author

ஓடிப் போன பெண்கள்

This entry is part 4 of 4 in the series 28 ஜனவரி 2024

ஹிந்தியில்  : ஆலோக் தன்வா தமிழில் : வசந்ததீபன் _______________________________ ஒன்று ______________ வீட்டின் சங்கிலிகள் எவ்வளவு அதிகமாக காணப்படுகின்றன ?  எப்போதும் வீட்டிலிருந்து ஏதாவதொரு சிறுமி ஓடிப்போகிறாள்?  என்ன அந்த இரவின் நினைவு வந்து கொண்டிருக்கிறதா?  அது பழைய சினிமாக்களில் அடிக்கடி வந்து இருந்தது எப்போதும் ஏதாவதொரு சிறுமி வீட்டிலிருந்து ஓடிப் போயிருந்தாளா?  மழைக் காலத்தினால் வீழ்ந்த அந்தக் கல் விளக்குத் தூண் வெறுமனே கண்களின் அமைதியின்மை காட்டும் அதிகமாக  அதனின் ஒளியா?  மற்றும் அந்த […]

எனக்குள்

This entry is part 1 of 2 in the series 21 ஜனவரி 2024

ஆர் வத்ஸலா சோகங்களை  பகிர்ந்து கொள்ள இனி யாரும் இல்லை தான்  வெற்றிகளை  கை தட்டிக் கொண்டாட என்னோடு இனி யாரும் இல்லை தான்   மரங்களின் குளியலை இலைகளின் ஆட்டத்தை உதிரும் பூக்களால் சிலிர்த்து அடங்கும் வேர்களின் மெல்லதிர்வை காற்றின் கவிதையை என்னுடன் சேர்ந்து ரசிக்க இனி யாருமில்லை தான் கண்ணீரில் பார்வை மங்கியிருப்பது உண்மை தான் ஆனாலும்  உயிர்த்திருக்கிறேன் நான் எனது ரசனையின் கதகதப்பில்

புதுமைப்பித்தன் நினைவு விருதுகள் – 2022

This entry is part 2 of 6 in the series 14 ஜனவரி 2024

புதுமைப்பித்தன் நினைவு விருதுகள் – 2022 விளக்கு இலக்கிய அமைப்பு (அமெரிக்கா) புதுமைப்பித்தன் நினைவு விருதுகள் – 2022 விருது பெறுபவர்கள் : 1. பொ.வேல்சாமி – புனைவற்ற படைப்புகள் 2. சு.தமிழ்ச்செல்வி – புனைவிலக்கியம் வரவேற்பு : வாஷிங்டன் சிவா விளக்கு அறிக்கை, விருது வழங்குதல் : மு.சுந்தரமூர்த்தி விளக்கு அமைப்புச் செயலர் சு.தமிழ்செல்வி படைப்புகள் பற்றி அசதா இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் இரா.காமராசு பொ.வேல்சாமி பங்களிப்புகள் பற்றி காளிங்கன் கடற்கரய் மத்தவிலாச அங்கதம் யுகபாரதி ஏற்புரை […]

புத்தாண்டில் இளமை

This entry is part 4 of 4 in the series 7 ஜனவரி 2024

ஆர் வத்ஸலா தீர்மானங்கள்  தாண்டாது ஒரு நாள் கூட எனத் தெரிந்தும் செய்த நாட்கள் போய் விட்டன துரோகங்களுக்காக கொதித்த நாட்கள் போய் விட்டன நம்பிய கட்சியும் தெரிந்த குட்டையில் ஊறியது தான் என்று  ‘மைக்’கில் குரலோங்கிய நாட்கள் போய் விட்டன அனுபவங்கள் கனக்கின்றன அவற்றை தூக்கி போட்டு மிதித்து மீண்டும் போராடும் மன இளமை தா தாயே பராசக்தி!

ஒருவருள்  இருவர்

This entry is part 3 of 4 in the series 7 ஜனவரி 2024

ஆர் வத்ஸலா அடிப்படை மரியாதை அதீத புரிந்துணர்வு பொறுப்புணர்வு மன முதிர்ச்சி என ஒரு நல்ல மருத்துவருக்கு உரித்தான அனைத்து குணங்களையும் கொண்டிருக்கிறாய் நீ உனது பணியிடத்தில் வீடு திரும்பியதும் வெள்ளை கோட்டுடன் அவற்றையும் மாட்டிவிடுகிறாய் ஆணியில்