புதிய தலைமைச் செயலகம் மருத்துவமணை ஆகிறது

This entry is part 15 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

சமச்சீர் கல்விக்கு அடுத்தபடியாக புகைந்து கொண்டிருக்கும் பிரச்சனை, ஓமந்தூரார் அரசு எஸ்டேட்டில் கட்டப்பட்டுள்ள 1200 கோடி கட்டிடம் என்ன ஆகும் என்ற கேள்வி. இந்த விவகாரம் முதலில் தொடங்கியது தற்போதைய முதல்வரிடமிருந்து தான். ஏழு வருடங்களுக்கு முன்னால், 96 ஆண்டுகால பழமை வாய்ந்த குவீன் மேரிஸ் கல்லூரி இருந்த இடத்தில், புதிய தலைமை செயலகம் கட்ட ஜெயலலிதா முயன்ற பொது, பாரம்பரியம் மிக்க ஒரு கட்டிடத்தை இடிக்கக் கூடாது என்ற பொதுவான கருத்தால் அந்த முயற்சி தடைபட்டது. […]

(75) – நினைவுகளின் சுவட்டில்

This entry is part 12 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

  ரஜக் தாஸ், மனோஹர் லால் சோப்ரா, மிருணால் காந்தி சக்கரவர்த்தி என்றெல்லாம் 1953 நினைவுகளைப் பற்றி எழுதும்போது, அந்தக் காட்சிகளும் அவர்கள் குறும்பு நிறைந்த முகங்களும் இன்னமும் மனத்தில் திரையோடுகின்றன. சின்ன உத்யோகம் தான். குறைந்த சம்பளம் தான். கடுமையான வெயிலும், மழையும், ஒரு ஸ்வெட்டராவது வேண்டும் குளிரும், ஹோட்டல் சாப்பாடும் எல்லாம் எங்கோ தூர தேசத்தில் தூக்கி எறியப்பட்ட வாழ்க்கை என்று அம்மாவும் அப்பாவும், தங்கை தம்பிகளும் நினைக்கலாம் தான். ஆனால் அந்த நாட்கள் […]

ஆசாத் மைதானத்தில் அன்னா ஹசாரே ஆதரவாளர்களுடன்

This entry is part 3 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

அன்னா ஹசாரே ஆதரவு பேரணிகள் மும்பையிலும் மும்பை புறநகர்ப் பகுதிகளிலும் தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கின்றன. பேரணி, போராட்டம், உண்ணாவிரதம் என்றாலே மும்பையில் ஆசாத் மைதானம் தான் எல்லோருக்கும் நினைவில் வரும். இந்திய சுதந்திர போராட்டத்தின் குரல் ஒலித்த ஆசாத் மைதானம் இன்று அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிக்கும் மையமாக மாறி இரண்டாவது சுதந்திர போராட்டம் என்று பதாகைகளில் காந்தியும் பகவத்சிங்கும் அருகருகே இருந்து வாழ்த்த மழையில் நனைந்துக் கொண்டிருக்கிறது. நேற்று (18/8/2011)நானும் என் தோழியர் மலையாள எழுத்தாளர் […]

புத்தரின் பிறந்தநாளைக் கொண்டாடுவோம்

This entry is part 38 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

– A.P.G சரத்சந்திர தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை அன்றைய காலத்திலிருந்தே உலகத்தில் யுத்தங்கள் நடந்திருக்கின்றன. யுத்தத்தின் இயல்பே குரூரமானது. எனினும் முன்னையவர்கள் ஒழுக்க மேம்பாடுகளுக்கமையவே யுத்தம் செய்தார்கள். ஒழுக்க மேம்பாடுகளுக்கமைய யுத்தம் செய்வது பற்றி கற்றுத் தரும் மகாபாரதம் போன்ற மகா காவியங்கள் அக் காலத்தில் எழுதப்பட்டன. இராமன், இராவணன் யுத்தமானது இராமாயணம் எழுதப்படக் காரணமானது. மகா அலெக்ஸாண்டர் அரசருக்கும் கூட யுத்த களத்தின் கௌரவங்கள், ஒழுக்க மேம்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. அதனால் அவரும் […]

தொலைக்காட்சி – ஓர் உருமாற்றம்

This entry is part 34 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

சமீபத்தில் கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத எனது சொந்த ஊருக்குப்போன போது வீட்டிற்கு பக்கத்து தெருவை கடக்க நேர்ந்தது. அப்போது ஒரு வீட்டின் மாடியில் டி.வி ஆண்டெனாவைப் பொருத்தியிருந்த ஒரு கம்பியை பார்க்க நேர்ந்தது. ஆண்டெனாவில் இருந்து போகும் ஒயரை காணவில்லை. ஆனால், ஒரு கேபிள் டிவி ஒயர் வீட்டிற்குள் போவதை பார்க்க முடிந்தது.(வான் வழியாக வந்ததெல்லாம் கேபிள் வழியாகவும், கேபிள் வழியாக வந்ததெல்லாம் வான் வழியாகவும் வருவதை நினைத்துப்பார்க்க முடிந்தது. உபயம் – சுஜாதா சார்) […]

கதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -? (தொடர்ச்சி)

This entry is part 22 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

‘ஹெஸ்’ ஐ வேறொரு பிரிட்டிஷ் அமைச்சரும் சந்திக்கிறார். லார்ட் பீவர் ப்ரூக் என்றழைக்கப்பட்ட அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் எரிசக்திதுறை அமைச்சர் பொறுப்பை வகித்தவர். இட்லரின் நண்பரும் ரெய்ஷ் அரசாங்கத்தின் தலைவர்களுள் மூன்றாவது இடத்தை வகித்திருந்தவருமான ‘ஹெஸ்’ பிரிட்டனுக்குள் பிரவேசித்து, நான்கு மாதங்கள் கழிந்திருந்தன. இருபத்து நான்கு மணிநேரமும் உளவியல் மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை வைத்திருந்த நேரம். தமது பயணம் தாம் எதிர்பார்த்த பலனை தரவில்லை என்பதில் ஹெஸ்ஸ¤க்கு மிகவும் வருத்தம், இந்த வருத்தத்துடன் […]

ஜென் ஒரு புரிதல் பகுதி 6

This entry is part 8 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

சத்யானந்தன் மானூடத்தின் மிக நீண்ட வரலாற்றில் மதங்களின் பங்களிப்பு குறிப்பாக இரு தளங்களில் இருந்தன. ஒன்று சமுதாய ஒழுங்குமுறை – அறநெறிகளை நிறுவியதில். மற்றது அவநம்பிக்கைகும் நம்பிக்கைக்கும் இடையே இடையறாது ஊசலாடும் மனிதனைத் தேற்றி அவன் தொய்வின்றி இயங்கத் துணை நின்றதில். இன்றும் மதம் மற்றும் வழிபாடு இந்த இன்றியமையாத தொண்டைப் புரிகின்றன. இதன் மறுபக்கம் மதங்களின் எல்லைக் கோடு சம்பந்தப் பட்டது. சர்ச்சையே இப்படி ஒரு எல்லைக் கோடு கிடையாது என்பது தான். என் மதம் […]

நினைவுகளின் சுவட்டில் – (74)

This entry is part 7 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

ரஜக் தாஸ் வந்துவிட்டாலே செக்‌ஷன் கலகலப்பாகி விடும். அவன் செய்யும் ஒவ்வொரு காரியமும் தமாஷாகத் தான் இருக்கும். அவன் இதற்காக ஏதும் சிரமப் பட வேண்டியதில்லை. ஒன்றுமில்லாத எதுவும், ஒன்றுமில்லாத சப்பென்று நமக்குத் தோன்றும் எதுவும் அவனிடத்தில் உயிர் பெற்றுவிடும். தமாஷ் செய்வதற்கு, அமைதியாக இருக்குமிடத்தில் கலகலப்பூட்டுவதற்கு ஏதும் சம்பவங்கள், கிறுக்குத் தனமான சேஷ்டைகள், அல்லது சிரிப்பூட்ட வென்றே யோசித்துத் தயார் செய்யப்பட்ட ஹாஸ்யப் பேச்சுக்கள், இப்படியெல்லாம் அவனுக்கு எதுவும் தேவையில்லை.   சாதாரணமாகப் பேசிக்கொண்டிருப்போம். இடையில் […]