நகரங்களும் நகர வாழ்க்கையும் கிராமங்களிலிருந்து எவ்வாறு வேறு படுகின்றன? நகரங்களும் நகரவாசிகளும் சுகவாசிகளாகவும் சூட்சமம் மிக்கவர்களாகவும் கிராமவாசிகள் அப்பாவிகள் என்றும் சித்தரித்துப் பல திரைப் படங்களும் எழுத்துலகப் படைப்புகளும் வந்துள்ளன. இது சரியான அணுகுமுறை தானா என்று தொடராமல் நகரங்களுக்கே உரித்தான சில பிரச்சனைகளைப் பார்ப்போம். ஒரு நகரம் உருவான பின் சுற்றியுள்ள எல்லாப் பகுதிகளுக்குமான வணிகமும் சேவைகளும் நகரில் மென்மேலும் வளருகின்றன. தன்னால் தாக்குப் பிடிக்க முடியாத ஒரு ஜனத்திரளை நகர் வரவேற்று சமாளித்து அனுப்புகிறது. […]
அவர்கள் கறுப்பு நிறத்தில் உடையணிந்தவர்கள். முகத்திலும் கறுப்பு நிற கிறீஸ் பூசிக் கொண்டவர்கள். விரல்களில் கூரிய போலி நகங்களை அணிந்திருப்பவர்கள். பெண்களைத் தாக்குபவர்கள். அத்தோடு நன்றாக ஓடக் கூடியவர்கள். எந்த உயரத்திலிருந்தும் குதிக்கக் கூடியவர்கள். இப்படிப் பல கதைகள் அம் மர்ம மனிதர்களைப் பற்றி அன்றாடம் கிளம்பிக் கொண்டே இருக்கின்றன. பல பெண்கள் இம் மர்ம மனிதர்களால் காயமடைந்திருக்கின்றனர். சாட்சிகளாக அவர்களது உடல்களில் நகக் கீறல் காயங்களும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட காயங்களும் இருக்கின்றன. தாக்குதலுக்குள்ளாகியும், நேரில் […]
1715ம் ஆண்டு ஜூன் மாதம் ஐந்தாம் தேதி பிரெஞ்சு கூட்டுறவு சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளும், மேல் ஆலோசனை சபையினரும் கூடியிருந்தனர்: குற்றவாளியாக அவர்கள் முன்னால் நிறுத்தப்பட்டிருந்தவர் நைனியப்பிள்ளை. கண் துடைப்புபோல நடந்தேறிய ஆலோசனைக் குழுவினரின் விசாரணைக்குப் பிறகு ஏற்கனவே எழுதிவைத்திருந்த தீர்ப்பு வாசிக்கப்பட்டது. “குற்றவாளியான நைநியப்பிள்ளை 50 சவுக்கடிகள் தோளில் பெறவேண்டுமென்றும், மூன்று வருஷம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமென்றும், 8888 வராகன்களைப் பிரெஞ்சு கூட்டுறவு சங்கத்திற்கு (அப்போதெல்லாம் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி என்ற […]
சமச்சீர் கல்விக்கு அடுத்தபடியாக புகைந்து கொண்டிருக்கும் பிரச்சனை, ஓமந்தூரார் அரசு எஸ்டேட்டில் கட்டப்பட்டுள்ள 1200 கோடி கட்டிடம் என்ன ஆகும் என்ற கேள்வி. இந்த விவகாரம் முதலில் தொடங்கியது தற்போதைய முதல்வரிடமிருந்து தான். ஏழு வருடங்களுக்கு முன்னால், 96 ஆண்டுகால பழமை வாய்ந்த குவீன் மேரிஸ் கல்லூரி இருந்த இடத்தில், புதிய தலைமை செயலகம் கட்ட ஜெயலலிதா முயன்ற பொது, பாரம்பரியம் மிக்க ஒரு கட்டிடத்தை இடிக்கக் கூடாது என்ற பொதுவான கருத்தால் அந்த முயற்சி தடைபட்டது. […]
ரஜக் தாஸ், மனோஹர் லால் சோப்ரா, மிருணால் காந்தி சக்கரவர்த்தி என்றெல்லாம் 1953 நினைவுகளைப் பற்றி எழுதும்போது, அந்தக் காட்சிகளும் அவர்கள் குறும்பு நிறைந்த முகங்களும் இன்னமும் மனத்தில் திரையோடுகின்றன. சின்ன உத்யோகம் தான். குறைந்த சம்பளம் தான். கடுமையான வெயிலும், மழையும், ஒரு ஸ்வெட்டராவது வேண்டும் குளிரும், ஹோட்டல் சாப்பாடும் எல்லாம் எங்கோ தூர தேசத்தில் தூக்கி எறியப்பட்ட வாழ்க்கை என்று அம்மாவும் அப்பாவும், தங்கை தம்பிகளும் நினைக்கலாம் தான். ஆனால் அந்த நாட்கள் […]
அன்னா ஹசாரே ஆதரவு பேரணிகள் மும்பையிலும் மும்பை புறநகர்ப் பகுதிகளிலும் தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கின்றன. பேரணி, போராட்டம், உண்ணாவிரதம் என்றாலே மும்பையில் ஆசாத் மைதானம் தான் எல்லோருக்கும் நினைவில் வரும். இந்திய சுதந்திர போராட்டத்தின் குரல் ஒலித்த ஆசாத் மைதானம் இன்று அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிக்கும் மையமாக மாறி இரண்டாவது சுதந்திர போராட்டம் என்று பதாகைகளில் காந்தியும் பகவத்சிங்கும் அருகருகே இருந்து வாழ்த்த மழையில் நனைந்துக் கொண்டிருக்கிறது. நேற்று (18/8/2011)நானும் என் தோழியர் மலையாள எழுத்தாளர் […]
இனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துக்கள்
– A.P.G சரத்சந்திர தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை அன்றைய காலத்திலிருந்தே உலகத்தில் யுத்தங்கள் நடந்திருக்கின்றன. யுத்தத்தின் இயல்பே குரூரமானது. எனினும் முன்னையவர்கள் ஒழுக்க மேம்பாடுகளுக்கமையவே யுத்தம் செய்தார்கள். ஒழுக்க மேம்பாடுகளுக்கமைய யுத்தம் செய்வது பற்றி கற்றுத் தரும் மகாபாரதம் போன்ற மகா காவியங்கள் அக் காலத்தில் எழுதப்பட்டன. இராமன், இராவணன் யுத்தமானது இராமாயணம் எழுதப்படக் காரணமானது. மகா அலெக்ஸாண்டர் அரசருக்கும் கூட யுத்த களத்தின் கௌரவங்கள், ஒழுக்க மேம்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. அதனால் அவரும் […]
சமீபத்தில் கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத எனது சொந்த ஊருக்குப்போன போது வீட்டிற்கு பக்கத்து தெருவை கடக்க நேர்ந்தது. அப்போது ஒரு வீட்டின் மாடியில் டி.வி ஆண்டெனாவைப் பொருத்தியிருந்த ஒரு கம்பியை பார்க்க நேர்ந்தது. ஆண்டெனாவில் இருந்து போகும் ஒயரை காணவில்லை. ஆனால், ஒரு கேபிள் டிவி ஒயர் வீட்டிற்குள் போவதை பார்க்க முடிந்தது.(வான் வழியாக வந்ததெல்லாம் கேபிள் வழியாகவும், கேபிள் வழியாக வந்ததெல்லாம் வான் வழியாகவும் வருவதை நினைத்துப்பார்க்க முடிந்தது. உபயம் – சுஜாதா சார்) […]
‘ஹெஸ்’ ஐ வேறொரு பிரிட்டிஷ் அமைச்சரும் சந்திக்கிறார். லார்ட் பீவர் ப்ரூக் என்றழைக்கப்பட்ட அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் எரிசக்திதுறை அமைச்சர் பொறுப்பை வகித்தவர். இட்லரின் நண்பரும் ரெய்ஷ் அரசாங்கத்தின் தலைவர்களுள் மூன்றாவது இடத்தை வகித்திருந்தவருமான ‘ஹெஸ்’ பிரிட்டனுக்குள் பிரவேசித்து, நான்கு மாதங்கள் கழிந்திருந்தன. இருபத்து நான்கு மணிநேரமும் உளவியல் மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை வைத்திருந்த நேரம். தமது பயணம் தாம் எதிர்பார்த்த பலனை தரவில்லை என்பதில் ஹெஸ்ஸ¤க்கு மிகவும் வருத்தம், இந்த வருத்தத்துடன் […]