யானைமலை

மதுரையே இங்கு கல்லாய் விறைத்து உயரமாய் படுத்திருப்பதை பார்க்க கோள்ளை அழகு. அந்த மத்தகம் பரந்த ஒலிம்பிக் மைதானமாய் கம்பீரமாய் காட்சி தரும். வெள்ளை வெயில் தினமும் குளிப்பாட்டும் சுகத்தில் அந்த‌ க‌ருங்க‌ல் கூட‌ கருப்பு வெல்வட் ச‌தைச்சுருக்க‌மாய் தும்பிக்கை நீட்டிக்கிட‌க்கும்.…

“ஊசியிலைக்காடுக‌ள்”

இற‌க்கை முளைத்த‌ குண்டூசிக‌ள் எனும் கொசுக்க‌ளின் ஊசிக‌ள் அல்ல‌ இவை. ந‌ம‌க்கு நாமே ம‌ருத்துவ‌ம் செய்து கொள்ள‌ போட்டுக்கொள்ளும் ஊசிக‌ளே இந்த‌க்காட்டின் பூக்க‌ள். சங்கரன் கோயில் ================== தபசுக் காட்சி சப்பரங்கள் திரும்பிவிட்டன. சரித்திரங்கள் திரும்பவில்லை. அம்மா ====== சொல்லி அடித்து…

சாதிகள் வேணுமடி பாப்பா

"எல ஒரு சாமிய கும்பிட்டா கும்பிட்ட மாரியா இருக்கும்?....இப்டி பூட‌ம் தெரியாமெ சாமியாடிட்டே இருக்க‌ணும்." "யோக்ய‌ங்க‌ண‌க்கா பேசாதலெ பொற‌ந்தாக்ல‌ அந்த‌குறிய‌ கூட‌ பாக்காம‌ என‌த்தான் ச‌ன‌த்தான்னு குறி பாத்து த‌ஸ்தாவேஜி போடுதாம்லா அதப்பாருலெ" "அதுக்கு நாம‌ என்னெழ‌வ்லே செய்ய‌து. க‌வ‌ர்மெண்டே குத்ர‌…

எழுத்தாளர்கள் ஊர்வலம் (4 ம் பாகம்)

ஆத்மாநாம் =========== சுஜாதாவுக்குள் சூல் கொண்ட மேகம் இந்தக் கவிதை. மௌனி ======= ஞான இரைச்சல்களை தின்று விழுங்கியவர். பேயோன் ======== "பின் ந‌வீன‌த்துவ‌த்துக்கும்" பேன் பார்த்த‌வ‌ர். கி.ராஜேந்திர‌ன் ============= க‌ல்கி வைக்காம‌ல் போன‌ முற்றுப்புள்ளிக‌ளால் க‌ல்கியை நிர‌ப்பிய‌வ‌ர் ஜெகசிற்பியன் =============…

எழுத்தாளர்கள் ஊர்வலம் (3 ஆம் பாகம்)

  சு.சமுத்திரம் =========== எழுத்து நிறைய கடல் உண்டு. ஒரு துடுப்பு தேடும் துடிப்பு உண்டு. பி.எஸ் ராமையா ================ ம‌ணிக்கொடியை கொடி அசைத்து ஓட்டியவர் இவ‌ரே. சாவி ==== மாற்றிப்ப‌டியுங்க‌ள். அமெரிக்காவுக்கு "விசா" இவ‌ர‌து "வாஷிங்க்ட‌னில் திரும‌ண‌ம்" ம‌ணிய‌ன் ‍========…

எழுத்தாளர்களின் ஊர்வலம் (பாகம்..2)

உ.வே.சா. ========== இவருக்கு நாலு வேதங்களும் எட்டுத்தொகையும் பத்து பாட்டும் தான். கி.வா.ஜ‌ ======== செந்தமிழும் "பன்"தமிழும் இவருக்கு நாப்பழக்கம். திரு.வி.க‌ ========== த‌மிழின் "ஓங்கு வெள்ள‌ருவி" ஓட‌ வைத்த‌து "க‌ல்கி"எனும் தேனாறு. வ‌.உ.சி ======= சுத‌ந்திர‌ம் எனும் க‌ன‌ல் எழுத்து…

அதோ ஒரு புயல் மையம்

அதோ ஒரு புயல் மையம் கருக்கொண்டு விட்டது. தினசரி காலண்டர் தாள்க‌ளின் இந்த‌ இலையுதிர் கால‌த்தின் ந‌டுவே பெப்ர‌வ‌ரி ப‌தினாலாம் தேதி..... பொன் வ‌ச‌ந்த‌ம். ம‌ல‌ர் ம‌ழை. தேன் மின்னல். குமுழிக்கோட்ட‌ம். நுரைவ‌ன‌ங்க‌ள். ப‌னிச்சொற்க‌ள். வ‌ண்ணாத்திப்பூச்சி சிற‌குக‌ளுக்குள் வாழ்க்கைப்பாட‌ங்க‌ள். முள் மீது…

மெஹந்தி

பட்டி விக்கிரமாத்தித்தன்களிடம் போய் இந்த வரம் வாங்கி வந்தேன். "கூடு விட்டு கூடு பாய்ந்து" மெஹந்தி பிழியும் இந்த கூம்புக்குள் கண் கூம்பி தவம் இருந்தேன். இந்த "பியூட்டி பார்லருக்குள்" அவள் இன்று இதே நேரம் வருவாள் என்று எனக்குத்தெரியும். அப்படித்தான்…

அகர முதல “எழுத்தெல்லாம்”….(ரஜினி விருது விழா)

(அதில் அசைபோட்டதே இந்த எழுத்தாளர்களின் ஊர்வலம் எழுத்"தாளர்"கள் =============== எழுத்துகளை ஆளுபவர்கள் இன்று தாள்களில் தாழ்ந்து போனார்கள் விருது விழா ============= விருதும் கூட‌ ர‌ஜ‌னிக்கு விசில் அடித்த‌து. விருது விழா ============ விருதும் கூட‌ ர‌ஜ‌னிக்கு விசில் அடித்த‌து. எஸ்.ரா…

“யாத்தே யாத்தே” களின் யாப்பிலக்கணம்

ஆடுகளத்தில் தனுஷ் பாடும் பாட்டு ............. .......... ... சில பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே போய் குறுந்தொதொகையில் "கல் பொரு சிறுநுரையார்” கவிதை எழுதிய போது.. "அணிலாடு முன்றிலார்" எழுத்துக்கள் எனும் மயிலிறகினால் மனம் வருடியபோது.... திடீரென்று அந்த எழுத்தாணி…