Articles Posted by the Author:

 • மதம்

  மதம்

    உங்கள் உடம்பில் ப‌ச்சை குத்திக்கொள்ளுங்கள். உங்கள் உடம்பில் எதில் வேண்டுமானாலும் பச்சை குத்திக்கொள்ளுங்கள். உங்கள் உடம்பில் எங்கு வேண்டுமானாலும் பச்சை குத்திக்கொள்ளுங்கள். உங்கள் அழகு எங்கள் அசிங்கம். அசிங்கத்தை சமுதாயத்தின் மீது பச்சைக்குத்திவிட‌ உங்களுக்கு துளியும் உரிமை இல்லை. பச்சைப்பொய்களை நிரந்தரமாக குத்திக்கொண்டால் அது உண்மை ஆகாது.


 • உற்றுக்கேள்

  உற்றுக்கேள்

  ==============================================ருத்ரா என் நிழலை உமிழ்ந்தது யார் அல்லது எது? சன்னல் கதவுகளை விரீர் என்று திறந்தேன். சூரியன் கன்னத்தில் அடித்தான். வெகு கோடி மடங்கு வெப்பத்தைக் கருதரித்துக்கொடுத்தவனே! உன் கருவுக்குள் விதை தூவியது யார்? நாங்கள் ஆதித்யஹ்ருதயம் சொல்லி சொல்லி உன்னில் ஜனித்ததாய் கூச்சல்கள் இட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். உன் அப்பன் யார் அற்பனே? பிக் பேங்க் என்று ஆயிரம் அயிரம் கோடி ஆற்றல் பிசாசு ஆவி கொடுத்து உருட்டித்திரட்டி உரு பிசைந்த அண்டத்தில் உன் பிண்டம் […]


 • புரியாத புதிர் 

  புரியாத புதிர் 

  ருத்ரா அவன் கேட்டான். அவள் சிரித்தாள். அவள் கேட்டாள். அவன் சிரித்தான். அந்த சிரிப்புகளும் கேள்விகளும் சிணுங்கல்களும் இன்னும் புரியவில்லை. இருவருக்கும் புரியவில்லை அது காதல் என்று. காதலுக்கு மட்டுமே புரிந்தது அது காதல் என்று. காதல் என்று புரிந்தபோது வெகு தூரம் வந்திருந்தார்கள். அடையாளம் தெரியாத‌ மைல் கற்களோடு தாலி கட்டி மேளம் கொட்டி.. குடும்பம் குழந்தை குட்டிகள் என்று. வேறு கணவன் வேறு மனைவி எரிமலையில் அதே உள்ளங்கள் வெந்து முடிந்தும் உருகி வழிவது […]


 • துரும்பு

  துரும்பு

    வாழ்க்கை என்றால் என்ன‌ என்று கேட்டால் கடவுளைக்காட்டுகிறீர்கள். கடவுளைக்காட்டுங்கள் என்றால் வாழ்ந்து பார் என்கிறீர்கள். முட்டி மோதி கடைசி மைல்கல்லில் ரத்தம் வழிந்த போது சத்தம் வந்தது உள்ளேயிருந்து. இதயத்துடிப்பின் ஒலியில் கேட்டது தானே முதல் மொழி. அதன் சொல் ஜனனம் என்றால் அதன் அர்த்தம் மரணம் என்றார்கள். மனிதனா?இறைவனா? அது “மெய் பொய்”த்துகளின் குவாண்டம் மீனிங். அன்னிஹிலேஷனும் அது தான். கிரியேஷனும் அது தான். அழித்து அழித்து ஆக்குவதே அணு உலைக்கூடம். ஃபீல்டு எனும் […]


 • சோறு மட்டும்….

  சோறு மட்டும்….

  சோறு மட்டும் வாழ்க்கையில்லை சுதந்திரம் வேண்டுமென்று பல வண்ணக் கொடியேந்தி பவனிகள் வருகின்றார். சுதந்திரம் கண்ட பின்னே அடிமைத்தனம் வேண்டுமென்று பொய்க்கவர்ச்சிக் காடுகள் வீழ்ந்து கிடக்கின்றார். வறுமை இன்னும் ஒழியவில்லை அறியாமையும் தீரவில்லை சமுதாய நீதி என்னும் மலர்ச்சி இன்னும் கூடவில்லை. தேர்தல்கள் வந்தனவே தேர்தல்கள் போயினவே ஆகஸ்டுகளும் வந்தனவே ஆகஸ்டுகளும் போயினவே ஆண்டுகளுக்கும் கூட இங்கு நரைத்தது தான் மிச்சம். நூறு ஆண்டு நோக்கி வேகங்கள் காட்டுகிறோம். இன்னும் இன்னும் இங்கு பெரும்பான்மை மக்களுக்கு ஜனநாயக […]


 • தேடிக்கொண்டிருக்கிறேன்

  தேடிக்கொண்டிருக்கிறேன்

    அதைத்தான் இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன். கால்சட்டை போட்டுக்கொண்டு கோலி விளையாடிய போது அவன் மொழியை உடைத்து விடவேண்டுமே என்ற வெறியைத்தேடினேன். தட்டாம்பூச்சி சிறகுகளை காதோடு காதாக ஒட்டிவைத்துக்கொண்டு கிர்ரென்று அது போடும் ஓசைக்குள் அர்த்தம் புரியாத‌ நியாய வைசேஷிகத்தையும் பூர்வ உத்தர மீமாம்சங்களையும் தேடினேன் என்று சுருக்கம் விழுந்த வயதுகளில் நினைவுகளை சவைத்துத் துப்பும்போது தெரிந்து கொண்டேன். அவளிடம் என்ன இருந்தது என்று தெரியாமலேயே அவளிடம் இன்று வரை தேடிக்கொண்டிருக்கிறேன். வேறு வேறு கூட்டில் இருவருக்கும் ஆறேழு […]


 • எங்கே அது?

  ==================================ருத்ரா இ.பரமசிவன் அச்சு எந்திரம் பெற்றுப்போட்டதில் காப்பி தான் வந்தது? மூலப்பிரதி இன்னும் வரவில்லை? அதை “ஆத்மா” என்றார்கள்! மன சாட்சி என்றார்கள். பிரம்மம் என்றார்கள். இதயமும் கல்லீரலும் நுரையீரலுமாய் ஏதோ தேங்காய் நாரும் பஞ்சும் அடைத்த‌ மரப்பாச்சிகளாய் உலா வருகின்றேன். எங்கே அது? என்ன அது? எதற்கு அது? புரியவில்லை! இருப்பினும் அந்த‌ மூலப்பிரதி இன்னும் வரவில்லை! பெரிய பெரிய பரிய‌ மனிதர்கள் அது பற்றி தேடுதல் வேட்டையில் ஞானத்தை கூர் தீட்டுகிறார்கள்! பாவம் என்கிறது […]


 • நான் ஒரு பிராமணன்?

  நான் ஒரு பிராமணன்?

  ஆம். நானும் ஒரு பிராமணன் தான். உச்சிக்குடுமி வைத்திருக்கவில்லை. பஞ்சக்கச்சம் உடுத்த வில்லை. பூணூல் போடவில்லை. கோத்திரம் இல்லாத ஒரு கோத்திரம் எனக்கு உண்டு. கோவில்களில் யாகம் நடத்தி அதி ருத்ர ஹோமங்களுக்காக‌ ஸ்ரீ ருத்ரம் சமகம் சொல்லி பூர்ண ஆகுதிக்கு அந்த நீண்ட மர அகப்பையில் எல்லாவற்றையும் பொசுக்கப்போகிறேன் என்று அடையாளமாய் சில தானியங்களையும் தனங்களையும் தீயின் நாக்குகளுக்கு கொடுக்க வில்லை தான். ஆனாலும் நான் பிராமணன் தான். பண்ணிக்குட்டிகளை மேய்ப்பவன் நான். பிணங்களைச் சுடுகிறவன் […]


 • காதலர் தினம்

  காதலர் தினம்

      ஈடன் தோட்டத்தின் மிச்ச சொச்சம். வணிகப்பாம்பும் சைத்தான்கள் காட்டும் ப்ளாஸ்டிக் ஆப்பிளும் பதினாறுகளில் பாய்ச்சுகின்றன‌ தேனாறும் பாலாறும். வாய்க்கால் வரப்புப்புல்லின் பனித்துளியில் கண்ணாத்தாவின் விழி வர்ணம் அந்த முனியனின் நரம்பு புடைத்தலில் யாழ் மீட்டியது. ஒரு பேருந்தில் எச்சில் தொட்டுக்க்கொடுத்த‌ டிக்கட் வாங்குகையில் கண்ணுக்கே எச்சில் ஊற வைத்த ஒரு சுடிதார் பெண்ணின் கண்ணின் கருங்குழியில் விழுந்த‌ அந்தக்காளை ஒரு மௌன ஜல்லிக்கட்டுக்கு தயார் ஆகி கொம்பு சீறி கண் கொதித்து மண் தெறிக்கிறது. […]


 • புழுக்களும் மனிதர்களும்

    காந்தித்தாத்தா என்ற சொல் முள்ளுமுனையில் கூட‌ மூணு குளம் வெட்டும். மூணு குளமுமே பாழ் என்றாலும் வெட்டிய இடம் எல்லாம் அவர் ரத்தமும் வேர்வையும் தான். சுதந்திரத்தை வாங்க‌ அடிமைத்தனத்தை பண்டமாற்றம் செய்யச்சொன்னார். அப்படி மாற்றப்பட்டதை விடவும் மாட்டிக்கிடந்ததே நமக்கு பரம சுகம். கத்தியின்றி ரத்தம் இன்றி யுத்தம் புரிவதன் உருவகமே அந்த அண்ணல்! உருவமே மூளியாய் நின்றவர்களுக்கு கத்தியும் புரியவில்லை ரத்தமும் புரியவில்லை. அதனால் நம் ரத்தமே நமக்கு தர்பூஸ் ஜூஸ். நம் அன்னையர்களே […]