விழி மூடித் திறக்கையில் வெகு தூரம் சென்று வந்த வித்தியாச உணர்வெனக்கு… தூரத்தில் நடந்தவை துல்லியமாய் நினைவிருக்க நேற்றென்னை நலம் கேட்ட நபர் யாரும் நினைவில்லை… புது வித அன்னியம் அகப்பட்டு அழக் கூட தோன்றாமல் வெகு தூர வெளிகளையே வெறித்திருக்கிறது கரு விழிகள்! நிகழாத நிகழ்காலம் இறந்தது போல் இருப்பதனால் இறந்தகாலம் என்றதற்கு அர்த்தப்பெயர் வைத்துவிட்டேன்! கனவெல்லாம் கருகியதா அல்லது கனவென்னை கருக்கியதா? இதை சொல்லும் தெளிவின்று துளி கூட எனிலில்லை! விழி மூடித் […]
ஒவ்வொரு அந்தியிலும் பறந்து களைத்த பறவை கூடடைவதைப் போல தனிமை வந்தமர்கிறது என் கிளைகளில் மொழிகள் மறுதலித்த அடர் மௌன வனத்தின் ஒற்றை மரமாய் கிளைகள் பரப்பி நான். சில்வண்டுகளின் ரீங்காரமோ காற்றின் சிலும்பலோ இலைகளின் நடனமோ ஏதுமற்ற பேரமைதியில் வனம். -வருணன்
கண்களின் வழியோ கண்ணாடி வழியோ பிரதிபலிக்கிறது நீ வாசிப்பது…. எழுத்துக்களோ., கோப்புக்களோ., அங்கங்களோ., ஆராய்ச்சியோ.. காக்கைக்கால் கோடுகள் உற்சாகம் கிளப்பும் ஒன்றையும்., நெற்றிச் சுருக்கங்கள் பொருளாதார வரைபடங்களையும் கன்னக் குழிவுகள் ஒரு கிளர்த்தும் காமத்தையும் இதழின் இறுக்கங்கள் உள்பூக்கும் பிடிவாதத்தையும்… என்னவென்று அறியாத இன்பமாய் இருக்கிறது. எதிர்வினைகள் ஏதும் அற்று எதிரே அமர்ந்து என்ன வாசிக்கிறாய் என்பதறியாமல் உன்னை வாசிப்பது..
தீப்பந்தத்தை வேகமாகச் சுழற்றும் போதுதோன்றும் வட்டம் மெதுவாகச் சுழற்றும் போது காணாமல் போகும் முதல் சுவாசம் இழுக்கும் சிசு தாயின் அரவணைப்பில் சுகம் காணும் நகராமல் அமர்ந்திருந்தாலும் பூமியின் பயணத்தில் நாமும் ஒரு பிரயாணியே நாள்தோறும் சந்திரனின் தோற்றம் வளர்வதையும், குறைவதையும் கண்டு வியக்கும் குழந்தைகள் சிறிய அலைகள் முத்தமிட்டுச் செல்லும் பெரிய அலைகள் மணல் வீட்டை இடித்து சுவடில்லாமல் செய்துவிட்டுத் திரும்பும் இரவு, பகல்களாய் ஆனது வாழ்க்கை கனவுகள் மட்டும் இளைப்பாறுதல் தரவில்லை என்றால் கைதிகளாகிப்போவோம் புவியெனும் […]
நிழல் மதி தொலையும் அதிகாலையில் இரவி தொலையும் அந்திமாலையில் நிழல் தொலைத்திருக்கும்… இவ்வுலகம்! ஒரு பூவும் சில பூக்களும் காதலின் காதோரத்தில் கவிதை பாடிக்கொண்டிருந்தது ஒற்றை ரோஜா! கட்டிலின் கால்களில் மிதிபட்டு கிடந்ததோ மல்லிகை பூக்கள்!! – இலெ.அ. விஜயபாரதி
வெளிறிய கோடை இலைகளே.. வறண்டு போன நடை பாதைகளே.. நீருடை பூணும் கானல்களே.. ரத்தமற்று சுருங்கிப் போன நதி தமநிகளே.. கருகி விழுந்த பூவிதழ்களே.. எனதிந்த வெற்றுக் காகிதங்களிடம் இனிவரும் வசந்தத்தின் பெயரை மட்டும் சொல்லுங்கள்.. * ***
1. சும்மா கிடந்த காற்றை சுழட்டி சுற்றுகிறது மின்விசிறி தாள்களுக் கிடையே நுழைந்து வழிந்தோடி ஆடைகளை அசைவித்து திரைச்சீலைக்கு பின்னால் ஒளிந்து விளையாடும் குட்டிகள் தீண்டிவிடாமல் எரியும் சுடரொன்று கண்ணாடிச் சுவர்களுக்குள் சிரிக்கிறது சிமிட்டுகிறது 2. காற்றில் கயிறு திரித்து உள்ளே இறங்கினேன் பிடி இறுக இளகிய கயிறு நூலானது நூல் பிடித்து ஆழம் போனேன் சேர்ந்த இடத்தில் பிடி இல்லை நூலும் இல்லை கால நேரம் தெரியவில்லை இடமே இல்லை இமையற்ற கண்ணொன்று விழித்திருந்தது.
“கடைவீதிப் பக்கம் நான் செல்லும் போது திருவாளர் பிதற்றுவாய் ஒவ்வொரு கடை வாசலிலும் நின்று போவோர் வருவோரைப் பற்றி வக்கணை அடிப்பார். பிதற்றுவாயன் அவரைப் பின்பற்றிச் செல்வதையும் நான் அவரது மௌன முகத்திலே கண்டிருக்கிறேன். பொது மக்களுக்கு ஆட்டிப் படைக்கும் அவன் இருக்கை தெரிவதில்லை.” கலில் கிப்ரான். (Mister Gabber) +++++++++++++++ காரணம் (Reasoning) +++++++++++++++ உன்னை நீயே கண்காணித்துக் கொள்வாய் ஓர் எதிரியாய் உன்னைப் பாவித்து ! பிறரை நீ ஆள முடியாது ! […]
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா உலகு முழுதும் சுற்றித் தேடிஓடாதே ஒரு குகையைக் கண்டு ஒளிந்து கொள்ள ! ஒளிந்திருக்கும் கடும் விலங்கு ஒவ்வோர் குகையிலும் ! எலிப் பொந்தில் நீ வசித்தால் ஒரு பூனைக் கால் நகம் உனைப் பிறாண்டி விடலாம் ! உண்மை யான ஓய்வு உனக்கு வருவது நீ இறையுடன் தனியாய் உள்ள போது ! ++++++++++++ உனக்கொரு முகவரி […]
சாதாரணமாக துவங்கிய ஒரு நாளின் பகல் பொழுதில் அலுவலக சிற்றுண்டி சாலையில் கல்லூரி கால நண்பனை 15 ஆண்டுகளுக்குப் பின் எதேச்சையாக சந்தித்தேன் சிரிக்க சிரிக்க பேசினோம் கடற்கரைக்குப் போவது என்று முடிவானது தத்தம் மனைவிக்கு அலைபேசியில் அழைத்து இரவு சாப்பாடு வெளியில் என்றும் தாமதமாக வீடு திரும்புவோம் என்றும் தெரிவித்தோம் குழந்தை, குடும்பம், வேலை, கல்லூரி ஆசிரியர் ராமசாமி, கல்லூரி கால நண்பர்கள் சத்திய நாரயணன், அருண்குமார், கருப்பையா, நண்பிகள் பற்றிய சுவாரசியங்கள் எல்லாம் […]