Articles Posted in the " கதைகள் " Category

 • நீ  வருவாய்  என…

  நீ  வருவாய்  என…

                           வெங்கடேசன் ராஜமோகன்     ” வாசு “….   ” சார் ” ……   வண்டிய பைபாஸ்ல விடுங்க…… அப்படியே “சாரதா இன் ” ல நிறுத்துங்க. டிபன் சாப்பிட்டுவிட்டு போவோம் .   ” சரி சார் ” …   தன் முதலாளியின் சொல்லுக்கிணங்க ,  அந்த சொகுசு காரை  அடுத்த ஐந்து நிமிடத்தில் அந்த ஹோட்டலின் பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தினான்…   காரை விட்டு இறங்கியவாறே,   […]


 • பார்த்தாலே  போதும்

  பார்த்தாலே  போதும்

    ஆ. மீனாட்சி சுந்தரமூர்த்தி  என்னங்க எப்படி இருக்காங்க?  குளுகோஸ் ஏறுது, அதிலேயே மருந்துஏத்தியிருக்காங்க.சரி  குளிச்சிட்டு வாங்க,,இட்டிலி எடுத்துவைக்கிறேன்ஆவி பறக்கும் இட்டிலியை எடுத்து  தட்டில்வைத்து தேங்காய் சட்டினி , மிளகாய்ப் பொடி,,நல்லெண்ணெய்  ஊற்றி எடுத்துச் சென்று மேசையில் வைக்கவும், சிவா தயாராகி வெள்ளைச் சீருடையில் பளீரென வந்து அமரவும் சரியாக இருந்தது.ஏங்க என்னதான் சொல்றாங்க?ஏதாவது  கோளாறு இருந்தாதானே சொல்ல,அப்படீன்னா,சர்க்கர வியாதி,இரத்த அழுத்தம்,  உப்பு  ,இதயக் குறை ஒன்றும் இல்லை,இல்லைனு சொல்லவும் நிறைய டெஸ்ட்எடுக்கறாங்க, இதுவரை எவ்ளோ கட்டியிருக்கீங்கபத்தாயிரம்ரெண்டு […]


 • இருள் சூழ்ந்த பௌர்ணமி!

  இருள் சூழ்ந்த பௌர்ணமி!

      கிருஷ்ண பிரியா மயில்சாமி    அன்று புத்தாண்டு, அலுவலகத்தில் ஆரவார கொண்டாட்டம். புத்தாடைகள், கனிகள், பலகாரம் என கோலாகலமாக இருந்தது அந்த காலைப்பொழுது. பரிமாற்றங்களுக்கு இடையில் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டனர் உங்களது இப்புதுவருட குறிக்கோள் என்னவென்று. அப்போது பெரிதாக அல்லது உறுதியாக எதையும் கூறிய ஞாபகம் இல்லை அவர்களுக்கு. மதிய உணவு இடைவெளிக்கு பின்பு அலுவலகம் அடைக்கப்பட்டது.   அந்த இளம்காதலர்கள், சிறு மோதலுக்கு பின் முடிவெடுத்தனர் இருசக்கரவாகனத்தில் ஒரு சிறு தூர பயணம் செல்ல. […]


 • க்ரோ எனும் கிழவர்

      சார்ல்ஸ் டு லிண்ட் தமிழாக்கம்: மைத்ரேயன்  (சார்ல்ஸ் டு லிண்ட் என்பவர் எழுதிய ஒரு அதிபுனைவுக் கதையை மொழி பெயர்த்துள்ளேன். இவர் அதிபுனைவுலகில் சற்று நன்கு தெரிய வந்தவர்.  கதை பற்றிய விவரங்கள் கடைசியில் கொடுத்திருக்கிறேன். தலைப்பில் உள்ள க்ரோ என்பதை மொழிமாற்றம் செய்யாததற்கு ஒரு காரணம், க்ரோ என்ற பழங்குடி அமெரிக்கர்களின் சமூகக் குழுவை அது பூடகமாகச் சுட்டுகிறது என்பது ஒரு காரணம். ஆனால் அதி புனைவு என்பதால் இந்த கனடிய/ டச்சு எழுத்தாளர் மையப் பாத்திரத்தை கருப்பினத்தவராகச் சித்திரிக்கிறார்.  கதைக்குள்ளும் க்ரோ என்பதை அவர் பெயர் […]


 • ஜீவ கரிகாலன் சிறுகதைத் தொகுப்பு

      அழகியசிங்கர்   ஜீவ கரிகாலன் சிறுகதைத் தொகுப்பின் பெயர் ஒரு நீளமான பெயர் “ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரசியமான கதை & பிற கதைகள்’ குந்தவை என்ற பெண் எழுத்தாளரின் கதைத் தொகுப்பின் பெயர் “யோகம் இருக்கிறது.’  இந்த இரண்டு தொகுப்புகளில் உள்ள கதைகளில் மூன்று கதைகள் வீதம் இரண்டு தொகுதிகளையும் எடுத்துக்கொண்டு 6 இலக்கிய நண்பர்கள் 19ஆம் தேதி பேச எடுத்துக்கொண்டோம். பொதுவாக இரண்டு தொகுப்புகளில் […]


 • பாடம்

  பாடம்

        ஆ. ஸ்டாலின் சகாயராஜ் முறுக்கு மூக்கங்கயிறு     துளைக்காத காளை அடக்கம் அதை மறந்து     குதிக்கும் காலால் பிடித்து அடக்குபவரை    உதைத்து தாக்குகிறது கொம்பை முறைத்து காட்டுகிறது      கோவம் தலைக்கேறுகிறது பாவம், அடக்கி ஆள்பவனோ      கயிற்றின் பிடியை விட்டு விட்டான் குதித்தெழுந்து புறப்பட்டதோ     கொதிக்கும் எண்ணையில் விழுந்த வேகம்   சட சட வென விரைந்த கால்கள்  விடு விடு வென ஊக்கம் இழந்து வதங்கிப் […]


 • அஞ்சுவாசல் கிட்டங்கி…

      மஹ்மூது நெய்னா .எஸ் – கீழக்கரை   காற்றடி காலம் அது..பொழுது புலரத் தொடங்கி இருந்தது..   வடக்கே ஊர் மக்களை திகிலூட்டும் அஞ்சுவாசல் கிட்டங்கி இருந்த திசையில் இருந்து ஆந்தைகளின் கூகை குளறல்கள் அலையோசையையும் மிஞ்சி காதில் சன்னமாக வந்து மோத தொடங்கியது… தூரத்தில்  தெரிந்த பழைய போர்ட்  ஆஃபீசை ஒட்டி இருந்த டச்சு அரசின் ரெஸிடண்ட்டாக இங்கு பணியில் இருந்த டெர்ரிக் ஓ’பிரைனின் நினைவுத்தூனில் யாரோ  மெழுகு வர்த்தி ஒன்றை ஏற்றி இருக்க […]


 • நில்லாதே  போ பிணியே …

  நில்லாதே  போ பிணியே …

                   ஜனநேசன்    மனைவி   விம்மி விம்மிக் கேவினாள் ; வறண்ட  உதடுகளைத்  தாண்டி குரல் எழும்பவில்லை.; கண்ணீர் பொங்கியது. கணவன்   அவளது தோளைப்  பரிவுடன்  தொட்டு  “ அழுவதை  நிறுத்து; யோசிப்போம்; ஏதாவது வழி பிறக்கும்.  “ என்றான். “ பச்சைமண்ணுக   ரெண்டும்  பசி பொறுக்காம அழுகிறதைப்  பார்க்க  முடியலை .பெத்தப்பிள்ளைகளுக்கு கஞ்சி ஊத்த வக்கத்துப் போனோம்; சாவதைத்  தவிர  வேற வழி  தெரியலை. ரயில்ல […]


 • அந்நிய மண்ணில்

    ஹமீது தம்பி காலையில் கீழ்வானம் வெளுக்க ஆரம்பிக்குமுன்பே ,கரையை அடைந்துவிட்டது . “தம்பிகளா எழுந்திருங்க’ என்று எழுப்பி விட்டார் கார்சா. இருவரும் பதறியபடி எழமுயன்றனர்.  ஒன்னும் அவசரமில்லை மெதுவா எழும்புங்க என்றார். வல்லம் கரைக்கு சிறிது தூரத்தில் நின்றிருந்தது .முதலில் ஹனீபா நீரில் இறங்கினான் .அவன் நெஞ்சுவரை ஆளம் இருந்தது . தொடர்ந்து பாண்டியனும்,பாரியும் இறங்கினார் .ஏற்கனவே ஹனீபா கரையை நோக்கி நீந்திக்கொண்டிருந்தான் .நீந்தவேண்டிய தேவை இல்லாமல்தான் இருந்தது .நடந்தே போகலாம்தான் .இருந்தாலும் எல்லோரும் நீந்தியே […]


 • என் ஜீவப்ரியே ஷ்யாமளா

  என் ஜீவப்ரியே ஷ்யாமளா

      குரு அரவிந்தன்   சியாமளா அம்மாளின் பாட்டைக் கேட்ட நாளில் இருந்து அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை என் மனதில் துளிர்விட்டிருந்தது. கணீரென்ற அந்தக் குரல் என்னை எங்கோ இழுத்துச் சென்றது.    ஈழமண்ணில் பிறந்து, ஜேர்மனிக்குப் பெற்றோர் புலம் பெயர்ந்ததால் ஜெர்மனியில் தான் நான் வளர்ந்தேன். படிப்பிலே கவனம் செலுத்தினாலும், ஓய்வு நேரங்களில் பாட்டுக் கேட்பது, அதைப்போலப் பாடிப்பார்ப்பது, சினிமா படங்கள் பார்ப்பது என்று என் வாழ்க்கை சந்தோஷமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. […]