Articles Posted by the Author:

 • கட்புலனாகாவிட்டால் என்ன?

  கட்புலனாகாவிட்டால் என்ன?

      நான் பறித்த பூக்கள் என் கண்படும் மலர்கள் ஏதோ ஒரு வரிசை ஒழுங்கில் பூத்து உதிர்ந்தன அல்லது வாடின   பிரியா விடை அளித்து பின் சந்திகாமலே போனவர்கள் ஒரு வெட்டுப் புள்ளியைக் கடந்தனர்     மலையெங்கும் மேகங்கள் இளைப்பாறி ஈரமாக்கும் கலையும் மீண்டு கவியும் நேரங்களில் ஏதோ ஒரு லயம்   முதலில் மறுதலித்தவள் மௌனித்த பின் ஓர் நாள் என் சகலமும் உனக்கே என்றுவந்தளித்த பரிமாணத்தில் முற்பிறவிச் சரடு சுருதி […]


 • ஒலியின் வடிவம்

  ஒலியின் வடிவம்

      குகைக்கு வெளியே அவர் வீற்றிருந்தார்   “உங்கள் தனிமை பாதிக்கப் படுகிறது”   “இல்லை. குகையில் பாம்புகள், வௌவால்கள், அணில்கள் யாவும் உண்டு”   “உங்களைத் தேடி வந்தது…”   “எறும்புகள் உங்கள் இருப்பிடத்தை ஆக்கிரமிப்பதாய் உணர்ந்ததால்”   நான் பதிலளிக்கவில்லை   “எறும்புகள் இருப்பிடம் உங்கள் கண்ணுக்குப் புலனாகாது. நீங்கள் காண்பதெல்லாம் பாதைகள்”   “என் குரலுக்கு வடிவம் உண்டா?”   “உங்களிடம் ஆன்மீகப் பிணைப்பு இருப்பவருக்கு மட்டும்’   வணங்கி விடை […]


 • மீள் வருகை

  மீள் வருகை

      வெய்யில் முகத்தில் சுட்டு எழுப்பி விட்டது   குதிரையைத் தேடின​ விழிகள் செங்குத் து மலையில் நேற்று எங்கோ புரவி நின்று விட்டது நினைவுக்கு வந்தது   இரவில் அவள் தென்பட​ மாட்டாள் ஆனால் தேடி வருவதற்குள் பொழுது சாய்ந்து விட்டது   அவளே ஒரு கனவோ? இல்லை. நெஞ்சில் இருந் து வாளை உருவி அவள் ஆற்றிய​ புண் தழும்பாயிருந்ததே   கவசங்களைக் கழற்றினான் உடைவாளையும் முன்கைக் காப்புப் பட்டைகளையும் நெஞ்சில் தழும்பு […]


 • இன்று இடம் உண்டு

  இன்று இடம் உண்டு

  வெற்றி தோல்வி பொருட்டல்ல போர்க்களம் புகுந்தவரையே நிறைத்திருக்கும் வரலாறு நிலத்தை நேசிப்பவர் குழந்தை வளர்த்து’ குடும்பம் பேணியவர் சட்டம் மீறா நிராயுதபாணிகள் கல்வெட்டுக்களுக்கு அன்னியமாய் இவர் உரிமை மையமாய் வீர்ர் களம் புகுந்ததில்லை இரும்புக் கொல்லர் செய்த எழுத்தாணிக்கு அவரின் பெயரில் எழுத எதுவுமிருக்கவில்லை இப்போது எழுதலாம் இடம் உண்டு மரக்கிளைகளில் மொட்டை மாடிகளில் கிடக்கும் அறுந்த பட்டங்களில்


 • ஞானத்தின் ஸ்தூல வடிவம்

  ஞானத்தின் ஸ்தூல வடிவம்

    போதி மரம் மட்டுமல்ல பசுமை எங்கும் நிறைந்த வனம் அது   இரையுண்ட வேட்டை விலங்கு மீத்திய மானின் உடல்   ஒரு நாளுக்குள் உயிர்ப்பை வண்ணமாய்க் காட்டிய பட்டாம்பூச்சிகள் உதிரல்களாய்   தாவுவதும் நிலைப்பதும் ஓன்றே என்னும் குரங்குகள் இயக்கமும்   காட்டாறு தீட்டிய கூழாங்கற்களின் மௌனமும்   மனிதனின் கலை ஒரே ஒரு இடத்தில்   தலையில்லாமல் தியானிக்கும் புத்த வடிவம்   அகம் அழிந்த நிலையின் மிக அண்மையான சித்தரிப்பாய்   […]


 • கைப்பைக்குள் கமண்டலம்

  கைப்பைக்குள் கமண்டலம்

  என்னை வீழ்த்திய கற்களே படுக்கையாய் இறுதி நொடிகள் நகர்ந்திருக்க “இது முடிவில்லை” என்று தேவதை கூறினாள் அது கனவா என்றே ஓரிரு நாட்கள் வியந்திருந்தேன் பின்னொருனாள் கொடுங்கனவால் வியர்த்தெழுந்த போது என் அருகில் அமர்ந்திருந்தாள் ‘இருள் எப்போதும் தோற்றமே” என்றாள். மற்றொரு நாள் மௌனமாய் அருகில் “இந்தக் காயங்களை உடனே உன் சக்தியால் ஆற்றக் கூடாதா?” “மானுட உடல் இன்பம் துன்பம் இரண்டையும் அனுபவிக்கும். நீ மானுடனே” புன்னகைத்தாள் தைரியம் கூடி ஒரு நாள் “நீ ஏன் […]


 • என் இடம்

  என் இடம்

    ஒரு வளாகத்தின் ஒரு பகுதிக்கான வாடகை ஒப்பந்தம் இவை விவாதத்துக்கு அப்பாற்பட்டவை   எந்தக் கதவுகள் யாருக்காகத் திறக்கின்றன எந்த சாளரங்கள் எப்படி மூடப்பட்டன என்பவை தொடங்கி   வளாகத்தின் எந்தப் பகுதி பயன்படுகிறது அல்லது பயன்படுவதில்லை இவை என் கேள்விகளுக்கு உட்பட்டவையே   ஒரு வளாகத்தின் உடல் மொழி அதன் உள்ளார்ந்த சொல்லாடல்களால் அல்ல மௌனங்களாலேயே தீர்மானிக்கப்படும்   எல்லா இருப்பிடங்களும் தற்காலிகமே என்போரே நான் தரவல்ல அழுத்தங்களை நீர்க்கடித்து விடுகிறார்கள்   உறைவிடம் […]


 • விதிகள் செய்வது

  விதிகள் செய்வது

      எந்த​ ஒரு விவாதமும் நிறைவடைவதில்லை முற்றுப் பெறுகிறது அவ்வளவே   எந்த​ இடத் தில் அது நிறுத்தப் பட்டது பின் எந்த​ வடிவில் மேலெடுக்கப்பட்டது என்னும் புரிதலில் நான் பலமடைந்தேன்   இந்த​ பலத் தைப் பிரயோகிக்கும் தருணத்தை ஆளை சூழலைத் தேர்ந்தெடுப்பதில் நான் அரசியல் புரிந்தேன்   அரசியல் என்பது விதிகளை வகுப்பதில் மேற்கை ஓங்குதல் என்னும் தெளிவுடன்   அதனாலேயே விளையாடத் துவங்கும் முன் குழந்தைகள் விதிகள் வகுக்கும் போது அவதானிக்கிறேன் […]


 • நீ தந்த செலாவணிகள்

  நீ தந்த செலாவணிகள்

      முன்னகர்வுகள் பத்து வார்த்தை மிகா மின்னணு சம்பாஷணையே   அதே இரு நபர் கட்டாயமில்லை உரையாடுபவர் மாறியும் பரிமாற்றம் தொடர்ச்சியில்   உன் விளக்கங்கள் மறிதலிப்புக்கள் செலாவணிகளாய்   இலக்காய்த் தென்படும் புள்ளிகள் வேகம் திசை யாவும் வசப்படுத்தும் வித்தை ரகசியமில்லை   மௌனம் மனம் திறப்பு சொல்லாடல் தேர்வாகும் நொடி அந்தரங்கம்  


 • தீ, பந்தம்

  தீ, பந்தம்

      வெவ்வேறு புள்ளிகளில் பல்வேறு மனிதர் அவர் பரிமாற்றங்கள் விளைவாய் என் பயணங்கள்   பயணங்களின் போது ஒரு வாகனத்துள் மறு நேரங்களில் இருப்பிடமாகும் அடைப்பு   ஊர்தி உறைவிடம் உடனாய்த் தென்படுதல் பற்றா?   இடம் பொருள் சகஜீவி எதனோடாவது தென்பட்டவன் இழப்பை மரணத்தை கடந்து செல்ல வில்லையா? அது பற்றறுந்து மேற்செல்தல் ஆகாதா?   ஒன்றாயிருத்தல் தென்படுதல் தற்காலிகம் என்ற​ புரிதல் நிகழாவிடினும் நிரந்தரமின்மை எட்டு திக்கிலும்   எதையாவது பற்றிக்கொண்டே தீ […]