பிரக்ஞை குறித்தான ஒரு வேண்டுகோள்

கசட தபர வெளிவந்த காலத்தில் பெரிதும் பேசப்பட்ட இதழ் பிரக்ஞை. ஆனால் அதில் தொடர்புடையவர்கள் இன்று வயதாகி கண்டங்களில் பல மூலைகளில் இருக்கிறார்கள். சமீபத்தில் அகிலனின் மருமகனும் கவிஞருமான பாரவியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘ பிரக்ஞை இதழ் ஏதும் கைவசம்…

மலேசியத் தமிழ் இலக்கியத்தில் பெண்ணிலக்கியவாதிகள்: கருத்தரங்கம்.

மலேசியத் தமிழ் இலக்கியத்தில் பெண்ணிலக்கியவாதிகள்: கருத்தரங்கம். (சிதனா, கோலாலம்பூர்) மலேசியாவில், ஆண்களின் இலக்கியப் படைப்புகளுக்கு ஈடாக, நவீனம், குறு நாடகம், புதினம், கட்டுரை, கவிதை என மலையகத்துப் பெண் படைப்பாளர்களும் தங்கள் பங்கினை நிறைவாகவே வழங்கி வந்துள்ளனர். புத்தாக்க சிந்தனைகளும் எழுத்தாற்றல்…

ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி

ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி ------------------------------------------- *நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில், 2011ஆம் ஆண்டு ( ஜனவரி 2011 முதல் திசம்பர் 2011 வரை)வெளியான நூல்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன. *ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே பரிசுத்தொகை ரூ…
குரு அரவிந்தனுக்கு தமிழர் தகவல் இலக்கிய விருது – 2012

குரு அரவிந்தனுக்கு தமிழர் தகவல் இலக்கிய விருது – 2012

கனடியத் தமிழரின் அடையாளமாக, வரலாற்றுப் பதிவாக தன்னை நிலைநாட்டி, தொடர்ந்து 21 வருடங்களாக வெளிவந்து சாதனை படைக்கும் தமிழர் தகவல் இவ்வருடத்திற்கான இலக்கிய விருதை எழுத்தாளர் குரு அரவிந்தனுக்கு (Kuru Aravinthan)வழங்கிக் கௌரவிக்கின்றது. பல விருதுகளைப் பெற்ற இவர் நாவல், சிறுகதை,…

முனைவர் மு.வ நூற்றாண்டு விழா

  முனைவர் மு.வ - அக்கால இளைஞர் அனைவர் நெஞ்சிலும்  இடம் பெற்ற மூத்த தமிழ்அறிஞர்.அவர்தம் நூற்றாண்டு விழாவைப் பல இடங்களில் கொண்டாடி வருகிறார்கள், தாய்த்தமிழகத்தில். ஐரோப்பாவில் அதனை முதலில் கொண்டாடிய பெருமை பிரான்சு கம்பன் கழகத்தையேசாரும்.  19.02.2012 ஞாயிறு அன்று பிரான்சு கம்பன் கழகம், முனைவர் மு;வ அவர்களுக்கு விழா எடுத்தது. அத்துடன் தைப் பொங்கல், தமிழர் புத்தாண்டு விழாக்களும் சேர்ந்துகொண்டன. முப்பெரும் விழா  சிறப்புடன் நடைபெற்றது. விழா தொடங்குவதற்கு முன்  முன் மாணவ மாணவியர்க்கு ஓவியப் போட்டியும் மாதர்களுக்குக் கோலப்போட்டியும் நடைபெற்றன.   நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்ட நேரப்படியே விழா தொடங்கியது. மரபுப்படி மங்கல   விளக்கைஏற்றியவர்கள் திருமிகு செல்வா, உமா இணையர்.ஐரோப்பிய பராளுமன்றம் இருக்கும் Strasbourg நகரில்இருந்து விழாவில் கலந்துகொள்ள வந்திருந்தார் சிறப்பு விருந்தினர் திருமதி முனைவர் இராசஇராசேசுவரி பரிசோ. இவர்கள் தம் இனிய குரலில் இறைவணக்கம் பாடினார்கள். நூற்றாண்டு விழாத் தலைவர் மு;வ அவர்களுக்குக்காகக் கவிஞர் கி.பாரதிதாசன் இயற்றிய பாடலுக்கு அவையிலேயே இசை அமைத்துப் பாடி அனைவரையும் கவர்ந்தார். பின் கம்பன் கழக இளையோர்அணியினர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர்.    கம்பன் கழகத்தின் பொருளாளர் திருமிகு தணிகா சமரசம் அனைவரையும் வரவேற்றார் ; கழகத்தின்துணைத் தலைவர் திருமிகு கி அசோகன் விழாவுக்குத் தலைமை தாங்கி முனைவர் மு.வ பற்றிநல்லதோர் உரை ஆற்றினார். கம்பன் இலக்கண இலக்கியத் திங்கள் இதழ் சார்பாக 'மு;வ நூற்றாண்டுவிழா'   மலர், 'அன்னை தெரெசா மலர்', 'கவிஞர் தமிழ்ஒளி மலர்' ஆகிய மூன்று மலர்களைவெளியிட்டவர் திருமிகு அ. நாகராசன்.    இந்த நிகழ்ச்சி முடிந்ததும் மேடை ஏறினார் மூன்று வயது செல்வன்  யுவராசன் என்னும் ஆதவன்செங்குட்டுவன். ஔவையாரின்  ஆத்திசூடியை ஒரு வரி பிசகாமல் ஒன்றல்ல இரண்டல்ல108 வரிகளையும் தன் மழலை மொழியில் தடங்கல் இல்லாமல் உரைக்கக்   கேட்ட அவையோர் அசந்துபோயினர்.   சிறப்புரை ஆற்றும் பொறுப்புடன் எழுந்து வந்தார் பிரான்சு கம்பன் கழகத்தின் செயலர்  பேராசிரியர்பெஞ்சமின் லெபோ. தனக்கே உரிய எடுப்பான குரலில் மிடுக்கான நடையில் அடுக்கு மொழியில்நகையைக் கலந்து சுவையைக் குழைத்து முனைவர் மு;வ அவர்களைப் பற்றிய தம் நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டார்.    தொடர்ந்து கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி. பாரதிதாசன் அவர்களின் தலைமையில் பொங்கல்கவியரங்கம் சிறப்புற நடைபெற்றது. தொடர்ந்து கவிஞர்கள்அருணா செல்வம், பாரீசு பார்த்தசாரதி , பாமல்லன், மருத்துவர் சிவப்பிரகாசம், லிங்கம் மாமல்லன்,சிவ அரி முதலானோர் பொங்கல் கவிதைகள் படைத்தனர்.   இறுதி நிகழ்ச்சியாகப் பட்டி மன்றம். தலைப்பு சிக்கலானது.  "ஊழ்  பற்றித் திருவள்ளுவர் கூறும் கருத்துகள் இக்காலத்தில் …
அனைத்திந்திய இதழியல் கழகத்தின் 4ஆம் கருத்தரங்க நிகழ்வு

அனைத்திந்திய இதழியல் கழகத்தின் 4ஆம் கருத்தரங்க நிகழ்வு

பேரன்புடையீர், வணக்கம். எம் தலைமையில் இயங்கிவரும் சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகத்தின் 4ஆம் கருத்தரங்க நிகழ்வு, திருச்சிராப்பள்ளி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி சமுதாய மன்றத்தில் 03.03.2012ஆம் நாள் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதன் அழைப்பு இணைப்பில் உள்ளது. அனைவரும் வருகை தர…
சிற்றேடு – ஓர் அறிமுகம்

சிற்றேடு – ஓர் அறிமுகம்

தமிழவனை ஆசிரியர் குழுவில் கொண்டு வெளிவரும் சிற்றேடு இதழ் பல முக்கியமான அறிமுகக் கட்டுரைகளையும், ஆய்வுக் கட்டுரைகளையும் தாங்கி வெளிவந்திருக்கிறது. கடந்த இதழ்களில் கேரலத்தின் புதிய அறிவுஜீவி எம் கே ஹரிகுமார் பற்றிய அறிமுகக் கட்டுரை வெளியாகியுள்ளது. க முத்துகிருஷ்ணனின் “யாதுமற்றவர்”…
பாத்தென்றல் முருகடியான் இயற்றிய திண்ணப்பர் பிள்ளைத் தமிழ் நூல் வெளியீடு

பாத்தென்றல் முருகடியான் இயற்றிய திண்ணப்பர் பிள்ளைத் தமிழ் நூல் வெளியீடு

வணக்கம் பாத்தென்றல் முருகடியான் இயற்றிய திண்ணப்பர் பிள்ளைத் தமிழ் நூல் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் வெளியீடு காண்கிறது. 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழுக்கு அவர்கள் செய்த தொண்டினை நாம் அனைவரும் மதிக்கும் வகையில் ஒன்று கூடுவோம். இணைப்பில் அழைப்பிதழ்…
கம்பன் கழகத்தின்  பொங்கல் விழா

கம்பன் கழகத்தின் பொங்கல் விழா

அன்புள்ள ஆசிரியருக்குக் கனிவான கைகுவிப்பு இனிய நல் வாழ்த்துகள். இதோ எங்கள் கம்பன் கழகத்தின் பொங்கல் விழா அழைப்பிதழ். என் பேராசிரியர் முனைவர் மு;வ அவர்களின் நூற்றாண்டு விழ்வையும் சேர்த்துக் கொண்டாடுகிறோம். வழக்கம் போல் நம் பத்திரிகையில் வெளியிட வேண்டுகிறேன். அன்புடன்…