Articles Posted by the Author:

 • பொறுமையின் வளைகொம்பு

  பொறுமையின் வளைகொம்பு

  பொறுமைக் கொம்பின் நுனிவரையேறி வளைத்துப் பிடித்து வைத்திருக்கிறேன் விட்டுவிடுவேனோ என்ற பெரும் பயத்தில் மனது துடிக்கிறது படபடத்து விட்டுவிட்டேனென்றால் வளைந்த கொம்பு முழு வீரியத்துடன் எம்பி நிமிரும் அதன் தாக்கம் சாமன்யமாய் இருக்காது.. விடக் கூடாதென்ற வைராக்கியம் வளைத்துப் பிடித்தபடியே இருக்கிறது அழுத்திப் பிடித்திருப்பதால்  தசைகள் வலிக்கிறது.. ரத்தமும் கசிகிறது கை ரத்தக் கசிவால் ஒருவேளை விட்டுவிட நேரலாம்..  கூடாதென்ற பிடிவாதத்தில் தொங்குகிறது மனம் ஆனால் விடாமல் இருந்தால்  மீண்டும் மீண்டும் நான் ரணப்பட வேண்டி வரலாம் முடியும்வரை […]


 • என்னுலகம்

  என்னுலகம்

  – பத்மநாபபுரம் அரவிந்தன் – பன்னீர்க் குடத்துள் மிதக்கும் சிசுவின் ஏகாந்த நிலைபோல என் மனதுள் விரிந்து சுருங்கிச் சுழலும் சலனங்கள்.. சலனங்கள் சங்கமித்து உருக்கொண்டு வெளிவரும் என் வார்த்தைகள் புரியவில்லையென்று சொல்லித் திரியும் நீ பலமுறை கேட்டிருக்கிறாய் நான் எங்கிருக்கிறேன் என்றோ, எவ்வுலகில் இருக்கிறேனென்றோ.. உன் கேள்விக்கு பதிலற்று நான் நோக்கும் பார்வை உனை நோக்கியே இருப்பினும் பார்வைக்குள் விழுவது நீயல்ல… உனை ஊடுருவி வெளியேறி அது பயணித்துக் கொண்டிருக்கும் பெருந் தொலைவு… நீ நினைத்துக் கொள்வாய் […]


 • பூனைகளின் மரணம்

  பூனைகளின் மரணம்

  – பத்மநாபபுரம் அரவிந்தன் – யாரேனும் கண்டதுண்டோ .. பூனைகளின் இயற்கையான மரணத்தை? வாகனங்களில் அடிபட்டோ , நாய்களால் கடிபட்டோ இரை பிடிக்கத் தாவுகையில் தவறிக் கிணற்றுள் விழுந்தோ .. விபத்து சார்ந்த மரணங்களையன்றி பூனைகளின் இயற்கையான மரணம் மனித மனதைப் போல பெரும் புதிர்… குறிகிய இடத்துள் நெளிந்து நுழையும் உயர இடத்தில் பரபரக்க ஏறும் … எப்படித் துக்கிப் போட்டாலும் கால்கள் ஊன்றித் தரையிறங்கும் புழுதியில்ப் புரண்டு அழுக்காகும் நாக்கால் நக்கியே தூய்மையாகும் விரட்டி […]


 • கவிதைகள்

  கவிதைகள்

  தொடர்பறுதல் ஏகாந்த இரவொன்றில் வான்பார்த்து மாடியில் படுத்தபோது தென்பட்ட நட்சத்திரங்கள் ஒவ்வொன்றின் இடையேயும் விரிந்துக் கிடக்கிறது ஏகப்பட்டத் தொலைவு எனை விட்டுத் தொடர்பறுந்துப் போனவர்கள் போல.. ஒன்றாய்ப் படித்து, சுற்றிய நண்பர்கள் … நெருக்கமாய்ப் பழகிய தொடர் கடிதத் தோழிகள் பக்கத்து வீடுகளில் குடியிருந்துப் போனவர்கள் நெருக்கமாய் இருந்த தூரத்து உறவுகள் இலக்கியம் பேசி உணர்ச்சி வசப் பட்டவர்கள் … பலருடனும் இற்றறுந்துப் போயிற்று தொடர்பு.. முகநூலிலும், ஆர்குட்டிலும் தேடித் தேடி அலுத்தப் பின்பும் அழிபடாமல் மனதுள் […]


 • இறந்து கிடக்கும் ஊர்

  இறந்து கிடக்கும் ஊர்

  பெருங் கோட்டைச் சுவர் தாண்டி உள் நுழையத் தேரோடும் தார் சாலையின் இருமருங்கும் புது வீடுகள்.. முப்பது ஆண்டுகளுக்கு முன்பான ஊர் நெஞ்சுள் விரிகிறது.. நிரம்பித் தழும்பும் பெருமாகுளம் இக்கரைக்கும் அக்கரைக்கும் நீந்திப் போகும் சிறுவர் கூட்டம்.. குளம் களிப்படைந்துப் போயிருந்த பொற்காலம்.. கரையோர அரசமரத் திண்டில் காற்று வாங்கிக் களைப்பாறும் வேளிமலை விறகு வெட்டிகள் ஓயாதப் பறவைகளின் குரல் சவக் கோட்டை மேல்ப் பறக்கும் பருந்துக் கூட்டம்.. மாலையில் நாற் தெருவும் குழந்தைகள் இளைஞர்கள் விளையாட்டு […]


 • ஓர் இறக்கை காகம்

  ஓர் இறக்கை காகம்

  முட்டை விரிந்து வெளிவரும் போதே ஒற்றை இறக்கை இல்லாமல் இருந்தது அக்காகக் குஞ்சுக்கு … சக முட்டைகள் விரிந்து அத்தனைக் குஞ்சுகளும் இரட்டை சிறகடிக்க இக்குஞ்சு மட்டும் ஒற்றை சிறகடித்து எதுவும் புரியாமல் மறுபக்கம் பார்த்தது .. சிறகு இருக்கும் இடத்தில் வெறுமொரு சிறு முளை மட்டுமே அதற்கு.. பறக்கத் துவங்கிய குஞ்சுகள் கண்டு ஒற்றை சிறகினை ஓங்கி வீசி எம்பிப் பார்த்தது .. முடியாது போக கூட்டுக்குள்ளே முடங்கிப் போனது.. தாய்க் காகம் அதற்கு கொண்டு […]


 • சிலை

  சிலை

    அக் கிராமத்தின் சிற்றோடைக் கரையோரம் கால் முட்டிப் பாகம்வரை செஞ்சேற்றினுள் அமிழ்ந்து.. தேகமெங்கும் சகதித் தீற்றுடன் மல்லாக்கக் கிடந்தது அச்சிலை… கண்களிலும் உதட்டிலும் புன்னகைப் பூவிரிக்க கச்சை கட்டிய கூர் முலையும், வடிவேயான இடையுடனும் .. யாரையோ எதிர் நோக்கிக் காத்திருக்கும் பாவனையில் … இடக்கை  நாடி தாங்க வலக்கை இடையில் வைத்து காத்திருக்கும் அச்சிலையின் கை விரல்கள் சிலவற்றை காணவில்லை.. உடைந்தவை உதிர்ந்திருக்கலாம்….   அற்புதமான அச்சிலை எக்காலம் செய்ததென்றோ எப்படியங்கு வந்ததென்றோ யாருக்கும் தெரியவில்லை… வயதான ஒருவர் சொன்னார் … தன் சிறு பிராயத்தில் கரையோரம் நின்றிருந்து.. காலப் போக்கிலது நிற்க முடியாமல்ப் படுத்ததென்று… யாரோ துப்பிய வெற்றிலை எச்சில் உறை ரத்தம் போல்  தலைக் கிரீடத்தில்…   சிதைந்துக் கொண்டிருப்பது வெறுமொரு கற்சிலயல்ல… சிந்தையுள் காதலுடன் .. யாரையோ நினைவிலேற்றி மனமுழுக்க வடிவமைத்து விரல்கள் வழி மனமிறக்கி உளிகளில் உயிர் கொடுத்து பலநாட்கள் பாடுபட்டுச் செய்தெடுத்த … எக்காலமோ வாழ்ந்திருந்த ஓர் அற்புத சிற்பியின் காதலுடன் கூடிய கலையும், உழைப்பும் கூடத்தான் …   – பத்மநாபபுரம் அரவிந்தன்-


 • ராசிப் பிரசவங்கள்

  ராசிப் பிரசவங்கள்

  நாள் கிழமைப் பார்த்து டாக்டருக்குச் சொல்லிவிட்டால் கோள் ராசி பயமில்லை….டாக்டரின் கத்திக்குள் நட்சத்திரங்கள் ஒளிந்திருக்கும் … மிகச் சிறந்த ராசியதில், சுத்த நட்சத்திரத்தில் அற்புதமான நாளன்று – அறுவை முறை கலையோடு அக் குழந்தை அவதரிக்கும் .. குழந்தை பிறக்கும் நேரம் இயற்கையின் கை விட்டு கத்திக்கும், காசுக்கும் கைமாறி காலங்கள் ஆகிப் போச்சு.. என் குழந்தை பிறந்த நாள் இதென்று சொல்லாமல் பிறப்பித்த நாள் இதுவென்று சொல்லவேண்டும்.. டாக்டர்கள் இனிமேல் பஞ்சாங்கமும் பயில வேண்டும்… சோதிடமும் […]


 • இரு கவிதைகள்

  இரு கவிதைகள்

    அகதிக்  காகம்                                           – பத்மநாபபுரம் அரவிந்தன் –   நீண்டதோர் கடற்  பயணத்தின் மூன்றாம் நாள் அதிகாலை கண்ணில்ப் பட்டது முன்புறக் கொடிமர உச்சியில் அமர்ந்திருந்த அக்காகம் ..   சில நூறு மைல்கள் கரையே இல்லாப் பெருங் கடல் நடுவே எப்படி வந்ததோ, கண்டம் கடக்கும் பறவைகள் பலவும் ஓய்வெடுக்க வந்திருந்து மீண்டும் போகும்.. காகங்கள் பொதுவாக  இத்தனை தூரம் பார்ப்பதே இல்லை.. இக்காகம் வழி தவறிப் பெருங் காற்றில் அடித்துவரப் பட்டிருக்கலாம்..    தொலை பயணக் கப்பல்கள்  ஓவ்வொன்றாய்  அமர்ந்தமர்ந்து வந்திருக்கலாம்.. எம்பிப் பறக்க எத்தனித்து பெருங் காற்றின் வேக வீச்சில் தடுமாறித் தத்தளித்து மீண்டுமது கப்பல் தளத்தினில் வந்தமரும்   தட்டில் அரிசி, கடலை, மாமிசத் துண்டுகள்  கிண்ணத்தில் தண்ணீரும் கொண்டுவந்து தளத்தில் வைத்து தள்ளி நின்றுப் பார்த்திருந்தேன்..   ‘ காகமே ஆனாலும் அது நம் நாட்டுக் காகமன்றோ? ‘   இன்னமும் இருக்கிறது நான்கு நாட்கள்    தொடர் கடற்  பயணம்.. காற்றில்லா நேரத்தில்    சிறிது தூரம் பறந்து விட்டு   வந்தமர்ந்து ஓய்வெடுக்கும்..    சென்னை – ஆஸ்திரேலியா விசாவின்றி வந்தடைந்து    கரைகண்டக் களிப்பினில்   வேகமாய் எம்பி சுய குரலில்க்   கத்திவிட்டு கரை நோக்கிப்    பறந்ததது, மறுநாள்….    உடலெங்கும் கொத்துக் காயங்களுடன்    கப்பல்த் தளத்திலது ஓரமாய் ஒளிந்தபடி […]


 • மூன்று கவிதைகள் – பத்மநாபபுரம் அரவிந்தன்

  மூன்று கவிதைகள் – பத்மநாபபுரம் அரவிந்தன்

  காத்திருப்பு குற்றங்களுக் கெதிராக உயர்த்தப்படும் சாட்டைகள் விளாசப் படாமலேயே மெதுவாய்த் தொய்கின்றன.. இடக்கையால் பெருந்தொகை வாங்கிக்கொண்டு சட்டங்கள் தன்னிருப்பை சுருக்கவும் விரிக்கவும் கரன்சிப் பகிர்வுகள் தலையசைத்து நடக்கிறது .. நியாயங்களின் பாதைகளில் முள்வேலிப் போட்டு அராஜகப் பெருஞ்சாலை விரிகிறது … ஏதோ நினைவுகளில் அழுத்தப் படுகிறது வாக்குப் பதிவு இயந்திரத்தின் பொத்தான்கள் உள்ளேப் போவதும், வெளியே வருவதுமாய் நகர்கிறது ஐந்தாண்டு… காட்டப்படும் சொத்துக் கணக்குகள் யாருக்குமே குடவோக் குறையவோ இல்லை உட்பூசல்களும், வெளிப்பூசல்களுமாய் உதிர்ந்து கொண்டிருகிறது நாட்கள் […]