author

நம்பிக்கை ஒளி! (3)

This entry is part 10 of 23 in the series 14 அக்டோபர் 2012

தாயின் அன்பிற்கு இணையாகச்  சொல்வதற்கு, இந்த உலகில் தாயன்பைத் தவிர வேறு ஏதுமில்லை. தாயில்லாத மாலுவிற்கு தாய்க்குத் தாயாக இருந்தவள் சாரு அக்கா. மாலுவிற்கும், சாருவிற்கும் இரண்டு வயதே வித்தியாசம் என்றாலும் தான் மூத்தவள் என்ற பெருமையுடன்  தாய் என்ற அந்தப் பதவியைத் தானே எடுத்துக் கொண்டவள், சாரு. ஆசிரமத்தில் மைதானத்தில் உள்ள வீணை மீட்டும் கலைவாணியின் திருஉருவிற்கு அன்றாடம் மலர்தூவி அருச்சித்து வணங்கும் சாருவின் பிரார்த்தனையில். தங்கை மாலுவிற்கு நல்ல வழி காட்ட வேண்டும், அவள் […]

கதையே கவிதையாய்! (9)

This entry is part 22 of 23 in the series 14 அக்டோபர் 2012

The Madman – when my sorrow was born – Khalil gibran   பவள சங்கரி   எம் துக்கம் செனித்த தருணமதில்…..-   (சோகத்தின் சுகம்)    எம் துக்கம் செனித்தபோது யான் அதைக் கவனமாக, பேணிப் பாதுகாத்தேன். மேலும்  பாசத்தோடு பராமரித்தேனதை.  மேலும் எம் துக்கம் மற்ற உயிரினங்களைப் போன்றே, செம்மலும், சோபிதமும், மற்றும் வியத்தகு பூரிப்புடனுமே வளர்ந்தது  நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்தோம். யானும் எம் துக்கமும், எங்களுக்கான […]

நம்பிக்கை ஒளி (2)

This entry is part 16 of 23 in the series 7 அக்டோபர் 2012

மன உணர்வும், மனித உறவுகளும், சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றங்களுக்கு உட்பட்டது. இதன் காரணமாகவே வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் பல திருப்பு முனைகளைச் சந்திக்கிறோம். ராஜகணபதி கோவிலில் கூட்டம் இல்லாதலால் அமைதியாக இருந்தது. கண்மூடி அமர்ந்தவுடன் ஏனோ பழைய நினைவுகள் ரொம்பவே அலைக்கழித்தது. உறவுகளுக்காக ஏங்கும் இந்த மனதை கட்டுப்படுத்துவது சிரமம்தான். எதிர்பார்ப்பு என்பதே ஏமாற்றங்களுக்கு காரணமாகிறது. அறிவுக்கு தெரிந்த பல விசயங்கள் உணர்விற்கு எட்டுவதில்லை. அதற்கு கட்டுப்படுவதும் இல்லை. யதார்த்தங்களை அப்படியே ஏற்றுக் கொள்வது மட்டுமே மன […]

கதையே கவிதையாய் (8)

This entry is part 8 of 23 in the series 7 அக்டோபர் 2012

The forerunner – Love – Khalil Gibran கலீல் ஜிப்ரானின் காதல் சிம்மம் நீரருந்த வருகிற அதே ஓடையிலிருந்தே அந்தக் குள்ளநரியும் மூஞ்சூறும் நீரருந்துகிறது என்கிறார்கள் அவர்கள். இறந்து கிடக்குமோர் உடலினுள்ளே கழுகும், ராஜாளியும் தத்தம் அலகினால் தோண்டும்போது, அச்சவத்தின் முன்னிலையில் இரண்டும் ஒன்றுக்கொன்று சமாதானமாகவே உள்ளதென்கிறார்கள் அவர்கள். ஓ காதல் என்ற இதன் செருக்குடைய கரம் எம் இச்சைகளுக்குக் கடிவாளமிட்டதன் மூலம் எம் பசியையும் நீர்வேட்கையையும் எழுப்பிவிட்டது, கண்ணியம் மற்றும் தற்பெருமைக்காக எம்முள் இருக்கும் […]

கதையே கவிதையாய்! (7) சிங்கமடங்கல் – கலீல் ஜிப்ரான்

This entry is part 31 of 36 in the series 30 செப்டம்பர் 2012

  (சிங்கத்தின் மகள்)     தம் சிம்மாசனத்தின் மீது துயில் கொண்டிருந்த ஒரு மூதாட்டி அரசிக்கு சாமரம் வீசிக்கொண்டு நின்றிருந்தனர், நான்கு அடிமைகள்.  குறட்டை விட்டுக்கொண்டிருந்த அந்த அரசியின் மடியில் பூனை ஒன்று மெலிதாக உறுமிக்கொண்டு, அந்த அடிமைகளை சோம்பலுடன் வெறித்துக் கொண்டிருந்தது.  முதல் அடிமை பேச ஆரம்பித்து, “இந்த மூதாட்டி தூங்கும் போது எவ்வளவு அவலடசணமாக இருக்கிறார் பாருங்கள். அவர் வாய் துருத்திக்கொண்டு, சாத்தான் தனக்கு மூச்சுத்திணறல் ஏற்படுத்துவது போல சுவாசித்துக் கொண்டிருக்கிறார்.“ என்றான்.  பின்னர் […]

நம்பிக்கை ஒளி! – 1

This entry is part 25 of 36 in the series 30 செப்டம்பர் 2012

  ”அம்மா.. அம்மா. தூங்குறயா நீனு.. இந்த பாப்பா பொம்மையைப் பாறேன். திடீர்னு கண்ணே திறக்க மாட்டீங்குது.. அச்சச்சோ, பாப்பா மாரியே நீயும் கண்ணே தொறக்க மாட்டீங்கறே.. ஐய.. பாப்பா மாதிரி நீனும் வெள்ளாடறியா… அம்மா.. அம்மா…”   “அக்கா, அம்மா தூங்கறாங்க பாரு. தொந்திரவு பன்னாத. அம்மா நேத்தே காச்சல்னு சொல்லிச்சுதானே. நல்லா தூங்கட்டும். அப்பதான் சீக்கிரமா காச்சல் சரியாவும்.”   “இல்லை, மாலு எனக்கு வயிறு பசிக்குதே. அம்மா இன்னும் சோறு செய்யவே இல்லியே.. […]

ஆகாயத்தாமரை!

This entry is part 14 of 41 in the series 23 செப்டம்பர் 2012

  ஊதுவத்தியும், பன்னீரும், வாசனைத் திரவமும், மலர்ச்செண்டுகளின் மணமும் கலந்ததொரு வித்தியாசமான வாடை.. ஆங்காங்கே பெண்கள் கூடிக்கூடி குசுகுசுவென இரகசியமும், வாயின் மீது அடித்துக் கொண்டும், புலம்பிக் கொண்டும், வயிற்றில் புளியைக் கரைக்கும் சூழல். பெரிய பட்டாசாலை முழுதும் நிறைந்த உறவுகளும், நட்புகளும், மங்கலான முகங்களுடன்……   “ஏண்டி பாவி, இப்படி அல்பாயுசுல போயிட்டியேடி.. நன்னாத்தானே இருக்கேன்னு நினைச்சுண்டிருந்தேனே.. இப்படி தலையில கல்லைத் தூக்கிப் போட்டுட்டியேடி.. தற்கொலை பண்ணிண்டு உயிரை மாய்ச்சுக்கற அளவுக்கு நோக்கு என்னடி பிரச்சனை. […]

பாவலர்கள் (கதையே கவிதையாய்)

This entry is part 13 of 41 in the series 23 செப்டம்பர் 2012

    நான்கு பாவாணர்கள் மேசையின் மீது இருந்த திராட்சைரச மதுக் கோப்பையைச் சுற்றி அமர்ந்திருந்தனர். முதல் கவிஞன், ”எம் மூன்றாம் கண் மூலமாக, ஒரு மாய வனத்தின் பறவைகள் மேகங்களாய் விண்வெளியில் நகருவது போல் இந்த மதுவின் சுகந்த மணத்தையும் காண்பதாக என்ணுகிறேன் யான்” என்றார். இரண்டாம் பாவலரோ தம் சிரத்தை உயர்த்திக் கொண்டு, “எம்முடைய அகச்செவியின் மூலம் அந்த மூடுபனிப் புள்ளினங்கள் பாடுவதைக் கேட்கிறேன். மேலும் வெண்மையான ரோசா தன் மென்மையான இதழ்களுக்குள் தேனீயை […]

கதையே கவிதையாய்! (5) பண்டிதரும் கவிஞரும்

அரவம் ஒன்று வானம்பாடியிடம், “நீவிர் பறக்கக்கூடியவரேயாயினும், உம்மால், பூரணமான அமைதியில் வாழ்க்கையின் உயிர்ச்சாறு இடம் பெயரும் அந்த பூமியின் சரிவுகளைக் காண இயலாதே” என்றது. அதற்கு வானம்பாடி, “ஆம், தாங்கள் அளவிற்கதிகமாக அறிந்துள்ளீர்கள், அனைத்து அறிவார்ந்த பொருட்களையும்விட உம்முடைய கலை மேலும் அறிவுடையதாகவும் இருக்கலாம். – உம்மால் பறக்க இயலாது என்பது பரிதாபத்திற்குரியது” என்று பதிலிறுத்தது. மேலும் இதெல்லாம் ஏதும் செவியில் விழாதது போல, அந்த அரவம், “உம்மால் ஆழமான இரகசியங்களைக் காணவும் இயலாது, மறைந்த ராச்சியங்களின் […]

கதையே கவிதையாய்! (4) செவிடாக இருந்தவள்

This entry is part 3 of 28 in the series 9 செப்டம்பர் 2012

  பவள சஙகரி     ஒரு செல்வந்தன் முழுச்செவிடான தம் இளம் மனைவியுடன் வாழ்ந்து வந்தான்.   ஓர் காலைப் பொழுதினில் தங்கள் விரதம் முறிக்கும் நேரமதின் போதான (உணவருந்தும் பொழுது) உரையாடலில் “நேற்று நான் சந்தைக்குச் சென்றிருந்தபோது அங்கு, டெமாஸ்கஸ் நகரிலிருந்து வந்த பட்டாடைகளும், இந்தியாவிலிருந்து வந்த மேலாடைகளும், பெருசியாவிலிருந்து வந்த கழுத்து மாலைகளும் யாமனிலிருந்து வந்த  கைவளைகள போன்றவைகளும்  பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. திருத்தலப் பயணக் குழுவினர் .இப்பொருட்களை நம் நகரத்திற்கு இப்போதுதான் கொண்டு […]