தில்லையில் கள்ள உள்ளம்…

This entry is part 13 of 42 in the series 25 மார்ச் 2012

(இதைப் படித்தபின் எவரது மனமாவது புண்படுமாயின் தயைகூர்ந்து மன்னிக்கவும்..) மனசு பூரா…எதிர்பார்ப்போடு அம்மாவின் வருகைக்காகக் காத்திருந்தேன். நீண்ட மாதங்கள் கழித்து இப்போது தான் மிகவும் பிரயத்தனப்பட்டு ஒரு வழியா….என் தொல்லை தாங்காமல் என் வீட்டுக்கு வர அம்மாவை பெங்களூரில் இருந்து சிதம்பரத்திற்கு பஸ் ஏற்றி விட்டு..ஜெயா..நீ வந்து அம்மாவை அழைச்சுக்கோ.. ன்னு சொன்னான்.. என் தம்பி. அதுவும் அம்மாவுக்கோ….என்னைப் பார்க்கும் சந்தோஷத்தை விட சிதம்பரத்தில் சபாநாயக்கர் கோவிலில் நடராஜ தரிசனம் காணும் ஒரே ஆவலும் …ஆசையும்… தான் […]

சங்க கால சோழநாட்டு ஊர்கள்

This entry is part 5 of 42 in the series 25 மார்ச் 2012

ப.செந்தில்குமாரி முனைவர்ப் பட்ட ஆய்வாளர், அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி) கும்பகோணம்   சங்க காலத்தமிழகம் அரசியலால் சேர, சோழ, பாண்டிய vஎன மூவேந்தர்களின் பெருநாடுகளாகவும், சிறு குறுநிலங்களாகவும், பிளவுண்டு கிடந்தது. ஆனால் மொழியாலும், பண்பாட்டாலும் தமிழர்கள் ஒன்றுபட்டிருந்தனர். இந்த மூன்று பெருநாடுகளிலும் வாழ்ந்த புலவர்கள், மூவேந்தர்களையும் பாடிப் பரிசில் பெற்று வாழ்ந்ததை சங்க இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன.   சங்க இலக்கியம் பாடியவர்களில் பெயர் தெரிந்த புலவர்களாக 473 பேர் காணப்படுகின்றனர். இவர்களுடன் சேர, சோழ, பாண்டிய, […]

சித்தர் பெயரால் சென்னையில் ஒரு பகுதி

This entry is part 3 of 42 in the series 25 மார்ச் 2012

சென்னை மண்ணுக்கென்று ஏதோ விசேஷம் இருக்கிறது போலும். சென்னை மாநகரமாக அது உருவெடுக்கும் முன்பே இந்த விசேஷம் ஏற்பட்டு அதன் பிறகும் நீடித்து வந்திருக்கிறது. எங்கெங்கோ பிறந்து எவ்வாறெல்லாமோ அலைந்து திரிந்தானபின் சென்னையில் வந்து அடங்கிய சித்தர்கள் பலர். சென்னை தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இன்று வடசென்னையின் ஒரு பகுதியாகவே கருதப்படும் திருவொற்றியூர் கடற்கரையில் சமாதி கொண்ட பட்டினத்தார், காவிரிப்பூம் பட்டினத்துக்காரர்தான். அவர் கையில் இருந்த பேய்க் கரும்பின் கசப்பு திருவொற்றியூர் என்கிற இன்றைய சென்னையின் […]

வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து -3 “காம சூத்ராவைக் கடந்துவா” –

This entry is part 26 of 36 in the series 18 மார்ச் 2012

எத்தனை இயல்பாய் இருக்கிறது இரவெல்லாம் புணர்ந்த இந்த உலகம் ’ காமக்கடும்புனல்’ கவிதைத் தொகுப்பிலுள்ள மகுடேஸ்வரனின் கவிதை வரிகள். காமம் எத்தனை இயல்பான ஒன்று. ஆனால், அது குறித்து இந்த உலகம் எத்தனை பாசாங்கு செய்கிறது என்பதை மிக நேர்த்தியாகச் சுட்டும் வரிகள். உலகில், உயிரினம் தோன்றிய போதே உருவான உணர்வு பசியும் காமமும் தான். ஆம்.காமம் என்னும் இச்சை மட்டும் இல்லாதிருந்திருந்தால் இனப்பெருக்கம் குறித்து எந்த உயிரினமும் கவலைப்பட்டிருக்க வாய்ப்பில்லை. இவ்வுலக இயக்கத்தின் தொடர்ச்சியை உறுதிப்படுத்த […]

வளவ. துரையனின் நேர்காணல் – 2

This entry is part 25 of 36 in the series 18 மார்ச் 2012

வினாத் தொகுப்பு——–பாரதி இளவேனில் [அன்பாதவன்] இரண்டாம் பகுதி அண்ணா—பெரியார் குறித்தெல்லாம் கவியரங்கக் கவிதைகள் வாசித்தவர் வாழ்வில்” வைணவ விருந்து” எப்படி? ஒரே வரியில் பதில் சொல்லித் தப்பித்து விடலாம். “எல்லாம் தமிழில்தானே இருக்கிறது”. ஓரளவுக்கு இது உண்மை என்றாலும் மாற்றம் என்ற சொல்லைத் தவிர எல்லாம் மாறக் கூடியவைதானே? கண்ணதாசன் கூறியது நினைவுக்கு வருகிறது “ மாற்றம் என்பது மானிடத் தத்துவம் “. நான் இலக்கியத்தில் புகுந்தபோது ஈர்த்தவை திராவிட இயக்கமும், பகுத்தறிவும், இறை மறுப்பும்தான். வளவனூர் […]

பாதுகாப்பான கூடங்குள அணுமின் உலைகள் இயங்க வேண்டும்-அணு உலை எதிர்ப்பாளி உதயகுமாரின் சில வினாக்களுக்கு என் பதில்

This entry is part 21 of 36 in the series 18 மார்ச் 2012

    முன்னுரை :  அணு உலையா ? வாழ்வுக்கு உலையா ?  இப்படி மேலோடி இடித்துரைப்பது ஓர் அசுரப் போக்கு.  அணு உலை அருகே வாழ்பவருக்கு எல்லாம் ஆறாம் விரல் முளைக்குது, புற்று நோய் தாக்குது என்றெல்லாம் நையாண்டி செய்வது அறிஞர்களின் கோமாளித்தனம்.  புற்று நோயுடன் மற்ற நோயும் தொற்றுது என்னும் பாட்டி கதைகளைக் கட்டிக் எறிந்து விட்டு சற்று புள்ளி விபரத்தோடு டாக்டர் புகழேந்தி ஆய்ந்து காட்டினால் நாமெல்லாம் நம்பலாம்.  கல்பாக்கத்தில் அணு உலை […]

வனவாசம் -கண்ணதாசன் புத்தக விமர்சனம்

This entry is part 14 of 36 in the series 18 மார்ச் 2012

வனவாசம் – வானதி பதிப்பகம் மூலம் 37 பதிப்புகள் வெளியாகி, பின் 2010 முதல் கண்ணதாசன் பதிப்பகத்தால் தொடர்ந்து வெளியிடப்படும் புத்தகம். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் கண்ணதாசன் தி.மு.க மீது ஈர்க்கப்பட்டதில் துவங்கி, அந்த கட்சியில் அவர் இருந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை அலசி, பின் அவர் கட்சியிலிருந்து வெளிவருவதுடன் முடிகிறது. இதனாலேயே தி.மு.க எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டோருக்கு பிடித்தமான புத்தகமாக அமைந்து விடுகிறது. கலைஞர் அபிமானிகள் இப்புத்தகத்தை அதிகம் நேசிக்க மாட்டார்கள் ! துவக்கத்தில் கண்ணதாசனுக்கு […]

வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் – 4-நீலமலையின் நினைவலைகள்

This entry is part 16 of 36 in the series 18 மார்ச் 2012

என்னை தனக்குள் அழுத்திவிடும் வல்லமை படைத்தது நீலமலை. துரைராஜ் பற்றி சொல்ல வேண்டு மென்றால் நீலமலைக்கு நான் செல்ல வேண்டும். என் பயணம் திசைமாறிப் போக நேரிடும். பெரியகருப்பனுடன் என் மனத்தில் உறையும் துரைராஜ் பற்றி பின்னர் தெரிந்து கொள்ளலாம். இப்பொழுது என் பணிக்களம் செல்லலாம். சில இடங்களில் ஊர்ப் பெயர்கள், சம்பந்தப்பட்ட மனிதர்களின் பெயர்கள் கூறுவதைத் தவிர்த்திருக்கின்றேன். . சில நிகழ்வுகள் கூட உண்மைகளின் ஆழத்தை மட்டும் காட்டும். நமக்கு வேண்டியது செய்திகள் மட்டுமே. முதல் […]

மனைவி சொல்லே மேனேஜ்மெண்ட் மந்திரம். ஷாரு ரெங்கனேகர். தமிழில் வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன். நூல் பார்வை

This entry is part 10 of 36 in the series 18 மார்ச் 2012

மனைவி சொல்லே மந்திரம்னு சிலர் இருப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அவங்களுக்கும் மேனேஜ்மெண்ட்டுக்கும் என்ன சம்பந்தம் என சிலர் கேட்கலாம். வீட்டை பொறுப்பா நிர்வகிக்கிற தன்னோட மனைவிகிட்ட இருந்து தன் அலுவலக மேலாண்மை நிர்வாகத்தைக் கத்துக்கலாம்னு சொல்றார் இந்தக் கட்டுரை ஆசிரியர் ஷாரு ரெங்கனேகர். தமிழில் இந்த நூலை மொழிபெயர்த்தவர் வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன். பொதுவா ஆண்கள் பெண்கள் கிட்டேருந்து இதை கத்துக்கலாம் அதைக்கத்துக்கலாம்னு சொன்னா ஒப்புக்கவே மாட்டாங்க.. எல்லாம் தங்களுக்குத் தெரியும்னு நினைப்பாங்க. ஆனால் இந்த நூலில் […]

கோனி – KONY 2012 – பிரபலபடுத்துங்கள்… குழந்தைகளைக் காக்க…..

This entry is part 5 of 36 in the series 18 மார்ச் 2012

யார் இந்த கோனி….. இவன் ஏன் டைம்ஸ் பத்திரிக்கையின் அட்டையில் போடப்பட்டு பிரபலப்படுத்த வேண்டும்..? ஏன், இவனின் முகம் உலகமெங்கும் பார்க்கப்பட வேண்டும்…? ஏனென்றால் இவன் நாசக்காரன்… சிறார்களை கடத்திச் சென்று பெண்களை போகத்திற்கும் , ஆண்களை துப்பாக்கி ஏந்தி தீவிரவாதியாக்கி அவர்களின் பெற்றோரையே கொல்லும் மனநிலைக்கு தள்ளி தன் ராஜாங்கத்தை பண்ணைவீட்டில் நீச்சல்குளம், மான்கறி, இன்ன பிற சந்தோஷங்கள் என்று வாழும் இவன் இன்னும் பிடி படாமல்… சிறார்களின் வாழ்வை நாசம் செய்து பின் நாளை […]