Articles Posted by the Author:

 • அவன் அவள் அது – 11

  அவன் அவள் அது – 11

          இந்த அளவுக்கு உன் சித்தப்பனை மதிச்சு நடந்த விஷயம் முழுவதையும் நீ எங்கிட்டே சொன்னதுக்கு ரொம்ப சந்தோஷம்… நிதானமாகச் சொல்லிவிட்டு இருக்கையில் இருந்து எழுந்தார் சேதுராமன். தலை குனிந்தவாறே நின்றிருந்தான் கண்ணன். நேற்று நீ ஆபீஸ் போயிருந்தப்போ உனக்குத் தெரியாமே பத்திரிகைகளிலே வந்த உன்னுடைய கதைகளையெல்லாம் எடுத்துப் படிச்சேன். நீ தப்பா நினைக்க மாட்டேன்னு நினைக்கிறேன். இந்தத் துறையிலே முன்னேறணும்ங்கிற வெறி உன்னை கொஞ்சம் ஆபாசமா எழுதத் தூண்டியிருக்கு. இதை நீ ஒத்துப்பேன்னு நினைக்கிறேன். […]


 • அவன், அவள். அது…! 10

  அவன், அவள். அது…! 10

  ( 10 )       என்னம்மா சொல்றே நீ? ஒருத்தனுடைய பேச்சும் எழுத்தும் அவனுடைய காரெக்டருக்கு அளவுகோல்னு சொன்னா எப்படி? அதை என்னால ஏத்துக்க முடியலைம்மா… நிச்சயம் அப்படித்தாம்ப்பா…மனசிலே நாம எப்படி சிந்திக்கிறோமோ அதுதான் பேச்சிலும், செய்கையிலும் வெளிப்படுது…அதுதான் உண்மை… அப்படிச் சொல்ல முடியாதும்மா…மனம் ஆயிரம் நினைக்கும் ஆனால் அதில் தேவையில்லாததையெல்லாம் வடிகட்டி நல்லதைச் செய்யறாம்பாரு…அவன்தான் மனுஷன்…அதனாலே செய்கைதான் முக்கியம். எழுத்தும் பேச்சும் அவரோட செயல்தானேப்பா…அது சுத்தமா இருக்கணுமில்லியா? எழுத்து அவருடைய உறாபி…நாட் ய ப்ரொஃபெஷன். பேச்சு […]


 • அவன், அவள். அது…! -9

  அவன், அவள். அது…! -9

        ஏம்மா, எங்கே போயிட்டு வர்றே…? – உள்ளெ நுழையும்போதே பத்மநாபனின் கேள்வி சுமதியை நிறுத்தியது. என் தோழி கவிதா வீட்டுக்குப்பா… இப்படி பதைபதைக்கிற வெய்யில்ல போய் அலைஞ்சிட்டு வர்றியே, இது தேவையா உனக்கு? கேள்வி என்னவோ செய்தது. அப்பாவின் பேச்சில் ஆயிரம் இருக்கும். இல்லப்பா, ரொம்ப நாளாச்சு அவளைப் பார்த்து. ஊரிலிருந்து வந்திருக்கிறதா கேள்விப்பட்டேன். அதான் போனேன். பார்த்திட்டியா? சுமதி தயங்கினாள். என்னம்மா, உன் தோழியைப் பார்த்துப் பேசிட்டியான்னு கேட்டேன்… அப்பா பதிலுக்காக நிமிர்ந்து நோக்குவது […]


 • அவன், அவள். அது…! -8

  அவன், அவள். அது…! -8

  ( 8 )       இன்றைக்கு சப்ஜெக்ட் பெண்களைப் பத்தி, பொதுவா லேடீஸ் பத்தி என்னென்ன அபிப்பிராயம் தோணுதோ, நிலவுதோ அதையெல்லாம் எடுத்து வைக்கலாம். ஓ.கே…! ஓ.யெஸ், ஐ ஆம் ஆல்வேஸ் ரெடி…. நிறைய ஆண்களோட மனசைக் கெடுக்கிறதே இந்தப் பெண்கள்தான். இதைப்பத்தி நீ என்ன சொல்றே? ஒரு ஆணினுடைய வெற்றிக்குப் பின்னாலே நிச்சயம் ஒரு பெண் இருப்பான்னு சொல்வாங்க…அதே போல பல ஆண்களுடைய தோல்விக்கும் குற்றங்களுக்கும் பின்னாலேயும் ஒரு பெண்தான் இருப்பாள்னு நான் சொல்றேன். பெரும்பாலுவும் […]


 • அவன், அவள். அது…! -7

  அவன், அவள். அது…! -7

  தலையைக் குனிந்தவாறே இருந்த கண்ணனை சேதுராமனின் வார்த்தைகள் ஆட வைத்தன. உன் அப்பா அம்மா கஷ்டத்திலே இருக்காங்கன்னா அதுவும் அது மனக்கஷ்டம்னு தெரிஞ்சா அது முதல்லே எனக்குமுண்டு…அதை என்னன்னு அறிஞ்சு தீர்த்து வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு. கடமை. அதான் உடனடியாப் புறப்பட்டு வந்தேன். உங்கப்பாவும் நானும் சகோதரர்கள். அவனுக்கு ஒரு துன்பம்னா அது எனக்கும்தான். அந்தக் குடும்பத்துல இருக்கிற சந்தோஷம் எல்லாமும் அவங்களுக்குன்னா, அங்கே கவிழ்ற துன்பத்தை நான் கையிலெடுத்து அதை சந்தோஷமா மாத்திக் கொடுக்கிறதை […]


 • அவன், அவள். அது…! -6

  அவன், அவள். அது…! -6

        இதுநாள் வரைக்கும் இத்தனை சீரியஸா நீ எதையும் டிஸ்கஸ் பண்ணினதில்லையே? என்னாச்சு உனக்கு? என்றான் கண்ணன். கூடவே ஏதேது, போகிற போக்கைப் பார்த்தா நீ என்னையே கூடத் தப்பா நினைக்க ஆரம்பிச்சிடுவ போலிருக்கே…என்றான். அதற்கு அவள் ஒன்றும் சொல்லவில்லை. பதில் எதுவும் சொல்லாத ஒப்புதலா இது? அந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான் இவனும் யோசிக்க ஆரம்பித்தான். மனைவி என்ற வித்தியாசமில்லாமல் எல்லாவற்றையும் அவளிடம், ஆண் சார்ந்த, பெண் சார்ந்த என்று கூடப் பார்க்காமல் அவ்வப்போது விவாதித்தது தவறோ […]


 • அவன், அவள். அது…! -5

  அவன், அவள். அது…! -5

        என்னடா ஆள் டல்லா இருக்கே…? – கேட்டான் மதிவாணன். இருக்கையில் அமர்ந்து தன் வேலைகளை எப்போதும் மும்முரமாகச் செய்து கொண்டிருக்கும் கண்ணனுக்கு இன்று என்னவோ வேலையே ஓடவில்லைதான். இது நாள்வரை தான் கதை எழுதி எந்தப் புண்ணியமுமில்லையோ என்று தோன்றியது. சுமதி தன் கதைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தது அவனை வெகுவாக உறுத்தியது. வெறும் செய்தித்தாள் படிப்பவள் அவள். தினசரி காலையில் அந்த செய்தித்தாளை அவள் கையில் கொடுத்தால் போதும். சோறு தண்ணி வேண்டாம் அவளுக்கு. சமையலைக் […]


 • அவன், அவள். அது…! -4

  ( 4 )       கண்ணனுக்கு அப்படியே விட்டு விட்டுச் செல்ல மனமில்லை. ஏனென்றால் அவன் படைப்புக்கள் பலவற்றைப் படித்துவிட்டுப் பாராட்டியவள் அவள். அதனால் ஊக்கம் பெற்றவன் இவன். இப்பொழுது வேறு மாதிரிப் பேசுகிறாள். எதற்காக இத்தனை வெறுப்பு மண்டியது அவளுக்கு? எழுதுபவனெல்லாம் அப்படியே உள்ளவன் என்று பொருளா? ஒரு கதை என்றால் அதில் நாலுவிதமான கதாபாத்திரங்கள் வரத்தான் செய்யும். நாலு பேரும் நாலு விதமாகத்தான் பேசுவார்கள். செய்வார்கள். அதற்காக அந்தக் கதாசிரியனும் அப்படியாப்பட்டவனே என்று நினைத்து […]


 • அவன், அவள். அது…! -3

  அவன், அவள். அது…! -3

          எல்லா விதத்திலும் தன்னோடு, தன் சிந்தனையோடு ஒத்துழைத்தவள் எப்படி இந்த விபரீத முடிவுக்கு வந்தாள்? – கண்ணனால் நம்பவே முடியவில்லை. சுமதி, இந்த வாரக் கதை படிச்சியா…? எதைச் சொல்றீங்க…? அதான், கமலம் வார இதழ்ல வந்திருக்கே “சபலம்”ங்கிற சிறுகதை…அதைத்தான் படிச்சியான்னு கேட்டேன்… ம்ம்…படிச்சேன்…. என்ன? சுரத்தில்லாமப் பதில் சொல்றே? வெறுமே ஒரு வார்த்தைல இப்டி பதில் சொன்னேன்னா எப்டி? ஏதாவது பாராட்டுக் கிடையாதா? நடை எப்படியிருந்தது? கதையோட வேகம் எப்படி? உள்ளே சொல்லியிருக்கிற […]


 • அவன், அவள். அது…! -2

  அவன், அவள். அது…! -2

  ( 2 )       அடடா….ரொம்பத் தப்பாச்சேடா கண்ணா…அவளாத்தான் புறப்பட்டுப் போனான்னு நீ சொல்லலாமா….? இது உன் மனதுக்கு அசிங்கமாயில்லே? கண்ணியமான வாழ்க்கை வாழறவங்க நாம. சுற்று முற்றும் இருக்கிறவங்க எதுவும் தப்பாப் பேசிடக் கூடாதுங்கிறதுல கவனமா இருக்கிறவங்க…அவங்ககிட்டே நமக்கு ஒரு மரியாதை கிடைக்கணும்னு எதிர்பார்க்கிறவங்க….அமைதியா, அழகாக் குடும்பம் நடத்துறவங்கன்னு எல்லாரும் நினைக்கணும்னு விரும்புறவங்க….நாம போய் இப்படிச் செய்யலாமா? சொல்லு…உனக்குத் தெரியாததா இது? வெளியே வந்ததும் வராததுமாக இனியும் தாமதிப்பதில் பலனில்லை என்பதுபோல் சித்தப்பா ஆரம்பித்து விட்டது […]