author

மாயை

This entry is part 24 of 37 in the series 27 நவம்பர் 2011

கபிலவஸ்து நாட்டின் அருகாமையில் காட்டிலுள்ள ஒரு குடில் தன் மகன் ராஜ்யத்தின் மீது பற்று இல்லாமல் இருப்பதைக் கண்ட மன்னர் சுத்தோதனர் காட்டிலுள்ள துறவியிடம் சித்தார்த்தனை அனுப்பிவைத்தார். குருவின் முன்பு பத்மாசனத்தில் நன்றாக நிமிர்ந்து கண்களை மூடி அமர்ந்திருந்தான் சித்தார்த்தன்.எதிரில் தியானத்தில் ஆழ்ந்திருந்த குரு கண்களைத் திறந்து சித்தார்த்தனை கருணையுடன் நோக்கினார்.தியானத்தில் மூழ்கியிருந்த போதே உணர்ந்திருந்தார் சித்தார்த்தனின் எண்ண ஓட்டத்தை .பல பிறவிகாய் உண்மையின் வாசல் வரை வந்த சித்தார்த்தன் இம்முறை மெய்யாகவே உள்ளே நுழைந்து விடுவானா? […]

கவிதை

This entry is part 22 of 41 in the series 13 நவம்பர் 2011

பூபாளம்   சிறகை கொடுத்த கடவுள் பறக்கவும் கற்றுத் தருவாரா அன்பை பருகிக் கொண்டிருக்கும் போது எனக்கு எப்படி பசியெடுக்கும் தனிமையில் அலைகளைப் பார்த்தபடி கடற்கரையில் நின்றிருக்கின்றாயா கூண்டுப் பறவைக்கு விடுதலை அளித்தபோது ஏற்பட்ட நிறைவை எப்போதாவது அனுபவித்திருக்கின்றாயா தாயின் கரங்களுக்கு அப்புறம் தென்றல் வருடிக் கொடுப்பது தானே மனதுக்கு இதமளிக்கின்றது தோல்வியின் மூலம் கற்கும் பாடங்களை எளிதில் மறந்துவிட முடியுமா சிகரத்தை அடைந்ததும் மனதில் வெற்றிடம் ஏற்படுவதில்லையா காயம்பட்ட இதயங்களுக்கு வார்த்தைகள் தானே ஒத்தடம் கொடுக்கின்றன […]

சிலர்

This entry is part 21 of 53 in the series 6 நவம்பர் 2011

சிறிய நைலான் கயிறு போதும் வாழ்விலிருந்து விடுபட யாரோ வாங்கிக் கொடுத்த சேலையிலா விதி முடிய வேண்டும் வாழ்க்கை வாழக் கற்றுக்கொடுக்காது தப்பிப்போவது விடுதலையாகாது குரல்வளை நெரியும் போது நினைத்துப் பார்த்தாயல்லவா வாழ்ந்திருக்கலாமே என்று மனிதர்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கவே வேண்டாம் உன்னைப் போன்றவர்களுக்காகத்தானே கடவுள் இருக்கிறார் வாழ்வின் ஏற்ற இறக்கங்களை சமமாய் பாவிக்க கற்றுத்தரவில்லையா உனக்கு வரவிருக்கும் வசந்தகாலத்தை நினைத்து இலையுதிர்க்கும் மரத்திடம் கற்றிருக்கலாமே வாழ்க்கைப் பாடத்தை தற்கொலையின் மூலம் எந்த மர்மத்தின் முடிச்சை அவிழ்க்க […]

அது

This entry is part 9 of 44 in the series 30 அக்டோபர் 2011

நடுநிசியில் யார் கதவைத் தட்டுவது பிரமையா தூக்கம் வராத இரவுகளை எதிர்கொள்கையில் நரகம் பற்றிய பயம் அதிகரிக்கின்றது சிநேகிதர்கள் ஒவ்வொருவராக பிரியும் போது கதவைத் தட்டியது எமன் தானோ என்று தோன்றுகிறது பருவத்தில் படமெடுத்து ஆடிய மனது இன்று பயந்து பம்முகிறது மனம் பக்குவமடைந்துள்ளது அடுத்தவரின் அந்தரங்கத்தை அறிய இப்போது ஆளாய் பறப்பதில்லை செய்த தவறுகளால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியே என்னைக் கொன்றுவிடுமோ என பயமாய் இருக்கிறது அகஸ்மாத்தாக தெரிந்து கொண்டேன் வாடினால் தான் மலரென்று செத்தால் […]

இதற்கு அப்புறம்

This entry is part 18 of 44 in the series 16 அக்டோபர் 2011

சாவை எதிர்த்தானா சாவை ஏற்றுக்கொண்டானா என்று சடலத்தின் முகம் காட்டிக் கொடுத்துவிடும் பிறந்த நொடி முதல் மரணத்தை நோக்கியே மனிதனின் பயணம் மரண பயத்தை எதிர் கொள்ள அஞ்சியே ஏதோவொரு போதையில் தினம் தினம் மிதக்கிறோம் மனிதனை எடை போடத் தெரிந்தவர்களெல்லாம் மாட்டிக் கொள்கிறார்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள் எந்த ஊருக்கான பயணம் என்று தெரியாமல் தான் புறப்பட்டு வருகிறோம் உயிர்த்தெழுதல் சாத்தியமில்லை தேவ மைந்தர்கள் அரிதாகவே பூமி வயலில் விளைகிறார்கள் ஆன்மாவுக்கு அழிவில்லை என்று உபன்யாசம் […]

சயனம்

This entry is part 11 of 45 in the series 9 அக்டோபர் 2011

மழைக்கால இரவு கொசுக்களின் படையெடுப்பில் உடலிலிருந்து அரை அவுன்ஸ் இரத்தம் குறைந்தது வெள்ளத்தில் மூழ்கிய வாகனத்தின் உள்ளே இரண்டு சடலங்கள் பயங்கரத்தை ஞாபகப்படுத்தும் மேகத்தின் கறுமை நிறம் காற்றின் வேகத்தால் மரங்கள் பேயாட்டம் போடும் இடி தாக்கியதில் கோயில் மதில் சுவரில் விரிசல் விழுந்திருக்கும் ஆளரவமற்ற வீதியை மின்னல் படமெடுக்கும் ஆறு உடைப்பெடுத்ததை அறியாமல் ஊருசனம் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும்.

த்வனி

This entry is part 10 of 45 in the series 2 அக்டோபர் 2011

இன்றைக்கு என்ன கிழமை வெள்ளியா, சனியா மாத்திரை விழுங்காமல் எங்கே தூக்கம் வருகிறது தேர் நிலைக்கு வந்துவிட்டது போல வேட்டுச் சத்தம் கேட்கிறது இத்தனை வயசாகியும் வாய் சாகமாட்டேன் என்கிறது புத்தனுக்கு ஞானம் தந்த அரசமரம் எங்கள் வீட்டுக் கொல்லையில் இருக்கிறது அந்திம காலத்தில் தான் மனிதனுக்கு மூன்றாவது கண் திறக்கிறது இன்றைக்கு ஏன் நட்சத்திரங்கள் இப்படி ஜொலிக்கின்றது த்வனி மாறினால் வார்த்தைகள் வசையாக மாறி எதிரிலிருப்பவரை காயப்படுத்திவிடுகிறது மூதாதையர்கள் பட்சியாக வீட்டைச் சுற்றுவதாக கிணத்தடி ஜோசியன் […]

பந்தல்

This entry is part 5 of 41 in the series 25 செப்டம்பர் 2011

  கல்யாண வீடு களைகட்டியிருந்தது வெளிநாட்டு மாப்பிள்ளை கட்டிக்க கசக்குதா என்றார்கள் நான் இன்னும் படிக்கணும் என்றாள் அவள் அம்மாஞ்சி சேகரை மனதில் வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டி மணவறையில் அமர வைத்தார்கள் காதல் பறவைகளில் ஒன்றை கவண்கல்லால் அடிப்பது சமூகத்திற்கு புதிதல்ல தன் வாழ்க்கையை பிறர் தீர்மானிக்க வைத்து தலை குனிந்து தாலி ஏற்கும் பெண்கள் இன்னுமிருக்கிறார்கள்.

இதற்கும் அப்பால்

This entry is part 2 of 37 in the series 18 செப்டம்பர் 2011

  கதவில் பூட்டு தொங்கியது யார் பூட்டியிருப்பார்கள் காலையில் நான் தான் பூட்டினேன் இந்த நாய் நகர்ந்து தொலைக்க கூடாது வாலை மிதித்துவிட்டேன் நல்ல வேளை கடித்து தொலைக்கவில்லை வீட்டில் வைத்தது வைத்தபடி அப்படி அப்படியே இருந்தது கலைத்துப் போட குழந்தையுமில்லை துவைத்துப் போட மனைவியுமில்லை அலமாரியிலிருந்து புஸ்தகங்களை எடுத்து மேஜையின் மீது வைத்தேன் தன்னைப் பற்றிச் சிந்திப்பது ஞானத்தை பரிசளிக்கும் ஆனால் ஊர் பைத்தியம் என பட்டம்கட்டிவிடும் வாசலில் பூனை கத்தியது இரவு உணவில் பங்கு […]

முகம்

This entry is part 19 of 54 in the series 4 செப்டம்பர் 2011

  உயரத்தில் பருந்து கண்கள் இரை மீது புத்தகத்தில் கிழிக்கப்பட்ட பக்கங்களில் என்ன ஒளிந்திருக்கும் நாட்கள் தான் வேறு வேறு மாற்றங்கள் எதுவுமில்லை நீர்க்குமிழி வாழ்க்கை இறைவன் வகுத்த நியதிப்படி விசேஷமான நாள் பரிசாக ஒரு பனித்துளி கோர முகம் ஒற்றைக் கண் பீதியூட்டுகிறது நிலவு காய்கிறது ஒரு குழந்தை இரவை அள்ளிப் பருகுகிறது பழைய புத்தகம் நடுவே மயிலிறகு விலைமதிப்பற்றதாய்.