ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கடலை இப்போது விட்டுக் காய்ந்து போன கரைத் தளத்துக்கு வா ! குழந்தைகள் அருகிலே நீ பழகி வரும் போது விளையாட்டு பொம்மையைப் பற்றி உரையாடு ! தெளிவ டைந்த குழந்தைக்குச் சலிப்பு உண்டாக்கும் களிப்புச் சாத னங்கள் சிறுகச் சிறுக, அறிவு ஆழம் பெற்ற பிறகு ! இப்போதே உள்ளத் தில் அவர்க்கு உள்ளதோர் பூரண உணர்வு ! பித்த ரென்றால் […]
எங்கள் நடைச் சேற்றில் சாத்தான் விதைகளின் முளை. உழக்கும் கால்களைத் தடவி அது அங்கக் கொடியாய்ப் படரும். நிலத்தின் படுக்கைகள் ஒவ்வொரு இராப்பொழுதிலும் கசங்கிப் போகிறது. அந்தரங்கத் துணையொன்று இரகசியங்களில் பறந்தோடும் மின்மினிகளைப் பிடித்தொட்டுகிறது. மெதுவாய்த் தின்னும் பூச்சிகளால் கரைந்து போகிறதெல்லாம். சாத்தானின் பொழுதுகளில் ஒளிப்பேதம் எங்கே? ஆச்சரியங்கள் மயங்கிய சாதாரண நாளொன்றில் நிரந்தரமாயிற்று நிர்வாணம். நிலத்தைப் புணருமுடல்களின் கீழ் கசங்கிப் போகிறது காலம். -ந.மயூரரூபன்
இதயத்தில் தாங்கினேன் தோழியே உனை.. இன்னும் தான் பாடம் படிக்கிறேன் நான்… உன் மனம் புண்பட்டதோ – கண்ணீரைச் சுமக்கின்றேன் தினமுந் தான் நான்…! உனக்குள்ளே வந்துவிட கருவாகச் சுருங்கினேன்… என் சுவாசத்தில் கருகினேன் – காற்றிலே சாம்பலாய் உனைத்தேடி பறக்கிறேன்… கற்பாறை போலவா என் மனம்..?, நீரலையாய் வந்து அறைந்தாயே… உனக்குள் நான் உறங்குகிறேன் இன்னும் புத்தர் சிலையாய்… உன் சுவாசமாவது தாலாட்டும்…!! ஜே.ஜுனைட் Jjunaid
இரவு வானம் சூரியன்- பகலில் மத்தாப்பெரிக்கிறான். நெருப்பு பொறியில் துளைகளாகி போகிறது இரவு வானம் . களவாணி இதமான மௌனத்தை பெயர்த்து களவாடத் தூண்டும் இரவு வானில் சிதறி கிடக்கம் நட்சத்திரங்கள் மனசுக்காக … இருபதாயிரம் துளைகள் வியர்வை சொரிய எங்கேனும் இரு துளையுண்டா? இனியவளின் இதயம் நுழைய … நிலா முத்தம் கிண்ணம் நிறைய நீரெடுத்து கால்கள் நனைத்து கொள்கிறேன் நழுவி விழுகிறது நிலா ! புத்தகம் நல்ல புத்தகம் தேடி நாமெல்லாம் அலைகிறோம் வளர்த்தவர்கள் […]
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எழுகிறது ஒரு குரல் சுருண்டு சோம்பிக் கிடக்கும் என் அறையி லிருந்து ! உன்னோடு இன்னும் நான் வசிக்க முடியும் செத்த உடலோடு மெத்த மோகத் துடன் ! என்னை விரும்பு கிறாய் இன்னும் நீ ! உணவு சமைக்கிறாய் ! தின்ன எடுத்து வருகிறாய் ! என்ன நிலையில் இருந்தேன் என்பதை நீ மறந்து போனாய் ! ++++++++++++ பட்டப் பகலில் […]
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “வாழ்க்கை வீணையை எவரது விரல்களும் மீட்ட முடியாது என்னுடைய கரம் தொட்டு அவை ஆசீர்வதிக்கப் படா விட்டால், அவரது கண்கள் எனது ஆசனப் பீடத்தின் தெரிசனம் பெறா விட்டால் ! தேவ தூதர் இசையா (Isaiah) வார்த்தைகளை என் காதல் தங்கச் சங்கிலியில் விலை மதிப்பில்லாக் கற்களாய்க் கழுத்தணியில் கோர்த்தார். புனித தூதர் ஜான் (Saint John) என் சார்பாகத் தனது ஒளிமயக் […]
இருட்காட்டுக் கபுறுக்குள் அமைதியாய் உறங்கும் வாப்பும்மா சிறுகதை போல பேசல் மீளக்கேட்கும் துயர் எனக்கில்லையினி. மழை கொக்கரித்துப்பெய்யும் நடுவிரவுகளில் அடரிருள் கபுறடியும் வாப்பும்மாவின் மையத்தும் நினைவுக்குள் வலிக்கும். வெள்ளிகளில் வாப்பா தவறாது சொல்வார் கபுறடியில் நீங்கள் பொல்லூன்றி நிற்பதைக் கண்டதாக. அறுபதுகளிலும் வாப்பா அனுபவிக்கும் தாங்கொணாத் துயர் எனக்கும் புரியும். வாப்பும்மா உங்களுடற்சாறு அருந்திச் செழித்திருக்கும் மருதாணிச்செடிக்கு சில வேளை தெரிந்திருக்கலாம் மரணம் ஒரு வாயிலென்பதும் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளியில்லையென்பதும். சமீலா யூசுப் அலி, மாவனல்லை,இலங்கை 15.06.2011
சுத்தமாய் வெள்ளைத்தாள் சிதறிய கிரெயோன் கலர்கள் இரண்டு கோடுகள் ஒரு கோணல் வட்டம் நம்பிக்கையோடு யானைக்கும் தும்பிக்கையும் ஆயிற்று குழந்தைக்கோ கர்வம் ஊதா நிற யானையுடன் ஊர்ந்து போயிற்று. யானைக்கு ஊதாநிறமா? அதிருப்தியோடு கேட்டார் ஆசிரியை இரண்டு கால் யானை எங்குள்ளது அடித்துத் திருத்தினார் குழந்தையின் ஊதா யானை ஊனமுற்றுப்போக அதன் மனசின் மேலே தன் செருப்பு சப்திக்க நடந்து போனார் ஆசிரியை. சமீலா யூசுப் அலி மாவனல்லை இலங்கை
அவளிடம் சொன்னேன் அடுப்படி தாண்டு .பருப்புக்கு வெங்காயம் தாளிப்பதை விட அனேக விஷயங்கள் இருக்கின்றன வா உன் சொந்தக்கால் கொண்டு பூமிப்பந்து சுற்றும் வித்தை சொல்லித் தருகிறேன் அவள் வந்தாள். சுமக்க முடியாத சங்கிலிகளையும் முடிவற்ற சந்தேகங்களையும் சுமந்து கொண்டு மிகுந்த பிரயாசையோடு அவள் சங்கிலிகளை ஒவ்வொன்றாய் களைந்தேன் சந்தேகங்கள் முடிவுறாது ஒடும் நதியை ஒத்தனவாய் நீண்டு நெடித்தலைந்தன. இனி என்ன களைப்போடு கேட்டாள். இனி நீ வாழத் துவங்கு வாழ்தல் என்றால் அயர்வோடு நோக்கினேன். அவள் […]
அபூர்வமான சொற்களைப் பின்னும் பொன்னிற சிலந்தி அவன் ஆறும் தேநீரை மறந்து இரவிரவாய் நூற்காடுகளுக்குள் மல்லாந்து கிடப்பான். திடும் மென அவள் தாகித்தெழும் நடுநிசி பொழுதுகளில் அவன் விரல்கள் தாளில் முளைத்துக்கிடப்பதைப் பார்த்தவாறே உறங்கிப்போவாள். அவன் எழுதும் எதையும் அவள் வாசித்ததில்லை அவனது விசாரங்களும் தனித்துவமான சிந்தனைகளும் அவளுக்குப் புரிந்ததேயில்லை. அதிகம் பேசுவது அவனை ஆத்திரமூட்டும். அவள் மொழி மறந்தவள் ஆயினள். கிராமத்துக்கிளி மொழிகள் மட்டுமே தெரிந்த அவள் அந்த நாலுசுவர் கூட்டுக்குள் அடங்கியிருந்தாள். சமைப்பதும்,துவைப்பதுமாய் அவள் […]