தொங்கும் தோட்டங்கள்., மிதக்கும் உல்லாசக் கப்பல்கள்., நதிகளில் நீந்தும் நகரங்கள் இவற்றில் சேகரமாகிறது ஆசை. புகைப்படங்களில்., திரைப்படங்களில் தங்கநிறத்தில் தகதகக்கும் கப்பல்களும். பசிய., கனிய தோட்டங்களும் தண்ணீர்த்தீயில் ஜொலிக்கும் நகரங்களையும் காண சேர்கிறது விழைவு, வேண்டுதல் முடிச்சைப் போல எடுத்துவைக்கும் பணம் போதுமானதாயில்லை வருடா வருடமும் வீங்கும் பணத்தால். மூட்டையான முடிச்சோடு பயணித்து அக்கம்பக்க மரம் கண்டு., நீர்ப்படகுச் சவாரி செய்வதில் களிக்கிறது மனது. வெனிஸ் நகரத்து வர்த்தகனாய்த் தோற்றமளிக்கிறான் அந்த ரெஸார்ட்டில் பாடி நடனமாடும் இளைஞன். […]
முழுப் பூசணிக்காய்கள் முற்றிலுமாய் மறைக்கப்படுகின்றன சோற்றுக்குள்.. மீறியும் தெரிந்தால், அதை மறைக்க அறப்போராட்டங்கள்.. திகார் கம்பிகளுக்கும் தெரியாமல் வெளியே தவறிழைக்கும் வாரிசுகள்.. ஆணவ அரசியலில், அக்கரையில்லாமல் போச்சுது மக்கள் மீது.. போவது தெரியாததுபோல் நடிக்கும் பொம்மை அரசுகள்.. ஊழலை எதிர்ப்பவன் கோமாளியாக்கப்படும் கொடூரம்.. எப்போது எங்கே வெடிக்குமோ என்று மக்களை ஏங்கவைத்திடும் திசைதெரியா தீவிரவாத அச்சுறுத்தல்.. தெரிந்தே ஏமாறுவோம் என்ற தெளிவிலே மக்கள்.. தெரிந்து சொல்- வந்துவிட்டதா நாம் வல்லரசாகும் காலம் ! […]
காடு நிரப்பும் நகரமென சூரிய எச்சில் படாத முகட்டோடு நாகரீகக் குறிப்பெடுக்கும் பென்னாம் பெரிய வீட்டுக்குள் தூண்கள் அளவு கனத்த கதைகளோடு வாய்வு நிறைத்த வயிறும் பசிக்கும் மனதோடுமாய் ஞாபகத் திணறலோடு மூப்பின் உதிர்வொன்று. ஜாடைகள் அப்பிய முகங்களோடு தலைமுறை காவும் நீ…ண்ட நிழல்கள் சிரித்த முறைத்த ஞாபகச் சுவரோடு வெப்ப மூச்சு விட்டு விட்டு ஒடுங்க ஓடி ஒளித்து விளையாடிய கண்ணாடி மைதானத்து பல்லிகளும் இல்லாமல். காட்டிச் சொல்லும் தடயங்களை காணாமல் போனவர்கள் பைகளில் திணித்தவர்கள் […]
1 கசப்பில் உருவான கொலைவாளை மூர்க்கத்தனமாய்வீசியதில் கருவுற்ற தாய்களின் கர்ப்பப்பைகள் கிழிந்தன. மரணரத்தத்தை பூசியவாறு நிறைமாத சூலிகளின் உயிரைக்குடித்து திரிந்த வாள் குழந்தைகளின் தலைகளை வெட்டிஎறிய வேகம் கொண்டன. அறுபட்ட்டுக் கிடந்த தலைகளை ஒவ்வொருநாளும் எண்ணிமுடியாத வெறியில் வாளின்பயணம் தொடர்கிறது. 2 வெகுகாலமாய் தூரத்திலிருந்து துரத்திவரும் கொம்புமுளைத்த ஜின்களின் காலடியோசைகளும் லத்திமுனைவீச்சுக்களும் வெகுஅருகாமையில் கேட்கின்றன. என்னை நெருங்கிவரும் வீச்சரிவாளின் ஓசை கழுத்தை துண்டித்து கொன்றுதீர்க்க எத்தனிக்கிறது. தர்காமுற்றத்தில் விரிந்துவளர்ந்த வேம்படிமரநிழலில் துஆ செய்தேன் வாவாவென ஆவல்மேலிட தன்னை […]
பிறந்தநாள் குழந்தைக்கு அணிவகுத்து வருகின்றன கரடி பொம்மைகள்.. கலர் சாக்குகளில் பொட்டலமாய் முடியிட்ட முடிச்சைப் பிடித்து கைபோன திசையெல்லாம் அசைக்கிறது குழந்தை. பிய்த்து உதிரும் பெயர் போக மிச்சமாய் இருக்கும் பொம்மைகளில் தொற்றி இருக்கும் அட்டையின் சில பெயர்கள் குழந்தையின் அம்மாவின் பிரியத்தை இழந்ததாய் இருக்கின்றன. அச்சத்தோடும்., கோபத்தோடும் வெறுப்போடும்., ஆதங்கத்தோடும் ஒதுக்கப்படும் அவை பெயர் அட்டை பிய்க்கப்பட்டு கட்டிலுக்குக் கீழ் இருக்கும் பழைய பெட்டியில் அடைக்கலமாகின்றன. இன்னொரு குழந்தையின் பிறந்தநாளுக்குப் பயணப்படுவதற்காக.
வெண்ணிற இரவுகளைக் கைகளில் சேகரித்து யாரும் கானவியலாதொரு தேசம் நோக்கி ஓடினேன்.. யாருமற்ற அவ்வெளியில் சாம்பல் மலர்களாலான மழை பெய்து கொண்டிருக்க தோளில் உருபெற்ற வலி மெல்ல மெல்ல பயணித்து விரல்கள் வழி இரவுகளை நனைக்க சில்லிட்டது எனக்கு.. குளிர்ந்து விட்ட கைகளில் நடுங்கிய இரவுகள் மெல்ல உடல்பெருத்து விடியல்களாய் பூப்பெய்து கொண்டிருந்தன..
கவிதைக்கும்,பொய்க்கும் உள்ள தூரம் கனவுக்கும்,நனவுக்கும் உள்ள தூரம் நிழலுக்கும்,நிஜத்திற்கும் உள்ள தூரம் ஒப்பனைக்கும்,இயல்பிற்கும் உள்ள தூரம் அடங்கலுக்கும்,மீறலுக்கும் உள்ள தூரம் மனதிற்கும்,நினைவிற்கும் உள்ள தூரம் சொல்லுக்கும்,பொருளுக்கும் உள்ள தூரம் விழிப்பிற்கும்,உறங்கற்கும் உள்ள தூரம் உனக்கும் எனக்கும் இடையே உள்ள தூரம்…. சின்னப்பயல் – chinnappayal@gmail.com
சுவர்கள் அடக்கின உலகின் மௌனம் சலித்த போது இரும்புக் கம்பிகளில் நெய்த ஜன்னலின் பின் வி¡¢யும் செவ்வக உலகின் முப்பா¢மாணக் கோணல் இயக்கங்கள் காண ஏங்கும் சின்னக் குழந்தைக்கு உயர உபயம் தரும் பாத்திரப் படியாய் இருந்திடச் சம்மதம்தான்! கோதண்ட ராமர் கோவிலின் வெளிப் பிராகாரத்தில் உள் தேடும் பொருளின் செந்தூரம் கலந்த பொழுதின் மயக்கத்தில் குட்டிப் பாவாடையும் நீண்ட மௌனமுமாய்ப் பொருந்தின குழந்தைக்கு முதுகு கொடுக்கும் கல் யானையாய்ச் சமைந்திடவும் சம்மதம்தான்! அல்லது பின்னாளில் வாழ்க்கைப் […]
எப்படிச் சொல்வது இழிவான காரியத்திற்குச் சாட்சியாக நான் இருந்துவிட்டேனென்று கோழைத்தனத்தால் கைகட்டி நின்றுவிட்டேனென்று அச்சத்தால் உடல் வெலவெலத்து வேர்த்துவிட்டதென்று அடிமை போல் காலணிகளை துடைத்தேனென்று மனசாட்சிக்கு விரோதமாய் நடந்து கொண்டேனென்று பணம் என் கண்களை மறைத்துவிட்டதென்று அபலையின் கதறலை கேட்டதாக காட்டிக்கொள்ளாமல் நடித்துவிட்டேனென்று எச்ச சோற்றை அருவருப்பில்லாமல் தின்ன ஆசைப்பட்டேனென்று நடந்த விபரீதத்தில் எனக்கும் பங்கிருக்கிறதென்று.
தன் எண்ணங்களில் பிழைத்திருக்கும் வார்த்தைகளை வடிவமைக்கும் நேரங்களில் நிறைவு பெறுகிறது என் மிகுதியான ஆசைகள் . அதன் தொடர்ச்சியில் எதனினும் விலகிடாத ஒன்றிணைப்பு காலங்களினால் தீர்மானிப்பதில்லை என் அன்பின் மிகுதியாலே அறியப்படுகிறது . இன்னுமும் எஞ்சி இருக்கின்ற காரணங்களை கரைந்து விட கூடிய மித மிஞ்சிய நினைவாகும் காத்திருப்பை அதனதன் காலம் மிகுதியாக ரசித்து கொண்டிருக்கிறது . இதன் விளைவாக மாற்றியமைத்த என் இறந்த கால நிமிடங்கள் நிறைவு தன்மையற்றவையாக மிகுதியாகிறது. இறுதியில் இயலாமை கொண்டு எடுத்தாளப்பட்ட […]