வளவ. துரையன் உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன் நந்தகோ பாலன் மருமகளே நப்பின்னாய் கந்தங் கமழும் குழலி கடைதிறவாய் வந்தெங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப் பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண் பந்தார் விரலிஉன் மைத்துனன் பேர்பாடச் செந்தா மரைக்கையால் சீரார் வளைஒலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். இது ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவையின் பதினெட்டாவது பாசுரம். இதற்குமுன் பதினேழாவது பாசுரத்தில் நந்தகோபர், யசோதை, பலராமன் ஆகியோரை ஆயர்பாடிப் பெண்கள் எழுப்பினார்கள். கண்ணனை முன்னிட்டு அவர்களை […]
—பாச்சுடர் வளவ. துரையன் [சந்தர் சுப்ரமணியனின் ‘நினைவு நாரில் கனவுப்பூக்கள்’ தொகுப்பை முன்வைத்து] எனது மரபுக் கவிதைகளை நூலாக்கலாமா என்றுபேசிக்கொண்டிருக்கையில் என் நெருங்கிய நண்பரான நவீன இலக்கிய எழுத்தாளர் ஒருவர் “யார் அதைப் படிப்பார்கள்” என்று கேட்டார். ஆனால் மரபுக் கவிதைகள் எப்பொழுதும் நிலைத்து நிற்கக்கூடியன. அதனால்தான் பாரதியும் அவர் தாசனும் இன்னும் வாழ்கிறார்கள். இன்றும் பல இதழ்கள் மரபுக் கவிதைகளை வெளியிடுகின்றன. மரபுக் கவிதைக்கென்றே சில இதழ்களும் வெளிவருகின்றன. ஒருமுறை மேலாண்மை பொன்னுச்சாமியுடன் பேசிக் […]
செந்நாப்போதார் திருவள்ளுவர் தாம் இயற்றிய திருக்குறளில் பலவிதமான உயிரினங்களைப் பல்வேறு இடங்களில் உவமையாகக் காட்டி உள்ளார். எந்தெந்த இடங்களில் எவ்வெவற்றை எவ்வெவ்வாறு பயன்படுத்துகிறார் என்று சொல்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். யானை: வள்ளூவர் முதலில் யானையை எவ்வாறு காட்டுகிறார் என்று பார்ப்போம். திருவள்ளுவர் யானையைக் குறிக்குமிடத்து, ‘களிறு’ ’யானை’ என்றே குறிப்பிடுகிறார். எந்த இடத்திலும் ‘பிடி’ என்று பெண் யானையைக் கூறவே இல்லை. வள்ளுவர் முதலில் காட்டும் யானை மிக மிகக் கொடியது. பாகனுக்கும் எளிதில் அடங்காதது. […]
ஜானவாச ஊர்வலம் கிளம்பிவிட்டது. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சின்ன கார். சுற்றிலும் கேஸ் லைட்டுகள். அடுத்துப் பெண்களும் அடுத்து ஆண்களும் தெருவை அடைத்துக் கொண்டு சென்றது ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷாக்காரர்களுக்குப் பெருந்தொல்லையாக இருந்தது. மாப்பிள்ளை சந்திரன் முகமலர்ச்சியுடன் அமர்ந்திருந்தான். அவனைச் சுற்றிலும் கார் நிறையக் குழந்தைகள். அக்குழந்தைகளின் நடுவில் சந்திரனின் ஐந்து வயது மகன் குமாரும் உட்கார்ந்திருந்தான். ”ஏன் சார், இது இரண்டாவது கல்யாணம் தானே?” “ஆமாம், அதுக்கு என்ன இப்போ?” ”இல்ல, ஜான்வாசம்லாம் எதுக்குன்னு கேட்டேன்.” என்று […]
உலகம் தோன்றிய நாள் தொட்டே அதிகாரம் என்ற ஒரு போதை ஒரு சிலரை ஆட்டிப் படைக்கிறது. அந்த அதிகாரம் என்பது இனத்தின் பெயரால், சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் செலுத்தப்படும்போது ஒரு அரசியலில் புகுந்து தகுதி இல்லாதவர் ஆட்சிக் கட்டிலில் உட்கார்ந்து அவர்களால் கையாளப்படும் நிலையில் பொது மக்கள் எல்லாருமே அந்த அதிகாரம் எனும் பூதத்தின் வாயில் வீழ்கிறார்கள். அதிலும் பதவி என்ற பேய் பிடித்து அதிகாரச் சவுக்கு கையில் எடுத்து சுழற்றப் படுகையில் மிகச் சாதாரணமான […]
கிருஷ்ணாபுரம் போயிருக்கிறீர்களா? நான் கேட்பது தொல்சிற்பங்கள் நிறைந்துள்ள திருநெல்வேலி மாவட்டக் கிருஷ்னாபுரம் இல்லை. விழுப்புரம் மாவட்ட எல்லைக் கோடியில் இருக்கும் ஒரு சாதாரண கிராமம். ஆனால் அதைக் கிராமம் என்றும் சொல்ல முடியாது. நகரம் அளவிற்கு வளர்ச்சியும் கிடையாது. வேண்டுமானால் மூன்றாம் பாலினம் போல கிராம நகரம் என்று சொல்லிக் கொள்ளலாம். பண்ருட்டியிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் சாலை அக்கிராமம் வழியாகச் செல்வதுதான் அக்கிராமத்தை ஒரளவிற்கு நகரமயமாக்கி உள்ளது. ஒரு கணினி மையம் இணைய தளத்துடன் வந்துவிட்டாலே […]
’சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து’ என்று பாடினார் மகாகவி பாரதியார். தெலுங்கு ஓர் அருமையான இனிமையான மொழி. எல்லா மொழிச் சிறுகதைகளுக்கும் உள்ள சிறப்புத் தன்மைகளைத் தெலுங்குச் சிறுகதைகளிலும் காண முடிகிறது. ’தெலுங்குச் சிறுகதை பிறந்து 75 ஆண்டுகள் ஆகின்றன” என்று டி. ராமலிங்கம் குறிப்பிடுகிறார். 1910—இல் ‘திருத்தம்’ எனும் பெயரில் முதல் சிறுகதை வெளியானது. அதை எழுதியவர் குரஜாடா அப்பாராவ் என்பவர் ஆவார். (மு. கு. ஜகன்னாதராஜா) அவரை இன்றைய தெலுங்குச் சிறுகதைகளுக்கு வித்திட்டவர் எனக்கூறலாம். பாலகும்மி […]
எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ? சில்லென் றழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன் வல்லையுன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும் வல்லீர்கள் நீங்களே நானேதா னாயிடுக ஒல்லைநீ போதா யுனக்கென்ன வேறுடையை எல்லாரும் போந்தாரோ போந்தார்போந் தெண்ணிக்கொள் வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றாழிக்க வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய். திருப்பாவையின் பதினைந்தாம் பாசுரம் இது. இப்பாசுரம் அருமையான நாடகப் பாணியில் அமைந்துள்ளது. பாசுரம் […]
தமிழ் நவீன இலக்கியத்தின் எழுத்தாளர்களில் முக்கியமானவரும் சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான நாஞ்சில் நாடன் அண்மையில் ’சிற்றிலக்கியங்கள்’ எனும் நூலை எழுதியிருக்கிறார். அதில் அவர் 14 வகைச் சிற்றிலக்கியங்களை மிகுந்த தேடலுக்குப்பின் கண்டறிந்து ஆய்வு செய்துள்ளார். அந்நூலில் ‘பிள்ளைத்தமிழ்’ என்னும் வகையில் பல பிள்ளைத்தமிழ் நூல்களை அவர் காட்டுகிறர். அவற்றில் ஒன்றுதான் ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழ் எனும் நூலாகும். நாஞ்சிலின் நூலைப்படிக்க இயலாதவர்களுக்கு ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத் தமிழ் பற்றி அறிமுகம் செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும் […]
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும் எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய் கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே எம்பெரு மாட்டி யசோதா அறிவுறாய் அம்பர மூடறுத் தோங்கி உலகளந்த உம்பர்கோ மானே உறங்கா தெழுந்திராய் செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய இது திருப்பாவையின் பதினேழாவது பாசுரம். இதற்கு முந்திய பாசுரத்தில் ஆயர்குலப் […]