author

பிம்பத்தின் மீதான ரசனை.:-

This entry is part 47 of 51 in the series 3 ஜூலை 2011

இணைந்திருந்த போதும் ஒரு தனிமையின் துயரத்தைத் தருவதாய் இருந்தது அது. புன்னகை முகம் காட்டி ஒரு பெண் திரும்பிச் செல்லும்போது அவள் பின் உடலை ரசிக்கத் துவங்குகிறாய். எதிர்பாராமல் லௌட் ஸ்பீக்கரில் அலறும் பாடலைப் போல நாராசமாயிருக்கிறது அது. இல்லாத பியானோவின் சோகக்கட்டைகளை அமுக்கவேண்டும் என்ற எண்ணம் எழுகிறது என்னுள் உன்னைப் பொறுத்தவரை அது ஒரு பிம்பத்தின் மீதான ரசனை என்னைப் பொறுத்தவரை அது அடுத்த உடலின் மீதான காமம். ஒரு வேட்டையை பிடித்த திருப்தியுடன் உன் […]

ஆன்மாவின் உடைகள்..:_

This entry is part 11 of 51 in the series 3 ஜூலை 2011

வெள்ளுடை தேவதைகளையும் செவ்வுடை சாமிகளையும் மஞ்சளுடை மாட்சிமைகளையும் பச்சை உடை பகைமைகளையும் படிமங்களாய்ப் புதைத்தவற்றை வர்ணாசிர தர்மமாய் வெளியேற்றும் ப்ரயத்னத்தில்.. ப்ரக்ஞையோடு போராடித் தோற்கிறேன்.. விளையாட்டையும் வினையாக்கி வெடி வெடித்துத் தீர்க்கிறேன்.. எப்போது உணர்வேன் வண்ணங்களை.., அழுக்கேறாத ஆன்மாவின் உடைகளாய்..

மேலதிகாரிகள்

This entry is part 28 of 46 in the series 26 ஜூன் 2011

உறங்கத் தாமதமாகும் ஒவ்வொரு இரவும் சுமந்து வருகிறது உழைப்பின் களைப்பை அலுவலகம் உறிஞ்சிச் சுவைத்த நேரத்தை பார்களில் அமர்ந்து பீராக உறிஞ்சியபடி அதிக வேலை பற்றியும் அதிகப்படியாயோ குறைந்தோ கிடைத்த போனஸ் பற்றியும் கடுகடுத்த மேலதிகாரியை கிண்டலடித்தபடியும் சக ஊழியனை ஜால்ராக்காரனாகவும் ஐஸ்துண்டங்கள் கரைய கரைய மனதைக் கரைத்தபடி வண்டியில் ஏறும்போது தூக்கமற்று முறைக்கும் மனைவி முகம் எதிர்கொள்ள கரைந்த கவலையெல்லாம் திரும்ப வயிற்றைக் கலக்கியபடி..

முதுகில் பதிந்த முகம்

This entry is part 31 of 46 in the series 19 ஜூன் 2011

பால்கனியில் தொற்றியபடி கண்மறையும் வரை கையாட்டி உள்வந்து படுக்கை விரிப்புகளை உதறிச் செருகும்கணம் இரவு ஊடலில் திரும்பிப் படுக்க முதுகில் பதிந்த முகம் மீசையொடு குறுகுறுக்க வண்டியில் செல்லும் உன் முதுகில் என் மூக்குத்தியின் கீறல் சற்றே காந்தலோடு.

5 குறுங்கவிதைகள்

This entry is part 6 of 46 in the series 19 ஜூன் 2011

ஒளியூட்டப் போகிறோமா எரியூட்டப் போகிறோமா என அறிவதில்லை பற்றவைக்கப்படும் தீக்குச்சிகள்.. ************************************************** புழுவைப் போல உள்நுழைந்து பத்து மாத உறக்கம்.. கொடி வழி உணவு கூட்டுக்குள்… இறக்கைகளைப் போல கை கால்கள் முளைத்ததும் உந்திப் பறந்தது  கூடை விட்டு .. குழந்தையாய்.. ***************************************************** உடல் எனும் உடைக்குள் கைதிகள் விடுதலையை எதிர்நோக்கி.. ***************************************************** பொம்மைப் பாசம்.:- *************************** அவள் மடியமர்ந்து போகேமான் பார்த்ததும் அங்கிள் சிப்ஸ்., நூடுல்ஸ் உதட்டில் ருசித்ததும் ., தூங்கும் போதும் கால் மேல் […]

ஒன்றுமறியாத பூனைக்குட்டி..:-

This entry is part 29 of 33 in the series 12 ஜூன் 2011

ஷாப்பிங் மால்களில் முயல்குட்டிகளும் பூனைக்குட்டிகளும் கடந்த போது அவன் கண்கள் அவைபோல் துள்ளின. கூட வரும் மனைவி பார்க்கும்போது கீழ்விடுவதும் பின் ஏந்திக்கொள்வதுமாக நீண்டன அவன் கண்கள் குறுகலான கடையில் இருந்த காலண்டர் சாமியின் ஆயுதம் அவனை மிரட்டியது . கண்களை வெவ்வேறு கோணங்களுக்கு உள்ளாக்கியபோதும் தட்டுப்பட்டபடியே இருந்தன அவை. இடப்பக்கக் கடைவழியே குதித்துச் சென்றவைகளை பட்டைக் கண்ணாடிகள் பலவாய்ப் பிரதிபலித்தன. பர்சின் கனம் குறைந்து பைகளின்கனம் அதிகமானபோது அவன் உரசிச்செல்லும் சில பூனைகளையும் வெறுக்கத்துவங்கி இருந்தான்.. […]

அலையும் வெய்யில்:-

This entry is part 28 of 33 in the series 12 ஜூன் 2011

பார்க் பெஞ்சுகளில் சூடு ஏறி அமர்ந்திருந்தது. மரங்கள் அயர்ந்து அசைவற்று நின்றிருந்தன. ஒற்றைப்படையாய்ப் பூக்கள் பூத்திருந்தன. கொரியன் புல் துண்டுகள் பதிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. டெரகோட்டா குதிரை சாயம் தெறிக்கப் பாய்ந்தது. இலக்கற்ற பட்டாம்பூச்சி செடிசெடியாய்ப் பறந்தது. குழாய்களில் வழிந்த நீரை சூரியன் உறிஞ்சியபடி இருந்தது. உஷ்ணம் தகிக்க நிழல்களும் ஓடத் துவங்கி இருந்தன. காவலாளியும் பூட்டுவாருமற்று விரியத் திறந்திருந்தது கதவு உடைதட்டி எழுந்த அவள் ஒரு முத்தத்தை நிராகரித்திருந்தாள்

சௌந்தர்யப்பகை

This entry is part 29 of 46 in the series 5 ஜூன் 2011

குத்தீட்டி கண்களில் சுமந்தலைந்து நாகம் யார் விழியில் விஷம் பாய்ச்சலாமென. தன்னினத்தில் ஒன்றுடன் பார்க்கக்கூடப் பிடிக்காமல் முன்ஜென்மப் பகையாகிறது சம்பந்தமற்ற சச்சரவுகளில்.. லாவா உக்கிரத்துடன் வார்த்தைக் கண்ணிகளை அங்கங்கே புதைத்து மாட்டும் கால்களுக்காக காத்து பயணப்பாதைகள் பழக்கமற்று தாறுமாறாய்த் துள்ளியோடும் குறுமுயல்கள் கால் சிக்கி வெடித்து தெறித்துச் சிதற புதருக்குள் பதுங்கிக்கிடந்த அரவம் மின்னும்விழிகளோடு மெல்லெழும்பி ருசிக்கிறது எதிரியின் நிணநீர்க்குருதியை.. வாயோரம் வழியும் வெண் சிகப்பணுக்கள் வீழ்ந்ததின் வேதனையையை இரும்புச் சுவையாய்க் கிளர்த்த சரசரவென பொந்துக்குள் ஒன்றுமறியாத […]

ரகசிய சுனாமி

This entry is part 27 of 46 in the series 5 ஜூன் 2011

என்னுள்ளே உறைந்து என்னுடன் இறந்துவிடும் ரகசியங்கள் பனிக்கட்டிகளாய்.. பென்குவின்கள் வழுக்கும் பாறையில் விளையாடி மீன் பிடித்துண்ணும்.. சங்குகளுக்குள்ளும் சிப்பிகளுக்குள்ளும் நுழைந்து மென்தசைகள் சுவைத்து ஆக்டோபஸ்களும் ஜெல்லி மீன்களும் இறுகப்பிடித்துறிஞ்ச கடலோடியாய் அலைகளுள் புணர்ச்சிக்குப் பின்னான தளர்ந்த அயர்ச்சியில் கரையோர நண்டுகள் மண்கிளறி அகலக்காலிட்டு பக்கம் பக்கமாய் ஓட.. கால்நனைத்துக் காத்திருக்கும் எனை விழுங்க வருகிறது ஆழிப் பேரலை அரவத்துடன்.. ஆலிலையில் நீ பிழைக்க சுருட்டிச் செல்கிறது நீர்ப்பாய் என்னை..

சொர்க்கவாசி

This entry is part 4 of 43 in the series 29 மே 2011

கனவுகள் மேலிமைக்குள்ளிருந்து கீழிமைவழி கசிந்தன. புத்தக வாசத்தோடே பலகனவுகளும். அச்சிலிடப்பட்ட சிறுபத்ரிக்கையும் ஆளையடித்துத் திரிசங்காக்குகிறது இன்னும் பேர்காணும் பேரின்பம் வேண்டி. பெரிய விதையாயிருந்தும் கிளைப்பது சின்னச்செடி தலை சுற்றிப் பார்க்கிறது சிறு விதை விருட்சங்களை. வீரியம் அடக்கின செடிகளுக்கு வெடித்தபின் வாய்க்கிறது எட்ட நினைத்த உயரம் அளந்து வைத்த அளவு. ரோஜாக்கள் மரமாவதில்லை மாட்சிமை விருது பெறுவதில்லை எனினும் கிடைக்கிறது விருதளிப்பவரின் இதயத்தில் இடம் புத்தக அடுக்குகளூடே ஒரு சோடா புட்டிக் கண்ணாடியும் ஒரு புதைகல்லறையும் கிடைக்கப்பெற்றவர் […]