author

ரௌடி செய்த உதவி

This entry is part 23 of 26 in the series 22 பெப்ருவரி 2015

  பள்ளிக்கூட ஆசிரியர் ரத்தின சாமி தன்னுடைய பணி ஓய்வுக்கு பின், கிடைத்த பணத்தில் ஒரு மனை வாங்கி, வீடு கட்ட ஆரம்பித்த போது, அவருக்கு தெரியாது பக்கத்து மனைக்கு சொந்தக்காரன் தகராறு பேர்வழியான சுப்பண்ணன் என்று. அவன் ஒரு காண்டிராக்டர். அரசியல் செல்வாக்கு வேறு. அரசாங்க நிலத்தையும், ஏழைகளுடைய நிலத்தையும் அபகரிப்பதில் கைதேர்ந்தவன்.   அஸ்திவார வேலை எல்லாம் முடிந்து, கட்டிட வேலை தரை மட்டத்துக்கு மேல் வந்தாகி விட்டது. சர்வேயர், இன்ஜினியர் எல்லோரையும் வைத்து […]

ஊர்வலம்

This entry is part 24 of 26 in the series 22 பெப்ருவரி 2015

    கடந்த ஒரு வாரமாய் தயார் செய்த டெண்டர் டாக்குமெண்ட் பாபுவின் கையில் இருந்தது. சாலை பராமரிப்புத் துறை அலுவலகத்தில் அதை அவன் மாலை நான்கு மணிக்குள் டெண்டர் பெட்டியில் போட்டாக வேண்டும். அவசரம் என்பதால் ஆபீஸ் காரை கம்பெனியில் கொடுத்து இருந்தார்கள். வேகமாய் போய்க் கொண்டிருந்த அவர்கள் கார் ஒரு டிராபிக் ஜாமில் நின்று போக, அவனுக்கு கோபமாய் வந்தது.   “ என்ன முருகா.. ஏன் இப்படி வண்டிங்க நிக்குது..” டிரைவரிடம் கேட்க, […]

முதல் சம்பளம்

This entry is part 1 of 21 in the series 19 அக்டோபர் 2014

தாரமங்கலம் வளவன் சண்முகத்திற்கு அன்று பள்ளி விடுமுறை. தெருவில் விளையாடிக் கொண்டிருந்தவனுக்கு, மாரியம்மாவை கூட்டி வர அம்மா சொல்லி இருந்தது ஞாபகம் வர, தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டான். சைக்கிளை நிறுத்தி விட்டு, மாரியம்மாவின் குடிசை அருகில் சென்ற சண்முகம், அந்த மண் சுவரின் மேலே மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த அந்த நாகப் பாம்பை பார்த்து நடுங்கிப் போனான். “ ஐயோ.. பாம்பு.. பாம்பு..” என்று கத்தினான். அதைக் கேட்டு பக்கத்து ரைஸ் மில்லில் நெல் […]

பங்காளிகளின் குலதெய்வ வழிபாடு

This entry is part 2 of 23 in the series 16 மார்ச் 2014

    நாளுக்கு ஒரே ஒரு பாசஞ்சர் ரயில் மட்டும்தான் நிற்கும் அந்த ஸ்டேஷனில்.   நேரம் காலை எட்டு மணி இருக்கும். பத்து மணிக்கு வர வேண்டிய அந்த ரயிலுக்காக மூன்று பேர் மட்டும் காத்து கொண்டு இருந்தார்கள், வெறிச்சோடிக் கிடந்த அந்த ஸ்டேஷனில்.   ஒருவர் பேண்ட் சர்ட், மூக்கு கண்ணாடியுடன் ஐம்பது வயது மதிக்க தக்க மனிதர். கையில் ஒரு புத்தகத்தை வைத்து படித்துக் கொண்டு இருந்தார்.   மற்ற இரண்டு பேர் […]

ஒரு மகளின் ஏக்கம்

This entry is part 1 of 20 in the series 23 பெப்ருவரி 2014

பர்வதத்திற்கு தன் வாழ்நாள் லட்சியம் எது என்றால், இதே ஊரில் இருப்பதாக அம்மா சொன்ன தன் அப்பா யார் என்று முதலில் கண்டுபிடிப்பது, அப்படி கண்டுபிடித்த பிறகு அவரை நான் தான் உன் அப்பா என்று பகிரங்கமாகச் சொல்ல வைத்து, ஊர் அறிய தன்னை மகளாக அவரை ஏற்று கொள்ள வைப்பதுதான். அவளுடைய அப்பா யார் என்று அவள் அம்மா சுந்தரவல்லி கடைசி வரைக்கும் சொல்லவில்லை. ஒவ்வொரு முறை கேட்கும் போதும் இதே ஊரில் அவர் இருக்கிறார். […]

ஓவியம் விற்பனைக்கு அல்ல…

This entry is part 1 of 24 in the series 9 பெப்ருவரி 2014

ஓவியர் பாலு இடிக்கப் படபோகிற தன் ஆற்றங்கரை ஓரத்து வீட்டையும், அதை ஒட்டியுள்ள தன் தோட்டத்தையும் கடைசி முறையாக ஒரு முறை பார்த்துக்கொண்டார். கண்களில் நீர் தளும்பியது.   மழைக்காலம்  என்பதால் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு புது வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடிக்கொண்டு இருந்தது.   தாத்தா கட்டிய இந்த வீடு, வீட்டைச் சுற்றியுள்ள தோட்டம், அதை ஒட்டி ஓடிக்கொண்டிருக்கும் ஆறு, இவைகள் தான், அவருக்கு சின்ன வயதிலே ஓவியனாக வேண்டும் என்ற அந்த வித்தை ஊன்றியது. பூத்துக் […]

தாயின் அரவணைப்பு

This entry is part 1 of 30 in the series 18 ஆகஸ்ட் 2013

-தாரமங்கலம் வளவன் செல்வி பெங்களூருக்கு வேலைக்கு வந்து மூன்று மாதம் தான் ஆகிறது. கல்லூரி படிப்பு முடித்தவுடன் கிடைத்த வேலை இது. இன்று வார விடுமுறை. அறையில் உடன் தங்கியிருக்கும் தோழி இன்னும் வேலையிலிருந்து திரும்ப வில்லை. முதலில் பிரமையாகத்தான் இருக்கும் என்று அந்த சத்தத்தை உதறித் தள்ள நினைத்தாள் செல்வி. ஆனால் குழந்தையின் அழுகுரல் போன்ற அந்த சத்தம் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகமாகிக் கொண்டே வந்தது. சில சமயம் வீல் என்று உச்ச குரலில் அலறுவது […]

ஐயனார் கோயில் குதிரை வீரன்

This entry is part 4 of 27 in the series 4 ஆகஸ்ட் 2013

-தாரமங்கலம் வளவன் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம். சாலை விரிவு படுத்துவதற்கான காண்டிராக்ட் யாருக்கு என்ற முடிவு அறிவிக்கப்படுவதாக இருந்தது. காண்டிராக்டர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். மருதமுத்தும் அதில் ஒருவர். முகத்தை அடிக்கடி தோளில் இருந்த துண்டை எடுத்து துடைத்து கொண்டார். ஒவ்வொரு காண்டிராக்டரும் தன்னால் எவ்வளவு தொகையில் அந்த வேலையை செய்து முடிக்க முடியும் என்று டெண்டர் கூப்பிட்டிருந்த தொகை ஒவ்வொன்றாகப் படிக்கப் பட்டது. கையிலிருந்த ஒரு காகிதத்தில் மற்றவர்களின் தொகைகளை குறித்துக் கொண்டிருந்தார் மருதமுத்து. இப்படி அவர் […]