கவலைகள் அவ்வப்போது கடுகாகவும் கடுஞ்சீற்றத்துடனும் வரும்… அதன் வருகையின் அடையாளமாய் மனதில் சிறு குழிகளும் பெருங்குண்டுகளுமாய் இருக்கும்… எதிரே வருபவர்களெல்லாம் அதில் தடுக்கி விழலாம். குழிகளையும் சாலையையும் பொறுத்து காயங்களும் ஏற்படலாம். மிகச் சிலரே அதில் தண்ணீர் ஊற்றி குழிகளை நிரப்பி செடி வளர்த்து அதில் ஒரு பூ பூப்பது வரை கூடவே இருந்து பராமரிப்பர்… ஆனாலும் அவனுக்கு அவன் மனதானது எப்போதும் அர்ப்ப ஆயுளுடன் சீர் செய்யப் படுகிற தார் […]
நாட்கள் நத்தை போல் நகர்கிறது கணக்குச் சூத்திரம் போல வாழ்க்கை வெகு சிக்கலாக இருக்கிறது தாழப் பறந்து கொண்டுள்ளதால் உயரே பறப்பவர்களின் எச்சம் என் மீது விழுகிறது சிலந்தி வலையில் சிக்கிக் கொண்டதைப் போல வாழ்க்கை சங்கிலிகளால் என்னைப் பிணைத்துள்ளது நினைத்தபடி காரியங்கள் நடக்காத போது சரணாகதி தீர்வாகிறது அதல பாதாளத்தில் விழுந்து கொண்டிருக்கும் போது கையில் பற்றிய மரக்கிளையும் முறிந்தால் என் கதி என்னாவது சூழ்நிலைக் கைதியாய் விளையாட்டுப் பொம்மையாய் விதியின் கைப்பாவையாய் எத்தனை நாளைக்கு […]
மற்றொரு மழை நாளில்… மடித்துக் கட்டிய லுங்கியும் மடக்குக் குடையுமாய் தெருவில் நடந்த தினங்கள்… கச்சலில் கட்டிய புத்தக மூட்டையும்.. “அடை மழை காரணமாக பள்ளி இன்று விடுமுறை”யென- தேனாய் இனித்த கரும்பலகையும்… சற்றே ஓய்ந்த மழை வரைந்த வானவில்லும்… சுல்லென்ற ஈர வெயிலும்… மோதிரக்கல் தும்பியும்… கருவேலும் புளிய மரமும் சேமித்த மழையும் கிளையை இழுக்க சட்டென கொட்டி நனைந்த உடையும்… க்ஷைத்தானுக்கு கல் எறிந்த பின் சுப்ஹுத் தொழ […]
பளிங்கு நீர் சிலை நாரை அழகு அலகு உற்று உற்றுப்பார்க்கிறது சிறு நொடியில் இரையாகப்போகிற செம்மீனொன்று. ரவி உதயன். raviuthayan@gmail.com
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ”ஆலயங்களுக்கும் மற்ற புனிதத் தளங்களுக்கும் நான் தொழச் செல்கையில் அங்கேயும் திருவாளர் பிதற்றுவாயன் கரத்தில் ஒளிவீசும் செங்கோல் ஏந்திச் சிரத்தில் கிரீடத்துடன் ஓர் ஆசனத்தில் அமர்ந்திருப்பான் ! என் இல்லத்துக்கு நான் மீளும்போது அங்கும் காணப் படுவான் கூரையிலிருந்து தொங்கும் பாம்புபோல் ! சுருங்கக் கூறின் திருவாளர் பிதற்றுவாயன் எல்லா இடங்களிலும் நடமாடி வருகிறான்.” கலில் கிப்ரான். (Mister Gabber) […]
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “எங்கு நீ இனிதாக வசிப்பாய் ?” என்று நான் வினவினேன். “அரண்மனை வசிப்பே சிறந்தது” என்று நீ அளித்தாய் பதில். “அங்கென்ன அதிசயம் கண்டாய் ?” “பல்வேறு விந்தைகள் பார்த்தேன்,” என்றாய் ! “பிறகு ஏன் நீ வருத்த மோடு தனித்துள்ளாய் ?” “ஏனெனில் இந்தப் பகட்டு வாழ்க்கை காணாமல் போகும் கணப் பொழுதில் !” […]
அடுத்த வாரமாவது சுவருக்குச் சாயம் அடிக்கச் சொன்னாள் மனைவி. வட்டங்களும் கோடுகளுமாய் மனிதர்கள் சதுரங்களும் செவ்வகங்களுமாய் கொடிகள் ஏனல் கோணலாய் ஊர்வலம் இரண்டு சக்கர போலீஸ் காரும் காரைவிட பெருத்த விளக்குகளும் விதவிதமான பந்துகளும் விரட்டும் ஜந்துக்களும் ஆங்கில எழுத்துகளும் அதன் தலைகளில் கொடிகளும் டி ஃபார் டாக்கும் எஃப் ஃபார் ஃபிஷ்ஷும் குச்சிக் குச்சி கைகளோடு குத்தி நிற்கும் சடைகளோடு வகுப்புத் தோழிகளும் உடலைவிடப் பெருத்த தும்பிக்கையோடு […]
ஊடலின் தொடக்கம் இனிதே ஆரம்பமானது உன் சொல்லாலும் என் செயலாலும் . மனதின் கனமேற்றும் நிகழ்வுகள் எல்லையற்று நீள்கிறது . என் கண்களின் சாட்சியாகி நிற்கிறது உன் சொற்கள் . நீர்மம் குமிழாக உருவெடுக்க விசையின் பரவல் முந்தி சென்று சொல்லி விடுகின்றன அதிர்வலையின் செய்திகளை . உருமாற்றங்களின் உருவகம் விலகல் தீர்மானத்தில் பழித்து கொண்டிருக்கிறது . -வளத்தூர் .தி .ராஜேஷ் .
மூலம் – இஸுரு சாமர சோமவீர (சிங்கள மொழியில்) தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை அம்மா சொல்வாள் அந் நடிகையின் நடிப்பைப் பார்க்க நேரும் போதெல்லாம் ‘பள்ளிக்கூடக் காலத்தில் உயிர்த் தோழிகள் நாம் அமர்ந்திருந்தோம் ஒரே வகுப்பில் ஒரே பலகை வாங்கில் அந் நாட்களிலென்றால் அவள் இந்தளவு அழகில்லை’ பிறகு அம்மா பார்ப்பது தனது கைகளை உடைந்த நகங்களை காய்கறிகள் நறுக்குகையில் வெட்டுப்பட்ட பெருவிரலை அத்தோடு அவள் எங்களைப் பார்ப்பாள் […]
கிறுக்கலற்ற வெண்தாளை கண்டதும் வரைய தோணுவதை போல .. . கறைகளற்ற அடுப்பறையை கண்டதும் சமைக்க தோணுவதை போல .. . பறக்க தோன்றவில்லை, களங்கமற்ற வானத்தை கண்டதும் ! . ஏனோ தெரியவில்லை!! அக்கணத்தில் , அவ்வொரு பார்வையில் .. சிலிர்க்க வைக்கும் மத்தாப்பு பூக்கள் தெரித்தது உடலெங்கும்.. . தெரித்தது தளும்ப தொடங்க .. மொட்டை மாடியிலிருந்து தடதடவென்று கீழிறங்கி குழந்தையை கட்டி முத்தமிட்டு நிலை பற்றாமல் சுற்றினேன் அங்குமிங்கும்.. . ஏனோ தெரியவில்லை!! […]