பீட்டர் ஸ்டாம் (சுவிட்சர்லாந்து) ஜெர்மானிய மொழியில் இருந்து ஆங்கிலத்தில் (Expectations) மைக்கேல் ஹோஃப்மன் தமிழ் வடிவம் எஸ். ஷங்கரநாராயணன் நீங்கள் நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் எத்தனையோ சப்த களேபரங்களின் நடுவே ஒரு தனி ஒலிக்குறிப்பை என்னால் பிரித்தறிய முடியும். பேரோசை என்றில்லை சின்ன சிணுக்கம். அதைக்கூட நான் அறிந்துகொண்டு விடுவேன். ஒலிகளுக்காக என் காதுகள் ஆர்வப்பட்டுக் காத்திருக்கின்றன. சவாலாய்க் கூடச் சொல்வேன். மத்தவர்கள் கேட்காத ஒலிகளைக் கூட நான் துல்லியமாக அறிவேன். இந்த அடுக்கக […]
ஆர்னால்ட் ஃபைன் (அமெரிக்கா) நியூ யார்க்கில் இருந்து வெளிவரும் தி ஜுயிஷ் பிரஸ் இதழின் ஆசிரியர் ஆர்னால்ட் ஃபைன் 1984ல் எழுதிய ஒரு உண்மைக்கதை. மகா குளிரான ஒரு தினம். நான் வீடு திரும்புகிற வழியில் காலில் தட்டியது ஒரு மணிபர்ஸ். யாரோ தெருவில் தவறுதலாக தொலைத்திருக்கிறார்கள். கையில் எடுத்து விரித்துப் பார்த்தேன். அதன் சொந்தக்காரர் பற்றி எதும் துப்பு கிடைக்கலாம். ஆனால் அதில் வெறும் மூணு டாலர்கள் மாத்திரமே இருந்தன. கூட ஒரு கசங்கிய கடிதம். […]
புதிய கம்பெனியில் முதல்நாள் அனுபவம். உற்சாகத்துக்குக் குறைவு இல்லை. வேலை எனச் சேர்ந்தவர்களே வெவ்வேறு ஊர்க்காரர்கள். புதிய பாஷைக்காரர்கள். ஆனால் எல்லாருமே தாய்மொழியை விட ஆங்கிலம் அதிகமாகவும், நன்றாகவும் பேசினார்கள். ஒரே பாஷைக்காரர்களே கூட தங்களுக்குள் ஆங்கிலம் பேசிக்கொள்ளவே விரும்பினார்கள். மணிவண்ணனுக்குத்தான் என்னமோ தாய்மொழி என்று, அதில் தான் சரியாக ஊட்டம் பெறவில்லை என்று இருந்தது. தமிழ்பேசும் இன்னொரு புதியவனைப் பார்த்ததும் என்னமோ மனசு இளகிக் கொடுத்தாப் போலிருந்தது. ஆனால் மற்றவன் இவனது எல்லா தமிழ்க் கேள்விக்கும் […]
>>> லிப்ஸ்டிக் அணிந்த பெண்மணி >>> ம.ந.ராமசாமிக்கும் எனக்குமான நட்பு பல பத்தாண்டுகள் கடந்தது. ஒருவகையில் பழம் திரைப்படங்களின் காதல் காட்சி போல என இதை, இந்த நட்பைச் சொல்லிவிடலாம். கறுப்பு வெள்ளைத் திரைப்படங்களில் டமாலென்று அவனும் அவளும் மோதிக்கொண்டு சண்டைவெடிக்கும். பிறகு மெல்ல அவனைப் பார்க்க அவளுள் வெட்கம் பூசிய சந்தோஷம் வரும். ம.ந.ரா. எனக்குப் பரிச்சயம் ஆனபோது எனக்கு அவர்மீது பல கடுமையான விமரிசனங்கள் இருந்தன. சில இன்னும் இருக்கின்றன. அவரது பெரும்பாலான கதைகள் […]
சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> ”ஒரு விஷயம் கேட்கலாமா, ரோசி?” என்று கேட்டேன். ”அந்தப் புத்தகத்தில் குழந்தையின் மரணத்திற்கப்பாலான சம்பவங்கள், அவை நடந்ததா?” என்னை ஒரு சந்தேகப் பார்வை பார்த்தாள். அவள் அதரங்கள் சுழித்து சின்னப் புன்னகை. ”ம். அதெல்லாம் எத்தனை வருஷத்துக்கு முந்தைய கதை. எனக்கு அதைச் சொல்றதில் எந்த விகல்பமுங் கிடையாது. அவர் அதைச் சரியா யூகிச்சதாச் சொல்ல இயலாது. அது அவரோட கற்பனைதானே? அவருக்கு இதெல்லாம் தெரியும்ன்றதே எனக்கு ஆச்சர்யம். […]
சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> பிளாக்ஸ்டேபிளுக்குத் திரும்பும்போது திருமதி திரிஃபீல்ட் தனது காரை அனுப்பியுதவ முன்வந்தாள். ஆனால் எனக்கு நடக்கலாமாய் இருந்தது. அடுத்த நாள் மதியச் சாப்பாட்டுக்கு அவசியம் வருகிறேன், என விடைபெற்றுக் கொண்டேன். அதனிடையே எட்வர்ட் திரிஃபீல்டுடன் நான் கலந்துறவாடிய அந்த இரு பருவங்கள், அவற்றைப் பற்றிய என் நினைவுக் குறிப்புகளை எழுதித் தர முடியுமா என்றும் யத்தனிக்கலாம். பாதை பாம்பு வளைசலாய்ப் போனது. வழியில் நடமாட்டமே யில்லை. இவர்களிடம் என்னவெல்லாம் […]
சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> யாத்ரிகர்களை வழியனுப்பி வைத்துவிட்டு திருமதி திரிஃபீல்ட் எங்களிடம் வந்தபோது அவள் கையில் சிறு பெட்டி. ”அருமையான இளைஞர்கள்…” என்றாள் அவள். ”நம்ம இளைஞர்களும் அமெரிக்காவில் போல அத்தனை ஈர்ப்பும் ஈடுபாடும் இலக்கியத்தில் வெச்சிக்கிட்டா நல்லாருக்கும். எட்வர்டின் கடைசி காலத்தில் எடுத்த ஒரு படம் அவர்களுக்குத் தந்தேன். அவர்கள் என்னுடைய படம் ஒண்ணும் கேட்டார்கள். கையெழுத்திட்டுக் குடுத்தேன்.” பிறகு பெருந்தன்மையுடன் ராய் பக்கம் திரும்பினாள். ”உங்களைப் பத்தி நல்லாச் சொன்னாங்க […]
சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> மறுநாள் காலை குளிராக பாந்தமற்றமாகவே இருந்தது. மழை வேறு பிடித்துக் கொண்டது. மேட்டுத் தெருவில் விகாரேஜை நோக்கி நடந்தேன். வழியில் தென்பட்ட கடைகளின் பெயர்கள் எனக்கு ஞாபகம் இருந்தது. அந்த கென்ட் பிரதேசத்துக்கேயான பேர்கள், கால காலமாக, நூற்றாண்டு காலமாகப் புழங்கி வரும் பெயர்கள் அவை… கான். கெம்ப். கோப். இகல்தன்… ஆனால் கடைகளில் எனக்கு அடையாளந் தெரிகிறாப் போல யாரும் சிக்கவில்லை. அட இங்கே ஒரு காலத்தில் […]
சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> நாங்கள் பிளாக்ஸ்டேபிளை அடைகிறோம். ராய்க்காக ஒரு கார், ரொம்ப அலங்காரமாயும் இல்லை, எளிமையாயும் இல்லை, காத்திருந்தது. சாரதியிடம் எனக்காய் ஒரு குறிப்பு… மறுநாள் திருமதி திரிஃபீல்டுடன் மதிய உணவுக்கு வாருங்களேன் நீங்கள். நான் ஒரு வாடகைக்கார் பிடித்து பியர் அன்ட் கீ ஓட்டலை அடைந்தேன். ராய் சொன்னார். இப்ப முன்பக்கமாகவே புது மரைன் ஓட்டல் ஒன்று வந்திருக்கிறது. வசதிகள் அதிகமான பெரிய விடுதி அது, என்றாலும் எனது பால்யகாலத்தில் […]
சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> ”நாம எல்லாரும் எட்வர்டுக்கு எப்படி உதவ முடியுமோ செய்யணும்ப்பா” என்றாள் திருமதி பார்த்தன் திரஃபோர்டு. என்னை யோசனையுடன் பார்த்தாள். அதாவது, நீதான் உதவணும் என்கிற குறிப்பா இது. ”இப்ப அந்த கெம்ப் ரோசியோட ஓடிப் போயிட்டார்னால், அவர் தன் மனைவியை விட்டுப் பிரிஞ்சிருக்கணும், இல்லியா?” ”இருக்கலாம்” என்றேன் நான். ”யப்பா, நீ ஒரு உபகாரம் பண்ணேன்?” ”சொல்லுங்க, முடிஞ்சா செய்யிறேன்.” ”நீ பிளாக்ஸ்டேபிள் வரை ஒரு […]