பன்னிரு படி ஏறியே மாடியேறும்போழ்துஉன்னிப்பாய் பார்க்கும் அப்பொருள் ஜாக்கிரதைநீ பார்க்காவிடினும் அது அங்கே இருக்கும்ஊசியாய் பற்களுடனும் பால் முழியுடனும்உன்னுடைய சதைகளை பிய்த்துத்தின்ன ஆவலாய்எதற்காக மேலே போகிறாய்?
ஆன்டரூ நியுபெர்க்கும் மார்க் ராபர்ட் வால்ட்மானும் இணைந்து எழுதிய “நாம் நம்புகிற விஷயங்களை நாம் ஏன் நம்புகிறோம்?”நூலின் அடிப்படை கருத்துகளையும் ஆய்வுகளையும் நாம் சென்ற பதிவில் பார்த்தோம். இந்த புத்தகம் பற்றியும் பொதுவாக நியுபெர்க் முன்வைக்கும் ஆய்வையும் அதன் தர்க்கங்களையும் பற்றிய கேள்விகளையும் அதற்கு அவர் தரும் பதில்களையும் இங்கே பார்க்கலாம். கேள்வி : நாம் நம்புகிற விஷயங்களை நாம் ஏன் நம்புகிறோம்? நம்பிக்கை நான்கு முக்கிய விஷயங்களைச் சார்ந்திருக்கிறது – புலனறிவு, உணர்சசிகள், அறிதல், சமூக […]
இந்த தொடர் நடுவில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறேன். இதுவரை நாம் பார்த்த சிலரது வாழ்க்கை வரலாறும், அவர்களது பிரமைகளும் அந்த பிரமைகள் மீது கட்டப்பட்ட அவர்களது நம்பிக்கைகளும் நமக்கு ஒரு சித்திரத்தை அளிக்கின்றன. இதிலிருந்து நாம் அடையக்கூடிய ஒரு முடிவு, இறை உணர்வு என்பது ஒருவருக்கு மட்டுமே கிடைக்கக்கூடியதல்ல என்பதுதான். இவரிடம் மட்டுமே இறைவன் பேசினார் மற்றது எல்லாம் போலி என்பதோ அவரவர் பார்வை மட்டுமே. இந்த இறை அனுபவம் அல்லது ஆன்மீக உணர்வு என்பது god […]
இஸ்லாமிய வழியில் வந்த மத ஸ்தாபகர்களில் ஒருவராக பஹாவுல்லா அவர்களை முன்பு பார்த்தோம். இந்த வாரம் இந்தியாவில் பிறந்து இஸ்லாமில் ஒரு பிரிவாகவே தொடர விரும்பும் அஹ்மதியா பிரிவை தோற்றுவித்த மிர்ஸா குலாம் அஹ்மது அவர்களை பார்க்கலாம். இஸ்லாமில் நிறைய பிரிவுகள் இருந்தாலும் இரண்டு மிக முக்கியமான பிரிவுகளாக ஷியா பிரிவையும் சுன்னி பிரிவையும் குறிப்பிடலாம். இதற்கு முக்கிய காரணம் இந்த பிரிவுகளே சரியான பிரிவுகள் என்று கருதும் அரசாங்கங்கள் ஆட்சியில் இருப்பதே. அரேபியாவை ஆளும் சவுதி […]
சென்ற வாரம் கிறிஸ்துவம் ஐரோப்பாவில் கோலோச்சிக்கொண்டிருந்த மத்திம காலத்தில் புனிதர்கள் என்று அறியப்பட்டவர்களின் டெம்போரல் லோப் வலிப்பு எப்படிப்பட்ட தாக்கத்தை உருவாக்கியது, அது எவ்வாறு அவர்களால் புரிந்துகொள்ளப்பட்டது, அவர்களை மற்ற கிறிஸ்துவர்கள் எவ்வாறு புரிந்துகொண்டார்கள் என்பதை பார்த்தோம். இந்த புனிதர்கள் தங்களுக்கு இயேசு காட்சியளித்தார் என்பதையும், மேரி காட்சியளித்தார் என்பதையும் உலகுக்கு சொன்னதும் அது எவ்வாறு கிறிஸ்துவத்தை வலுப்படுத்தியது என்பதையும் அறிந்தோம். ஒரு சமூகத்தின் உள்ளே இருக்கும் பாதிப்புகள், சூழ்நிலைகள் இப்படிப்பட்ட டெம்போரல் லோப் வலிப்பு உள்ளவர்கள்களையும் […]
ஐரோப்பாவில் கிறிஸ்துவம் கேள்விக்கு அப்பாற்ப்பட்டதாக இருந்த காலத்தில் இது போன்ற டெம்போரல் லோப் வலிப்பு நோய் பெற்றவர்கள் என்ன விதமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளார்கள் என்று ஆராய்வது இன்னும் சில சுவாரஸ்யமான சிந்தனைகளை நமக்கு தரும். கிறிஸ்துவ இறையியலாளர்களாக இப்படிப்பட்டவர்கள் பலர் அடையாளப்படுத்தப்பட்டாலும் இவற்றில் சில முக்கியமானவர்களை இங்கே அணுகலாம். — செயிண்ட் பிர்கிட்டா (1303-1373) ஸ்வீடனின் முக்கியமான செயிண்டாக அறியப்படுகிறார். இவர் சிறுமியாக இருந்த காலத்திலிருந்தே இப்படிப்பட்ட காட்சிகளை அனுபவிப்பவராக இருந்தார். இவரது கல்லறையில் மண்டையோடு ஆராயப்பட்டிருக்கிறது. […]
சமீப காலத்தில், ஜோஸப் ஸ்மித் ஜூனியர் உருவாக்கிய மார்மனிஸம் மதத்தை விட பெரிய மதத்தை உருவாக்கியவர் என்று ஒருவரை குறிப்பிடலாம் என்றால், பஹாவுல்லா என்று அழைக்கப்படும் மிர்ஸா ஹூசைன் அலி நூரி என்ற ஈரானியரை குறிப்பிடலாம் மிர்ஸா ஹூஸைன் அலி நூரி நவம்பர் 12 ஆம் மாதம் 1817இல் , பெர்ஷியா (ஈரானின்) தலைநகரான டெஹ்ரானில் கதிஜா கானும் என்ற அம்மையாருக்கும், மிர்ஸா புஸுர்க் என்பவருக்கும் பிறந்தார். இவரது வரலாற்றை கூறுமுன்னர், பாப் bab என்று தன்னை […]
இந்த பகுதியில், எவ்வாறு டெம்போரல் லோப் வலிப்பு நோய், ஒரு புதிய மதத்தை உருவாக்கியது என்பதை பார்க்கலாம். அதே நேரத்தில் எவ்வாறு ஒரு புதிய மதம், அதற்கு முன்னால் வந்த மதங்களின் நீட்சியாகவும், அதே நேரத்தில் அதன் தூய வடிவாகவும் தன்னை தகவமைத்துகொள்கிறது என்பதையும் காணலாம். தற்போதைய அமெரிக்க தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுபவர்களில் முதலாவதாக வந்துகொண்டிருப்பவர் மிட் ராம்னி என்ற மோர்மன் பிரிவைச் சேர்ந்தவர். மோர்மன் பிரிவு என்பது என்ன? மோர்மன் […]
டெம்போரல் லோப் என்பது என்ன? படத்திலிருப்பது மூளையின் பல பகுதிகள். ஒவ்வொரு பகுதியும் ஒரு லோப் என்று வழங்கப்படுகிறது. ஆங்கிலத்தில் டெம்பில் temple என்பது http://en.wiktionary.org/wiki/temple நெற்றிக்கு பக்கவாட்டில் கண்களுக்கு பின்னால் இருக்கும் இடம். இந்த இடத்தில் இருக்கும் மூளையின் பகுதி டெம்போரல் லோப் என்று அழைக்கப்படுகிறது. உடலின் உணர்வு தளங்கள், கண், மூக்கு, வாய், தோல் ஆகியவை இந்த பகுதிக்கு தன் நரம்புகளை அனுப்பிகொடுக்கின்றன. இந்த மூளை அந்த உணர்வுகளை பொருளுள்ளதாக மாற்றுகிறது. […]
மூளைக்குள் கடவுள் இது பிபிஸி ஆவணப்படம். இதற்கான தமிழ் சப்டைட்டில்கள் நான் எழுதியவை. இரண்டாம் பகுதி குரல்: பரிசோதனை நடப்பதற்கு முன்னால், டாக்டர் பெர்ஷிங்கர் நபர்களை ஒரு அமைதியான அறைக்கு அழைத்துச்சென்று அவர்களது கண்களை மூடி கட்டிவிட்டார். டான் ஹில் அவர்களுக்கு எதற்கு பரிசோதனைக்கு அழைத்துச் செல்கிறார்கள் என்பது கூட தெரியாது. டான் ஹில்: ஹெல்மட் வைத்ததும், பல வினோதமான அனுபவங்களை பெற்றேன். என்னுடைய கைகள் இறுக்கிகொண்டன. விவரிக்க முடியாத பய அலைகள் தோன்றின. கூச்செரியும் உணர்வுகள். […]