நாவல்  தினை -அத்தியாயம் 29 – CE 5000

This entry is part 5 of 5 in the series 27 ஆகஸ்ட் 2023

மலைப் பிரதேசத்துப் பறவைக் கூச்சலில் கர்ப்பூரமய்யன் விழித்தெழுந்த பொழுதில் ஆமைகள் பறக்கத் தொடங்கின.   திருவல்லிக்கேணியில் இருந்து பெயர் தெரியாத இங்கே வந்து ஒரு வாரமாகி விட்டது. திருவல்லிக்கேணியில் யார் உண்டு கர்ப்பூரத்துக்கு? பெண்டாட்டி கபிதாள் தேள்வளையில் கை நுழைத்து கடுமையான விஷம் உள்புக மூளை செயலற்று நின்றுபோய் இறந்துவிட்டாள். ரெண்டாமத்துப் பெண்டாட்டி பூரணி கிணற்றில் சாடி மரித்தாள். கர்ப்பூரத்தின் ஜீவிதம் தொடங்குவதற்கு முன்பே முடிந்து விட்டது. அப்படியுமா ஒருத்தன் சகல விதமான பிரச்சனைகளில் இருந்தும் தப்பி வருவான் […]

நாவல்  தினை              அத்தியாயம்    28

This entry is part 5 of 6 in the series 20 ஆகஸ்ட் 2023

பிரதி நீலன் வைத்தியர் கைகளை ஒன்றோடொன்று இறுகப் பற்றி சிக்கிமுக்கிக் கற்களை நெருங்க வைத்துத் தேய்ப்பது போல் ஏழெட்டு முறை தேய்த்தார். விழித்து மூடிய இமைகள் மேல் வெதுவெதுப்பான உடல் சூட்டோடு  அந்தக் கரங்களை விரித்து வைத்து மலர்த்தினார்.  சுற்றுப்புறம் எங்கும் மூக்கைக் குத்தும் மருந்து வாடையும் இருளின் வாடையுமாக எங்கே தொடக்கம், எவ்விடம் முடிவு என்று புதிரானது. அவர் பெயர் நீலன் தான். யாரோ அவரை பிரதி நீலன் என்று பெயர் சொல்லச் சொல்கிறார்கள். ஆல்ட் […]

நாவல்  தினை              அத்தியாயம் இருபத்தேழு  CE 5000

This entry is part 4 of 11 in the series 13 ஆகஸ்ட் 2023

   மேசை மேல் தலையில்லாத குழலனின் உடல் அசைந்து கொண்டிருக்க தலை அறையை தரையிலிருந்து மூன்றடி உயரத்தில் சுற்றி வந்து கொண்டிருந்தது.  அக்ரெலிக் பெயிண்ட் வாடை தூக்கலாக வந்து கொண்டிருந்த இடம் அது. எந்தத் தலைமுறையிலோ அக்ரெலிக் வண்ணம் தேள்க் கூட்டத்துக்கு ஒவ்வாமை தருவதாக குணம் கொண்டிருந்தது. தேளர்கள் நடமாட்டத்தைக் கிட்டத்தட்ட அறவே இல்லாமல் செய்யச் சுவர்களை தினமும் அக்ரலிக் வண்ணமடித்து அந்த வாடை நீங்காமலும் குறையாமலும் கவனம் வைத்திருப்பது வழக்கம்.  குயிலியின் நாசியில் பலமாக அறைவதாக […]

நாவல்  தினை              அத்தியாயம் இருபத்தாறு

This entry is part 8 of 8 in the series 6 ஆகஸ்ட் 2023

    ஊர்வலம் பிரம்மாண்டமானதாக இருந்தது.   கலந்து கொண்ட ஜீவராசிகளில் தரையில் சுவாசிக்க முடியாதவை கூட பெரிய பாலிவினைல் தொட்டிகளில் நீர் நிரப்பி அதில் சுவாசித்து உலாவில் கலந்து கொண்டன.  நெருப்பின்றி கந்தக உருண்டைகளை நீண்ட குழாய்களில் நிரப்பி  அதிர்வெடிகள் நிலமதிர வெடித்த நூறுகால் பூரான்கள் இரண்டு வரிசையாக அகலவாட்டில் நடந்து வந்தன.  இசைக்கருவி எதுவோ நாராசமாக ஒலித்தது. நடுவே இரு குழுக்களாக வெல்வெட் போல் மெத்தென வழுவழுத்த உடல் கொண்ட செவிப் பூரான்கள்   அந்த அகண்ட […]

 பூர்வ உத்தராங்கம்

This entry is part 5 of 6 in the series 30 ஜூலை 2023

                                                  இந்த நேரத்தில் ஏமப் பெருந்துயில் மண்டபத்தின் எட்டாவது படுக்கையில், என்றால் விருந்தினர் பேழையில்   மிக்க மரியாதைக்கும் அன்புக்கும் உரிய ஒருவர் வந்திருக்கிறார். தேளரசு செய்யும் உன்னதமான 50வது நூற்றாண்டில்லை. அதற்கு மிகப் பிந்தைய, மூன்றாம் நூற்றாண்டு மனிதர்.    கவிஞர் அவர். மருத்துவர். மருத்துவர் நீலனார் என்னும் கவிஞர். ஆயுள் நீடிக்க அவர் காலத்துக்கும் முற்பட்ட ஓலைச்சுவடியில் பதிந்து வைத்த அறிவைக் கெல்லி எடுத்துக் கொண்டு வந்தவர். சுவடி சொற்படி மூலிகைகளைத் தேடித் தெளிவுற்று இனம் […]

நாவல்  தினை              அத்தியாயம் இருபத்தைந்து

This entry is part 4 of 6 in the series 30 ஜூலை 2023

   நீலன் வைத்தியரின் உடல் காலப் படகில் நாற்பத்தேழு நூற்றாண்டுகள் கடந்து போவதை மிகுந்த சிரமத்தின் பேரில் ஏற்று ஐம்பதாம் நூற்றாண்டு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.   நுன்துகள் <-> முழுத்திரள் இயந்திரம் மூலம் ஆப்பிள் பழங்களின் நுண்துகள்கள்  பிரபஞ்சத்தில் எங்கோ இருந்து வரவழைக்கப்பட்டு, அவை முழுப் பெருந் திரளாக்கப்பட, ஆப்பிள்களாயின. சுவை இல்லாத அந்த ஆப்பிள்களை பேனாக்கத்தி கொண்டு கர்ப்பூரமய்யன் பவ்யத்தோடு நறுக்கி குயிலி கொடுத்த ஒளிரும் வெள்ளித் தட்டில் நிரப்பி நீலன் வைத்தியர் முன் வைத்தான். […]

 நாவல்  தினை       அத்தியாயம்  இருபத்துநான்கு பொ.யு 1900   

This entry is part 6 of 6 in the series 23 ஜூலை 2023

  ’உங்கள் காலப்படகில் ஏற்பட்ட பழுது நீக்குதல் இதுவரை எண்பது விழுக்காடு முடிந்துள்ளது. செலவான பொதுக் காலம் நான்கு மணி நேரம். இன்னும் நாற்பத்தைந்து நிமிடங்களில் பணி முழுக்க நிறைவேறும்.  இனி அனுப்பப் போகும் வருடம் மாதம் நாள் மணி நிமிடம் வினாடிக்கு உங்கள் கடியாரங்கள் மற்றும் கணினிகளில் காலத்தை நகல் செய்து  கொள்வது அவசியம்’.  படகின் சுவர் அதிர்ந்து தகவல் உரைத்து ஓய்ந்தது. ’என் கணக்குப்படி ஆறு தனித்தனி நாட்கள் பழுது திருத்தச் செலவாகி உள்ளன. […]

நாவல்  தினை              அத்தியாயம் இருபத்துமூன்று

This entry is part 6 of 7 in the series 16 ஜூலை 2023

    இரண்டாம் நாள் மாநாடு.   ராத்திரி எட்டு மணிக்கு பட்டப்பாவின் கிருஷ்ணலீலா நாடகம். நாடகத்துக்கு முன் அரைமணி நேரம் போல் பூரணி கச்சேரி என்று ஊர் எல்லாம் தமுக்கு அடித்து விளம்பரம்.  பூரணியைத் தெரியாதவர்கள் கூட யாரது என்று ஆர்வத்தோடு விசாரிக்கிற அளவு பிரபலம் நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டு போவதை கர்ப்பூரமய்யன் கவனிக்கத் தவறவில்லை.  வெள்ளிக்கிழமை ஒரு பிரார்த்தனைப் பாட்டு. ரெண்டு பாரதியார் பாட்டு. ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு மணி நேரக் கச்சேரி என்று பெரிய […]

நாவல்  தினை              அத்தியாயம் இருபத்திரண்டு

This entry is part 6 of 6 in the series 9 ஜூலை 2023

    மதுரைப் பட்டணம் களைகட்டியிருந்தது. வழக்கமாகவே இருபத்து மணி நேரமும் கோவிலுக்கு தரிசனம் செய்யத் தேசம் முழுவதிலிருந்தும் வந்திருக்கும் யாத்ரீகர்கள் ராத்திரி ரெண்டு மணிக்கு மதுரை மண்ணில் கால் பதித்தாலும், அடுத்த பத்தாவது நிமிடம் கோவிலுக்குப் போகவும் அப்புறம் பலகாரம் பண்ணவும் ஏகப்பட்ட ஆர்வம் காட்டுவார்கள்.  ராத்திரி ஒரு மணிக்கு இட்டலி அவித்து விற்கிற தெருக்கடைகளை வேறு எங்கும் பார்க்கமுடியாது. அப்படியான இட்டலிக்கடையில் ஓரமாக மரமுக்காலி போட்டு ஒரு பெண் உட்கார்ந்திருக்கிறாள். சுடச்சுட இட்டலியும் கூடக் கருவாட்டுக் […]

ஓ நந்தலாலா

This entry is part 5 of 6 in the series 9 ஜூலை 2023

மீனாட்சி சுந்தரமூர்த்தி                                                                                        செல்வி   கல்லூரி செல்லும் பேருந்து பிடிக்க விரைந்தாள், ஆனாலும்  அது புறப்பட்டு விட்டது. ஓட்டமும் நடையுமாக வந்தவள் நின்றாள். இனி என்ன செய்வது ?   நிலையத்தைக் கடக்கும் முன் நின்றது பேருந்து, இல்லை இல்லை நிறுத்தப்பட்டது . ஆமாம் மூன்று கல்லூரி மாணவர்கள் நிறுத்தியிருந்தார்கள். நடத்துநர் இறங்கி இவளைப் பார்த்து ,சீக்கிரம்  வந்து ஏறுமா , உனக்காகதான் நிறுத்தினாங்க’ என்றார். இவள் அவர்களைப் பார்த்து நன்றிங்க என்றாள். அதில் ஒருவன் […]