சுற்றி வரும் சக்கரத்தின் மையப்புள்ளியில் வீற்றிருக்கிறேன் நான் சற்றுப் பதமாகவும் கொஞ்சம் இருகலாகவும் எந்த உருவமுமற்றதோர் நிலையில் ஏகாந்தம் துணையாய்க் கொண்டு சற்றுப் பொறுத்து வந்த ஓர் முழு வட்ட சுழற்சியில் மெல்ல நிலை பிறழா வண்ணம் எழுந்து ஓரமாய்ச் சாய்கிறேன்.. அருகிலேயே வளைந்து நெளிந்து சற்றே அகன்றபடி சாய்மானமாக … வியாபித்தே இருக்கிறேன் கொஞ்சம் பொறுத்தே அப்புறப்படுத்தப்பட்ட அப் பாண்டத்தின் எங்கோவோர் மூலையில் “நான்” கரைந்தோ… இல்லை முற்றிலுமோ … …. முற்றிலுமாக அழித்து போவேனா […]
எப்போதும் மௌனமாய் இருப்பதே உசிதமென இருந்து விட்டேன். யாரிடமும் பேசுவதில்லை. தவிர்க்க முடியாத தருணங்களில் ஓரிரு வார்த்தைகளை தானமாய் விட்டெறிவேன்.. என் கண்களைக் கூட பேசவிடாது குனிந்து விடுவேன். வெளியே எல்லோரும் நானிருக்குமிடம் அமைதியின் உறைவிடமென உற்சாகமாய் சொல்லிச் சென்றார்கள். நாட்கள் செல்ல செல்ல என் மௌன முகத்தின் அகத்துள் உச்சமாய் கூச்சல்.. சதா சலசலப்பும் உச்சந்தலையை குத்தும் உட்கலவரம். காதுகளற்ற அகத்தின் முகத்துள் கலவரக் காயங்கள். இரக்கமின்றி இன்னும் இறுகி இருக்கிறது வெளியே மௌனம்.
திரிபு வார்த்தைகளும் தத்துவார்த்த பிழைகளும் தின்மச் சொற்களும் தந்த ரணங்களை சுமந்து இடர் சூழ்ந்த இவ்வுலகில் பொருள் தேடி அலைகிறேன்…. துயரம் சொல்லொணாத் தவிப்புடன் உடல் நிறைக்க இறுகிப்போன சக்கையாய் மனம்…. நிர்பந்தங்களின் தீப்பந்தங்களால் தன்னந்தனியாய் தவிக்கும் அழுகையின் நிறம் மீளாத்துயருடன் பின் தொடரும் நிழலாய் நினைவுதிர்த்து போகின்றது……
எழும்பூரிலிருந்து ரயில் புறப்பட்டதும் எதிர் சீட் குழந்தை பாடத் தொடங்கினாள் `இரும்பிலே இருதயம் முளைக்குதோ’ செங்கல்பட்டு நெருங்கும்போது பாட்டு மாறத் தொடங்கியது `அரிமா அரிமா நானோ ஆயிரம் அரிமா’ என்று என் விருப்பமாகக் கேட்டேன் `ஏ பார் ஆப்பிள் ‘ பாடச்சொல்லி. ஒரு நிமிடம் யோசித்து விட்டு `அந்தப் பாட்டு மிஸ் வீட்டு அலமாரிக்குள் இருக்கிறது ‘என்றது குழந்தை குலுங்கி குலுங்கி சிரித்தது ரயில். – நிஷாந்தன்
நேற்று உன்னை சந்தித்துவிட்டு வந்த பிறகு வேலை ஓடவில்லை பார்க்கப்படவேண்டிய கோப்புகளெல்லாம் என்னைப் பார்த்துச் சிரித்தன சதா வண்டு ஒன்று மனதைக் குடைந்து கொண்டிருந்தது வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் இடையே எப்படிப் பயணிக்கிறேன் எனக்கே தெரியவில்லை மைதானத்தில் உதைபடும் பந்தாய் ஏன் நானிருக்கிறேன் நேற்று வசந்தத்தைப் பரிசளித்த காதல் தான் இன்று வாழ்க்கையைப் பறித்துக் கொண்டது என்னை நானே வெறுக்கிறேன் எல்லாவற்றையும் மறக்கத்தான் போதையிலே மிதக்கிறேன் பணக்கட்டுகளை வீசி பெண்களை வாய் பிளக்க வைக்கிறேன் புனிதத்தின் மீது காறி […]
புத்தி செய்திகள் படிக்கிறது மனம் அங்கலாயிக்கிறது கேட்டபடி.. எனது வரவேற்பு அறையில். நான் இருவரையும் பார்த்தபடி, தேநீருக்கும் வழியில்லாத விருந்தாளி போல கண்கள் மூடினால் ஓய்கிறார்கள் திறந்தால் மறுபடியும் கூச்சல் ஏதொரு செய்தியுடன் ,விடாமல் !! தெரிந்தவர்களிடம் கேட்டேன்,சொன்னார்கள் – இருவரையும் கவனிக்கும் என்னையும் பார்த்து கொண்டிருப்பவரை கண்டு விட்டால், விருந்தே நடத்தி கொள்ளலாமென. வாயிற் கதவு திறந்துதானிருக்கிறது எப்போதெனும் வரகூடும் மூன்றாமவர். – சித்ரா (k_chithra@yahoo.com)
மேசைமீது ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களில் ஊர்ந்தேறிக் கொண்டிருந்தது வெயில் நுகருமொரு சொற்ப மரநிழல்.. நிழல் துப்பிய குளிருணர்வில் புத்தகங்கள் ஒன்றொன்றும் காந்தப்பிணைப்புடன் இறுக்கமடைய, கிழிசல்கள் வழி எழுத்துக்கள் சில வெப்பமொழியில் ஏதேதோ பிதற்றத் துவங்கின.. என் விரல் நீவிய புத்தகமொன்று தான் தானாகவும் தானே மீதமாகவும் இருக்க, அட்டைப்படத்தில் நிறைந்திருந்தனர் சிறுமிகள் சிலர்… அழுக்குச் சீருடையுடனும் நாணயச் சிரிப்புடனும்.. – தேனு [thenuthen@gmail.com]
நீந்திச் செல்லும் பறவையொன்று அகால வெளியின் எல்லைகளினூடே சிறிதும் களைப்பற்று காற்று எழுதிச் செல்லும் வரிகளைக் கேட்டு மிதந்து திரும்பவும் சிறகாகும் இதயம். விரல்கள் எழுதிய ஓவியம் திரைமீறும் எதிரில்வந்து பேசியது ஓவியப் பறவை நிஜம் எதுவென அறியாத கணங்களில் குழம்பித்தவித்த மனசு ஆதிக்குழந்தையானது. நிலாமூட்டில் தோன்றி வழிதவறிய ஒற்றை நட்சத்திரம் விவாதம் தொடர்ந்தது. வெகுநேரம் ஆகியும் இரவு விடியாதது பற்றி இருளுக்குள் நீந்திச் சென்றது பறவை இரவும் இருளும் நிரந்தரமாக விவாதம் தொடர்கிறது. நேற்றின் மடி […]
மண்ணில் மீண்டும் முளைக்க புதைத்த பற்கள் விண்ணில் மிளிரும் வின்மின்களாய் ஒளிருது உன்னிடம் கதையாய் சொன்ன என்மனம் மண்ணில் உன்னை புதைத்து விட்டு விண்ணில் தேட அறிவு மறுக்குது இன்பங்கள் கனமாகின்றன துன்பங்கள் எளிதாகின்றன ஏழு வயதில் மறைந்த பெண்ணை இருபது வயதில் வரைய வண்ணமில்லை தடைபட்ட கனவுகள் எப்படி தொடர்ந்திருக்கும் ஊகிக்க வழிதெரியாமல் திண்டாடும் மன ஆடுகள் திண்டாட்டம் கடை நாளில்தான் தீருமென தெரிந்தும் வயற்றில் உள்ள கனத்தை நினைவில் அசை போடும் ஆட்டு விக்கும் மனம் ve.pitchumani
திருந்த செய் பிழைகளெல்லாம் பழைய பித்தளை பாத்திர துளைகள் திருத்தங்கள் ளெனும் ஈயம் பார்த்து அடைத்தல் சிஷ்டம் முலாம் பூசி மறைத்தல் கஷ்டம் அம்மா மழை கொட்டி மலை சொட்டும் அருவியாய் நிலம் தொட்டு கடலெட்டும் நதிகளாய் கடன் பட்டும் தயை காட்டும் அம்மா