author

முன்னணியின் பின்னணிகள் – 26

This entry is part 20 of 40 in the series 12 பிப்ரவரி 2012

சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> அடுத்த ஆறு மாதத்தில், கோப்பையில் வாழ்க்கை சார்ந்த பரபரப்புகள் அமுங்கின. பை தெயர் ஃப்ரூட்ஸ், (சாதனைகளினால்) என ஏற்கனவே பதிப்பித்த நாவலைத் திரும்ப திரிஃபீல்ட் ஆரம்பித்திருந்தார். எனக்கு நாலாவது வருடம். வார்டில் இருக்கும் நோயாளிகளின் காயங்களுக்குக் கட்டுப்போடும் வேலை எனக்கு. மருத்துவமனையின் பிரதான கூடத்துக்குப் போய் பெரிய டாக்டர் வர காத்திருந்தேன். கடித அலமாரியில் எனக்கு எதும் கடிதம் இருக்கிறதா என்று பார்த்தேன். சில சமயம் என் வின்சன்ட் […]

முன்னணியின் பின்னணிகள் – 25

This entry is part 21 of 31 in the series 5 பிப்ரவரி 2012

சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> அப்படியே நாடகத்துக்குப் போனோம். என்ன நாடகம் என்ன காட்சி எதுவுமே மனசில் பதியவில்லை. என் கையை ஒட்டிய அவள் கையின் அந்த சேபிள் உறுத்திக்கொண்டே யிருந்தது. அவளது கைகளும் பிரியமாய் அந்தக் கையுறைகளை வருடித் தந்துகொண்டே யிருந்தன. இதுல என்னன்னா, மத்தாட்களிடம் இவள் சகஜமாய் ஊடாடியிருப்பாள் என்கிற நிலைப்பாடு பெரிய இம்சையாய் இல்லை, ஜாக் குய்பருடன் ஏற்பட்ட பழக்கம்தான் என்னைக் கலவரப்படுத்தி விட்டது. அவளால் எப்படி ஒத்துப்போக முடிந்தது? […]

முன்னணியின் பின்னணிகள் – 24

This entry is part 30 of 42 in the series 29 ஜனவரி 2012

சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் அதற்கெல்லாம் பின்னால் ஒரு ஒருவருட அளவில், எப்போதெல்லாம் ரோசி என்னுடன் வெளியே வந்தாளோ, என் அறைவரை வந்து போவதை வழக்கமாக்கிக்கொண்டாள். சில நேரம் ஒருமணி தங்குவாள். சில சமயம் விடியல் வரை, அதாவது வேலைக்காரர்கள் முறைவாசல் என்று வாசலை சுத்தம்செய்கிற வேலை ஆரம்பிக்கும் வரை. கதகதப்பான காலைகளின் அழகான நினைவுகள் என்னுள் இன்னும் இருக்கவே செய்கின்றன. இரவின் அலுத்து ஓய்ந்த காற்றின் ஆயாசம் மெல்ல மாறி, இதமான புத்துணர்ச்சியைத் தருகிறாப் […]

முன்னணியின் பின்னணிகள் – 23

This entry is part 28 of 30 in the series 22 ஜனவரி 2012

சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> அடுத்த ஒருவார காலம் நான் ரோசியுடன் வெளியே போகவில்லை. அவள் ஓர் இரவு ஹேவர்ஷாம் வரை போய் அம்மாவைப் பார்த்து வரலாம் என்று கிளம்பினாள். எனக்கு லண்டனில் நிறைய வேலைகள் இருந்தன. நாம் ஹேமார்க்கெட் (புல் சந்தைப் பிரதேசம்) தியேட்டருக்குப் போய்வரலாமா என்று என்னிடம் அவள் கேட்டாள். அந்த நாடகம் படுபோடு போட்டுக் கொண்டிருந்தது. ஓசி டிக்கெட்டுகள் கிடையாது. ஆக நாங்கள் தரை டிக்கெட் எடுத்தோம். கொஞ்சம் புலால், […]

முன்னணியின் பின்னணிகள் – 22 சாமர்செட் மாம்

This entry is part 48 of 48 in the series 15 மே 2011

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் எட்வர்ட் திரிஃபீல்ட் இரவில் தான் எழுதுவார். ரோசிக்கு ஆகவே ராத்திரியில் சோலி கீலி எதுவுங் கிடையாது. ராத்திரியானால் அவள் யாராவது சிநேகிதர்களுடன் ஹாயாக வெளியே கிளம்ப சௌகர்யமாய் இருந்தது. வசதியாய் வாழ அவளுக்கு இஷ்டம். குவன்டின் ஃபோர்டின் கையில் துட்டுச் சக்கரம் தாராளமாய்ப் புழங்கியது. அவன் வாடகைக்காரை வரவழைத்து, இராத்திரி விருந்துக்கு என்று கேட்னருக்கோ சவாய்க்கோ அவளை அழைத்துப் போவான். அவளும் இருந்ததில் படாடோபமான உடையை அணிந்து அவனுடன் கிளம்பினாள். அந்த ஹாரி […]

முன்னணியின் பின்னணிகள் – 21 சாமர்செட் மாம்

This entry is part 38 of 40 in the series 8 ஜனவரி 2012

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்   … எது எப்பிடியானாலும் நம்ம ஜாஸ்பர் கிப்சன் தான் முதன் முதலில் ஓபரா மற்றும் உச்சஸ்தாயி பாடகரின் முகவரி அட்டைகளிலும் ‘அட் ஹோம்’ என கூட இடம் பிடித்த முதல் எழுத்தாளர். ஆக அவர் நமது திருமதி பார்த்தன் திரஃபோர்டின் பிரதம விருந்தாளி என அழைப்பு பெறாமல் எப்படி? அவர் கலந்துகொள்ளும் ஓபரா நிகழ்ச்சிகளின் முன்வரிசையில் அவள் இடம்பிடித்தாள். என்றாலும் அது கௌரவ நுழைவுச்சீட்டு அல்ல, கைக்காசு கொடுத்துப் போய் அமர்ந்தாள். […]

கவிஞர் ந. பிச்சமூர்த்தியின் மகளுக்கு உதவ

This entry is part 20 of 40 in the series 8 ஜனவரி 2012

மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு, இத்துடன் இணைக்கப் பட்டிருக்கும் ஒரு சிறு வேண்டுகோள் கடிதத்தை தங்கள் மேலான இதழில் வெளியிட வேண்டுகிறோம். தள்ளாத வயதில் நோயுடன் போராடும் கவிஞர் ந. பிச்சமூர்த்தியின் மகளுக்கு உதவ தங்கள் மேலான இணைய இதழ் மூலம் இத்தகவல் கோடான கோடி தமிழ் இலக்கிய ஆர்வலர்களை சென்றடைய உதவுமாறு வேண்டுகிறோம் எஸ். ஷங்கரநாராயணன் பத்ரிநாத் எழுத்தாளர்கள் pbn1961@gmail.com letter to thinnai

முன்னணியின் பின்னணிகள் – 20 சாமர்செட் மாம்

This entry is part 39 of 42 in the series 1 ஜனவரி 2012

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் நான் போய்வந்தேன். ஆகாவென்றிருந்தது. மீண்டும் போனேன் அங்கே. இலையுதிர்காலம் கடந்தது. புனித லூக் மருத்துவப் பள்ளியில் குளிர்கால வகுப்புகள் துவங்க, நான் லண்டன் திரும்பிவந்தேன்… இப்போதெல்லாம் சனிக்கு சனி நான் அங்கே ஆஜர். அதுதான் எனது கலை மற்றும் எழுத்து உலகத்தின் சாளரம். நான் அறையில் ரொம்ப மும்முரமாய் எழுதிக் குவித்தேன், ஆனால் சனி மதியங்களில் யாரிடமும் அதைப்பற்றி மூச்சு காட்டவில்லை. இந்தக் காலகட்டத்தில் எழுதிக்கொண்டிருக்கிற பிற எழுத்தாளர்களைச் சந்திப்பதில் எனக்கு ஒரு […]

முன்னணியின் பின்னணிகள் – 19 சாமர்செட் மாம்

This entry is part 13 of 29 in the series 25 டிசம்பர் 2011

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் திரிஃபீல்ட் தம்பதிகளை மறுபடி சந்திக்கிறதுக்கு ஒரு ரெண்டு வருஷம் முன்னால், நான் திருமதி ஹட்சன் இல்லத்தில் தங்கியிருந்தேன். வாழ்க்கை அப்போது சீராய் ஓடிக்கொண்டிருந்தது. பகலெல்லாம் மருத்துவமனையில் இருப்பேன். ஒரு ஆறு மணிப்போல வின்சென்ட் சதுக்கத்துக்கு நடந்து திரும்புவேன். லம்பத் பாலத்தருகில் ‘ஸ்டார்’ பத்திரிகை வாங்கிக்கொள்வேன். வந்து ராத்திரி சாப்பிட அழைப்பு வரும்வரை வாசிப்பேன் அதை. சாப்பாடு ஆனதும் ஒருமணி, ரெண்டுமணி தீவிர இலக்கிய வாசிப்பு. மனப்பயிற்சி அது. நான் ஒரு கடும் முயற்சி […]

முன்னணியின் பின்னணிகள் – 18 சாமர்செட் மாம்

This entry is part 39 of 39 in the series 18 டிசம்பர் 2011

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் ராயிடம் வாக்கு தந்துவிட்டதில் மனம் தன்னைப்போல எனது லண்டன் வாழ்க்கையின் ஆரம்ப நாட்களைப் பின்னோக்கிப் பார்க்க ஆரம்பித்துவிட்டது. அந்த மதியம் பெரிசாய் வேலை ஒன்றுமில்லை. வீட்டுக்கார அம்மாளிடம் எதும் பேசிக்கொண்டிருக்கலாம் என்று கீழே வந்தேன். புனித லூக் மருத்துவப் பள்ளியின் காரியதரிசிதான் எனக்கு இந்த அம்மாளைப் பற்றிச் சொன்னது. அப்போது ஒரு முற்றாத நாற்று நான். பட்டணம் வந்தடைந்திருந்தேன். தங்க இடம்வேண்டும். வின்சென்ட் சதுக்கத்தில் அவளது வீடு வாய்த்தது. அங்கே ஒரு அஞ்சு […]