Articles Posted by the Author:

 • லேசான வலிமை

  லேசான வலிமை

  கொடுங்கனவில் விழித்தது முதன்முறையல்ல படுக்கையில் முளைத்தன பதாகைகள் தமிழில் பிற மொழியில் கோஷம் கோரிக்கை விளம்பரம் அறிவுரை எச்சரிக்கை அறைகூவல் வியர்த்து விழித்தேன் பல இரவுகள் காற்றில் அசைந்து பறந்தும் போகும் லேசான அவை மானுடத்தின் பரிமாற்றங்கள் உரையாடல்கள் தோழமைகள் வாளுரசல்கள் வாணிகம் தியாகம் உறவுகள் சுரண்டல்கள் எதையும் நிர்ணயிக்கும் மாவல்லமை கொண்டவை பதாகைகள் ஒரு அமைப்பின் கொடுங்கனவாகா அமைப்பின் நிறுவனத்தின் அதிகார அடுக்குகள் வளாகத்து அறைகளின்’ கதவுகள் மீது பெயர்ப் பலகைகளாய் பதாகையை எதிர்கொள்ளும் பதாகைகளைப் […]


 • நிறை

  மனம் நிறைந்து வழிந்தது நொடிகள் தாண்டி நீளவில்லை என்பது தவிர நினைவில் எதுவுமில் லை காந்தமாக ஒரு தேவை நினைவூட்டலாக ஒரு அதிகார உரசல் மனவெளியைத் தோண்டித் தோண்டி ஊற்று நீர் தேடும் என் குறைகளை நீக்க ஒண்ணாது உள்ளே என்ன குறை என்றே அவரோகணம் பொம்மலாட்டக் கயிறு மட்டுமல்ல பொம்மைகளும் மாற்றிக் கொள்ளும் மேடையில் தன்வயமாயில்லாமல் இருப்பை வடிவை கைகளை நிறைவு தந்த புனைவுக் கவிதையின் கதையின் மூலமாய் ஒரு நிறைவின்மை


 • இரண்டாவது புன்னகை

  இரண்டாவது புன்னகை

      புத்த பிட்சுவின் அடியொட்டி நடந்தான் சாம்ராட் அசோகன்   கால்கள் இழந்த குதிரையின் காயங்களைக் குதறிக் கொண்டிருந்தன கழுகுகள்   வீரன் ஒருவனின் குழந்தை தாயின் மடியில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்   மௌரிய சாம்ராஜ்ஜியமென்ன இனி எந்த நாட்டிலும் போரென்பதே இருக்காது நிம்மதிப் பெருமூச்சே இறுதியாய் முடிந்தான் அவளின் தந்தை   மந்திரிகள் கலைஞர்கள் ஜெய கோஷத்துடன் அணி வகுத்தனர் அசோகன் பின்னே   புத்தன் இரண்டாம் முறை புன்னகைத்தான்


 • இயன்ற வரை

  இயன்ற வரை

      நாசூக்காகக் காய்களை நகர்த்துகிறவர்கள்   இரண்டு மூன்று நகர்வுகளை யூகிக்க வல்லவர்கள்   கடிகார முள் சுருதியுடன் பேதலிக்காத அலை அசைவுக் கடல்களானவர்கள்   யாரிடமிருந்தும் கற்பவை கற்றிடக் கூடவில்லை   ராட்சத வணிக வளாக நகர் படிக்கட்டுகளுள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து காலெடுத்து வைப்பதை மட்டும் நகல் செய்ய இயன்றது


 • சொல்வது

  சொல்வது

      கோடிகளில் மொழிந்தேன் லட்சக்கணக்கில் எழுதினேன் சொற்கள்   சொற்கள் வழி சிந்திப்பதில் எத்தனை கர்வம் எனக்கு   பதில்களாய் கேள்வியின் எதிரொலியாய் எல்லாச் சொல்லும்   பதிலாகச் சொல்லப் படாத அசலான சொல்லை நான் எப்படி அறிவேன்?   எதிர்வினையாகாததாய் சுய சிந்தனை இதுவென்று எப்படி இனம் காண்பேன்?   அசலாயொரு தேடல் மௌனமாய்த் தொடர்வதையே காண்கிறேன்   தேடலில் வழிப்பட்ட சொற்கள் விடுதலையை சொற்களின் வழிப்பட்ட தேடல் தளைகளைப் பொருளாய்க் கொண்டிருக்க   […]


 • அம்மாவின்?

  அம்மாவின்?

      அம்மாவே ஆசான் அந்த ஓவியன் முதலில் தன்னை வயிற்றில் சுமந்த நிலை   பின்னர் கையில் பாலாடை   அடுத்து அமுதூட்டும் கிண்ணத்துடன்   கையில் கரண்டியும் அருகில் அடுப்பும்   பேரனைச் சுமக்கும் நடுவயது தாண்டிய கைகள்   அம்மாவை ஓவியமாய் காலங்கள் தோறும் தீட்டி வைத்தான்   வெகு நாள் கழித்து அம்மா கையில் தூரிகை சுழன்றது   அர்த்த நாரிஸ்வரன் ஒரு பக்கத்தில் அவளது பாதி முகமும் வடிவும்   […]


 • ஒற்றையடிப் பாதை

  ஒற்றையடிப் பாதை

        முந்தி வசப்படுத்த வழியில்லை என்றால் வாய்ப்பு என்றதற்குப் பெயரில்லை   நாற்காலியின் கால்களாய் உறவு முறைகள் உள்ளார்ந்து அதிகாரம் சுமக்கும் பெயர்களில்   வாய்புக்கள் பரிமாறா உறவினன் ஆயிரம் பாதங்கள் பட்டதால் ஒற்றையடிப் பாதையில் முளைக்காது ஒதுங்கிய செடி   தற்செயலாய் அமைவதில்லை தடங்கள் வாய்ப்புக்களின் மறுபக்கமாய்ட அல்லது வழித் தடமாய்   வெகுஜனமில்லாத் தடம் நேரம் உருவம் பாத ஒலிகள் எதிரொலிக்கும் குரைச்சல்கள்


 • காக்கைக்குப் பிடிபட்டது

  காக்கைக்குப் பிடிபட்டது

  தடிமனான புத்தகங்களில் தான் இருக்கின்றன எல்லாத் தத்துவங்களும் கோட்பாடுகளும் அவற்றைப் படித்தவர்கள் அனேகமாய் எனக்கு அது பிடிபடாது என்பதாகவே காட்டினார்கள் வெகு சிலர் கருணையுடன் சில சரடுகளை இவை எளியவை என்றும் தந்தார்கள் ஆனால் அவை சங்கிலிகளாய் ஒரு கண்ணியில் நுழைந்து சிக்கினேன் அடுத்தது என்னை நுழையவே விடவில்லை லேசாயிருப்பது தினசரி ‘நாட்காட்டித் தாட்கள் மட்டுமே தத்துவப் புத்தகங்களைப் பகடி செய்வதாய் என்னையும் லேசாய் சில முன்னேற்ற நூல்களுண்டு அவை எதையும் விளையாட்டாய் எண்ணி மேற்செல் என்பதாய் […]


 • ஒத்திகைகள்

  ஒத்திகைகள்

      தூக்கம் கலையாத குழந்தையை அம்மா சீருடை மாட்டி பள்ளிக்கு இழுத்துப் போகிறாள்   நாளை ஊடக அதிர்வுகள் அடங்காமல் சாலை நெருக்கடியில் புகுந்து புறப்பட்டு பணியிட பரப்பரப்பை நோக்கி விரைய இது ஒத்திகை   வேட்கை வேட்டை துரத்தல் வீழ்த்தல் வழி வெற்றிக்கு விதைகளாய் கல்வி வளாக அடக்குமுறை மிரட்டல் வசவு தண்டனை   தேடும் போது வெளிப்படும் கூர் நகம் ஒலியில்லாமல் கிழிக்காமல் ஊடுருவி உருக்குலைக்கும் நுண் ஆயுதம் எது தான் சாத்தியமில்லை […]


 • ‘கலை’ந்தவை

    தீற்றிய​ தெறிக்கப்பட்ட​ தோற்றமாய் வண்ணங்கள் மறுமுறை காண​ புதிய​ தரிசனத்தில் நவீன​ ஓவியம்   மாங்குயிலின் ஒரே சீழ்கை மனதை வருடும் ஒவ்வொரு நாள் வெவ்வேறாய்   கொட்டும் மழை பொருத்தும் இறந்த​ காலத்தின் அரிய​ பக்கங்களில் வேறொன்றை ஒவ்வொரு முறையும்   என்னைத் தவிர​ எத்தனை தேட​ இவருக்கென்று சேணம் பூட்டாப் புரவியாய் பயணங்கள்   வீட்டின் படிக்கட்டுகள் அலுவலக​ நாற்காலி பிடிப்பின் இறுக்கம் அளவு குறையாத​ அன்றாடம்   ஜலதரங்க​ மேதையின் முன்னே […]