப்பீடு என்ற தலைப்பில் செய்த முனைவர் பட்ட ஆய்வேட்டின் மீதான வாய்மொழித் தேர்வு 10.01.2011 அன்று பிற்பகல் 2.00 மணியளவில் புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரி ஆங்கிலத் துறை மொழி ஆய்வுக் கூடத்தில் நடைபெற உள்ளது. இதற்கு புறத் தேர்வளாராக முனைவர் போ. சத்தியமூர்த்தி (மதுரை காமராசர் பல்கலைக் கழகப் பேராசிரியர் ) […]
முனைவர் மு. பழனியப்பன் இணைப்பேராசிரியர், மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை பெண்ணியத் திறனாய்வின் ஒரு பகுதி பெண்ணிய வாசிப்பு என்பதாகும். ஆண் படைத்த இலக்கியங்களை பெண்ணிய அடிப்படையில் வாசிப்பது என்பது பெண்ணிய வாசிப்பு எனப்படும். ஆண்படைப்பில் எழுப்பப்பட்டுள்ள ஆண்சார்பு அரசியலை இனம் காட்டுவதாக இவ்வாசிப்பு அமையும். ஆணால் எழுதப் பெற்ற ஒரு இலக்கியத்தில் ஆண் சார்பு கருத்துகளே அதிகம் இருக்கும் என்பது உறுதி. சில ஆண்படைப்பாளர் தன்னுடைய ஆண் […]
முனைவர் மு. பழனியப்பன் இணைப்பேராசிரியர் மா. மன்னர் கல்லூரி. புதுக்கோட்டை நூலாசிரியர்: சிவசக்தி இராமநாதன், வெளியீடு நந்தினி பதிப்பகம், சூர்யா பிரிண்ட் சொலுசன்ஸ்,534. காமராசர் ரோடு, சிவகாசி, 9842124415 விலை. ரு. 150 கிராமங்களில் இருந்து நகரங்களுக்குப் பெயரும் நாகரீக வாழ்க்கை என்பது தற்போது சர்வசாதாரணமாகிவிட்டது. நாடுகள் கடந்துப் பெருநகரத்திற்குப் போகவேண்டிய உயரத்திற்குத் தற்போதைய இந்திய மக்களின் சூழல் வளர்ந்துவிட்டது. இருப்பினும் பிறந்த நாட்டை, பிறந்த தாய்மண்ணை வெளிநாடுகளில் பெயர்ந்து வாழும் இந்தியமக்கள் மறவாமல் இருக்கிறார்கள் என்பது […]
காரைக்குடி கம்பன் கழகத்தின் டிசம்பர் மாதக் கூட்டம் வரும் 3.12.2011 (சனிக்கிழமை ) அன்று கம்பன் மணிமண்டபத்தில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் கம்பன் காட்டும் ஆசிரியப் பெருமக்கள் என்ற தலைப்பில் ஒக்கூர் சோம சுந்தரம் மேல்நிலைப்பள்ளியின் தமிழாசிரியர் நாச்சம்மை கண்ணன் அவர்களும், கம்பன் கூறும் இசை நுட்பங்கள் என்ற தலைப்பில் தமிழ்ப்பல்கலைக்கழக இசைத்துறைப் பேராசிரியர் முனைவர் செ. கற்பகம் அவர்களும் உரையாற்ற உள்ளனர். நிகழ்வு மிகச் சரியாக மாலை ஆறுமணிக்குத் தொடங்கும். நிகழ்ச்சி ஏற்பாடு எம்.கே சுந்தரம் […]
உயிர்கள் பிறக்கின்றன. இருக்கின்றன, இறக்கின்றன. பிறந்த பின்பு உயிர்கள் இருக்கின்றன. இருந்தபின்பு இறக்கின்றன. இறந்தபின்பு உயிர்கள் என்னாகின்றன? மீண்டும் பிறக்கின்றனவா? முன் பிறவியைவிட உயர்வான பிறவியில் பிறக்கின்றனவா… அல்லது முன்பிறவியை விட தாழ்வான பிறவியில் பிறக்கின்றனவா…..அதே பிறப்பில் மீண்டும் பிறக்கின்றனவா… இப்படிப் பதில் தெரியாத, அறியமுடியாத கேள்விகள் பலப்பல. பிறவியே இல்லாத நிலை வந்துவிட்டால் இருப்பே இல்லாத நிலை, இறப்பே இல்லாத நிலை வந்துவிடும். இறப்பே இல்லாத நிலை வந்துவிட்டால் மீண்டும் பிறக்கவே முடியாது. பிறவியே இல்லாத […]
புதுக்கோட்டை உலகத்திருக்குறள் பேரவையின் மாதக் கூட்டம் 18.9.2011 ஞாயிறன்று காலை 10 மணியளவில் விஜய் உணவக மாடியில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் முனைவர் சு. கணேசன் அவர்கள் திருவள்ளுவரும் மேலை நாட்டறிஞர்களும் என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார். மேலும் திரு பாபு ராஸேந்திரன் அவர்கள் வருங்காலம் வசந்த காலம் என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். அனைவரும் வருக அழைப்பிதழ் அனுப்பியுள்ளேன்.
அகஒட்டு, இலக்குமி குமாரன் ஞானதிரவியம். அன்னம், தஞ்சாவூர், விலை. ரு. 140. கவிஞர் இலக்குமி குமாரன் ஞானதிரவியம். கவிதைகளை ஒருகட்டத்தில் கடந்து கட்டுரைகள், சிறுகதைகள், நாவல் என்று அவரின் படைப்பு வகைமைகள் பரவி வளர்ந்திருப்பது மிக்க மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. படைப்புகளின் முலம், முதல் கவிதை அதன் பின்னணியிலேயே மற்ற வகைமைகள் வளர்கின்றன என்ற பொது வரம்பிற்கு அவரும் ஒத்துப்போகிறார். அவரது அக ஒட்டு என்ற நாவலை ஒரே முச்சில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நாவலில் அத்திவெட்டி என்ற […]