Posted inகவிதைகள்
உள்ளிருந்து உடைப்பவன்
சேயோன் யாழ்வேந்தன் வைத்தது யார்? அடைகாத்தவள் எங்கே? வளர்ந்துவிட்டேனா இல்லையா? வெளியில் காத்திருக்கும் அலகு யாருடையது? எதுவும் தெரியாது. உள்ளிருந்து உடைக்கிறேன் - அழுகிவிடக்கூடாதென்ற பயத்தில்! seyonyazhvaendhan@gmail.com