Articles Posted in the " இலக்கியக்கட்டுரைகள் " Category

 • தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

  தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                                          வளவ. துரையன்                                                              அடையப் பிலநதி கீழ்விழ அண்டத்தடி இடைபோய்                 உடையப்புடை பெயர்வெள்ளம் உடைத்து இக்குளிர்தடமே.   [311]    [பிலநதி=பாதாள கங்கை; உடைய=முட்ட; பெயர்தல்=எழுதல்; தடம்=பொய்கை]   இந்தப் பொய்கையின் குளிர்ந்த நீரானது பெருக்கெடுத்துக் கீழே பாதாள கங்கை போல பாதாள உலகம் வரையிலும் மேலே அண்டத்தின் உச்சி வரையிலும் எழும்பும் தன்மை உடையது ஆகும்.                   அலரோடு அளிதோயாதன இவ்வாவி! அணங்கே!                   மலரோன் உலகடையப் புடைபெயர் […]


 • “பச்சைக்கிளியே பறந்து வா” மழலையர் பாடல்கள் – பாவண்ணன் -நெஞ்சை அள்ளும் குழந்தைப் பாடல்கள்

  “பச்சைக்கிளியே பறந்து வா” மழலையர் பாடல்கள் – பாவண்ணன் -நெஞ்சை அள்ளும் குழந்தைப் பாடல்கள்

                                                                                             முனைவர் க .நாகராஜன் [பச்சைக்கிளியே பறந்து வா ” மழலையர் பாடல்கள் – பாவண்ணன் ,அகரம்  வெளியீடு ; தஞ்சாவூர், , பக்: 70;  ரூ. 50]   எத்தனை வயதானாலும்,  ஒன்றாம் வகுப்பில் படித்த குழந்தைப் பாடல்களை நம்மால் மறக்க முடிவதில்லை. “அம்மா இங்கே வா வா / ஆசை முத்தம் தா தா / இலையில் சோறு போட்டு / ஈயைத் தூர ஒட்டு”, “சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு / சாயக்கிளியே சாய்ந்தாடு”, […]


 • அஞ்சலிக்குறிப்பு: மாத்தளை கார்த்திகேசு விடைபெற்றார் – இலங்கை  மலையக மக்களின் ஆத்மாவின் குரல் ஓய்ந்தது !

                                                                               முருகபூபதி       “   நான் கடலையே பார்த்ததில்லீங்க… என்னைப்போய் கள்ளத்தோணி என்கிறாங்க    “-  இது மாத்தளை  கார்த்திகேசுவின் ஒரு நாடகத்தில் ஒரு பாத்திரம்பேசும் வசனம். இலங்கைக்கு  60 சதவீதமான வருவாயை தேடித்தந்த உழைக்கும் வர்க்கத்திற்கு எங்கள் தேசத்து இனவாதிகள் வழங்கிய அடையாளம்தான் கள்ளத்தோணி.  இனவாதிகள் மாத்திரமா..? நான் வசிக்கும் அவுஸ்திரேலியாவுக்கு கடல் மார்க்கமாக வந்து குவிந்த அகதிகளைக்கூட இங்கே அரசு தரப்பும்  வெள்ளை இனத்தவர்களும் Boat People – படகு மனிதர்கள் என்றுதான் […]


 • கவிதையும் ரசனையும் – 20 – சுகந்தி சுப்ரமணியன்

  கவிதையும் ரசனையும் – 20 – சுகந்தி சுப்ரமணியன்

      அழகியசிங்கர்               சுகந்தி சுப்ரமணியன் படைப்புகள் என்ற புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டேன்.           தமிழில் மனப்பிறழ்வுடன் இலக்கிய உலகத்தில் பவனி வந்தவர்களில் ஆத்மாநாம், கோபி கிருஷ்ணன் முக்கியமானவர்கள்;.             கவிதை மூலமாக ஆத்மாநாமும், சிறுகதைகள் மூலமாக கோபிகிருஷ்ணனும் சாதித்துக் காட்டியவர்கள்.             பெண் படைப்பாளியான சுகந்தி சுப்ரமணியனும் மனப்பிறழ்வுடன் தன் வாழ்நாளைக் கடத்தியவர்.  இவருடைய கவிதைகள் எல்லாம் மனப்பிறழ்வை இன்னும் துல்லியமாகக் காட்டுகின்றன.             இப் புத்தகத்தில் ஜெயமோகன் சுகந்தி சுப்ரமணியன் கவிதைகளைக் குறித்து இப்படிக் கூறுகிறார்.         […]


 • சோமநாத் ஆலயம் – குஜராத்

        நடேசன் எனது குஜராத் பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது சோமநாத் ஆலயத்திற்குச் செல்வதே.  ஆனால் தெய்வ நம்பிக்கையோ  அல்லது மத நம்பிக்கையோ இல்லாத நான்  ஏன் போகவேண்டும் ?   தற்போதைய இந்திய இந்துத்துவா அரசியலின் வரலாறு அங்கே தொடங்குகிறது. இந்தியாவின் முக்கிய தலைவர்களாக  மகாத்மா காந்தி,  வல்லபாய் பட்டேல்,  மோதி என்பவர்கள் ஒரு மாநிலத்திலிருந்து வந்தார்கள்.   வரலாறு என்பது வலை போன்றது. விரித்தபின் விரும்பியபோது வெளிவரமுடியாது.   வரலாற்றால் சிறைபிடிக்கப்பட்ட பல […]


 • குரு அரவிந்தனின் ஆறாம் நிலத்திணை

  குரு அரவிந்தனின் ஆறாம் நிலத்திணை

    கவிஞர் பா.தென்றல்       சிறகில் இருந்து பிரிந்த இறகு..   பாரதி பாடினான் அன்று, ‘தனியொருவனுக் குணவிலை யெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று இன்று சொந்த நிலம் வேண்டி ஓர் இனமே உணவு, உடை, உடைமை ஆகியவை தொலைத்து, உறைந்து வாழ இடமில்லாமல் தவிக்கும் போராட்டம். இந்நிலை கண்டு நெஞ்சு பொறுப்பதில்லை, கண்மூடிக் கிடப்பதில்லை அச்சமில்லை, அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்று துணிவோடு பிறந்திருக்கிறது இந்நூல்.   குரு அரவிந்தனின் எழுத்துக்களில் தென்றலின் மென்மையும், புயலின் […]


 • அறிஞர் அண்ணா போற்றிய அக்கிரகாரத்து அதிசய மனிதர்!

      ஜோதிர்லதா கிரிஜா      புரட்சி எழுத்தாளர் என்று அறியப்பட்ட வ.ரா. எனும் புனைபெயர் கொண்ட அமரர் வ. ராமசாமி அய்யங்கார் மறைந்தது ஆகஸ்டு 1951இல். 1889 இல் தஞ்சாவூர் மாவட்டம் திங்களூரில், வரதராஜ அய்யங்கார்-பொன்னம்மாளின் மகனாய்ப்  பிறந்தவர். காந்தியடிகளால் ஈர்க்கப்பட்ட இவர் 1910 இலிருந்து இந்திய விடுதலை இயக்கத்தில் தீவிரமாக ஈடுபடலானார். 1930-இல் உப்புச் சத்தியாக்கிரகத்தில் கலந்துகொண்டு அலிப்பூர்ச் சிறையில் 6 மாதச் சிறைத்தண்டனைக்கு உள்ளானார். கேதரின் மேயோ எனும் ஆங்கிலப் பெண்மணி இந்தியர்களை […]


 • ஒரு கதை ஒரு கருத்து – இந்திரா பார்த்தசாரதி அஸ்வத்தாமா

  ஒரு கதை ஒரு கருத்து – இந்திரா பார்த்தசாரதி அஸ்வத்தாமா

    அழகியசிங்கர்     மாதம் இரு முறை நண்பர்களின் ஒத்துழைப்போடு கதைஞர்களின் கூட்டம் நடத்திக்கொண்டு வருகிறேன்.  இதுவரை 24 கதைஞர்களின் கதைகளை எடுத்துப் பேசிவிட்டோம்.           போன கூட்டத்தில் அம்பையையும், இந்திரா  பார்த்தசாரதியையும் எடுத்துப் பேசினோம்.           அம்பை கதைகள் தீவிரமாகப் பெண்கள் பிரச்சினையை ஆராய்கிறது.  ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ மாதிரி ஒரு கதையை அம்பை மட்டும்தான் அவ்வளவு திறமையாக எழுதியிருக்க முடியும்.           இந்திரா பார்த்தசாரதி கதையோ நகைச்சுவையுடன் கூடிய எள்ளல் எல்லாக் கதைகளிலும் பரவிக் கிடக்கிறது.           இதில் அஸ்வத்தாமா ஒரு […]


 • நடிகர் சிவகுமாரின் கொங்கு தேன் – ஒரு பார்வை

    குமரி எஸ். நீலகண்டன்   சிவகுமாரின் கொங்குதேன் நூல் கொங்கு மண்ணின் வரலாற்றை வாசத்துடன் பதிவு செய்திருக்கும் ஒரு உன்னதமான நூல். கிராவின் எழுத்துக்கள் போல் உயிர்ப்புடன் அந்த கிராமத்தை நம்மோடு ஈர்த்து வைக்கிறது சிவகுமாரின் எழுத்து. இந்து தமிழ் திசை இணையதளத்தில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கொங்கு தேன் நூலில் பிளேக் பற்றிய செய்தியைப் படிக்கும் போது இன்றைய கொரோனாதான் நம் மனதில் நினைவுகளை விரிக்கிறது. அன்றைய பிளேக் சிவகுமாரின் 12 […]


 • கவிதையும் ரசனையும் – 19

  கவிதையும் ரசனையும் – 19

    அழகியசிங்கர்           நான்கு விதமாகக் கவிதை வாசிப்பைக் கட்டமைத்து கவிதை நிகழ்ச்சியை வாராவாரம் நடத்திக்கொண்டு வருகிறேன்.  முதல் வாரம் அவரவர் கவிதைகளை வாசிப்பது, இரண்டாவது வாரம் மற்றவர்களுடைய கவிதைகள் வாசிப்பது, மூன்றாவது வாரம் மொழிபெயர்ப்புக் கவிதைகளை வாசிப்பது, நாலாவது வாரம். கவிதையின் குறித்து உரையாடல்.             மற்றவர்கள் கவிதைகளை வாசிக்கும் நிகழ்ச்சியின் போது ‘ஞானக்கூத்தன் கவிதைகளை’ எல்லோரும் வாசித்தோம்.  இந்த நிகழ்ச்சிக்கு 20 அல்லது 21 கவிஞர்கள் கலந்து கொள்வார்கள். சூம் மூலம் நடக்கும் நிகழ்ச்சியால் இந்த எண்ணிக்கை.  நேரிடையாக இந்த […]