அழுகையின் உருவகத்தில்..!

என்ன பதில் மொழிவதென தவிக்கும் விளிம்பு நிலை விரிசலின் தடயங்களில் ஏதேனும் மார்பு அகப்பட்டிருந்தால் கண்ணீர் கரைசல் படிமக் காடு படர்ந்திருக்கும். வார்த்தைகளின் உயிரோட்டத்திலே உயிர் பிரிந்து சென்றிருக்கலாம்.. ஏதோ ஒரு அழுகையின் உருவகத்தில் அரவணைத்திட அறியாதொரு அழகியலின் தொன்மம் கரைந்துக் கொண்டிருக்கிறது.…

ப மதியழகன் கவிதைகள்

மோட்ச தேவதை   கிணற்று நீரில் விழுந்த தனது பிம்பத்தை எட்டிப் பார்த்தது குழந்தை வானவில்லை விட அம்மாவின் சேலை வண்ணம் மிகவும் பிடித்திருந்தது அதற்கு தன்னுடன் சோற்றுக் கவளத்துக்கு போட்டியிடும் நிலாவுக்கு காய் விட்டது குழந்தை லாலிபாப் வாங்கிக் கொடுத்தால்…

அவனேதான்

ஆட்டுக்கு புல்லைக்காட்டி அழைத்துச் செல்கிறான் கழுத்தை வெட்ட.. மீனுக்கு புழுவைக்காட்டி தூண்டிலில் பிடித்து துடிக்க வைக்கிறான்.. பசுவிடம் பால்கறக்க போலியாய்க் கன்றைக் காட்டி காரியம் சாதிக்கிறான்.. இத்தனையும் தானாகி இலவசத்தால் ஏமாந்து ஜனநாயகம் என்ற பேரில் சந்தியில் நிற்கிறான் ! -செண்பக…

விட்டு விடுதலை

சுமக்கிற பிரியங்களை இறக்கி வைப்பது இறுதி நொடியில் கூட இயலுமா தெரியவில்லை. பிரிகிற ஆன்மா பேரொளியில் சேரத் தடையாகுமதுவே புரியாமலுமில்லை. காலத்திற்கேற்ப ஆசைகள் மாறுவதும் தலைமுறைகள் தாண்டிப் பாசங்கள் தொடர்வதும் புகழ்பொருள் மீதான நாட்டங்கள் போதையாகுவதுமே சாஸ்வதமாக மீளும் விருப்பற்று இறுக்கும்…

கரியமிலப்பூக்கள்

அமிலம் மற்றும் கரிப்புத் தன்மை கொண்டவையாகவே இருந்து விடுகின்றன சில நிஜங்கள் மறுக்கப்படுகிறது இனிப்பின் இயல்பு மறந்தும் கூட இறுக்கப்பட்ட மன இயந்திரத்தின் அழுத்தக் கோட்பாடுகள் வேகமேற்று .. அனல்வாயின் கொதிக்கும் தங்கக் குழம்பின் சிதறிய பிரள்கள் மலர்ந்து விடுகின்றன நட்சதிரப்பூக்களாய்…

விழிப்பு

சந்தங்கள் மாறித் துடிக்கும் இருதயம் தினமும் புதிதாய் இங்கே - ஆயிரம் காதை சொல்கிறது பௌதிகம் தாண்டிய திசைகளில்… வெயிலோ பட்டெரிக்கும் வெந்தீ சுட்டு எரிக்கும் வார்த்தை பட்டு உடையும் இதயம் படாத பாடு படும்… யாதும் தொடாமலே எண்ணங்கள் இடமாறலாமா…?…

தூரிகையின் முத்தம்.

எல்லா ஓவியங்களும் அழகாகவே இருக்கின்றன. வரைந்த தூரிகையின் வலிமையும் பலஹீனமும் நகைப்பும் திகைப்பும் ஓவியமெங்கும் பரவிக் கிடக்கின்றன.   பல இடங்களில் தூரிகை தொட்டுச் சென்றிருக்கிறது. சில இடங்களில் தூரிகை துள்ளிக் குதித்திருக்கிறது.   சில இடங்களில் தூரிகை எல்லை தாண்டி…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -4)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "நானோர் உண்மை உரைப்பேன் :  மனித சிந்தனைகள் கண்ணுக்குத் தெரியும் உலகுக்கு மேலே உயரத்தில் உள்ள ஓர் வாழ்தளத்தில் வீற்றிருப்பவை.  அதன் வான மண்டலத்தில் புலன் உணர்ச்சி…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -2)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   ஒவ்வொரு வினாடியும் கண்ணாடி முன் நின்று தன்னை வணங்கும் மனிதன் ஆடியின் ஒரு மூலக்கூறைக் கண நேர மாவது கனவு மயக்கத்தில் காண முடிந்தால் அவனது…

அழையா விருந்தாளிகள்

எனது தனிமையின் மௌனம் தற்போது வருகை பு¡¢ந்த உங்களை வெறுப்புக்குள்ளாக்கியிருக்கலாம் வயிற்கதவை தட்டிக்கொண்டிருக்கும் உங்களின் கோபத்தையும் பொருட்படுத்த முடியாமலிருக்கிறேன் வீடு தேடி வந்தும் என் பாராமுகத்தால் அவமானப்படுத்தப்படுகிறீர்கள் என்பதையும் நான் கவனிக்காமல் இல்லை அசைவற்றிருக்கும் நான் பார்வையைக்கூட உங்கள் பக்கம் சுழலவிடாமல்…