author

நம்பிக்கை ஒளி! (8)

This entry is part 10 of 42 in the series 25 நவம்பர் 2012

  சுப்ரஜா, வாழ்க்கையில் துயரமான பகுதி என்ற ஒன்றையே கனவிலும் கண்டிராத ராஜா வீட்டு கன்றுக்குட்டியாக துள்ளித் திரிபவள்.கிருஷ்ணா குரூப் ஆஃப் கம்பெனிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிறுவனர், கிருஷ்ணராஜின் ஒரே வாரிசு. ’பார்ன் வித் சில்வர் ஸ்பூன்’ என்பதால் கஷ்டம் என்பதே தெரியாமல் வளர்ந்தவள். தம் தளராத உழைப்பினால் ஐந்து தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு சொத்து சேர்த்து விட்டவர், கிருஷ்ணராஜ். ஒரே மகளை செல்வச் செழிப்பில் திணறச் செய்பவர். நினைத்ததும், கேட்டதும் உடனே கிடைக்கும் […]

மணலும், நுரையும்! (4)

This entry is part 22 of 29 in the series 18 நவம்பர் 2012

SAND AND FOAM (Khalil Gibran) (4)     பவள சங்கரி செவியொன்றைத் தாரும் எமக்கு, குரலொன்றைத் தருவேன் யான் உமக்கு. நம் மனம் என்பதோர் நுரைப்பஞ்சு; நம் இருதயமோ ஓர் சிற்றாறு. நம்மில் பெரும்பாலானோர் ஓடுவதைக் காட்டிலும் உறிஞ்சுவதைத் தேர்ந்தெடுப்பது ஆச்சரியமன்றோ? நீவிர், பெயர் இடாததோர் வாழ்த்துரைக்காகக்கூட ஏங்கிக் கிடந்த தருணம் மற்றும் காரணம் அறியாமலேயே வருத்தம் கொள்ளும் போதும், உண்மையில், பின்னரும், வளரக்கூடிய அனைத்துப் பொருட்களுடன் நீவிரும் வளர்ந்து கொண்டுதானிருக்கிறீர் மற்றும் உன்னதமான […]

நம்பிக்கை ஒளி! (7)

This entry is part 18 of 29 in the series 18 நவம்பர் 2012

நம்முள் இருப்பது அனைத்துமே நல்ல குணங்கள், தம்மால் அனைவருக்கும் உதவியே அன்றி உபத்திரவம் இல்லைபோன்ற எண்ணங்களெல்லாம் நம்மையறியாமல் நமக்குள் ஒரு செருக்கை விதைதுவிடுவதோடு அது விரைவாக எதிர்வினையையும் கூட ஏற்படுத்திவிடுகிறது. ‘தான்’ என்ற அகங்காரம் என்று இதைத்தான் சொல்கிறார்களோ? எது எப்படியோ, மாலதிக்கு எல்லா விசயங்களிலும் தானே முடிவெடுக்கும் வழமை ஊறிவிட்டது. கேள்வி கேட்கும் நிலையில் இருந்த அக்காவும் இன்று இல்லை, சின்னம்மாவிடம் பகிர்தல் மட்டுமே சாத்தியம். பரமு தன்னைவிட இளையவள். இந்த நிலையில் தான் செய்வது […]

தீபாவளிப் பரிசு!

This entry is part 30 of 33 in the series 11 நவம்பர் 2012

  தீபாவளிக்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கிறது. புது துணி எடுக்கவோ, பலகாரம் செய்யவோ ஏதும் விருப்பம் இல்லை. ஒரு வாரமாக கடைவீதிக்குப் போகலாம் என்று கணவர் சுந்தரம் கூப்பிட்டு சலித்துப்போனதுதான் மிச்சம்.   “எல்லாம் தீபாவளி கழித்து வாங்கினால் என்ன நட்டம். இந்தக் கூட்டத்தில் போய் அலைமோதி வாங்கி வந்து புதுசு உடுத்தனுமாக்கும். மெதுவா அப்பறமா வாங்கலாம்” என்று தட்டிக் கழித்த சாவித்திரியைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. ஒரு காலத்தில் ஒரு மாதம் முன்பே எப்போது […]

மணலும் நுரையும்! (3)

This entry is part 28 of 33 in the series 11 நவம்பர் 2012

sand and foam (3) – Khalil Gibran ஏழு முறைகள் எம் ஞாதிருவை வெறுத்திருக்கிறோம் யாம், முதல் முறையாக அவளை, சாதுவான மங்கையாகக் கண்டாலும்   அவள உச்சத்தை எட்டக்கூடும் இரண்டாம் முறை அந்த முடமாகிப் போனவனுக்கு முன்னால் துள்ளிக் கொண்டிருக்குமவளைக் கண்டேன். மூன்றாம் முறையாக கடினமானது மற்றும் எளிதானதிற்கும் இடையிலான தேர்ந்தெடுத்தலில் அவள் அந்த எளிதானதையேத் தேர்ந்தெடுக்கக் கண்டேன். நான்காம் முறையாக தவறொன்றை அவ்ளிழைத்தபோது, மற்றவர்களும் தவறிழைத்துக் கொண்டுதானே இருக்கிறார்கள் என்று தம்மையே ஆற்றிக் கொண்டவளைக் […]

நம்பிக்கை ஒளி! (5)

This entry is part 21 of 31 in the series 4 நவம்பர் 2012

  பணிக்குச் செல்லும் பரபரப்பு காலை நேரத்தில் வாடிக்கையான காட்சிதான் என்றாலும், வீட்டிலுள்ள அனைவரும் ஒரு சேர ஒரே நேரத்தில் கிளம்ப வேண்டுமென்றால் கொஞ்சம் கூடுதல் டென்சன் தான். அதுவும் ஒரு குளியலறை, ஒரு கழிவறை என்று இருக்கும் வீடுகளில் கேட்கவே வேண்டாம். நீ முந்தி, நான் முந்தி என்று ஒரே கூத்துதான்.   சாவதானமாக உட்கார்ந்து துண்டு முடிந்துகொண்டு, காலையில் எப்.எம் ரேடியோவில் ஆரம்பித்து பின்பு டீவி சீரியல் ஒன்று பாக்கியில்லாமல் பார்த்துக் கொண்டிருந்த பரமுவா […]

மணலும் நுரையும்-2

This entry is part 16 of 31 in the series 4 நவம்பர் 2012

  பவள சங்கரி     Sand and foam – Khalil Gibran (2)   மணலும், நுரையும் (2)   வெகு நேரம், அந்த, பருவ மாற்றங்களும்  அறியாமல், அமைதியாக, எகிப்தின் தூசிப்படலத்தினுள் கிடந்தேன் யான். பின்னர் அந்த நிசாந்தகன் எம்மை உயிர்த்தெழச் செய்ததால், யான் எழுந்து அந்த நைல் நதிக்கரையோரம் பகலோடு பாடிக்கொண்டும், நிசியோடு சுவனம் கொண்டும் நடந்தேன். மேலும் தற்போது அந்த பகலவனோ, தம் ஓராயிரம் பாதக்கிரணங்கள் கொண்டு எம்மை ஏறி மிதித்துச் […]

மணலும், நுரையும்

This entry is part 20 of 34 in the series 28அக்டோபர் 2012

SAND AND FOAM – KHALIL GIBRAN (1926)      “Half of what I say is meaningless, but I say it so that the other half may reach you.”   மணலும், நுரையும்   அனுதினமும், இந்தக் கரையோரங்களில் அந்த மணல் மற்றுமந்த நுரையினிடையே, நடை பயின்று கொண்டிருக்கிறேன் யான் உயர்ந்த அந்த அலைகள் எமது பாதச்சுவடுகளை அழித்துவிடக்கூடும், மேலும் அந்த வளி அந்த நுரையையும் ஊதித்தள்ளிவிடும். ஆயினும் […]

நம்பிக்கை ஒளி! (4)

This entry is part 4 of 34 in the series 28அக்டோபர் 2012

உலகமே இருண்டு போய் ஏதோ அதள் பாதாளத்தினுள் அனைவரும் தத்தளிப்பது போல ஒரு படபடப்பு. நாட்கள் சில உருண்டோடியது புரிந்தது. மீண்டு எழ வேண்டியது அவசியம்தான். அடித்துப் போட்டது போன்று உடலும், மனமும் ரணமாகிக் கிடந்தது. வெகு நேரம் கழித்துதான் இரவு தூக்கம் வந்தது…. அன்றாட வழக்கம் போலவே அன்றும் விடியலிலேயே விழித்துக் கொண்டவள், கண்ணைத் திறக்காமல் அப்படியே எழுந்து படுக்கையிலேயே அமர்ந்து கொண்டு தன் தாயாய் இருந்து அன்பு சொரிந்த அந்த அழகு அக்கா முகத்தை […]

கதையே கவிதையாய்! (10)

This entry is part 9 of 21 in the series 21 அக்டோபர் 2012

  நித்திலம்   சிப்பியொன்று  தமதருகில் இருந்த மற்றுமொரு சிப்பியிடம், “ யான் பெரும் வலியைச் சுமந்து கொண்டிருக்கிறேன், கனரகமாகவும், உருண்டையானதுமான அது  எமைத் துன்பமுறச் செய்கிறதே,” என்றது..   மேலுமந்த மற்றொரு சிப்பியோ, “வாழ்க வாழ்க, அந்த விண்ணும், சாகரமும்!  எம்முள்  ஏதும் இருந்தும்,  இன்மையாலும், கூட யான்  எந்த வேதனையும் இன்றி சுகமாகவும், நிம்மதியாகவும் இருக்கிறேன்“ என்றதாம் மன நிறைவுடன்.   அத்தருணமதில் அவ்விடத்தைக் கடந்து செனற,, இவ்விரண்டு சிப்பிகளின் உரையாடலையும் செவிசாய்த்த, நண்டு […]