This entry is part 5 of 7 in the series 25 ஆகஸ்ட் 2024

வளவ. துரையன்

இந்தக் குளிர்காற்று
இன்று வீசிய வெப்பத்திற்கு
இதமாகத்தான் இருக்கிறது.
இன்னும் கொஞ்சநேரம்
சென்றால் இரவும் குளிரும்
இன்பமும் திகட்டுமன்றோ?
உச்சந்தலையில் உறைக்கும்
வெப்பத்தின் சுவடுகள்
உள்ளங்கால் வரை
ஊடுருவிப் பார்க்கின்ற்ன.
இதுவே பழகிவிடும்
போலிருக்கிறது.
துன்பத்திலும் இன்பமா?
பகல்முழுதும்
எல்லாச் சாலைகளும்
பாலையாகித்
தலைவனைப்பிரிந்த
தலைவியாகத் தவிக்கின்றன.
மாலையில் கூட வரும்
மஞ்சள் வெளிச்சமும்
அச்சமூட்டுகிறது.
இன்னும் சற்று நேரத்தில்
வௌவாலும் ஆந்தையும்
வட்டமிட வந்துவிடும்.

Series Navigationஅமைதிபோகாதே நில்.