மாநகர பஸ்ஸில் ஜன்னலோர பயணம் முன்னால் போனது இரண்டு சக்கர வாகனம் அம்மாவின் மடியில் மூன்று வயது பெண் குழந்தை சிக்னலில் நின்றது வாகனங்கள் குழந்தையை பார்த்து நாக்கை துருத்தினேன் குழந்தை திரும்பி நாக்கை துருத்தினாள் முகத்தை அஸ்ட கோணலாக்கி ஒரு சிரிப்பு வேறு சிக்னல் மாறி வண்டி கடந்து விட்டது நான் வாசித்ததிலேயே இன்றளவும் சிறந்த கவிதை அது தான்
பருவமெய்திய பின்தான் மாறிப் போயிருந்தது அப்பாவிற்கும் எனக்குமான பிடித்தல்கள் வாசலில் வரும் போதே வீணாவா! வா வாவெனும் அடுத்த வீட்டு மாமாவும் அகிலாவின் அண்ணாவும் போலிருக்கவில்லை அப்பா மழை வரமுன் குடையுடனும்.. தாமதித்தால் பேருந்து நிலையத்திலும்.. முன்னும் பின்னுமாய் திரிய காரணம் தேவைப்படுகிறது அப்பாவுக்கு துக்கம் தாழாமல் அழுத ஒருபொழுதில் ஆறுதல் கூறுவதாய் அங்கம் தடவுகிறான் அகிலாவின் அண்ணா யாருக்கும் தெரியாமல் மொட்டைமாடிக்கு வா நிலா பார்க்கலாமென மாமா இப்போதெல்லாம் பிடிக்கிறது அப்பாவை — மன்னார் அமுதன்
1. வீதியில் குழந்தைகள் விளையா டும் சப்தம் ஒழுங்கற்று. இரண்டு மாதமாகக் பள்ளிவிடுமுறை நிச்சயக்கபட்டாத பாடத்திட்டம். புத்தகங்கள் வாங்கும், பைண்டிங் செய்யும் வேலைகள் இல்லை. திறப்பு நாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மறுதிறப்பு நாள் பற்றி பல யூகங்கள். துவைத்து காயப்போட்ட புத்தகப் பைகள் சிரித்தபடி கயிறுகளில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. 2. கலகலப்பாக இருந்தது வீடு. விடுமுறையில் எத்தனையோத் திட்டங்கள் எத்தனையோ வேலைகள் . கூட யாராவது இருந்தபோது ஆறுதலாக இருந்த்து. மகள் இருந்தது இன்னும் […]
வெள்ளுடை தேவதைகளையும் செவ்வுடை சாமிகளையும் மஞ்சளுடை மாட்சிமைகளையும் பச்சை உடை பகைமைகளையும் படிமங்களாய்ப் புதைத்தவற்றை வர்ணாசிர தர்மமாய் வெளியேற்றும் ப்ரயத்னத்தில்.. ப்ரக்ஞையோடு போராடித் தோற்கிறேன்.. விளையாட்டையும் வினையாக்கி வெடி வெடித்துத் தீர்க்கிறேன்.. எப்போது உணர்வேன் வண்ணங்களை.., அழுக்கேறாத ஆன்மாவின் உடைகளாய்..
சற்றேறக்குறைய வெறும் அறுபது ஆண்டுகளே வாழ்வதில் சலித்துப்போகிறது நமக்கு. ஆமை முன்னூறு ஆண்டுகள் எப்படி ,ஏன் வாழ்கிறது ?! வாழ்ந்து என்ன சாதிக்கிறது ?! சொய்வு,கழிவிரக்கம், திரும்பத்திரும்ப அதே செயல்களை வாழ்வில் மீண்டும் மீண்டும் செய்தல், போட்டி,போராட்டங்கள், சலிப்பு,பேருவகை, தாங்கமுடியா துயரம் என எதுவும் அதன் வாழ்வில் உண்டாவதில்லையா..? இல்லை நம்மைப்போல் எல்லாவற்றையும் ரசித்துக்கொண்டு தான் வாழ்வைக்கடத்துகிறதா ? எனக்குத்தெரிந்த வரை அவை ஆழ்துயிலில் கிடத்தல், பேரண்டம் சுற்றி வரும் , அதைக்கடக்கும் நேரத்தில் ஒரு முறை […]
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “சித்தாந்த மேதை தாந்தே (Dante) என் உதவியின்றி ஆத்மாவின் இருப்பிடத்தைத் தேடிப் போக முடிய வில்லை. ஆன்மாவின் தனிமையை எடுத்துக் காட்டும் மெய்ப்பாட்டைத் தழுவும் உவமைச் சொல் (Metaphor) நான் ! கடவுளின் வினைகளை உறுதிப் படுத்துவதற்குச் சாட்சி நான்.” கலில் கிப்ரான். (The Goddess of Fantasy) ++++++++++++++ அறிவும், புரிதலும் ++++++++++++++ அறிவும், உலகைப் புரிதலும் இரு துணைவர் உனக்கு […]
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கடலை இப்போது விட்டுக் காய்ந்து போன கரைத் தளத்துக்கு வா ! குழந்தைகள் அருகிலே நீ பழகி வரும் போது விளையாட்டு பொம்மையைப் பற்றி உரையாடு ! தெளிவ டைந்த குழந்தைக்குச் சலிப்பு உண்டாக்கும் களிப்புச் சாத னங்கள் சிறுகச் சிறுக, அறிவு ஆழம் பெற்ற பிறகு ! இப்போதே உள்ளத் தில் அவர்க்கு உள்ளதோர் பூரண உணர்வு ! பித்த ரென்றால் […]
எங்கள் நடைச் சேற்றில் சாத்தான் விதைகளின் முளை. உழக்கும் கால்களைத் தடவி அது அங்கக் கொடியாய்ப் படரும். நிலத்தின் படுக்கைகள் ஒவ்வொரு இராப்பொழுதிலும் கசங்கிப் போகிறது. அந்தரங்கத் துணையொன்று இரகசியங்களில் பறந்தோடும் மின்மினிகளைப் பிடித்தொட்டுகிறது. மெதுவாய்த் தின்னும் பூச்சிகளால் கரைந்து போகிறதெல்லாம். சாத்தானின் பொழுதுகளில் ஒளிப்பேதம் எங்கே? ஆச்சரியங்கள் மயங்கிய சாதாரண நாளொன்றில் நிரந்தரமாயிற்று நிர்வாணம். நிலத்தைப் புணருமுடல்களின் கீழ் கசங்கிப் போகிறது காலம். -ந.மயூரரூபன்
இதயத்தில் தாங்கினேன் தோழியே உனை.. இன்னும் தான் பாடம் படிக்கிறேன் நான்… உன் மனம் புண்பட்டதோ – கண்ணீரைச் சுமக்கின்றேன் தினமுந் தான் நான்…! உனக்குள்ளே வந்துவிட கருவாகச் சுருங்கினேன்… என் சுவாசத்தில் கருகினேன் – காற்றிலே சாம்பலாய் உனைத்தேடி பறக்கிறேன்… கற்பாறை போலவா என் மனம்..?, நீரலையாய் வந்து அறைந்தாயே… உனக்குள் நான் உறங்குகிறேன் இன்னும் புத்தர் சிலையாய்… உன் சுவாசமாவது தாலாட்டும்…!! ஜே.ஜுனைட் Jjunaid
இரவு வானம் சூரியன்- பகலில் மத்தாப்பெரிக்கிறான். நெருப்பு பொறியில் துளைகளாகி போகிறது இரவு வானம் . களவாணி இதமான மௌனத்தை பெயர்த்து களவாடத் தூண்டும் இரவு வானில் சிதறி கிடக்கம் நட்சத்திரங்கள் மனசுக்காக … இருபதாயிரம் துளைகள் வியர்வை சொரிய எங்கேனும் இரு துளையுண்டா? இனியவளின் இதயம் நுழைய … நிலா முத்தம் கிண்ணம் நிறைய நீரெடுத்து கால்கள் நனைத்து கொள்கிறேன் நழுவி விழுகிறது நிலா ! புத்தகம் நல்ல புத்தகம் தேடி நாமெல்லாம் அலைகிறோம் வளர்த்தவர்கள் […]