17 ஆண்டுகால வகுப்பறை வாழ்க்கையின் கடைசி நாள். 30 ஏப்ரல்,1971. முதுகலை. மாநிலக் கல்லூரி. சென்னை. பொறுப்பாசிரியர், ஜேபிஎஸ் என்கிற ஜே. பாலசுப்ரமணியம். அவர் சொன்னார் ‘நாளை முதல் விடுமுறை. ஆனாலும் மே 15வரை செய்முறை தேர்வுக்கு நீங்கள் தயாராக, சோதனைக்கூடம் தினமும் திறந்திருக்கும். உதவியாளர்கள் இருப்பார்கள். நாங்களும் இருப்போம். நீங்கள் வந்து எல்லா சோதனைகளையும் எப்பொழுது வேண்டுமானாலும் செய்துபார்த்துக் கொள்ளலாம். கல்லூரிக்குப் பக்கத்திலேயே உள்ள நல்லதம்பி முதலித் தெருவில்தான் என் இருப்பிடம். ஓர் அறையில் நான்கு […]
ஆர். சீனிவாசன் 11.12.3123 அன்று வெளிவந்த நாளிதழ்களின் சில முக்கிய செய்திகளின் தொகுப்பு. தமிழ்நாட்டு செய்திகள்: நாட்டின் செய்திகள்: சர்வதேச செய்திகள் : விளையாட்டு செய்திகள்: வணிக செய்திகள்: சமையல் பொழுதுபோக்கு மற்றும் சினிமா செய்திகள்: ஞால செய்திகள் :**அரை மணிநேரம் அன்றய தலைப்பு செய்திகளை கைபேசியில் தூக்கம் கலையா கண்களுடன் படித்த சக்திவடிவேலிற்கு அடுத்தது என்ன செய்யலாம் என தெரியவில்லை. ஞால பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு வருடங்கள் ஆனா பிறகு, போன மாதம்தான் அவன் வேலையும் […]
தாரமங்கலம் வளவன் திடீரென்று ஒரு நாள் அனைத்து டிவி சேனல்களிலும், மூன்று மனிதர்கள் தோன்றி இப்படி பேசினார்கள். ’பாவங்கள் செய்தவர்கள் நரகத்திற்கு சென்று தாங்க முடியாத சித்ரவதைகளை அனுபவிப்பார்கள். அப்படி அவர்கள் சித்ரவதை அனுபவிப்பதை நாங்கள் எம லோகத்தில் நேரில் பார்த்தோம். அதனால் யாரும் பாவங்கள் செய்யாதீர்கள். ’ அந்த மூன்று மனிதர்கள் பேசும் போது அவர்கள் இயல்பாக இல்லை. ஏதோ வலி தாங்க முடியாமல் முனகிக் கொண்டே பேசுவது போல் தெரிந்தது. வளைந்து, நெளிந்து கொண்டே […]
மீனாட்சி சுந்தரமூர்த்தி விடிகாலை நான்கு மணிக்கு அந்தச் சிறிய இரயில் நிலையம் விளக்கின் ஒளியில் நிரம்பிக் கொண்டிருந்தது. ஏழுமலை வில் வண்டியை வேப்ப மரத்தடியில் நிறுத்திவிட்டு, கையிலிருந்த சாட்டையை வண்டியின் பக்கவாட்டில் செருகி வைத்துவிட்டு உள்ளே சென்று நடைமேடையில் காத்திருந்தான். மைசூர் வண்டி உள்ளே நுழைந்து வேகம் குறைத்து நின்றது, வாயிலில் நின்றிருந்த ஆறுமுகம் கைகாட்டினார். ஏழுமலை ஓடிச்சென்று பெட்டி, சாமான்களை இறக்கினான். ஆறுமுகம் மகள் கயலை இறக்கிவிட்டார். கல்யாணி ஒன்றரை வயது மேகலாவைத் தூக்கிக் […]
மீனாக்ஷி சுந்தரமூர்த்தி அந்த கிராமத்திற்குள் ஜட்கா வண்டி வருவது எப்போதாவதுதான், ஈசுவரன் கோவில் தெருவில் தடக் தடக் என்று வண்டி திரும்பியது உழவு மாடு ஓட்டிக்கொண்டு தோளில் கலப்பை ஏந்தி வயலுக்குப் போகிறவர்களும், வெற்றிலைக் கொடிக்காலில் வெற்றிலை பறிக்கப் போகிறவர்களும் யார் வீட்டிற்கு? என்று நிதானித்தார்கள். கிணற்றிலிருந்து நீர் சேந்திக் கொண்டிருந்தவர்கள் , அடுப்பில் காபி கொதிக்க வைத்துக் கொண்டிருந்தவர்கள் என்று பெண்களும் வாசலுக்கு வந்து பார்த்தனர்.’பட்டாளத்துக்காரர் மாதிரி இல்ல இருக்கு’ என்று முணுமுணுத்துக் கொண்டே உள்ளே […]
மீனாட்சி சுந்தரமூர்த்தி வானவீதியில் முழுநிலா வெள்ளை நிறமெனச் சொல்ல முடியாது பழுப்பு நிறத்தில் வெண்ணையைத் தட்டி மெழுகியது போல் நகர்ந்து கொண்டிருந்தது. . அழகு நங்கை ஒருத்தி தன் சேலைத் தலைப்பால் முகத்தை மூடிக்கொண்டது போல் அன்னத்தின் மெல்லிய தூவி மேகம் ஒன்று அதை மறைத்தது. சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகமில்லை, பெரிய கடை வீதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தேனீர்க் கடைகள் திறந்திருந்தன. காய்கறி, பழங்கள் ஏற்றி வந்தவர்களும், மயக்கம் தெளிந்து எழுந்த குடிமகன்களும், […]
‘மாப்பிள்ளைக்கு அமெரிக்காவில் வேலையாம். திருமணத்துக்குப்பின் மீராவும் அமெரிக்கா போய்விடுவாளாம்.’ என்று மற்றவர்கள் பேசும்போதும் சரி, தன் நெருங்கிய தோழிகள் ‘நீ கொடுத்துவச்சவடீ’ என்று சொல்லும்போதும் சரி, முன்னைவிட, தன் முகம் மிக அழகாக இருப்பதுபோல் உணர்ந்தாள் மீரா. ‘முகம் மட்டுமா இனி முகவரியும் அழகாக இருக்கலாம். மாப்பிள்ளை குரு என்கிற குருராஜ், கணினி மென்பொருள் பொறியாளர். இரண்டு ஆண்டுகளாக அவன் இருப்பது அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில். தனி வீடு. தனியாகவே இரண்டு ஆண்டுகள் வாழ்ந்தவன். இப்போது மீராவோடு […]
குரு அரவிந்தன் (நான் காதல் என்றேன், அவள் டேற்ரிங் என்றாள். ஒன்று மனசைத் தொட்டு உடலைத் தொடுவது,மற்றது உடலைத் தொட்டு மனசைத் தொடுவது.சரியா பிழையா தெரியவில்லை. ) எழுபது கிலே மீற்றர் வேகத்தில் சென்ற நான் சைகைவிளக்கு சிகப்பு நிறத்திற்கு மாறவே வண்டியை நிறுத்தினேன். அதே வேகத்தில் வந்த அவள் எனது வண்டிக்கு அருகே தனது சிகப்புநிற வண்டியை நிறுத்திவிட்டு உதட்டுக்குச் சாயம் பூசிக்கொண்டிருந்தாள். இப்படியான முகஅலங்காரங்களை சாதாரணமாக சைகை விளக்குகளில் வண்டியை நிறுத்தும் போது பெண்கள் […]
நாளை பாலி பயணத்திற்கு கயல்விழி தயாராகிக் கொண்டிருக்கிறார். மகள் கலையரசி வெற்றிகரமாக உயர்நிலை 3ஐத் தொடர விருக்கிறார். மகன் காவியன் இரண்டு மாதங்களில் தேசிய சேவையில் சேரவேண்டும். விடுமுறை மாதம். டிசம்பர். இரண்டு மாதமாகவே கலை ‘பாலி, பாலி’ என்று புலம்பிக்கொண்டிருக்கிறார். கயல்விழி இந்தப் பயணத்தை ஏற்பாடு செய்வது முக்கியமாக கலையரசிக்காகத்தான். கயல்விழிக்கு முத்தையா என்பவர்தான் பயணமுகவர். புள்ளி வைத்தால் போதும். கோலம் அவர் பொறுப்பு. எங்கே தங்குவது? போக்குவரத்து ஏற்பாடுகள் […]
( 8 ) வணக்கம்ங்கய்யா….-கை கூப்பிச் சொல்லியவாறே ஒருவர் உள்ளே நுழைவதைப் பார்த்து பதில் வணக்கம் சொன்னான் இவன். ஐயா…கீழுத்து கிராமத்துலேர்ந்து வர்றேனுங்க…பக்கத்து வெங்கிமலைல ரெண்டு நாளா சரியான மழைங்க… நின்றுகொண்டே சொன்ன அவரை, முதல்ல உட்காருங்க….என்றான் இவன். இருக்கட்டுங்கய்யா…என்றவாறே பேச்சைத் தொடர்ந்தார் அவர். இந்த அலுவலகத்திற்கு வந்த நாள் முதல் கவனித்துக் கொண்டுதான் வருகிறான். வருகிறவர்கள் கிராமத்து மக்கள். ரொம்பவும் பயந்தவர்களாயும், மரியாதை கொண்டவர்களாயும், இருக்கிறார்கள். பொது ஜனம் அலுவலகங்களை அணுகும்போது அவர்களுக்கு ஏனிந்தத் தயக்கம்? […]