author

மனுஷி கவிதைகள் —- ஒரு பார்வை ‘ முத்தங்களின் கடவுள் ‘ தொகுப்பை முன் வைத்து….

This entry is part 14 of 22 in the series 24 ஜனவரி 2016

1985 – ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் பிறந்தவர் மனுஷி . இவரது இயற்பெயர் ஜெயபாரதி. புதுவையில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுள்ளார். ‘ குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள் ‘ [ 2013 ] இவரது முதல் கவிதைத் தொகுப்பு. ‘ முத்தங்களின் கடவுள் ‘ இரண்டாவது தொகுப்பு. இவரது சில கவிதைகள் மனுஷ்ய புத்திரன் கவிதைகளின் தாக்கம் பெற்றுள்ளன. எளிமை , சுய சிந்தனை வழிப்புதுப் படிமங்கள் , புனைவு , காதல் , […]

மயூரா ரத்தினசாமி கவிதைகள் — ஒரு பார்வை

This entry is part 13 of 22 in the series 24 ஜனவரி 2016

மயூரா ரத்தினசாமி ‘ நெடுஞ்சாலையைக் கடக்கும் நத்தை ‘ என்ற கவிதைத் தொகுப்பைத் தந்துள்ளார். தலைப்பே வித்தியாசமானது; சிந்திக்க வைக்கிறது. இச்சொற்கள் உருவாக்கும் தொனி ஒருவித தவிப்பை வாசகன் மனத்தில் உருவாக்குகிறது. ” கவிதையெழுதுவதை அவஸ்தை என நான் உணரவில்லை. சமூகத்தின் மீதான . என் சுயநலம், என் வக்கிரம் மீதான என்னுடைய எதிர்வினை கவிதையாக உருக்கொள்கிறது எனலாம். ” என்கிறார் மயூரா இவரது கவிதைகள் அவசியமான சொற்கள் வழியாக நேர்த்தியான வெளிப்பாடு கொண்டவை. ‘ செகப்பு […]

செந்தி கவிதைகள் — ஒரு பார்வை

This entry is part 8 of 16 in the series 22 நவம்பர் 2015

    திருமங்கலம் அருகில் ஒரு பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வரும் செந்தி [ 1968 ] ‘ நினைவுகளுக்குப் பின் — ஹைக்கூ ‘ , ‘ பிறிதொன்றான மண் ‘ போன்ற கவிதைத் தொகுதிகளுக்குப் பின் இந்த ‘ தனித்தலையும் செம்போத்து ‘ தொகுப்பைத் தந்துள்ளார். இவர் ‘ குல சாமி கதை ‘ என்ற நூலையும் பதிப்பித்துள்ளார். இந்நூல் முதல் பதிப்பு வெளிவந்த அடுத்த ஆண்டே இரண்டாம் பதிப்பு வந்துள்ளது. இவர் கவிதைகள் […]

அதங்கோடு அனிஷ்குமார் கவிதைகள்

This entry is part 15 of 24 in the series 25 அக்டோபர் 2015

அதங்கோடு கிராமம் குமரி மாவட்டத்தில் உள்ளது. அனிஷ்குமார் ஆங்கில இலக்கியம் படித்துவிட்டுக் கல்லூரியில் பணிபுரிகிறார். ‘ நிறங்களின் பேராசைக்காரர்கள் ‘ என்ற தொகுப்பில் 51 கவிதைகள் உள்ளன. இவர் கவிதைகளில் சில புரியும். சில பூடகத்தன்மை அல்லது இருண்மை கொண்டு கடினமாக இருக்கும் பொதுவாக , சொற்கள் நெருக்கமாக அமைந்துள்ளன. சக மனிதர்களை விமர்சிக்கும் உள்ளடக்கம் கொண்ட கவிதைகள் சில உக்கிரம் மிக்கவை ! ‘ விலங்கிடும் விலங்குகள் ‘ மனிதக் குணக்கேடுகளைக் காட்டும் விமர்சப் பாங்கானது. […]

அ. ரோஸ்லின் கவிதைகள் — ஒரு பார்வை

This entry is part 17 of 24 in the series 25 அக்டோபர் 2015

  தமிழில் முதுகலை முடித்து மதுரை மாவட்டத்தில் ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார் அ. ரோஸ்லின். ‘ அழுகிய முதல் துளி ‘ பெண் எனும் மழை ‘ , ‘ மஞ்சள் முத்தம் ‘ என மூன்று கவிதைத் தொகுப்புகளைத் தந்துள்ளார். செறிவான நடை கொண்ட கவி மொழிக்குச் சொந்தக்காரர். புதிய புதிய சொற்சேர்க்கையால் சுய நடை இவர் கவிதைகளில் முன்நிற்கும் நல்லியல்பாக உள்ளது. புத்தகத்தின் தலைப்புக் கவிதை ‘ மஞ்சள் முத்தம் ‘ […]

அ. வெண்ணிலா கவிதைகள் ‘ நீரில் அலையும் முகம் ‘ தொகுப்பை முன் வைத்து….

This entry is part 17 of 23 in the series 11 அக்டோபர் 2015

  ‘ நீரில் அலையும் முகம் ‘ தொகுப்பின் கவிதைகளுக்குத் தலைப்பு இல்லை [ சில கவிதைகளுக்குத் தலைப்பு இருப்பதுதான் சிறப்பு ] . வெண்ணிலா கவிதைகள் எளியவை , நேர்படப் பேசுகின்றன. யதார்த்தம் பளிச்சிடும் இடங்கள் பல. மனைவியைக் கணவன் எப்படி எழுப்ப வேண்டுமென்று சொல்கிறது ஒரு கவிதை. மெல்ல உதடு தொட்டு முத்தமிட்டு , தலையை வருடி அல்லது முகத்தோடு முகம் வைத்து , விரல் பிடித்து நெட்டி எடுத்து என்றெல்லாம் ‘ ஆப்ஷன்ஸ் […]

கவிதாவின் கவிதைகள் —- ‘ என் ஏதேன் தோட்டம் ‘ தொகுப்பை முன் வைத்து ……

This entry is part 3 of 23 in the series 11 அக்டோபர் 2015

யாழ்ப்பாணத்துக்காரரான கவிதா தற்போது வசிப்பது நோர்வேயில். இவர் நாட்டியத் தாரகையாகவும் தன் கலைப் பயணத்தைத் தொடர்கிறார். ‘ பனிப்படலத் தாமரை ‘ இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு ; இது இரண்டாவது, இதில் 40 கவிதைகளுக்குமேல் உள்ளன. அழுத்தமாகச் சுயம் பேசும் நடை ! பல இடங்கள் கருத்து வெளிப்பாடாக நின்றுவிடுகின்றன. கவிமொழி கூடி வரவில்லை. ‘ சகலமும் நான் ‘ என்ற கவிதையில் சுயம் முன் நிற்கிறது. தன்னம்பிக்கையின் வீச்சாகக் கவிதை தொடுக்கப்பட்டுள்ளது. சூரியனாக , […]

இளங்கோ கிருஷ்ணன் கவிதைகள்

This entry is part 5 of 22 in the series 27 செப்டம்பர் 2015

கோவையில் வசித்து வரும் இளங்கோ கிருஷ்ணன் [ இயற்பெயர் ; பா. இளங்கோவன் ] வரி ஆலோசகராகப் பணிசெய்து வருகிறார். ஃறிணை என்ற பெயரில் கவிதைகள் , கட்டுரைகள் எழுதியுள்ளார். ‘ பட்சியன் சரிதம் ‘ இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு. இதில் 43 கவிதைகள் உள்ளன. இவரது கவிதை இயல்புகள் [ 1 ] புனைவு [ 2 ] எல்லாவற்றையும் கவிதையாக்க விரும்பும் ஆர்வம். [ 3 ] வித்தியாசமான சிந்தனைகள் எனலாம். புத்தகத்தின் […]

அன்பாதவன் கவிதைகள் – ஒரு பார்வை

This entry is part 18 of 24 in the series 13 செப்டம்பர் 2015

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் ‘ தனிமை கவிந்த அறை ‘ கவிதைத் தொகுப்பை எழுதிய அன்பாதவன் [ இயற்பெயர் ஜ .ப அன்புசிவம் ] விழுப்புரத்துக்காரர். பல இலக்கியப் பத்திரிகைகளில் எழுதியுள்ளார். பல நூல்கள் எழுதியுள்ளார். பல பரிசுகள் பெற்றுள்ளார். 96 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தில் பல கவிதைகள் உள்ளன. தனிமை , மெளனம் , காதல் , மரணம் போன்ற பாடு பொருட்கள் அவற்றின் மென்மையான பரப்புகளில் கவிமணம் வீசி அழகாய்ப் பூத்து நிற்கின்றன. ‘ மவுனவெளி […]

த. அறிவழகன் கவிதைகள்

This entry is part 10 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் விருத்தாசலம் வட்டம் வெளிக்கூனங்குறிச்சி என்ற ஊர்க்காரர் அறிவழகன். ‘ போக்குமடை ‘ என்ற கவிதைத் தொகுப்பில் கிராமத்து அழகையும் உயிர்த் துடிப்புள்ள வாழ்க்கையையும் பதிவு செய்துள்ளார். திரைப்படத் துறையில் இருக்கும் இவர் கவிதைகள் யதார்த்தப் போக்கில் மனிதம் பேசுகின்றன. மண்மணம் வீசும் தொகுப்பிது ! ‘ வெட்டவெளிச் சாமி ‘ கிராமத்துத் தெய்வத்தைப் பற்றிப் பேசுகிறது. அவர் எப்படிப்பட்டவர் ? உருட்டு முழி முரட்டு மீசை கொடுவாக் கத்தி கனத்த தேகத்துடன் ஊருக்குள் யாரையும் […]