Articles Posted in the " இலக்கியக்கட்டுரைகள் " Category


 •  ’பாவண்ணனின்  வழிகாட்டி ம.இலெ தங்கப்பா’  

                      எஸ்ஸார்சி இந்திய இலக்கியச்சிற்பிகள் வரிசையில் ம. இலெ. தங்கப்பா குறித்து ஒரு சிறு இலக்கிய ஆவணத்தை சாகித்ய அகாதெமி வெளியிட்டுள்ளது. இந்நூலை  எழுத்தாளர் மொழிபெயர்ப்பாளர் பாவண்ணன் தனக்கே உரிய அற்புத நடையில் படைத்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் குறும்பலாப்பேரி என்னும் கிராமத்தில் 08/03/1934 அன்று தங்கப்பா  பிறந்தார். பள்ளி ஆசிரியராகத் தொடங்கிய  அவர் பணி வாழ்க்கை கல்லூரிப்பேராசியராக உச்சம் தொட்டது.. மரபுக்கவிதைகள் படைப்பதில் வல்லவரான தங்கப்பா  பாடல்கள் பலவற்றை வழங்கியுள்ளார். ’சோளக்கொல்லை’ என்னும் சிறுவர்கள் பாடல் […]


 • அறிஞர் அப்துற்-றஹீம் கூறும்  எண்ணமும் வாழ்க்கையும்

  அறிஞர் அப்துற்-றஹீம் கூறும்  எண்ணமும் வாழ்க்கையும்

      முனைவர் நா.ஹேமமாலினி. கௌரவ விரிவுரையாளர், தமிழாய்வுத்துறை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்னாட்சி), புதுக்கோட்டை.   முன்னுரை:        மனிதனின் எண்ணமும் கண்ணாடியும் ஒன்று. கண்ணாடி மனிதனின் பிம்பத்தை எவ்வாறு பிரதிபலிக்கிறதோ அதே போல தான் நம்முடைய எண்ணமும் வாழ்க்கையும். நம் உள்ளத்தில் எண்ணுகின்ற நல்ல உயர்ந்த எண்ணங்களே நம்முடைய வாழ்க்கையை வளமாக்குகின்றது. இதைத்தான் சான்றோர்கள் எண்ணம் போல் வாழ்க்கை என்று கூறினார்கள் அவ்வகையில் எண்ணமே வாழ்வு என்ற நூலில் அப்துல் ரஹீம் அவர்கள் உயர்ந்த […]


 • இலக்கிய வெளியில் சர்ச்சையை கிளப்பிய குரு அரவிந்தனின் ‘சதிவிரதன்’

      சுலோச்சனா அருண்   சென்ற ஞாயிற்றுக் கிழமை (3-4-2022) இலக்கிய வெளியின் 19வது இணைய வழிக்கலந்துரையாடலில் ‘சிறுகதை நூல்களைப் பற்றிப் பேசுவோம்’ என்ற தலைப்பில் புலம்பெயர்ந்தோரின் 4 சிறுகதைத் தொகுப்புக்கள் திறனாய்வுக்கு எடுக்கப்பட்டன. முறையே வ.ந.கிரிதரனின் ‘கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்’ பற்றி சு.குணேஸ்வரன், குரு அரவிந்தனின் ‘சதிவிரதன்’ பற்றி முனைவர். கோவிந்தராயூ (இனியன்), சாத்திரியின் ‘அவலங்கள்’ பற்றி தானாவிஷ்ணு, சயந்தனின் ‘பெயரற்றது’ பற்றி ந.குகபரன், ஆகியோர் உரையாற்றினார்கள். புலம்பெயர்ந்த மண்ணில் தங்கள் நேரத்தைச் செலவிட்டு இதுபோன்ற […]


 • கண்மறை துணி என்ற பிரதீபன் கவிதைத் தொகுதியை முன்னிட்டு

      அழகியசிங்கர் சமீபத்தில் நான் படித்து எழுத வேண்டுமென்று நினைத்த கவிதைத் தொகுதிகளில் கண்மறை துணி என்ற கவிதைத் தொகுதியும் ஒன்று. பிரதீபன் என்ற கவிஞர் எனக்கு அவர் கவிதை மூலம் அறிமுகமானவர்.   அவருடைய கவிதை முதன் முதலாக 1979ல் ஆத்மா நாம் நடத்திய ‘ழ’ என்ற சிற்றேட்டில் வெளி வந்தது. அவருடைய மொத்த கவிதைகளையும் இத் தொகுப்பில் தொகுத்திருக்கிறார். முதலில் அவர் கவிதைகள் எதுவுமே தலைப்பிடவில்லை.  ‘கண் மறை துணி’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட கவிதைகள் மட்டும் தலைப்பிடப்பட்டுள்ளன. கண்மறைத் […]


 • “அந்த நாட்களில் மழை அதிகம்” என்ற அஜயன் பாலாவின் புத்தகத்தை முன் வைத்து – 2

  “அந்த நாட்களில் மழை அதிகம்” என்ற அஜயன் பாலாவின் புத்தகத்தை முன் வைத்து – 2

  அழகியசிங்கர் தொடர்ச்சி ……   அந்த நாட்களில் மழை அதிகம் என்ற அஜயன் பாலாவின் புத்தகத்தை முன் வைத்து   26 வயதில் இறந்துபோன வால் நட்சத்திரம் என்ற தலைப்பில் லெர்மண்டோவ் பற்றி எழுதி உள்ளார்.   தஸ்தயெஸ்கியை விட லெர்மண்டோவ் 7 வயது மூத்தவர்.  லெர்மண்டோவ் 27வயதில் இறக்கும்போது தஸ்தயெவ்ஸ்கிக்கு வயது 20 மட்டுமே.     லெர்மண்டோவ் எழுதிய முக்கியமான உலகப் புகழ் பெற்ற நாவலான நம் காலத்து நாயகன் என்ற நாவலைச் சிலாகித்துக் கூறுகிறார் அஜயன் பாலா. பொதுவாகத் தகவல்களைத் தொகுத்து கோர்வையாகக் கூறுவதற்குத் திறமை  வேண்டும்.  அஜயன் பாலாவின் இக் கட்டுரைகளைப் படிக்கும்போது வெற்றி பெற்றுள்ளார் என்றே தோன்றுகிறது.   […]


 • கதைகள் இல்லாத மனிதர்கள் ஏது? மனிதர்கள் இல்லாத கதைகள்தாம் ஏது? – வளவ. துரையன் கதைகள்

  கதைகள் இல்லாத மனிதர்கள் ஏது? மனிதர்கள் இல்லாத கதைகள்தாம் ஏது? – வளவ. துரையன் கதைகள்

                                                                             அன்பாதவன் வளவ. துரையன் வாழ்நாள் முழுவதும் மனிதரைப் படிப்பவர்; தொடர்ந்து வாசிப்பவர்; எனவே சர்வ சாதாரணமாக பெருவலையோ தூண்டிலோ இல்லாமல் தோள்துண்டிலேயே அவருக்கு இலகுவாகக் கிடைத்து விடுகின்றன கதை மீன்கள்.   கவிதை, கதைகள், விமர்சனம், ஆன்மீக உரை, கட்டுரைகள், சிற்றிதழ் ஆசிரியர் எனப் பன்முகத் தரிசனம் காட்டும் வளவ. துரையனின் ஆறாம் சிறுகதைத் தொகுதியாக சந்தியா பதிப்பகம் “மீண்டும் ஒரு தொடக்கம்” […]


 • பட்டறை என்ற சொல்…

  பட்டறை என்ற சொல்…

        கோ. மன்றவாணன்   உலோகத் தொழில், மர வேலை செய்யும் இடத்தைத்தான் பட்டறை என்ற சொல் குறிக்கும். ஆனால் அந்தச் சொல்லைக் கொண்டு உருவாக்கும் கூத்துப் பட்டறை, செந்தமிழ்ப் பட்டறை, பேச்சுப் பட்டறை, கவிதைப் பட்டறை போன்ற சொல்கூட்டுகள் தவறானவை என்று சிலர் வாதிடுகிறார்கள். இந்தப் பட்டறை என்ற சொல்கூட, பட்டடை என்னும் சொல்லில் இருந்து வந்ததாகச் சிலர் சொல்கிறார்கள். படு என்பதுதான் அதன் வேர்ச்சொல்லாக இருக்கும். படு என்ற சொல் செயல்படுதலைக் […]


 • “அந்த நாட்களில் மழை அதிகம்” என்ற அஜயன் பாலாவின் புத்தகத்தை முன் வைத்து

         அழகியசிங்கர்             27.03.2022                         அந்த நாட்களில் மழை அதிகம் என்ற அஜயன் பாலாவின் புத்தகத்தை முன் வைத்து                          சமீபத்தில் நடந்த சென்னைப் புத்தகக் காட்சியில் என் இலக்கிய நண்பர் அஜயன் பாலா üஅந்த நாட்களில் மழை அதிகம்ý என்ற இலக்கியக் கட்டுரைகள் புத்தகத்தை வெளியிடும் கூட்டத்தில் கொடுத்து என்னைக் கௌரவப்படுத்தினார்.             புத்தகக் காட்சி முடிந்தவுடன் அந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டுமென்று நினைத்தேன்.             புத்தகம் கொடுத்தவரும் எதாவது […]


 • தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

  தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                    வளவ. துரையன்     ஆனை ஆனசீல பாய்புரவி ஆனசில வாள் அடவிஆன சில நேரசலம் ஆனசிலநேர் சேனை ஆனசில நிற்ப; எவன்நிற்பது எனஇச் செல்லும்நால் அணியினும் தலைவர் ஆனசிலவே.      [401]   [வாள் அடவி=போர்க்கருவிகள் தொகுதி; அசலம்=மலை]   பூதகணங்களில் சில யானைகள் ஆயின; சில பாய்ந்தோடும் குதிரைகள் ஆயின; சில ஆயுதங்கள் மற்றும் போர்க்கருவிகள் ஆயின; சில மலை போன்ற தேர்கள் ஆயின; சில காலாட் படைகள் ஆயின; இவற்றை […]