நீலன் வைத்தியர் நடு ராத்திரிக்கு எழுந்தார். பேய் உறங்கும் நேரம் அது. இவர் அசல் நீலன். காஸ்மாஸ் பிரபஞ்சத்தின் அங்கமான நம் புவியுலகின் ஒரே நீலன் வைத்தியர் இவர்தான். இவரை போலி செய்து அண்மையில் இறந்துபோனவர் ஆல்ட் எஸ் பிரபஞ்சத்து பிரதி நீலன். கசாப்புக் கடைக்காரராக இங்கே வந்து ராசியான வைத்தியராகப் பரபரப்பாக நடமாடுகிறவர் ஆல்ட் க்யூ பிரபஞ்சத்து பிரதி நீலன். ஆல்ட் க்யூ பிரதி நீலனுக்கு, அசல் நீலன் உயிரோடு இருப்பது தெரியாது. அவருக்கு […]
“அப்பா, நீ குளிக்கப் போகலாம்…” என்றவாறே வெளிப்பட்ட ரமேஷைப் பார்த்து ‘தலையை அழுந்தத் துடை’ என்றான். சென்ற வருடம்வரை இவன்தான் துடைத்துவிட்டுக் கொண்டிருந்தான். இப்பொழுதெல்லாம் வேண்டாம் என்கிறான். உடம்பைத் தொட்டுத் துடைத்தால் கூச்சப்படுகிறான். ஒரு நாள் அவன் தலையில் கைவைத்துப் பார்த்தபோது, சொட்டச் சொட்ட ஈரம் தென்பட்டது. “இந்தத் தண்ணீர் அப்டியே தலைல இறங்கும்…சளி பிடிக்கும்…அதனால ஈரம் போகத் துடைக்கணும்…புரிஞ்சுதா?” – என்றவாறே நன்றாகத் துவட்டிவிட்டான். வேண்டாம் என்று சொல்லும்போது தினமும் எப்படித் துடைப்பது? அந்தச் சிறு […]
கர்ப்பூரம் நடுராத்திரிக்கு இரண்டு பிசாசுகளைக் கண்டான். அவன் படுக்கையில் அவன் தலைமாட்டில் ஒன்றும் கால்மாட்டில் இன்னொன்றுமாக துர்நாற்றம் வீசிக் கொண்டு இருந்தன அவை. அவற்றின் கண்கள் குழிந்திருந்தன. பாதி திறந்த இமைகளில் பீழை கனமாக ஒட்டியிருந்தது. வாய் தான் முழு துர்நாற்றத்துக்கும் காரணம் என்று தெரிய வாய் திறந்து வாச்சி வாச்சியாக நான்கு வரிசை மஞ்சள் பல் காட்டி ஏன்யா என்று ஒரு பிசாசு சத்தம் தாழ்த்தி அழைத்தது. கர்ப்பூரம் பின்னால் இருக்கிற யாரையோ கூப்பிடுகிறது […]
நான் வேணு. பொது யுகம் ஐயாயிரத்தில் பிறந்து சகல இனநல அரசில் குடிமகனாக உள்ளேன். அந்த சொற்றொடரை எடுத்து விடலாம். மீண்டும் முதலிலிருந்து தொடங்கலாம். நான் வேணு. இல்லை வாசு. அதுவும் இல்லை. நான் காசி. மாரி. ராஜு. சாமி. என்ன வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். பெருந்தேளரசர் ஆட்சி செய்யும் கோகர்மலை சார்ந்த விரிந்து பரந்து நீளும் நிலப்பரப்பில் வசிக்கும் சாதாரண குடிமகன் நான். நான் இருக்கும் நையாண்டி ராஜ்ஜியத்தின் ஏறுமாறும், கோமாளித்தனமும், அராஜகமும் பற்றி […]
பிடுங்கி நடப்பட்ட செடி, நட்ட இடத்திலேயே பூத்து, காய்த்து, கனிந்து வாழ்க்கையை முடித்துக் கொள்கிறது. ஒரு மரத்தில் பிறந்து, சிறகு முளைத்த குருவி, எங்கெங்கோ பறந்து திரிந்தாலும், ‘இந்த மரத்தில்தான் நான் சிறகுகள் பெற்றேன்’ என்று தேடி வருவதில்லை. ஆனால் மனிதன்? பிறந்த உடனேயே புலம்பெயர்ந்தாலும்கூட பிறந்தமண்ணைத் தேடிவந்து பார்த்துவிட்டுப்போக ஆசைப்படுகிறான். நான் 70ஐக் கடந்துவிட்டேன். என்னோடு பட்டம் விட்டவர்கள், பம்பரம் குத்தியவர்கள், கிட்டிப்புல்லு ஆடியவர்கள், கோலிக்குண்டு அடித்தவர்கள், குட்டையில் மீன் பிடித்தவர்கள், உதைத்தவர்கள், உதைபட்டவர்கள் […]
நீயும் படைக்கலாம். கடவுள் தேளரசரிடம் சொன்னார். கர்ப்பூரம் ஒவ்வொரு சொல்லாக உச்சரித்து ஒரு வினாடி அதிக மௌனத்தில் இருந்து அடுத்து உரக்க ஒரு தடவை கூறினான் – நீயும் படைக்கலாம். கடவுள் தேளரசரிடம் உரைத்தார். அடுத்து வேகம் கூட்டி ஒரு முறை சொன்னார் அதையே. அவை நிறைந்திருந்தது. நீலன் வைத்தியர் கிட்டத்தட்ட 4700 ஆண்டுகள் அவர் காலத்தைக் கடந்து நம் காலம் பொது யுகம் 5000க்கு வந்திருக்கிறார். பெருந்தேளார் விருப்பப்படி சகல நோயும் போக்கி […]
நாவல் தினை அத்தியாயம் முப்பத்தைந்து பொ.யு 5000 அதிகாரபூர்வமாக ஆல்ட் க்யூ பிரபஞ்சத்து கசாப்புக்கடைக் காரர் நீலன் மூலிகை மருந்து உருவாக்கி வெற்றி பெற்றது பெருந்தேளரசால் அறிவிக்கப்பட்டது. அது இப்படி இருந்தது – ஒரு வாரம் முன் துயிலரங்கத்தில் விழித்து எழுந்த வினாடி முதல் நீலன் மும்முரமாக ஆயுள் நீடிக்கும் மருந்து சஞ்சீவினி உருவாக்குவதில் இருக்கிறார். (மேலும்) பிரபஞ்சப் பேரரசர் பெருந்தேளர் அனைத்து உதவிகளும் அவருக்கு ஈந்து தன் […]
( 1 ) நினைத்தது போலவே அது தனக்கான அழைப்புதான் என்பது எதிர்வரிசைக் கேட்பிலிருந்து புரிந்தது கணேசனுக்கு. “சொல்லுங்க அழகேசன்…” “ஐயா, லோன் அட்வான்ஸ் போட்டிருக்கேன்யா…அது பணமாயிடுச்சான்னு….?” “இல்ல அழகேசன்…இன்னும் பில்லு டிரஷரி போகலை…இன்னைக்கி இல்லன்னா நாளைக்குப் போகும்…” “நாளைக்குள்ள கிடைச்சிதுன்னா நல்லாயிருக்கும்…பிறகு சனி, ஞாயிறு வந்திடுது…” “இவனுக்குள் கோபம் கிளர்ந்தது. ஒரு வேலை தன்னை மட்டுமே சார்ந்து இருந்தால் எந்த எதிர்பார்ப்பும் இன்றி உடனடியாகச் செய்து கொடுக்கலாம். ஆனால் அப்படியில்லையே? சம்பந்தப்பட்ட பிரிவு எழுத்தர், அலுவலர், […]
நாவல் தினை அத்தியாயம் முப்பத்துநாலு CE 5000 வைத்தியர் பிரதி நீலன் ஆல்ட் க்யூவில் இருந்து வந்திருக்கிறார். ஆல்ட் க்யூ அவர் வசிக்கும் பிரபஞ்சமாகும். நாம் இருக்கும் இந்தப் பிரபஞ்சம் காஸ்மோஸ் என்ற பெயர் கொண்டது. ஆல்ட் க்யூ, காஸ்மோஸுக்கு மாற்றுப் பிரபஞ்சமாகும். Alternate Universe. அங்கே மற்றொரு பெருந்தேளரசர், மற்ற குயிலி, மற்றொரு வானம்பாடி, மற்றொரு குழலன் இன்னும் கோடிகோடி உயிர்கள் ஆல்ட் […]
இரா முருகன் நீலன் மறைந்து விட்டார். நீலன் நீடூழி வாழட்டும். விடிகாலையில் குழலன் மின் செய்தி வாசித்தபடி தன் உடம்பைக் குளியலறைக்கு அனுப்பிச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது குயிலியின் மின்னஞ்சல் வந்தது. ஏமப் பெருந்துயில் மண்டபத்தில் உறக்கத்தில் இருப்பவர் நீலன் இல்லை என்பது குழலனுக்கும் வானம்பாடிக்கும் குயிலிக்கும் மட்டும் இப்போதைக்குத் தெரிந்த உண்மை என்பதால் நீலன் பற்றிய அனைத்துச் செய்திகளையும் இம்மூவரும் மட்டும் பரிமாறிக்கொள்வது நடப்பில் உள்ளது. அவ்வகையில் இன்றைக்கு விடிகாலையில் பெருந்தேளரசர் ஆணைப்படி குயிலி ஏமப் […]