பிரியா விடைகளும் பிள்ளைகளுக்கு முத்தங்களும் என வாழ்ந்து கொண்டிருந்தது விமான நிலையம் எட்டிய உயரத்தில் கிட்டிய நெஞ்சில் மகனை முகர்ந்தது மூதாட்டி உம்மா கடவுச் சீட்டு அடங்கிய கைப்பை முழங்கையில் தொங்க கடைக்குட்டியை கைகளில் ஏந்தி வாப்பா பயணம் சொல்ல குழந்தை தானும் வருவதாகச் சொன்னது. எல்லாச் சொந்தங்களிடமும் ஸ்பரிஷமோ பாஷையோ விடைதர… புன்னகை போர்த்திய முகச் சோகமும் புர்கா மூடிய அகச் சோகமும் கலாச்சார நாகரிக கட்டுக்குள் நிற்க மனைவியின் கண்கள் மட்டுமே முழுப் பெண்ணாகிப் […]
உன்னைப் போலவே தான் நானும் பிரமிக்கின்றேன் எதிர்பாரா தருணத்தில் எப்படியோ என்னுள் நுழைந்திருந்தாய் இனிதாய் நகர்ந்தவென் பொழுதுகளில் -உன் ஒற்றைத் தலைவலியையும் இணைத்துக் கொண்டாய் பழகியதைப் போலவே ஏதோ ஒரு நொடியில் பிரிந்தும் சென்றாய் ஏன் பழகினாய் ஏன் பிரிந்தாய் எதுவுமறியாமல் அலைந்த நாட்களில் தான் மீண்டும் வருகிறாய் மற்றொரு காதல் மடலோடு எப்படி ஏற்றுக் கொள்ள நானலைந்த தெருக்களில் காரணமறியாமல் அலையவிட்டிருக்கிறாய் மற்றொருவனையும் ======
படிந்துறைந்த பாசிப் படலத்தின் பச்சைப் பசேல் பளிங்கு நிறமற்ற மனதின் பதிவுகளில் ஆசுவாசப் பட்டுக் கொள்ள முடிகிறதெனினும்.. வழுக்கல்கள் நிறைந்த அனுபவ படிகளில் அடிக்கடி எச்சரிக்கை எழுப்பும் பாதங்களின் ஏற்ற இறக்க தொனியில்.. யாரோ ஒருவரின் இருப்பு – தூசு தட்டப் படுகிறது..! கரையான் அரித்ததை விட கவலைகளே துரு பிடித்திருக்கிறது!!! *மணவை அமீன்*
வீதியின் வழியே சென்ற பிச்சைக்காரனின் தேவை உணவாய் இருந்தது வழிப்போக்கனின் தேவை முகவரியாய் இருந்தது கடந்து சென்ற மாணவர்களின் கண்கள் மிரட்சியுடன் இருந்தது குறிசொல்பவள் தேடினாள் தனது பேச்சுக்குத் தலையாட்டும் ஒருத்தியை சோப்பு விற்பவள் யோசித்துக் கொண்டே வந்தாள் இன்று யார் தலையில் கட்டலாமென்று தபால்காரரின் கையிலிருக்கும் கடிதங்களின் கனம் சற்றே குறைந்தது நடைப்பயிற்சி செய்பவர்கள் எய்யப்பட்ட அம்புபோல விரைந்து சென்றார்கள் ஐஸ்கிரீம் வணடியில் எண்பதுகளில் வெளிவந்த பாடல்கள் ஒலித்தது காய்கறிகாரனின் கவனமெல்லாம் வியாபாரத்திலேயே இருந்தது குழந்தைகளின் […]
* ஒரு கறுமைப் பொழுதை ஊற்றிக் கொண்டிருக்கிறேன் இரவின் குடுவையில் வெளிச்சத் திரள் என சிந்துகிறாய் துயரத்தின் வாசலில் கைப்பிடியளவு இதயத்தில் அழுத்தும் நினைவு நாளங்களில் முடிச்சிட்டுக் கொள்கிறது எப்போதும் முடிவற்று விரியும் கோரிக்கை யாவும் **** –இளங்கோ
ஒவ்வொரு இழவு வீடும் பெருங்குரலோடுதான் துக்கத்தை வெளிப்படுத்த ஆரம்பிக்கின்றன.பெண்கள் ஒப்பாரி வைக்க ஆண்கள் அழுகையை அடக்கிக்கொண்டு வெளியில் போய் நிற்கிறார்கள் நாட்டமை போலும் ஒரு உறவினர் தொலைபேசி மூலம் தொலைதூர சொந்தங்களுக்கு செய்தி தருகிறார் அக்கம்பக்கம் முதலில் வந்து துக்கம் விசாரிக்க மெதுவாய் கூடுகிறது கூட்டம் இறந்தவரை நடுவீட்டில் வைத்து மாலையிட்டு மரியாதை செய்து சுற்றிலும் அமர்ந்து ஒப்பாரி வைத்து புகழ் பாடத் தொடங்குகிறார்கள் சுமார் ஒரு மணி நேரம் கழிந்தபின் அக்கம்பக்கம் அகலுகிறது சொந்த பந்தம் […]
கவனமற்று இருக்கின்ற அனைத்து இருப்பு கொள்கைகள் எழுகின்ற கேள்வியை பற்றிக்கொள்கிறது தன் முனைப்பு . கேள்விகள் அழகியல் தன்மை வாய்ந்தவை கூடுதலான மனத்திரை உடையவை முக்காலத்திலும் தொன்றுத்தொட்டு வழக்கம் உடையவை . அதன் விடையில் நிறைவு பெறாது அடுத்த நிலைக்கு ஆயுத்தப்படுத்தும் மற்றுமொரு கேள்விகள் தொடர்கின்ற அழகியல் இயக்கமாகிறது . தன் பகுப்பாய்வின் தீவிரத்தன்மை ஒவ்வொன்றும் அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது கற்பனையின் வரையறைகள் . கேள்விகளும் பதில்களும் ஒன்றையே தேடுதலின் நோக்கமாக கொண்டுள்ளது அவை எப்பொழுதும் நிறைவு தன்மை […]
இதுநாள் வரை பிரிந்திராத மரக்கிளை விட்டு கிளம்புகிறது பழுத்த இலை ஒன்று ….. முடிந்துவிட்ட ஆயுள் எண்ணி பெருமூச்சொன்றை பிரித்தபடி தொடங்குகிறது அதன் இறுதிப்பயணம் …. விம்மிவெடிக்கும் அதன் துயரங்கள் யார் காதிலும் கேட்டிருக்க வாய்ப்பில்லை …. இலையை பிரிந்த சோகம் தாளாமல் சுழன்று சுழன்று மரக்கிளை வைக்கும் ஒப்பாரியை கவனிக்க யாருக்கும் இங்கே விருப்பமில்லை ….. இலையொன்று போனால் துளிர் ஒன்று முளைக்கும் என்கிற சமாதானத்தையும் மரக்கிளை ஏற்ப்பதாயில்லை . இதோ ! அழுதபடி ஓடும் […]
இணைந்திருந்த போதும் ஒரு தனிமையின் துயரத்தைத் தருவதாய் இருந்தது அது. புன்னகை முகம் காட்டி ஒரு பெண் திரும்பிச் செல்லும்போது அவள் பின் உடலை ரசிக்கத் துவங்குகிறாய். எதிர்பாராமல் லௌட் ஸ்பீக்கரில் அலறும் பாடலைப் போல நாராசமாயிருக்கிறது அது. இல்லாத பியானோவின் சோகக்கட்டைகளை அமுக்கவேண்டும் என்ற எண்ணம் எழுகிறது என்னுள் உன்னைப் பொறுத்தவரை அது ஒரு பிம்பத்தின் மீதான ரசனை என்னைப் பொறுத்தவரை அது அடுத்த உடலின் மீதான காமம். ஒரு வேட்டையை பிடித்த திருப்தியுடன் உன் […]
* கை நீளுதலை யாசகம் என்கிறாய் யாசித்து பெறுவதாக இருப்பதில்லை எனக்கு தேவையான பார்வை பேசாதிருத்தல் அமைதி என்கிறாய் பேசி அடைவதாக இருந்ததில்லை நான் பெற்ற மௌனம் மரணித்தல் வரம் என்பாய் எதன் பொருட்டு தவம் இருந்தேனோ அதிலில்லை யாசகமோ ஒரு மௌனமோ குறைந்தபட்சம் ஒரு பார்வையோ ***** –இளங்கோ