சென்னை வானவில் கூட்டணி அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? – திருவள்ளுவர் இந்த ஜூன் மாதம், சென்னை மூன்றாவது முறையாக, தனது வருடாந்திர வானவில் விழாவை நடத்தவிருக்கிறது. மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களை ஆதரிக்கவும், அவர்கள் பற்றி சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மற்றும் அவர்களின் வெளிப்பாட்டையும் அவற்றின் பன்மையையும் கொண்டாடுவதே ஒரு மாத காலம் நடைபெறவிருக்கும் இவ்விழாவின் நோக்கம். 1969 ஆம் ஆண்டு நியுயார்க் நகரில் Stonewall Inn என்ற இடத்தில், ஜூன் மாதம் நிகழ்ந்த […]
அன்னை தெரேசா நூற்றாண்டு விழா கடந்த 28 -05 -2011 சனிக்கிழமை பிற்பகல் கம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா” பரி நகரின் புற நகராம் கார்ழ் லே கோனேஸ் நகரில் வெகு சிறப்பாக நடந்தேறியது. இந்தியன் வங்கி அதிகாரி திருமிகு இராஜன் , திருமதி உஷா இராஜன் இணையர் மங்கல விளக்கேற்றி இனிதே விழாவைத் தொடங்கி வைத்தனர். மகளிரணி துணைத்தலைவி திருமதி சரோஜா தேவராஜ் இறை வணக்கம் பாட, செல்வி அனுஷ்யா தமிழ் வேந்தன் தமிழ்த்தாய் வாழ்த்தைத் தன்இனிய குரலில் […]
கவிஞர் சிற்பி பவள விழா குழு கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் சாகித்திய அகாதமிப்பரிசை இரு முறை -கவிதைப்படைப்பிற்காகவும், மொழிபெயர்ப்பிற்காகவும்- பெற்றவர். சாகித்திய அகாதமியின் தமிழ்குழு ஒருங்கிணைப்பாளர். அவரின் பவள விழா 30.,31.07.2011, தேதிகளில் கோவையில் நடைபெற உள்ளது. அவ்வமயம் கவிஞர் சிற்பி பவள விழா மலர் ஒன்று சிறப்பான முறையில் வெளியிடப்பட உள்ளது. அம்மலரில் தங்களின் வாழ்த்துச் செய்தி மேலான படைப்பு ஒன்று வெளிவர தங்களது கட்டுரை/கவிதை/நினைவுக்குறிப்பு மற்றும் தங்களிடம் இருக்கும் கவிஞர் பற்றிய அரிய செய்திகள்/ […]
பதிவு – சு.குணேஸ்வரன் 1. சிறந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழா யாழ் இலக்கிய வட்டம் – இலங்கை இலங்கைப் பேரவை நடாத்தும் 2008-2009 இல் வெளிவந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழா எதிர்வரும் 12.06.2011 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணிக்கு நல்லை ஞானசம்பர் ஆதீன மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. நிகழ்வில் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள் வாழ்த்துரையையும் கவிஞர் ஐயாத்துரை விருது உரையினை பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா அவர்களும் நிகழ்த்தவுள்ளனர். மூதறிஞர் கவிஞர் கே.வி ஐயாத்துரை ஞாபகார்த்த கவிதைக்கான (2008) […]
அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு வணக்கம். என் பெயர் சு.துரைக்குமரன். இணையத்தமிழ் இதழ்கள் பற்றி முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுள்ளேன். அது தங்களுக்குத் தெரிந்ததே. ஆய்வு தற்போது முடியும் தருவாயில் உள்ளது. திண்ணையின் புதிய வடிவமைப்பு மிக அருமை. புதிய வண்ணத்தில் புதிய வசதிகளுடன் கண்களுக்குக் குளுமையாக உள்ளது. ஆனால் எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் மாற்றியுள்ளது வியப்பாக உள்ளது. பழைய இதழ்கள் பற்றிய குறிப்போ புதிய பயனர்களுக்கான வசதியோ இல்லாதது பற்றி விளக்க வேணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஆய்வுக்குறிப்பில் சேர்த்துக்கொள்ள […]
திண்ணையின் நீண்டகால வாசகர்களில் ஒருவன். வாராவாரம் திண்ணையை வாசித்து வருபவன். அண்மையில் செய்யப்பட்டுள்ள வடிவமைப்பு அழகாக இருக்கிறது. இலக்கியப்பயணத்தில் திண்ணையின் பணி தொடர வாழ்த்துக்கள். அன்புடன் சு.குணேஸ்வரன்
விரைவில்..! ஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. ‘இலக்கியப்பூக்கள்-2’ நீங்களும் எழுதலாம். *ஒருகட்டுரை ஒரு எழுத்தாளர் பற்றி இருக்க வேண்டும். *ஒருவர் எத்தனை கட்டுரைகளும் அனுப்பலாம். *கட்டுரைகள்4/5 பக்கங்களுக்குக் குறையாமல்(புகைப்படத்துடன்) இருத்தல் வேண்டும். *கட்டுரை எழுதுபவர்கள் தங்கள் சுயவிபரக் கோவையையும் இணைத்தல் வேண்டும். *நூலின் பிரதி அனுப்ப அவர்களின் தெளிவான முகவரி அனுப்ப தவறக்கூடாது. அனுப்ப வேண்டிய முகவரி:R.MAHENDRAN. 34.REDRIFFE ROAD, PLAISTOW. LONDON, E 13 0JX மின்னஞ்சல் முகவரி:mullaiamuthan@hotmail.co.uk. mullaiamuthan@gmail.com முடிவுத் […]
வணக்கம். திண்ணை இணையத்தில் தொடராக வந்த “ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி” மற்றும் சத்யானந்தனின் பிற படைப்புக்களுக்கான இணைப்பு tamilwritersathyanandhan.wordpress.comவலைப்பூத்தளத்தில் கொடுக்கப் பட்டுள்ளது. நன்றி. அன்புடன் சத்யானந்தன்.
சேதுபதி சேதுகபிலன் காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பாக சென்ற ஆண்டு முதல் மாதக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மாதக் கூட்டங்களில் கம்பன் பற்றிய ஆய்வுரைகள் பல அறிஞர்களால் வழங்கப் பெற்று வருகின்றன. மாதக் கூட்டம் ஆரம்பிக்கப் பெற்று ஓராண்டு நிறைவு பெற்றதைக் கொண்டாடும் வகையில் அறக்கட்டளை ஒன்று நிறுவப்படுகிறது. சென்னை நந்தனம்கல்லூரியின் தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர் ந. சேஷாத்திரி அவர்கள் தன் தாயார் ஸ்ரீ பெரும் புதூர் கோ. வேதவல்லி அவர்கள் நினைவாக இந்த அறக்கட்டளையை […]
வணக்கம் நாளை நமதே என்ற தலைப்பில் உயர் திரு ஆசீஃப் மீரான் அவர்கள் மிக அருமையாக அமீரகத் தமிழ் மன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். பங்கு பெற்ற அனைவருக்கும், திண்ணை இணையத்துக்கும் திரு ஆசீஃ மீரான் அவர்கட்கும் என் இதயம் கனிந்த நன்றியும் பாராட்டுக்களும், என்றும் மாறா அன்புடன் நந்திதா