—வளவ. துரையன் நான்கு கரைகளிலும் நாணல்கள் படிக்கட்டுகள் இல்லையெனினும் சாய்தளப்பாதை. ஆள்குளிப்பதை யாரும் அறியாத அளவிற்கு கண்களை மறைக்கும் காட்டாமணக்கு. குட்டையோ அல்லது குளமோ எப்பெயரிட்டு அழைத்தாலும் எல்லார்க்கும் பொதுவானது. மாடுகளை மேயவிட்டபின் மத்தியான வேளையில் மேய்ப்பவர்களுக்கு அதுதான் சொர்க்கம். இப்போது நீவரும் பாதையெல்லாம் அடைபட்டுப் போனதால் நீரும் வழி மறந்து போயிற்று. பாதிக்குமேல் தூர்ந்துவிட்டதால் பயனற்றுக் கிடக்கிறது. ஆண்டுதோறும் வரும் வலசைப் பறவை மட்டுமிங்கே ஓரமாக உட்கார்ந்து அழுதுகொண்டிருக்கிறது
வளவ. துரையன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மறைந்து போகின்ற பச்சைக் கிளிபோல்தான் இது. இரு கைகளையும் குளம்போல் குவித்துவைத்து ஏந்தினாலும் விரலிடுக்குகளின் வழியே கசியும் போகும் நீர்தான் இது. இறுதியில் ஓர் இலை கூட இல்லாமல் வீணே பட்டமரமாய் நிற்கிறது. நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் நல்ல ஊஞ்சலும் நின்றுதானே ஆக வேண்டும். உள்ளே வந்துவிட்ட பட்டாம்பூச்சி வெளிச் செல்ல மூடப்பட்ட சன்னல்களில் முட்டி முட்டிப் பார்ப்பதைப்போல முயல்கிறாய் நீ. அதை அதன் போக்கிலே அவ்வப்போது விட்டுவிடு. வழிகிடைக்கும்
வளவ. துரையன் இருளைக்கண்டுதான் இங்கே எல்லாரும் அச்சப்படுவார்கள். ஆனால் எனக்கோ அதிக வெளிச்சம் தயக்கம் ஊட்டுகிறது. இருளுக்கு வெளிச்சத்தைக் கொடுப்பதைவிட வெளிச்சத்துக்கு இருள் தருவது அரிதான ஒன்று. வெளிச்சத்தின் நிறம் வெண்மை என்கிறார்கள். உற்றுப் பார்த்தால் அதன் உள்ளே ஒளிந்திருக்கும் எல்லாமும் தெரிய வரும், வெளிச்சம் என்பது நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு போதை விளக்கு. எப்பொழுதும் அது அணைந்து விடலாம். எனவேதான் வெளிச்சத்தைக் கண்டு நான் அச்சமடைகிறேன்.
வளவ. துரையன் ஒரு முழம் கூடவிற்கவில்லையெனபூப்போல வாடும்பூக்காரியின் முகம்கூடு கட்டஎந்தக் குச்ச்சியும்சரியில்லை எனத்தேடி அலையும் காக்கைஎலிகள் கிடைக்காததால்காக்கைக்கு வைத்தசோற்றைப் பார்க்கும்நகரத்துப் பூனைதிடீரென வந்த தூறலில்ஒதுங்க இடம்தேடும் தெரு நாய்ஆட்டோவில் அடைத்துஅழைத்துச் செல்லப்படும்நர்சரியின் மாணவர்கள்
வளவ. துரையன் வண்டியில் பூட்டப்பட்ட காளை அடுத்த பயணத்திற்குத் தயாராக இழுக்கிறது. சுமை சற்று அதிகம்தான். நுகத்தடியைத் தாங்கும் இடத்திற்கு மேலே கழுத்தில் இருக்கிறது சிறு புண். கவனமாக அதைப் பார்த்துக் காக்கை கொத்துகிறது. காளையின் கவலை காகம் அறியாது. வாலால் அடிக்க இயலாமல் முடிந்தமட்டும் தலையை ஆட்டிப் பார்க்கிறது காளை. விலகி விலகிப் போனாலும் மீண்டும் மீண்டும் வந்து கொத்தி வாழ்க்கையைக் கற்றுத் தருகிறது காக்கை.
வளவ. துரையன் உன் கவிதைகளில் நான்தான் இருக்கிறேன் என்றால் ஒப்புக்கொள்ள மறுக்கிறாய். சுருள்முடியும் நான்விடும் சுருள் புகையும் எப்படிச் சுற்றிச் சுற்றி அங்கே இடம் பிடித்தன. அன்று நகருந்தில் என் காலை மிதிப்பது தெரியாமல் மிதித்து ரணமாக்கி ரத்தக் கண்ணீர் வடித்தாயே. அருகருகே தோளுரசி நடக்கும்போது இருவரும் கைகள் கலந்தும் கலக்காமலும் போனதையும் கவிதையாக்கி இருக்கிறாய். ஆனால் கல்லிலிருந்து தலை நீட்ட மறுக்கும் பாம்புக் குட்டியாய் நீ பரிதவிப்பது தெரிகிறது. நீ ஒப்புக் கொள்ளாவிடினும் உன் உள்மன […]
பகலிலேயே வந்து மூடும்இந்த இரவை என்னென்று சொல்வது? கிளிகள் பழமுண்ணாமல்பரிதவித்துத் தவிக்கின்றன. தன் புண்னைக் கொத்தவரும்காக்கையை விரட்ட முடியாமல்காளை தலையை ஆட்டிப் பார்க்கிறது. ஆந்தையின் மகிழ்ச்சியைஅந்தப் பொந்தினுள் கண்டேன். இரவின் இருளுக்குக்கருமையென்றும்நீலமென்றும்வண்ணம் வடிக்கிறார்கள். பகலை விட்டுவிட்டுஇரவு மெதுவாகவெளியே ஏறும்போதுநிலவு வந்து கொண்டிருந்தது. இப்போதுதான்அந்தக் கள்ள இரவுஉண்மையில் வந்து தீர வேண்டும். இந்த நிலவின் ஒளியில்அப்போதுதான்இரவை விரட்டி அடித்துஇன்பம் அள்ளலாம்.
வளவ. துரையன் தேய்ந்து கொண்டே போய்இல்லாமல் ஆகிவிடும்நாள்காட்டியாக போலத்தடுமாறுகிறது நெஞ்சம். திருவிழாவில் தொலைத்துவிட்டபெற்றோரைத் தேடும்சிறுவன் போலத்தவிக்கிறேன். யாரைப் பார்த்தாலும்உதவிசெய்ய வருபவர்போலவே தெரிகிறது. ஆனால் அவர்கள் மனத்திலிருந்துசுத்தமாக என்னைஅழித்திருப்பதைஅறியும்போதுதான்அழுகை வருகிறது. தண்ணீரில் தத்தளிக்கும்சிற்றெறும்பு ஒன்றுதுரும்பொன்றைத் தேடுகிறது. விழுகின்ற பழுப்பு இலைகளைமனம் விட்டுவிடாமல்எண்ணிக் கொண்டிருக்கிறது.
[எஸ்ஸார்சியின் ”ஞானவாபி” சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து] எஸ்ஸார்சியின் சிறுகதைகளைப் படிக்கும்போது நம்முடன் நெருங்கிய தொடர்புடையவர்களின் நினைவுகள் தோன்றும். அவரது கதைகள் அவரின் அன்றாட வாழ்வோடு, தொடர்பு கொண்டவை. அந்த அனுபவங்கள் சாதாரண மனிதர்கள் எல்லாருக்கும் உண்டு. வீட்டிற்கு வாடகைக்கு வருகிறேன் என்று கூறிவிட்டு முன்பணமும் தந்துவிட்டுக் கொரானோ வந்ததால் வராதவர், வீட்டை விற்பனை செய்ய வரும் தரகரின் மறுபக்கம், வீட்டுப் பூட்டைத் திறக்க வந்த பாய் வேலை செய்யாததால் காசு வாங்க மறுப்பது, குடித்தனம் வருபவரின் தொல்லைகள், […]