76வது பிறந்தநாள் சிட்னியில் விடியும் என்று மனோ எதிர்பார்க்கவில்லை. வழக்கம்போல் தேக்கா வசிப்போர்சங்கக் கூட்டம் முடிந்ததும் சத்யா சொன்னார். ‘பயணச்சீட்டுக்கான காசு தந்தால் போதும். 10 நாட்கள் சிட்னி சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யமுடியும் என்று என் மகன் சொல்கிறார். என் மகன் இப்போது சிட்னியில் ஒரு சுற்றுலா நிறுவனத்தில்தான் வேலை செய்கிறார். குறைந்தது 10பேர் வேண்டுமாம்.’ கேட்டமாத்திரத்தில் எல்லாரும் நான், நான் என்று கையைத்தூக்கி விட்டார்கள். பத்தாவதாக மனோவும் சேர்ந்துகொண்டார். இப்படித்தான் இந்த சிட்னி பயணம் முடிவானது. […]
17 ஆண்டுகால வகுப்பறை வாழ்க்கையின் கடைசி நாள். 30 ஏப்ரல்,1971. முதுகலை. மாநிலக் கல்லூரி. சென்னை. பொறுப்பாசிரியர், ஜேபிஎஸ் என்கிற ஜே. பாலசுப்ரமணியம். அவர் சொன்னார் ‘நாளை முதல் விடுமுறை. ஆனாலும் மே 15வரை செய்முறை தேர்வுக்கு நீங்கள் தயாராக, சோதனைக்கூடம் தினமும் திறந்திருக்கும். உதவியாளர்கள் இருப்பார்கள். நாங்களும் இருப்போம். நீங்கள் வந்து எல்லா சோதனைகளையும் எப்பொழுது வேண்டுமானாலும் செய்துபார்த்துக் கொள்ளலாம். கல்லூரிக்குப் பக்கத்திலேயே உள்ள நல்லதம்பி முதலித் தெருவில்தான் என் இருப்பிடம். ஓர் அறையில் நான்கு […]
‘மாப்பிள்ளைக்கு அமெரிக்காவில் வேலையாம். திருமணத்துக்குப்பின் மீராவும் அமெரிக்கா போய்விடுவாளாம்.’ என்று மற்றவர்கள் பேசும்போதும் சரி, தன் நெருங்கிய தோழிகள் ‘நீ கொடுத்துவச்சவடீ’ என்று சொல்லும்போதும் சரி, முன்னைவிட, தன் முகம் மிக அழகாக இருப்பதுபோல் உணர்ந்தாள் மீரா. ‘முகம் மட்டுமா இனி முகவரியும் அழகாக இருக்கலாம். மாப்பிள்ளை குரு என்கிற குருராஜ், கணினி மென்பொருள் பொறியாளர். இரண்டு ஆண்டுகளாக அவன் இருப்பது அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில். தனி வீடு. தனியாகவே இரண்டு ஆண்டுகள் வாழ்ந்தவன். இப்போது மீராவோடு […]
நாளை பாலி பயணத்திற்கு கயல்விழி தயாராகிக் கொண்டிருக்கிறார். மகள் கலையரசி வெற்றிகரமாக உயர்நிலை 3ஐத் தொடர விருக்கிறார். மகன் காவியன் இரண்டு மாதங்களில் தேசிய சேவையில் சேரவேண்டும். விடுமுறை மாதம். டிசம்பர். இரண்டு மாதமாகவே கலை ‘பாலி, பாலி’ என்று புலம்பிக்கொண்டிருக்கிறார். கயல்விழி இந்தப் பயணத்தை ஏற்பாடு செய்வது முக்கியமாக கலையரசிக்காகத்தான். கயல்விழிக்கு முத்தையா என்பவர்தான் பயணமுகவர். புள்ளி வைத்தால் போதும். கோலம் அவர் பொறுப்பு. எங்கே தங்குவது? போக்குவரத்து ஏற்பாடுகள் […]
பிடுங்கி நடப்பட்ட செடி, நட்ட இடத்திலேயே பூத்து, காய்த்து, கனிந்து வாழ்க்கையை முடித்துக் கொள்கிறது. ஒரு மரத்தில் பிறந்து, சிறகு முளைத்த குருவி, எங்கெங்கோ பறந்து திரிந்தாலும், ‘இந்த மரத்தில்தான் நான் சிறகுகள் பெற்றேன்’ என்று தேடி வருவதில்லை. ஆனால் மனிதன்? பிறந்த உடனேயே புலம்பெயர்ந்தாலும்கூட பிறந்தமண்ணைத் தேடிவந்து பார்த்துவிட்டுப்போக ஆசைப்படுகிறான். நான் 70ஐக் கடந்துவிட்டேன். என்னோடு பட்டம் விட்டவர்கள், பம்பரம் குத்தியவர்கள், கிட்டிப்புல்லு ஆடியவர்கள், கோலிக்குண்டு அடித்தவர்கள், குட்டையில் மீன் பிடித்தவர்கள், உதைத்தவர்கள், உதைபட்டவர்கள் […]
அது ஒரு மழை மாதம். பல இடங்களில் வெள்ளமென்று 96.8 அறிவித்தது. அடுத்தநாள் செய்தித்தாளில் முதல் பக்கச் செய்தி ‘சாலையைக் கடக்கையில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் முதியவர் மரணம்’. அரசு சும்மா இருக்குமா? சுற்றுச்சூழல் ஆணையத்தை முடுக்கிவிட்டது. தளதளவென்று கிளைகளைப் பரப்பி அழகு காண்பித்த மரங்களின் கிளைகள் கழிக்கப்பட்டன. நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் பட்டுச்சேலை உடுத்திய பெண்கள்போல் நின்ற மரங்கள் நீச்சல் உடையில் காட்சியளித்தன. நான் தங்கியிருக்கும் பஃபலோ சாலையில் சிறுவர்கள் பூங்காவுக்கு நிழல் தந்தபடி குடை விரித்திருந்த […]