Articles Posted in the " இலக்கியக்கட்டுரைகள் " Category

 • மலையக இலக்கிய முன்னோடி தெளிவத்தை ஜோசப்  நினைவுகள்

      அஞ்சலிக்குறிப்பு  :   மலையக இலக்கிய முன்னோடி தெளிவத்தை ஜோசப்  நினைவுகள்                                                               முருகபூபதி இலங்கையின் மூத்த எழுத்தாளரும்  மலையக மக்களின் ஆத்மாவை தனது படைப்புகளில் பிரதிபலித்தவரும், மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தலைவராக  நீண்ட  காலம் இயங்கியவருமான தெளிவத்தை ஜோசப்  இம்மாதம் 21  ஆம் திகதி அதிகாலை  வத்தளையில் தமது இல்லத்தில் மறைந்துவிட்டார். அமைதியான இயல்புகளைக்  கொண்டிருந்த அவர், ஆழ்ந்த    உறக்கத்திலேயே உலகைவிட்டு விடைபெற்றுவிட்டார். அவர் உடல் நலக்குறைவோடு இருப்பது அறிந்து சில நாட்களுக்கு […]


 • தெளிவத்தை ஜோசப்- எனது நினைவுகள்

  தெளிவத்தை ஜோசப்- எனது நினைவுகள்

      நடேசன்   இதயத்தால் பழகுபவர்களை முதல் சந்திப்பிலே என்னால் தெரிந்துகொள்ளமுடியும் . அதேபோல் அறிவால் , உதட்டால் பழகுபவர்களையும் புரிந்துகொள்வேன். உடல் மொழியே எனது தேர்வாகும். இது எனக்கு எனது மிருக வைத்தியத் தொழிலால் கிடைத்த கொடை.  இதன் மூலம் பலரோடு பழகுவதை கட்டுப்படுத்திக்கொள்ளமுடியும்.   2009 ஆண்டிலே   எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின்  ஒன்பதாவது தமிழ் எழுத்தாளர் விழாவுக்காக சங்கம் எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்பை அழைத்திருந்தது.  அவர்  மெல்பனில்  நண்பர் […]


 • வைக்கம் முஹம்மது பஷீரின் ஐசுக் குட்டி என்ற புத்தகம்..

    அழகியசிங்கர்              சமீபத்தில் வைக்கம் முஹம்மது பஷீரின் புத்தகமான ‘ஐசுக் குட்டி’ என் கண்ணில் பட்டது.  என் கைவசம் உள்ள எல்லா பஷீர் புத்தகங்களையும் தேடினேன்.           உடனே நான் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தும் ‘கதைஞர்களின் கூட்டத்தில்’ பஷீர் கதைகளைச் சேர்த்து விட்டேன்.  நான் நடத்துவது 41வது கூட்டம்.           மூன்று முக்கியமான பஷீரின் கதைகளை எடுத்துப் பேசினோம்.           பஷீரின் கதைகளில் உள்ள முக்கியமான தன்மை என்னவென்றால், அவர் கதைகளில் அவரையே முதன்மைப் படுத்தி எழுதுவார்.           ‘பாத்துமாவின் ஆடு’ என்ற ஒரு குறுநாவலில் ஆடு அவருடைய இரண்டு புத்தகங்களைத் தின்று விட்டது என்று […]


 • மதுமிதாவின் மதுரமான மனவெளி யொரு மகோன்னதக் காற்றுவெளியாய்….

    லதா ராமகிருஷ்ணன்      சிறந்த எழுத்தாளரும் கவிஞரும் மொழிபெயர்ப்பாளரு மான, , ஆரவாரமில்லாமல் தொடர்ந்து இலக்கியவெளி யில் பங்காற்றிவரும் தோழி மதுமிதா தொடர்ந்து சமகாலத் தமிழ்க்கவிஞர்கள், சிறுகதை எழுத்தாளர்கள் என பல படைப்பாளிகளின் எழுத்தாக்கங் களை ஆத்மார்த்தமாக வாசித்து அதைத் தனது காற்றுவெளி என்ற பெயரிலான யூட்யூப் வெளியில் பதிவேற்றிவருகிறார். எனது நீள்கவிதையொன்றையும் அவ்வாறு வாசித்துப் பதிவேற்றியிருக்கிறார்.     பொதுவாக எனக்கு கவிதையை உரக்க வாசித்தல் உவக் காது. குரலில் ஏற்ற இறக்கங்களோடு […]


 • அமரர் கே. எஸ். சிவகுமாரன் வாழ்வை கொண்டாடுதல்

                          அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம்                      இலக்கியத் திறனாய்வாளர் அமரர் கே. எஸ். சிவகுமாரன் வாழ்வை கொண்டாடுதல்        இலங்கையில் அண்மையில் மறைந்த மூத்த எழுத்தாளரும், ஊடகவியலாளரும் இலக்கியத் திறனாய்வாளருமான கே. எஸ். சிவகுமாரன் அவர்களின் வாழ்வையும் பணிகளையும் பற்றி உரையாடும் வகையில்,  அன்னாரை கொண்டாடும் நிகழ்ச்சியினை அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இம்மாதம் 15 ஆம் திகதி ( 15-10-2022 ) சனிக்கிழமை […]


 • அன்னம் நடராஜனும் ,இலக்கியா நடராஜனும் அவரின் நாகராஜன்கள் கதைகளும்

  அன்னம் நடராஜனும் ,இலக்கியா நடராஜனும் அவரின் நாகராஜன்கள் கதைகளும்

    சுப்ரபாரதிமணியன்   தமிழ் இலக்கியத்திற்கு நவீன முகம் தந்த பதிப்பகங்களில் ஒன்றான அன்னம், சிவகங்கையின் மேலாளராகவும் அமரர் மீராவின்  உதவியாளராகவும் விளங்கிய நடராஜன் பல எழுத்தாளர்களின் படைப்பூக்கத்திற்கு ஏணியாக இருந்து செயல்பட்டவர், அவர் பின்னால் இலக்கியா நடராஜனாக உருமாறி எழுத்தாளராக விளங்கி வருவதைத் தாமதமாகத்தான் அறிந்து கொண்டேன். இடையிலான பத்திரிக்கையாளர் பணியையும் அறியவைல்லை.எழுத்து இலக்கிய அமைப்பின் செயல்பாட்டின் மூலம் இன்னும் நன்கு அறிந்தவரானார். அவரின் இந்தக்கதைகளை அவ்வப்போது படித்த போது இலக்கிய இதழ்களில் படித்த போது மகிழ்ச்சியடைந்தேன்.  இந்தக்கதைகளின் ஆரம்ப அனுபவங்களில் அவர்  மாற்றம் சார்ந்த  மனிதர்களைப் பற்றி அதிகம் சிந்தித்திருப்பது தெரிந்தது, மனநோயாளி மீதான கருத்தும் அபிப்ராயமும் மாறியிருப்பதையும்,  மீனவர் வழியே  சோர்விலிருந்து மீண்டு மாற்றம் பெறுவதும், சந்தோச கீதங்களாய் இருக்கும் விலைமாதர் பெண்கள் திருந்துவது, வெளிநாட்டில் வசிப்பவன் தாய்மண் சிறந்தது என்று வெளி நாடு போகாமல் மாற்றம் பெறுவது என்று ஆரம்பத்தில் உள்ளக்கதைகள் பட்டன.  அவை மாற்றம் சார்ந்த  மனிதர்களைப் பற்றி அமிந்திருக்கின்றன. பைத்யம் என்று திரும்பத் திரும்பசொல்வதற்கு பதில் மன நோயாளி என்றுக்குறிப்பிட்டிருக்கலாம். மன நோயாளி இயல்பை மீறி அறத்தைக்காப்பாற்ற அவர்கள் வாள் எடுக்கிறார்கள் . நாட்டார் தெய்வங்களாகிறார்கள். மன நோயாளி போல் தோற்றம் அளித்தாலும் பிச்சை எடுத்தாவது முஸ்லீம் பண்டிகை நோன்பு திறப்புக்கு உதவும் மனிதர்களும் இருக்கிறார்கள் எல்லா நேரங்களிலும் எல்லோரும் மனிதர்களே என்று நிரூபிக்கிற     பல கதைகள் இதிலுள்ளன. மனிதம் சார்ந்த யோசிப்பில் இவ்வகை மனிதர்கள் இருக்கிறார்கள் நடராஜனின் பார்வையில்     கடல் பற்றிய அபாரமான வர்ணனையோடு கடல் மனிதர்கள் தரும் பாடமும் இப்படித்தான். விலைமாதர் மனதில் எழும் சிந்தனை மாற்றமும் ஒரு பாடம்தான்.தாய் மண்ணை மதிக்கிறவனின் கதையில் வரும் நாதஸ்வர  கோவில்மணி ஓசைக்குப் பதிலாக மின்கருவியின் வருகை நான் திரைக்கதை எழுதிய “ ஓம் ஒபாமா” படத்தை ஞாபகமூட்டியது. அந்த திரைப்பட பெண்இயக்குனர் செய்த துரோகம் போலத்தான் அந்தக் கோவில் நிர்வாகம் செய்யும் செயலும் துரோகமாகவே உள்ளது . இவற்றில் பெரும்பாலும் கதாநாயகர்கள் பெயர் நாகராஜன். இவை பெரும்பாலும் நாகராஜன்களின் கதைகள். நாகராஜன்களின் அனுபவக்குவியலாக லவுகீகம் முதல் ஆன்மீகம் வரை நீள்கிறது. வாழ்க்கை மீதான அலுப்பு ஏதாவதொரு வகையில் […]


 • கபுக்கி என்றோர் நாடகக்கலை

      அழகர்சாமி சக்திவேல் முத்தமிழை, நாம், இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்று மூன்று வகைகளாகப் பிரிக்கிறோம். அந்த நாடகத்தமிழை, வசன நடை குறைந்த, பாடல்கள் மற்றும் ஆடல்கள் நிறைந்த கூத்து என்றும், வசன நடை நிறைந்த நாடகம் என்றும், நாம் இன்னும் இரண்டாகப் பிரிக்கிறோம். இயலும், இசையும், இரண்டறக் கலந்த, நாடகங்களின் இயல்பு குறித்து, சங்ககால இலக்கியமான தொல்காப்பியம், பல விசயங்களை, நமக்குச் சொல்லுகிறது. நாடகங்களின் சிறப்பு குறித்து, ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை இயற்றிய […]


 •     வைதீஸ்வரனின் ஆவணப்படம்….

           அழகியசிங்கர்               சமீபத்தில் கவிஞர் வைதீஸ்வரனுடைய ஆவணப்படம் ஒன்று அவர் பிறந்த நாள் போது காட்டப்பட்டது.  குவிகம் என்ற இலக்கிய அமைப்பு தயாரித்த ஆவணப்படம். நிழல் பத்திரிகை ஆசிரியரான நிழல் திருநாவுக்கரசு இயக்கிய படம். அறை முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. சிறப்பாக எடுத்திருந்தார் நிழல் திருநாவுக்கரசு.ஒரு மணிநேரம் எடுக்கப்பட்ட இந்த ஆவணப்படம் கொஞ்சங்கூட தொய்வில்லாமல் எடுக்கப் பட்டிருக்கிறது. இது முக்கியம்.  வைதீஸ்வரனையே மையப்படுத்தி எடுக்கப் பட்டிருக்கிறது.              இப்போது வைதீஸ்வரனுக்கு நெருக்கமாக இருக்கிற நண்பர்களையும் ஒரு நிமிடமாவது ஆவணப்படத்தில் பேச வைத்திருக்கலாம் என்பது என் […]


 • ஆசு என்னும் ஆரவாரமற்ற கவி

      லதா ராமகிருஷ்ணன் //*செப்டெம்பர் 10 அன்று சென்னையில் நடந்தேறிய கவிஞர் ஆசு சுப்பிரமணி யனின் முழுக்கவிதைத் தொகுப்பு அறிமுக விழாவில் ஆற்றிய உரையிலிருந்து//   சக கவிஞரான திருமிகு ஆசுவுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.. அவருடைய கவிதைகளின் முழுமையான தொகுப்பை இத்தனை நேர்த்தியாக வெளியிட்டிருக்கும் கல்விளக்கு பதிப்பகத்திற்கும் இந்த மிக அவசியமான முன்முயற்சியை மேற்கொண்ட கவிஞரும் கல்விளக்கு பதிப்பக உரிமையாளருமான தோழர் அமுல்ராஜுக்கும் என் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். சமீபத்தில் […]


 • கவிதைப் புத்தகங்களை இலவசமாகக் கொடுத்து விடுங்கள்…

  கவிதைப் புத்தகங்களை இலவசமாகக் கொடுத்து விடுங்கள்…

    அழகியசிங்கர்     தமிழில் கவிதைப் புத்தகங்களுக்கு உள்ள நிலையை நான் சொல்லி  யாருக்கும் தெரிய வேண்டு மென்றில்லை.   பலர் அவர்கள் செலவு செய்து கவிதைப் புத்தகங்களைக் கொண்டு வருகிறார்கள்.  அதற்கு எதுமாதிரியான வரவேற்பு இருக்கிறது.   க.நா.சுவின் நூற்றாண்டின்போது அவருடைய சில கவிதைகளை அச்சடித்துப் புத்தகமாகக் கொண்டு வந்து, இலவசமாக வினியோகம் செய்தேன்.   நான் அப்போது மயிலாடுதுறையில் ஒரு வங்கியில் பணி புரிந்து கொண்டிருந்தேன்.  பஸ்ஸில், ஓட்டலில், பேப்பர் கடைகளில் இவற்றின் மூலம் எல்லோருக்கும் இலவசமாக விநியோகிக்கும்படி கேட்டுக் கொண்டேன்.  வியாபாரிகளுக்கு அலட்சியம்.  உண்மையில் […]