author

முள்வெளி- அத்தியாயம் -4

This entry is part 1 of 44 in the series 15 ஏப்ரல் 2012

“ராஜேந்திரன் ஊருக்குள்ளே இருக்கறப்போ சுமாராத்தான் தகவல் தந்தீங்க. அவரு காணாமப் போன பிறகு உங்களாலே ஒரு தகவலும் தர முடியலியே?” மகேந்திரன் எரிச்சலுடன் கேட்டான். “அவரா இஷ்டப்பட்டு எங்கேயோ போயிருக்காரு. அவ்வளவு தான் சொல்ல முடியும்” “ரொம்ப நல்லாயிருக்கு. உங்களுக்கு வசதியா ஒரு பதிலைச் சொல்லாதீங்க. ராஜேந்திரன் என் சொந்தத் தங்கச்சி புருஷன். வேற பொம்பளைங்க யாருக்கும் அவனுக்கும் தொடர்பு இருக்கான்னாக்க நிச்சயமா சொல்ல முடியலேன்னுட்டீங்க” “ஸார். ராஜேந்திரன் பிஸினஸ் விஷயமா எத்தனையோ பேரை சந்திக்கிறாங்க. இதுக்கு […]

முள்வெளி – அத்தியாயம் -3

This entry is part 2 of 41 in the series 8 ஏப்ரல் 2012

அறையின் மூன்று பக்கமும் பால்கனி. ஹாலிலிருந்தும் இரண்டு பால்கனிக்குக் கதவு உண்டு. அந்த இரண்டு பால்கனியில் மட்டுமே செடி கொடிகள். ஒரு பால்கனியில் பூந்தொட்டிகள், பூ பூக்கும் கொடிகள். இன்னொரு பால்கனியில் பூ இல்லாத செடி வகைகள், துளசி, போன்ஸாய் செடிகள், உயரமாக வளரும் வரை பால்கனியில் இருக்கும் மரக் கன்றுகள். மூன்றாவது பால்கனியில் நிறைய சிமெண்ட் நாற்காலிகள், சிமெண்ட் ‘பென்ச்’கள், அது அறையிலிருந்து மட்டும் தான் திறக்கும்.அறைக்குள்ளே புத்தக அலமாரி, மேஜை, கம்ப்யூட்டர், சிறிய திவான். […]

முள்வெளி – அத்தியாயம் -2

This entry is part 20 of 40 in the series 1 ஏப்ரல் 2012

“இறைவன் உருவமற்றவனா?” “ஆம்” “இறைவன் உருவமுள்ளவனா? “ஆம்” “இறைவன் ஆணா?” “ஆம்” “இறைவன் பெண்ணா?” “ஆம்” “இறைவன் குழந்தையா?” “ஆம்” “இறைவனிடம் ஆயுதமுண்டா?” “ஆம்” “இறைவன் விழாக்களை விரும்புவானா?” “ஆம்” “இறைவன் விரதம் வேண்டுமென்றும் புலன் சுகம் வேண்டாமென்றும் சொல்லுவானா?” “ஆம்” “இறைவன் குடும்பம் மனைவி உள்ளவனா?” “ஆம்” “இறைவன் திருவோடு ஏந்தியவனா?” “ஆம்” “இறைவன் குடும்பம் மனைவி உள்ளவனா?” “ஆம்” “இறைவன் கோவணமணிந்த துறவியா?” “ஆம்” இன்னும் மனித வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் பல வடிவங்களில் இறைவனை […]

முள்வெளி- அத்தியாயம் -1

This entry is part 6 of 42 in the series 25 மார்ச் 2012

குளத்தின் வடக்குப் பக்கம் பிரதான சாலை வாகனச் சந்தடியும் நல்ல வெளிச்சமாயிருந்தன. பிற கரைகளில் அதிக வெளிச்சமில்லை. மேற்குப் பக்கம் சிறிய கோபுரம் ஒன்றின் மீது விளக்கு எரிந்து கொண்டிருந்தது. குளத்திலிருந்து தவளைகள் தொணப்பிக் கொண்டிருந்தன. கோவிலை விட்டு வெளியே ஓடி வந்த இரு சிறுவர்கள் கோவிலை ஒட்டி இருந்த வீட்டினுள் தடதடவென ஓடினார்கள். “அம்மா, செல்வாவுக்கு காலுல அடி பட்டு ரத்தம் வருது” என்றான் உயரமானவன். “அடப் பாவி, எங்கேடா?” என்று அவர்களின் தாய் ஓடி […]

ஜென் ஒரு புரிதல் – பகுதி 35 (நிறைவுப் பகுதி)

This entry is part 3 of 36 in the series 18 மார்ச் 2012

ஜென் பற்றிய புரிதலுக்கான வாசிப்புக்கு இடம் தந்த திண்ணை இணையதளத்தாருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் நிறைவுப் பகுதியைத் தொடங்குகிறோம். Daisetz Teitaro Suzuki (1870 – 1966). டி.டி.ஸுஸுகி ஜப்பானில் பேராசிரியராகவும், இலக்கியவாதியாகவும் இயங்கியவர். மேற்கத்திய நாடுகளுக்கு ஜென் பற்றிய புரிதலை எடுத்துச் சென்றோருள் ஆகச் சிறந்தவராக அறியப்படுபவர். இவரது “ஜென் ஒரு அறிமுகம்” என்னும் உரையுடன் நம் வாசிப்பை நிறைவு செய்வது முத்தாய்ப்பாக இருக்கும். ஜென் ஒரு மதமா? இல்லை. மதம் எனப் பெருமளவு புரிந்து […]

ஜென் ஒரு புரிதல்- பகுதி 34

This entry is part 7 of 35 in the series 11 மார்ச் 2012

“டைஜன் ரோஷி” என்னும் ஜென் ஆசான் பற்றி ஏற்கனவே பார்த்தோம். அவர் அமெரிக்காவில் “ஜென் சென்டர் ஆஃப் லாஸ் ஏஞ்சலிஸ்” என்னும் ஜென் பள்ளியை ஸ்தாபித்தார். அந்தஅமைப்பைச் சேர்ந்த “அர்விஸ் ஜொயன் ஜஸ்டி” அவரின் சீடர்களுள் ஒருவராவார். அர்விஸின் சீடர் “அட்யா ஷாந்தி”. பிறப்பால் அமெரிக்கரான அட்யா ஷாந்திக்கு தற்போது ஐம்பது வயதாகிறது. சமகாலத்தில் ஒரு சிறந்த ஜென் சிந்தனையாளராகக் கருதப் படுபவர். இவரது “ஓய்வுறு எடுத்துக் கொள்ளப் படு” என்னும் கவிதையை வாசிப்போம். ஓய்வுறு எடுத்துக் […]

ஜென் ஒரு புரிதல்- பகுதி 33

This entry is part 11 of 45 in the series 4 மார்ச் 2012

எது ஆதரவென்று நிம்மதி தந்ததோ அது நிலையில்லையென்று அச்சம் தந்து விடுகிறது. எது உற்சாகம் தந்ததோ அதுவே சோர்வைத் தருகிறது. எந்தெந்த வழியெல்லாம் ஊர் போய்ச் சேர்க்கும் என்று நினைத்தேனோ அதெல்லாம் முச்சந்தியிற் கொண்டு போய் நிறுத்தி விட்டது. இப்படியாக ஒரு சுழலில் உழலும் போது வரும் தற்காலிகச் சலிப்பே எஞ்சியதே ஒழிய ஆன்மீகத்தில் நிலைப்பது அதைத் தொடர்வது வசப் படவே இல்லை. ஜென் பற்றி ஒரு புரிதல் நிகழும் என்று வாசித்தால் அவர்கள் என் விரலைப் […]

ஜென் ஒரு புரிதல்- பகுதி 31

This entry is part 12 of 45 in the series 26 பிப்ரவரி 2012

இருபதாம் நூற்றாண்டில் வெளியான “குருவியின் வெற்றி” என்னும் கவிதைத் தொகுதி “ஷிங்கிசி தகஹாஷி” என்னும் ஜென் சிந்தனையாளரின் படைப்பாகும். சமகாலத்திய ஜப்பானியக் கவிஞர்களுள் இவர் முக்கியமானவர். இவரது கவிதைகளில் சிலவற்றை வாசிப்போம். ஓசையில் ஒரு வனம் _______________ மேலெழும் புகையில் பைன் மரம் அசைகிறது ஓசையில் ஒரு வனம் டஃபோடில் பூக்களை நதி ஒரு கண்ணாடி போலப் பிரதிபலிக்கும் இடத்தின் என் கால்கள் தாமே தோற்கின்றன ஒரு குளிர் காற்று ஸஸாங்கா பூக்களின் வெண்மை நினைவுகள் வெதுப்பான […]

ஜென் ஒரு புரிதல் – பகுதி 31

This entry is part 14 of 31 in the series 19 பிப்ரவரி 2012

“காரி ஸ்னைடர்” தற்போது எண்பத்து இரண்டு வயதான அமெரிக்கக் கவிஞராவார். “பீட்ஸ்” என அறுபதுகளில் அறியப்பட்ட காலகட்டத்து அமெரிக்கக் கவிஞர்களுள் ஒருவர். ஸான் “பிரான்ஸிஸ்கோ மறுமலர்ச்சி ” என்னும் புதுக்கவிதை எழுச்சிக்காலத்தில் ஒரு முக்கியமான முன்னோடி. புலிட்ஸர் பரிசைப் பெற்ற இவர் இருபதாம் நூற்றாண்டின் மிகப் பிரசித்தி பெற்ற “ஸுஸுகி” என்னும் ஜென் சிந்தனையாளரால் ஈர்க்கப் பட்டவர். இவரது கவிதைகளில் சில ஒரு மேற்கத்தியரின் ஜென் பற்றிய புரிதலாகக் காணக் கிடைக்கின்றன. ஸ்னைடர் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த […]

ஏகப்பட்ட கேள்விக்கு ஒரு வார்த்தையே பதில்

This entry is part 2 of 31 in the series 19 பிப்ரவரி 2012

1. அதே டாக்டர் அதே ஆஸ்பத்திரி, அதே நோய், முடிவில் ஒரு நோயாளி சென்றது வீட்டுக்கு. இன்னொரு நோயாளிக்கு வீடுபேறு. ஏன்? 2. நட்சத்திர எழுத்தாளருக்கும் ஏனையரில் அவருக்கு இணையான இலக்கிய ஆற்றல் கொண்ட எழுத்தாளர்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்ன? 3.ஆட்சியிலிருக்கும் அரசியல்வாதிக்கும் இல்லாத அரசியல்வாதிக்கும் என்ன வேறுபாடு? 4.பெரும்பாலான ஆண்கள் ‘தி.மு’ வில் நண்பர்களாலும் ‘தி.பி’ யில் மனைவியாலும் நொந்து நூலாவது ஏன்? 5.ஒவ்வொரு வருடமும் ஸரஸ்வதி பூஜை அன்று ஜனவரி மாதம் புத்தகக் […]