தாய்மை!

நீண்டதொரு சாலையில் மிதிவண்டியை இழுத்தபடியே என்னோடு பேசிக்கொண்டே நடந்தாய் நீ! நாமிருவரும் தற்காலிகமாய் பிரியவேண்டும் என்பதை குறிப்பால் உணர்த்தியது சாலையின் பிரிவு! என்னிடம் விடைபெற்றபடியே சாலையின் வலதுபுறமாய் அழுத்தினாய் நீ உன் மிதிவண்டியை! என் கண்ணைவிட்டு நீ மறையும்வரை உன்னை பதைபதைக்கும்…

நவீனத்துவம்

மரப்பாச்சி பொம்மை மறைத்து மயில் தோகை பக்கம் மறந்து பைசா கைச்செலவு தவிர்த்து குச்சு ஐஸ் பிசுபிசுப்பு விலகி பள்ளிக்கூட வாசல் நெல்லிக்காய் இழந்து, தெருக்கோடி விளையாட்டு அறுத்து என் மகனும் பழமைத்துவம் அளித்த நவீனத்துவம் பழகுகிறான் செயற்கையாய்........     ராசை…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -6)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "நீ செல்வந்தருக்காக ஊன்றும் உறுதியின் விளைவுகளை எதிர்காலத்தில்தான் நீ அறுவடை செய்வாய். ஏனெனில் இயற்கை நியதிப்படி அனுப்பியவை யாவும் திருப்பிவரும் தமது மூல இடத்துக்கு ! நீ…

புராதனத் தொடர்ச்சி

புராதனச் சம்பவங்கள் புத்தியில் படிமமேறி நிகழ் வாழ்வில் நெளிந்து உட்ப் புகவும், வெளி வரவும் முடியாது உறக்கமற்ற சூனியத்தை ஒளிப் பிழம்புகளாய் சுருட்டியள்ள .. நிலை குலைந்து புராதனமனைத்தும் துடைத்தெறியும் வெறியில் புதியன பலவும் படித்தறிந்து புகுத்தி வைக்க எத்தனிக்கும் மனதில்…

சந்திப்பு

ஒரு உறவு ஏற்படும்போதே அதிலிருந்து விலகிப் பார்ப்பதான சிந்தனையும் தோன்ற ஆரம்பிக்கிறது. எந்நேரமும் பிரியலாம் என்ற அணுக்கத்தோடே பகிரப்படுகிறது எல்லா சொந்த விஷயங்களும் இந்நேரத்தில் இன்னதுதான் செய்து கொண்டிருக்கக்கூடும் என்பது தெரியும் வரை தொடர்கிறது பேச்சு. ஏன் பேசுகிறோம் எதற்கு சந்திக்கிறோம்…

ஒரு விதையின் சாபம்

ஆழத்தில் புதைந்த விதை ஒன்று தனது வாழா வெட்டித்தனத்தை எண்ணியபடி அழுகிறது முளைக்கும் காலத்தில் தூங்கிப் போனதால் இறப்பதற்கும் பிழைக்கவும் வழியற்றது புரிகிறது தன்னோடு விதைக்கப்பட்ட விதைகள் யாவும் முளைத்து செடியாய் அவதரித்தது கண்ணுக்குள் விரிகிறது அந்தச் செடிகளின் வேர்கள் தன்னை…

எடை மேடை

தன்னைத்தானே நீதிமானாகக் கற்பித்துக் கொள்ளும் ஒருவன் பார்க்கும் அனைத்தையும் எடையிட்டுக் கொண்டிருக்கிறான். கடந்து செல்லும் ஒரு பெண்ணை உற்று நோக்குகிறான். அவள் திரும்பப் பார்த்தால் மகிழ்வடைகிறான். பிடித்தமானவள் என்றோ உத்தமி என்றோ குறியீடு இடுகிறான். அவள் அசட்டையாய்க் கடந்தால் திமிர்பிடித்தவளாகிறாள் வேறு…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (மெக்காவை நோக்கி) (கவிதை -49)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கண்களின் வேலை முன்னுள்ளதைக் காண்ப தற்கு. ! ஆத்மா இருப்பது தனது ஆனந்தத் திற்கு ! மூளையின் பயன் இதுதான் மெய்யாய் ஒருத்தியை நேசிப்ப தற்கு !…

பசி வகை!

பத்து மணி யிலிருந்து பல மணி நேரம் போராட்டம் செய்த பட்டினி வயிறு பாதையோரக் கடையின் பரோட்டா சால்னாவுடனான பேச்சு வார்த்தையில் சமாதானமானது வயிற்றுக்கு ஈயப்பட்டபின் செவிப் பசிக்கு என்பதுகளின் இரைச்சலற்ற இசை வாகனத்தில் விரவ தூக்கம் தொந்தரவானது இராப் பயணங்களில்…

கடவுளிடம் டிஷ்யூம்-டிஷ்யூம்

”முன் ஜென்ம” கணக்கு காட்டி எனக்கு மறுக்கபட்டிருந்த அன்பை நான் மற்றவர்க்கு கொடுத்து விட்டால், தண்டனையென எனக்கு விதித்ததை எப்படி வசூளித்து கொள்வாய்? உன் செயல்களை அறிய முயன்று நான் தோற்கிற வரை நீ பரம்பொருள் தான்.. நிகழ்வுகளின் மூல கூறுகளை…