மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “துயர் அடையும் என் தோழனே ! வாழ்க்கையில் உன்னைத் தோல்வியுறச் செய்த வாய்ப்புக் கேடுகளை நீ சிந்தித்தால் அவைகளே உனக்கு வலுவைத் தந்து உன் இதயத்துக்கு ஒளியூட்டி உனது ஆத்மாவைக் பள்ளத்திலிருந்து உயர்த்தி மதிப்புப் பீடத்துக்கு ஏற்ற உந்தி இருக்கிறது. அதனால் உன் பங்குப் பணி நிறைவேறியது என்று திருப்தி அடையவும் அவையே உனக்கு அறிவு புகட்டி ஞானத்தைப் பெறவும் ஒரு மரபுரிமை […]
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா விடிவ தற்குச் சற்று முன்பு பொழுது புலரும் வேளையில் விழித் தெழுந்தாள் காதலி ! ஒருவாய்த் தண்ணீர் அருந்தி அவள் கேட்டாள் : “நீ நேசிப்பது என்னையா ? அல்லது நீ நேசிப்பது உன்னையா ? நிஜத்தைச் சொல் என்னிடம் உண்மை யாக, உறுதி யாக !” +++++++++ ஒருவாய் நீர் அருந்தி ஆடவன் கூறினான் : “என்னிடம் எதுவும் எஞ்சி இருக்க […]
9 குறுங்கவிதைகள் மரக்கிளைகளின் வழி வெளிச்ச விழுதாய்த் தொங்குகிறது சூரியன்… **************************************** வெளிச்ச விழுதுகளில் குருவிகளாய் ஊஞ்சலாடியபடி இறங்குகின்றன இலைகள் ******************************************** மழையும் எப்போதாவது நீர்விழுதாய் ஊஞ்சலாடுகிறது மரக்கிளையைக் கட்டியபடி.. ******************************************* வெய்யில் புள்ளி வைத்து நாள் முழுக்கக் கோலமிட்டபடி இருக்கிறது மரம். ******************************************** விடியலின் பூக்களாய் பூமியின் மீது பூத்துக் கொண்டிருக்கிறது பனி.. ************************************************ சூரியன்காந்தப்பூ ஈர்க்க அதை நோக்கி முகம் மலர்கிறது பூமி.. ****************************************** மஞ்சள் இறக்கைகளோடு பூமியின் மீது பறக்கிறது சூரியன்.. […]
நேயத்திற்கு மொழி உண்டா, எழுத்து வடிவத்துடன் !! சகதியில் சிக்கிய பசுவின் அலறலும், காப்பாற்றுகிற கைகளினால் சகதி துமிகளின் ‘தப்…திப்பு’ களின் பரிபாஷனையும் உருகொடுத்தது நேயமொழியாக.. கை கொடுக்காத அச்சச்சோக்களும் அய்யையோக்களும் ஓலங்களாயின ,மொழிகளாய் அல்ல.. காகிதத்தில் கை சகதியை துடைத்தபடி சென்ற இயல்பான வழிபோக்கனின் கால்சுவடும்.. அதை ஒட்டியபடி நெடுக தொடர்ந்த பசுவின் கால்சுவடும்.. நேய மொழிக்கான எழுத்து வரிசை வடிவமாய் அரங்கேறியது சகதி படிமத்தில்.. – சித்ரா (k_chithra@yahoo.com)
———————- ஓங்கி ஒலித்த அழைப்பு ஒலியில் பயந்துப் பதறி பறந்தன பறவைகள் அடைக்கலமான கோபுரங்களில் இருந்து. பொன்.கந்தசாமி.
வாழ்க்கையின் வேளைதோறும் நெகிழும் கிழிசல்களை தைக்கிற சின்ன ஊசிக்கு சில நேரங்களில் கனவு நூல்கூட கனமாகிறது சிறு புள்ளியாய் மின்னும் ஒளிக்கு இருண்ட பிரபஞ்சத்தின் திசைகளில் பயணிக்க எத்தனிப்பதும் இன்னும் பிரகாசிக்க முயல்வதும் அகத்திற்குள்ளேயே முடிகிறது. கிளைகளாய் வி¡¢யும் மிக நீண்ட பாதைகளில் பயணமானது எவ்வழியில் என்பதை தீர்மானிக்க காலம் கற்றுத்தராதா என்ற ஏக்கம் மேலிடுகிறது. இலவம் பஞ்சாய் மெல்லியதான இதயவெளியை ஆக்கிரமித்த கால நெருப்பின் நிகழ்வுக் குஞ்சுகள் ஊதிப்பெருக்கின்றன சாம்பலாக்க. எங்கோ சில நேரம் காணாமல் […]
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இந்தப் பாலைவன வெளியின் இரவிலே நடுங்கும் கடுங்குளிர் இதயத்தின் இருண்ட கணப்புடன் இதமாய் உள்ளது எனக்குள் தூண்டப் பட்டு ! முட்போர் வையில் பூதளம் மூடப் படட்டும் ! மிருது வான தோட்டம் இருக்கிற திங்கு ! உட் பொருட்கள் வெடியில் தெறித்துப் போயின ! கருகிச் சிற்றூர், நகரம் பற்பல எரிந்து போயின ! என் செவியில் விழந்த செய்தி எதிர் […]
ஆயிரம் அபூர்வ ஆடைகள் துறந்து அழுக்காடை வெங்காய வாடையுடனவள் வாவென்று கூடவழைக்காமல் உள் செல்வாள் என்னுள்ளம் வெளிச்செல்ல ஏதொவொன்று உட்செல்லும். இல்லையென்பதவளுக்கு இனிக்கும் வார்த்தை….இதுவரை காலமும் நான் அவளுக்காயென அணுத்துணிக்கை கூட அசைக்கவில்லையென்பதவள் அறுதியான வாதம். ஆதரவோடவள் தலைகோத விளைந்தால் தொட்டாற்சுருங்கியென தூங்குவதாயொரு பாவனை. நடுஇரவின் போர்வைகளில் வாய்வு மிகுந்தென் நெஞ்செல்லாம் எரிகையில் தள்ளிப்படுப்பாள் தன்னுறக்கம் கெடுமென்று… நிலாக்கால் முன்னிரவில் அவள் தோள் சேர்ந்து கவிசொல்லத் துடிக்குமென் மனசு புரியாமல் அடித்துச்சாத்துவாள் எல்லா யன்னல்களையும். அதிசயமாயவள் […]
அமாவாசையன்று நிலா நிலா ஓடிவா என்றது குழந்தை. வானம் முழுவதும் தேடியும் நிலாவைக் காணவில்லை. இன்னும் பிடிவாதமாய் நிலாவை அழைத்தது. வரவே இல்லை. கோபத்தில் குழந்தை நிலாவோடு டூ விட்டது. அடுத்த நாள் நிலா பிறை வடிவில் எட்டிப் பார்த்த போது குழந்தை கண்ணை அடைத்துக் கொண்டது. சிறிதாய் நிலா கண் இமைகளின் இடைவெளியில் எம்பி நுழைய முற்படுகையில் கண்ணை இன்னும் இறுக்கிக் கொண்டது. அப்போதும் நிலா எப்படியோ கண்ணுக்குள் […]
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “வாழ்க்கையைப் புரிந்து கொள்வது பற்றி நான் கூறுவது : திறமை மிகுந்தவன் புகழ், ஆதிக்க சக்தியைத் தேடுவதிலும் சத்தியப் பாதையில் நேராக நடக்க ஆர்வமோடு செல்கிறான். ஆதலால் நீ களிப்புறு என் எளிய தோழனே ! காரணம் நீதான் நியாயத்துக்கு வாசல் ! நீதான் வாழ்க்கைக்கு நூல் ! ஆதலால் திருப்தி அடைவாய் ! ஏனெனில் உன்னை மேற்பார்வை செய்து ஆள்பவரின் நேர்மைக்கு […]