வாசலில் செம்மண் இட்டு கோலம் போடப்பட்டிருந்தது. வாசலில் மாவிலை தோரணம் கட்டப்பட்டிருந்தது. கூடத்தில் மாக்கோலம் போடப்பட்டு குத்துவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. ஆண்கள் பட்டு வேட்டியிலும் பெண்கள் பட்டு சேலையிலும் தோன்றினர். மெல்லியதாக சிஸ்டம் நாகஸ்வர இசையை ஒலித்துக் கொண்டிருந்தது. ஷேக் சின்ன மௌலானாவின் நாகஸ்வரம். தோடி ராக கீர்த்தனை. “ வாங்க வாங்க “ வாய் கொள்ளாமல் வரவேற்றார்கள் சத்தியசீலனின் குடும்பத்தினர். கனகாவும் அவள் கணவன் விஜயராகவனும் எதிலும் பட்டுக் கொள்ளாமல் தனித்தே இருந்தனர். கனகா […]
பட்டுவாடா செய்யப்படவேண்டிய கருவூல பில்களை சரிபார்த்துவிட்டு ராஜேஸ்வரி கணினியில் பதிவு செய்யத் தொடங்கினாள். ராஜேஸ்வரியின் பணியின் நேர்த்தி குறித்து மேலதிகாரிகள் அவளை பாராட்டாமல் இருந்ததில்லை. கற்றுக் கொள்ளும் தொழிலை கவனமாகவும், திறமையுடன் கற்றுக் கொண்டால் பெண்கள் அவர்களது பால்நிலை காரணமாக இழிபடத்தேவையில்லை என்றுதான் அவளுடைய சீனியர் கிருஷ்ணமூர்த்திசார் சொல்லி கொடுத்தது. வார்த்தையை வளர்ப்பது அவளிடம் அறவே இல்லை என்பதால் அனாவசிய பேச்சிற்கு இடமில்லை. கடைநிலை ஊழியர்களிலிருந்து உயரதிகாரிகள் வரை அவள் வெறும் ராஜேஸ்வரி இல்லை. ராஜேஸ்வரி மேடம். […]
ஓரமெல்லாம் மஞ்சள் பூசியிருந்த இரண்டு ஜாதகங்களை சொர்ணம்மாள் கையில் வைத்துக் கொண்டிருந்தார். “ நான் போன் பண்ணி பேசட்டுமா? என்றார் ராஜியிடம். அவர் குரலில் ஒரு அதீத ஆவல் தெரிந்தது. “ இது ஜாதகப் பொருத்தம் பார்த்து பண்ணிக்கும் சாதாரண கல்யாணம் இல்லைம்மா. நான் சத்யாவோட பேசணும். ரமாவோட கல்யாணம், சித்ராவோட வேலை உத்திரவாதம் இவ்வளவு இருக்கு. உன்னை என்ன பண்றது? உனக்கு ஒரு வழி பண்ண வேண்டாமா? நீ என்னடான்னா சின்ன பொண்ணு மாதிரி […]
ரங்கம்மா டீச்சர் பிடிவாதமாக மருத்துவ சிகிச்சை வேண்டாம் என கூறி விட்டார். எனவே ரங்கம்மா டீச்சரின் ஆப்த நண்பரும் அந்த நட்பின் காரணமாக இரண்டு தலைமுறை உறவினர்களின் பாராமுகத்தை எதிர் கொள்ள காரணம் ஆனவருமான மகாலிங்கம் வீட்டில்தான் ரங்கம்மா டீச்சரின் கடைசி தருணங்கள் கழிந்து கொண்டிருக்கின்றன. சுவாசத்தில் சில நாழிகை தெளிவு ஏற்படும்.அந்த நேரம் டீச்சர் முகத்தில் ஒரு தெளிவு ஏற்படும்.அந்த சமயம் ரங்கம்மா டீச்சரின் முகம் பிரகாசமாகும்.” இப்பல்லாம் நிறைய மேடைகச்சேரி கொடுக்கிறாளே புடவை விளம்பரத்துகேல்லாம் […]
“ நீ தடிச்சுப் போயிட்ட ராஜி” என்றாள் அம்மா. குரலில் ஒரு அதட்டல்.அம்மாவால் மட்டும்தான் அவளிடம் ஓங்கி பேச முடியும்.மற்ற இரண்டு சகோதரிகளுக்கும் ராஜி ஒரு கண்கண்ட தெய்வம். “ பதினஞ்சு வருஷமா ரெயின்போ டைலர் கிட்டதான் ஜாக்கட் தச்சுக்கிறேன். ஒரே அளவுதான் கொடுத்துட்டு வர்ரேன். தடிச்சா மாதிரி தெரியலியே” என சோபாவில் வாங்கிப் போட்டிருந்த தீபாவளி சேலைகளைப் பார்த்தபடி சொன்னாள். அவளுடைய நக்கல் மொழியில் அம்மா சற்று கோபமானாள். “ தடிக்கறதுன்னா உடம்பு மட்டும்தானா? […]
புள்ளிகளை வளைவுக்கோடுகளால் ராஜி இணைத்துக் கொண்டிருந்தாள். வாசலில் அவள்தான் தினமும் கோலம் போடவேண்டும். வேலைப்பகிர்வு என்று எதுவுமில்லை என்றாலும் தினமும் கோலம் போடுவதை மட்டும் வேறு யாரிடமும் ராஜி கொடுத்ததில்லை. தினம் ஒரு கைவண்ணம். ஒவ்வொரு கோலமும் கண்களில் ஒற்றிக்கொள்ளலாம் போலிருக்கும்.பேப்பர் போடும் பையனும் சைக்கிள் பால்காரனும்ஒரு ஆர்க் அடித்து கோலத்தை மிதிக்காமல் சைக்கிளைக் கொண்டுபோவதை தினமும் கடமையாகச் செய்வார்கள். “ அற்புதமா இருக்குங்க “ அன்னியக்குரல். அதுவும் ஆண்குரல். சட்டென்று தூக்கிச் செருகியிருந்த சேலையை கீழே […]
ஸ்ரீ கிருஷ்ணர் மீதான ஒரு விமர்சகனின் விமர்சனம் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிப் புனையப்பட்ட கர்ண பரம்பரைக் கதைகளை ஒதுக்கித் தள்ளுதல். ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய உண்மைகளைப் புனரமைப்பது என்னுடைய இந்த ஸ்ரீகிருஷ்ண ஆராய்ச்சியில் என் சக்தி முழுவதையும் ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றியக் கட்டுக் கதைகளைக் களைவதிலேயே செலவிட்டேன். அவரைப் பற்றிய நிதர்சனத்தைப் புனரமைப்பது என்பது சற்றுக் கடினமான வேலையாகவே இருந்தது. ஏன் எனில் சாம்பல் எவ்வாறு நெருப்பை மூடி விடுகிறதோ அதே போல் […]
மகாபாரதத்தின் மௌசல பர்வத்தில் ஸ்ரீகிருஷ்ணர், பலராமர் மற்றும் மொத்த யாதவர்களின் பேரழிவு குறித்துக் கூறப் பட்டுள்ளது. ஸ்ரீகிருஷ்ணர் யாதவர்களின் இந்தப் பேரழிவைத் தடுக்க எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. முரணாக அவரே பல யாதவர்களை தன் கைகளினால் துவம்சம் செய்கிறார். யாதவர்களின் அழிவு மகாபாரதத்தில் இவ்வாறு விவரிக்கப் படுகிறது. காந்தாரியின் தீர்க்க தரிசனத்தின்படி சரியாக முப்பத்தியாறு ஆண்டுகள் கழிந்த பின்பு அவர்களின் துர் நடவடிக்கைகளினால் யாதவர்களுடைய அழிவு தொடங்கியது. ஒழுங்கின்மை எங்கும் வியாபித்திருந்தது. அப்படி ஒரு மோசமான […]
அத்தியாயம்-27 போருக்குப் பிந்தைய அரசு. ஒரு வழியாக குருக்ஷேத்திரப் போர் என்னும் நீண்ட பயணத்தை நாம் கடந்து வந்து விட்டோம். இப்பொழுது நமது பயணம் மேடு பள்ளங்களற்றப் பாதையில் பயணிக்கும். ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி இனி குறிப்பிடப்படுவதெல்லாம் அவர் ஒரு களங்கமற்றவர்: தூய்மையானவர் என்பதாகும். அவருடைய நற்குணங்களும்,புண்ணிய கீர்த்திகளும் போற்றப்பட்டு அவர் ஒரு தெய்வ நிலைக்கு உயர்த்தப் படுகிறார். போர் முடிந்ததும் மேன்மைமிகு அதி புத்திசாலியான யுதிஷ்டிர மகராஜா மேலும் ஒரு புத்திசாலித்தனமான முடிவை எடுக்கிறார். அர்ஜுனனிடம் […]
கர்ணனின் மரணத்திற்குப் பிறகு துரியோதனன் சல்லியனை கௌரவர்களின் படைக்குத் தலைமை ஏற்கச் செய்கிறான்.. இதுவரை நடைபெற்ற யுத்த காலங்களில் போரில் யுத்தம் செய்யும்பொழுது எதிர்த்துப் போட்டியிட முடியாமல் போகும் தருணங்களில் யுதிஷ்டிரர் ஓடி ஒளிந்து கொள்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். இப்பொழுது துணிகரமாக எதையாவது செய்து தன் பெயரைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய நிலைமைக்கு ஆளாகிறார். ஸ்ரீ கிருஷ்ணர் சாதுர்யமாக சல்லியனின் தலைமையின் கீழ் இயங்கும் படையினை எதிர்க்கும்படிக் கட்டளையிடுகிறார். யுதிஷ்டிரர் இந்த முறை திறமையாகப் […]