கிழக்கில் சூரியனை இழந்து போயுள்ள ரமணி

This entry is part 27 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

            சூரியன் உதிக்கும் கிழக்கில் தனது வாழ்வின் சூரியன் பறித்தெடுக்கப்பட்டமையால் இளமையிலேயே வாழ்க்கை முழுதும் இருண்டு போயுள்ள இன்னுமொரு இளம் தாயை கடந்த சில தினங்களுக்கு முன்னரான திருகோணமலைப் பயணத்தின்போது எமக்கு சந்திக்கக் கிடைத்தது. இது எம்மிடம் அவர் பகிர்ந்து கொண்ட அவரது நீண்ட கதையின் சுருக்கம்.   அவரது பெயர் ஆரியரத்னம் ரமணி. இருபத்தெட்டு வயதாகும் அவர் இரு பிள்ளைகளின் தாய். இளையவர் நிலுக்ஷன் முன்பள்ளி செல்லும் வயதில் இருக்கிறார். மூத்தவர் தனுஷ் மூன்றாம் ஆண்டில் […]

(76) – நினைவுகளின் சுவட்டில்

This entry is part 15 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

மிருணால்தான் எனக்கு ஆத்மார்த்தமாக மிகவும் நெருங்கிய நண்பன். இப்படியெல்லாம் இப்போது சுமார் 60 வருடங்களுக்குப் பிறகு சொல்கிறேனே, ஆனால் அவனோடு பழகிய காலத்தில், ஒரு சமயம், நானும் அவனும் மிகுந்த பாசத்தோடு குலாவுவதும், பின் எதிர்பாராது அடுத்த எந்த நிமடத்திலும் ஏதோ ஒரு உப்புப் பெறாத விஷயத்துக்கு கோபங்கொண்டு ஒருத்தரை ஒருத்தர் வருத்துவதுமாகவே பழகினோம். பின் எந்த நிமிடமும் அடுத்த நாள் எதுவுமே நடக்காதது போல குலாவிக்கொள்வோம். இந்த ஊடலும் கூடலும் பக்கத்திலிருக்கும் எவருக்கும் தெரிய வராது […]

கதையல்ல வரலாறு -2-2: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்

This entry is part 13 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

புதிய பொறுப்பினை ஏற்ற நைநியப்பிள்ளைக்குத் தரகர் வேலையின் சாமர்த்தியமென்பது வாங்குபவர் விற்பவர் ஆகிய இருதரப்பினரினரின் நம்பிக்கையைபெறுவதென்ற பால பாடத்தை நன்கறிந்தவர். தரகர் நமக்காக பேசுகிறார் என்ற எண்ணத்தை அவர்களிடத்தில் ஏற்படுத்திதருதல் கட்டாயமென்பதில் தெளிவாக இருந்தார். மறுநாள் உள்ளூர் தரகர்களின் கோபத்தை குறைக்க நினைத்து அழைத்திருந்தார். அவர்களும் வந்திருந்தார்கள். – முத்தியப்ப முதலியார் கேட்டுக்கொண்டதன்பேரில் நீங்கள் 110 வராகனுக்கு சம்மதித்திருந்தீர்கள். பிறகு என்ன நடந்தது. ஒரு விலைக்கு இணங்கிய பிறகு அதை ஏற்றுக்கொள்வதுதானே முறை. எதற்காக கவர்னர் மாளிகையில் […]

இன்னும் பிறக்காத தலைமுறைக்காக : திரு.தியடோர் பாஸ்கரன்

This entry is part 5 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

அழிந்து வரும் இயற்கையின் மீதான தன்னுடைய வருத்தத்தை “இன்னும் பிறக்காத தலைமுறைக்காக” என்னும் நூலில் கனத்த இதயத்துடன் பதிவு செய்திருக்கிறார் திரு.தியடோர் பாஸ்கரன் அவர்கள். தமிழ் நாட்டில் காட்டுயிர் பற்றிய ஆர்வம் குறைவாக இருப்பது பற்றியும், காட்டுயிர் தொடர்பான பல சொற்கள் தமிழில் வழக்கொழிந்து வருவது பற்றியும் வேதனை தெரிவிக்கிறார். புலிகள் ஏன் பாதுகாக்கப் பட வேண்டும் என்ற இவருடைய விளக்கம் தமிழ் நாடு அரசின் பாட புத்தகங்களில் இருக்க வேண்டும். ஆசிய சிங்கங்கள் குஜராத்தின் ஒரு […]

குழந்தைகளும் சமூக அரசியல் போராட்டங்களும்

This entry is part 2 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

அன்னா ஹாஜாரேவின் உண்ணாவிரதப்போராட்ட மேடை குழந்தைகளால் நிரம்பியது. இன்று (28.8.2011) காலை அவர் உண்ணாவிரதம் ஒரு சிறு குழந்தையால் முடித்துவைக்கப்பட்டது. குழந்தைகள் வீடுகளில் பெற்றொரின் அன்பரவணைப்பிலும் பள்ளிகளில் கல்வி கற்கவும்தான் செய்ய வேண்டும். அரசியல் சமூகச் சிந்தனைகள் அவரகளுக்குத் தேவையில்லை. இதைக்கருத்தில் கொண்டே பள்ளிப்பாடங்கள் எதையும் அடித்தளத்திலிருந்து அக்குவேறு ஆணிவேறாகப்பிரித்து உணர்ச்சிகளைத் தூண்டும் விதமாக எழுதப்படுவதில்லை. 10ம் வகுப்பிலிருந்தும் கூட அவர்கள் உணர்ச்சிகளைத் தட்டியெழுப்பும் பாடங்கள் எழுதப்படவில்லை. உண்மைகள் உள்ளவாறே அப்படியே சொல்லப்படும். ஆனால் ஹசாரே அதைப்பற்றியெல்லாம் […]

சமச்சீர் கல்வி : பிரசினைகளும் தீர்வுகளும்

This entry is part 46 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

கல்விமுறை பல விவாதங்களுக்கும், பொதுக் கருத்து உருவாக முடியாத படி தடங்கல்களுக்கும் பிறகு தி மு க ஆட்சிக் காலத்தில் சமச்சீர் கல்வி என்ற பெயரில் வேறு வேறு சரடுகளாகவும் பிரிந்து செயல்பட்டுக் கொண்டிருந்த கல்வித் திட்டங்களை ஒருங்கே கொண்டு வந்து ஒருமைப் படுத்தும் திட்டமாக முன்வைக்கப் பட்டது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்பு சமச்சீர் கல்விக்கு எதிராகவோ, ஆதரவாகவோ எந்தக் கருத்தும் முன்வைக்கப்படாமல், திமுகவின் செயல் திட்டம் என்ற முத்திரை குத்தி பாடப் புத்தகங்கள் வினியோகமும், […]

பேசும் படங்கள் ::: கோவிந்த் கோச்சா

This entry is part 40 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

அரசு என்னமோ, நம்பர் பிளேட்டிற்கு வரைமுறைகள் சட்டம் வைத்திருக்கு… இதோ இந்த சட்ட வல்லுநர் ( கார் கண்ணாடியின் வலது மேலோரம் வக்கீல் குறியீடு ) நம்பர் பிளேட்…. சொல்வது…                                       கீழிருப்பது, பொது ஆஸ்பத்திரியல்ல… சென்னை அப்போலோ நுழைவுதாண்டி உள்ள காஃபி பார் ஓரம் கிடக்கும் ஒரு நோயாளி…. நிர்வாகத் […]

இந்தியா அதிரும் அன்னா ஹசாரே எழுச்சி….

This entry is part 39 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

இந்தியாவின் உள்துறை அமைச்சர் வேதனையான முகத்துடன் , ”அன்னா ஹாசாரேவை கைது செய்யும் முடிவு வலிதரக்கூடைய விஷயம்” – என்று தொலைக்காட்சியில் சொன்ன போது தான், இந்திய குடிமகன்கள் பலருக்கு வலி பரவியது ஆரம்பித்தது… அதன் வெளிப்பாடு தான் இன்று இந்தியா எங்கும் திரளும் இந்த ஆதரவு… “பாரத் மாத்தா கி ஜெ…” “இன்குலாப் ஜிந்தாபாத்..” எனும் கோஷங்கள் கிளர்ந்தபடி, சைக்கிள், பைக், கார், வேன் நடை… என்று பாரத தேசிய மணிக்கொடியை கையில் ஏந்தி திரளுகிறதே […]

யுத்தத்தின் பிறகான தேர்தலும், சர்வதேச அழுத்தங்களுக்கான தீர்வுகளும்

This entry is part 31 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

இலங்கையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளையும், அவை குறித்த தமிழ்நாட்டின் உணர்வுகளையும், நாட்டின் அரசியல் நிலவரங்களையும் மிகச் சரியான முறையில் புரிந்து கொள்ள ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கு முடியாமல் போனமையால், அதற்குப் பதிலாக பெரியதொரு நஷ்ட ஈட்டைச் செலுத்த இலங்கைக்கு நேர்ந்தது. அதே போல விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்த நீதமான பார்வை இல்லாத காரணத்தால் அதற்காக இந்தியாவுக்கும் பெரியதொரு நஷ்ட ஈட்டைச் செலுத்த நேர்ந்தது. விடுதலைப் புலிகளுக்கெதிராகச் செய்யப்பட்ட யுத்தத்தின் போது, அதைத் தடுக்கவென இந்தியாவிடமிருந்து எந்தவொரு உறுதியான […]

வெளிச்சத்திற்கு வரும் தோள் சீலைக் கலகம்

This entry is part 30 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

– எந்தவொரு நிகழ்வுக்கும் மறுபக்கம் உண்டு. ஆனால் பெரும்பாலும் ஏதேனும் ஒரு பக்கமே உரத்த குரலிலான பிரசாரத்தின் விளைவாகப் பார்வையில் படுவதும் பொதுப் பிரக்ஞையில் பதிந்து போவதுமாகிவிடுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் திருவாங்கூர் சமஸ்தானத்தின்கீழ் இருந்துவந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் நேர்ந்த மிக முக்கிய சமூக நிகழ்வு என்று சொல்லத் தக்க தோள் சீலைக் கலகம் இப்படியான ஒன்று. இதுவரை அறியப்படாத அதன் மறுபக்கம் இப்போது சென்னை குரோம்பேட்டையிலிருந்து இயங்கிவரும் தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம் […]