author

’ரிஷி’யின் கவிதைகள்: புரியும்போல் கவிதைகள் சில….

This entry is part 3 of 18 in the series 14 பெப்ருவரி 2016

1. குட்டை குளம் ஏரி ஆறு கடல் சமுத்திரம் இன்னும் கிணறு வாய்க்கால் நீர்த்தேக்கங்கள் எல்லாமும் மழையுமாய் எங்கெங்கும் நீராகி நிற்கும் நிலத்தில்தான் தண்ணீர்ப் பற்றாக்குறையும் குடிநீர் கிட்டாநிலையும் எனத் தெள்ளத்தெளிவாய்த் தத்துவம் பேசுவோர்க்குத் தெரியுமோ ஒரு துளி நீரில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையும் அவற்றின் அலை-துகள் நிலையும் களி நடனமும் பிறவும்….? 2. ஒன்றிரண்டு மூன்றுநான்கு ஐந்தாறு எட்டுபத்து…. ஏழும் ஒன்பதும் விட்டுப்போனதேன் என்று வாய்ப்பாடு ஒப்பித்தலாய்க் கேட்பதற்கு முன் இரண்டான ஒன்றின் நான்கான மூன்றின் […]

இந்தியா – என் அருமைத் தாய்த் திருநாடே!

This entry is part 13 of 19 in the series 31 ஜனவரி 2016

    _ ‘ரிஷி’     என்னருமைத் தாய்த்திருநாடே உன் மடியில் குதித்து, மார்பில் தவழ்ந்து தோளில் தொங்கி முதுகில் உப்புமூட்டையாகி முழங்கால்களில் ஆடுகுதிரையாட்டம் ஆடியவாறே உன் பிள்ளைகள் என்ற சொந்தத்தோடு சுவாதீனத்தோடு, சுதந்திரத்தோடு சாகும்வரையான உரிமையோடு உன் மீது சேற்றை வாரியிறைத்துக்கொண்டிருக்கிறார்கள் சிலர்.     உன்னை அறம்பாடுவதே தங்களுக்குப் பெருமை சேர்ப்பதாய் அங்கிங்கெங்கிலும் உன் புகழை மங்கவைக்கக் கங்கணம் கட்டித் திரிகிறார்கள் – காறித்துப்பித்துப்பியே கர்ம வீரர்களாகிவிட்டவர்கள். உன்னை மதிப்பழிப்பதே மாபெரும் புரட்சியாய் […]

அடையாளங்களும் அறிகுறிகளும்

This entry is part 14 of 19 in the series 31 ஜனவரி 2016

  ‘ரிஷி’   தன் கடிவாளப் பார்வைக்குள்ளாகப் பிடிபடும் உலகின் ஒரு சிறு விள்ளலையே அண்டமாகக் கொண்டவர்   காலம் அரித்து ஆங்காங்கே இடிந்துகிடக்கும் குட்டிச்சுவரின் மேலேறியபடி அபாயகரமான மலையேற்றத்தை மேற்கொண்டிருப்பதாக அறிவிக்க,   கைக்கெட்டிய பரிசுகளையெல்லாம் அள்ளியவாறே அடுத்தவரை விருதுக்கேங்கியாக எள்ளி நகையாடியபடி.   ’அ’ முதல் ஃ வரையான எழுத்துகளைக் குலுக்கிப் போட்டு, கைபோன போக்கில் கொஞ்சம் அள்ளியெடுத்துக்கொண்டு கச்சிதமாய் ஒத்திகை பார்த்துத் தரித்த புன்னகையோடு அரங்கேறி கவிதையை போதிக்க,   தமது தொடர்புகளை […]

ரிஷியின் 3 கவிதைகள்

This entry is part 7 of 16 in the series 17 ஜனவரி 2016

    சொல்லதிகாரம்   ’ஐந்து’ என்ற ஒரு வார்த்தை மட்டும் சொல்லித்தரப்பட்டது அந்த ஐந்து வயதுக் குழந்தைக்கு. அது ஒரு இலக்கத்தைக் குறிப்பது என்ற விவரம் கூடத் தெரியாத பச்சைப்பிள்ளையது. பின், பலர் முன்னிலையில் அந்தக் குழந்தையிடம் எண்ணிறந்த கூட்டல் கழித்தல் வகுத்தல் பெருக்கல் கணக்குகளுக்கான விடை கேட்கப்பட எல்லாவற்றுக்கும் மிகச் சரியான பதிலளித்தது குழந்தை:   “ஐந்து”   பிள்ளையின் அறிவைப் பார்த்து வாய் பிளந்து மூக்கின் மேல் விரலை வைத்தார்கள் ஐந்தே பதிலாகக் […]

‘ரிஷி’யின் கவிதைகள்

This entry is part 5 of 29 in the series 19 ஜூலை 2015

வழிகாட்டிக்குறிக்கோள்கள் சில….   இடையறாது வெறுப்புமிழ்ந்துகொண்டேயிருக்கவேண்டும்   இருபதாயிரம் பக்கங்களிலிருந்து இரண்டேயிரண்டு பக்கங்களை திரும்பத்திரும்ப மேற்கோள் காட்டவேண்டும்;   ஆகாயவிமானத்தில் பறந்தவண்ணமே அதலபாதாளத்தில் புதைக்கப்பட்டிருப்பதாய் அடித்துப்பேச வேண்டும்;   அப்பாவிகளாய்ப் பார்த்து அறுக்கப்படும் தலைகளைக் கண்டு குறையாத  உவகைகொள்ளும் உலகளாவிய அன்பு மனம் வேண்டும்   புரையோடிய வன்மத்தில் யாரோ எழுதிய அற்ப வாசகத்தைத் தப்பாமல் தன் முகநூலில் பதிவேற்றம் செய்து யுகப்புரட்சி செய்துவிட வேண்டும்!   பொறுப்பேற்பில்லா அரியாசனத்தில் பெருமையோடு அமர்ந்துகொள்ள வேண்டும்   ’குரலற்றவர்களின் […]

இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க…..

This entry is part 16 of 19 in the series 5 ஜூலை 2015

1 சில சமயம் பேருந்தில் _ சில சமயம் மின்ரயிலில் _ ஆட்டோ, ஷேர் – ஆட்டோ _ ‘நேயம் நாய்ப்பிழைப்பல்லோ’ என்று உச்சஸ்தாயியில் நெக்குருகிப் பாடும் ஆண்குரல் உச்சிமண்டையில் ஓங்கியறைய விரையும் ‘மாக்ஸி cab’ _ பல நேரம் பொடிநடையாய்…….. பப்பாதி ஓட்டமாய் இன்றின் எல்லா நேரமும் பயணமாகிக்கொண்டிருக்கிறேன் வலியினூடாய். 2 மொட்டைமாடிக்குச் சென்று இன்னமும் நிழல் நிற்கும் மூன்று இடங்களில் இறைக்கிறேன் அரிசியையும் கோதுமையையும்; இரண்டொரு வாயகன்ற பாத்திரங்களில் நீரூற்றிவைக்கிறேன். காகங்களும் புறாக்களும் ஆரவாரக்கூச்சலிட்டவாறு […]

நாம்

This entry is part 1 of 23 in the series 12 அக்டோபர் 2014

    உன்னொத்தவர்களுக்கு எத்தாலும் அட்சயபாத்திரமாய் இந்த வார்த்தை:   ”நாம்”   சமத்துவம், சகமனித நேயம் என்பதான பல போர்வைகளின் அடியில் இந்த ஒற்றைச் சொல்லை யுனக் கொரு கூர் ஆயுதமாக ஆர்வமாய் செதுக்கியபடியே நீ….   ‘அவர்கள்’ என்று நீ யாரை உன் சுய ஆதாயத்திற்காகச் சுட்டிக்காட்டுகிறாயோ இந்த ‘நாம்’ அந்த ‘அவர்களை’ எந்தக் காரணமுமின்றி எதிரிகளாக பாவிக்கப்படப் பழக்கப்படுத்தப்படுவதே உன் இலக்காய்…..   ‘’நான்’ இணைந்த ’நாமா’கப் பேசியவாறே உன் ‘நானை’ அந்த […]

வாக்குமூலம்

This entry is part 2 of 27 in the series 21 செப்டம்பர் 2014

ஊ…லல்லல்லா……… ஊ….லல்லல்லா….. ஊகூம், ஏலேலோ உய்யலாலா……     உளறிக்கொட்டிக்கொண்டிருப்பேன்; உதார்விட்டுக்கொண்டிருப்பேன் ஒருபோதும் உனக்கொரு சரியான பதில் தர மாட்டேன்….     ஊ…லல்லல்லா…………ஊ…லல்லல்லா… …..ஊகூம், ஏலேலோ உய்யலாலா…..     வச்சிக்கவா? வச்சிக்கவா? வச்சிக்கவா வச்சிக்கவா….? எச்சில் வழியக் கேட்பவன் இறுதியில் ‘‘உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ளே’ என்று சொல்லித் தப்பித்துவிடும் உலகில் பதிலளிக்காமல் போக்குக் காட்டுவதெல்லாம் மிக எளிது       ஊ…லல்லல்லா……… ஊ….லல்லல்லா….. ஊகூம், ஏலேலோ உய்யலாலா…     இணையற்ற என்னைப் […]

இப்போது

This entry is part 1 of 26 in the series 7 செப்டம்பர் 2014

  1 எழுதியெழுதிக் கிழிக்கும் என்னைப் பார்த்துப் பழிப்பதுபோல் வாலசைக்கிறது நாய்க்குட்டி என்னமாய் எழுதுகிறது தன் சின்ன வாலில்!   எதிர்வீட்டிலிருந்தொரு குழந்தை அத்தனை அன்பாய் சிரிக்கிறது. பதறி அப்பால் திரும்பிக்கொள்கிறேன். உலக உருண்டை கண்டுவிடுமோ அதன் வாய்க்குள்!   2. தொலைக்காட்சிப்பெட்டிக்குள் அனல்பறக்கும் விவாதம். ஒரு குரலின் தோளில் தொத்தியேறுகிறது இன்னொரு குரல். தன் சக்தியையெல்லாம் திரட்டிக்கொண்டு உதறிவிடப்பார்த்தும் முடியவில்லை முதற் குரலால். அதற்குள் மூன்றாவது இரண்டாவதன் கால்களைக் கீழிருந்து இழுக்கத் தொடங்குகிறது. எங்கிருந்தோ கொசு […]

சகவுயிர்

This entry is part 21 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

      பொம்மையின் தலையை யாரோ திருகியெறிந்துவிட்டார்கள். தாங்க முடியாமல் தேம்பிக்கொண்டிருந்தாள் சிறுமி. வேறொன்று வாங்கிவிடலாம் என்று சொன்ன ஆறுதல் அவளை அதிகமாய் அழச்செய்தது. “இல்லை, என் வள்ளி தான் எனக்கு வேண்டும்… எத்தனை வலித்திருக்கும் அவளுக்கு..” என்று திரும்பத்திரும்ப அரற்றினாள் சிறுமி. சுற்றிலுமிருந்தவர்களுக்கு ஒரே சிரிப்பாயிருந்தது. ‘குவிக்ஃபிக்ஸி’ல் தலையைக் கழுத்தோடு விரைந்தொட்ட முயன்றார் தந்தை. முடியவில்லை. சற்றே தொங்கிய பொம்மைத்தலையை யொருவர் அவசர அவசரமாக அலைபேசியில் படம்பிடித்துக்கொண்டார். ’உச்சகட்ட வன்முறைக்காட்சிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும்போது பயன்படுத்திக்கொள்ள […]