பணம்

This entry is part 8 of 28 in the series 29 ஏப்ரல் 2012

  தெலுங்கில் : ரங்கநாயகம்மா தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com கோடி! கோடி!! என்ன கோடி? பணம்! சொத்து ! ரூபாய்க்கள் ! கோடி ரூபாய் !! வரதட்சிணை !! பெரியபடிப்பு படித்த அந்த இளைஞன் கேட்டான் வரதட்சிணை ! கோடி ரூபாய் வரதட்சிணை !! வியப்பாக இல்லையா? “வியப்பு எதற்கு? கொடுப்பவர்கள் இருந்தால் கேட்பதற்கு என்ன வந்தது? ஒரு கோடி என்ன, இரண்டு கோடி கேட்கலாம்! நான்கு கோடிகள் கூட கேட்கலாம்! நூறு கோடியும் […]

சாதி மூன்றொழிய வேறில்லை

This entry is part 7 of 28 in the series 29 ஏப்ரல் 2012

சாதி பேதங்கள் உயர்வு தாழ்வுகள் பற்றிப் பேசுவது நல்லது தான். எல்லோருக்கும் மிகவும் பிடித்த விஷயம் என்ற ஒன்றே போதுமே. ஆனால் சாதிக்குப் புதிய அளவிகளும் தேவையே. கட்டுரையாசிரியரின் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் மூன்று விதமான சாதிகள் தென்படுகின்றன. எந்த அடிப்படையில் மூன்று சாதிகளாகப் பிரிக்க இயன்றது என்பது அந்த அந்த சாதி பற்றிப் படிக்கும் போதே தெரிந்து விடும். அ.மனிதர் என்னும் சாதி ————————— நேர்மறையான அடையாளங்கள்: 1.தன்மானம் போற்றுவார். அதே போல் யாரையும் அவமானம் […]

முள்வெளி அத்தியாயம் -6

This entry is part 6 of 28 in the series 29 ஏப்ரல் 2012

இரண்டு கால் கட்டை விரல்களையும் இணைத்துக் கட்டியிருந்த கயிற்றை அருவாள் வெட்டியது. உடலின் மீது கட்டைகளை அடுக்கிப் பின் வரட்டிகளை அடுக்கினார்கள். நெய்ப் பந்தத்தை ஏந்தியிருந்த சிறுவனால் வரட்டிகள் மீது கற்பூரம் இருந்த இடம் எது என்று காண இயலவில்லை. ஒருவர் அவனைப் பின் புறத்திலிருந்து அணைத்துத் தூக்கிக் கொண்டார். கற்பூரத்தில் பந்தம் பற்றியதும் அது கொழுந்து விட்டு எரிந்தது. திரும்பிப் பார்க்காமல் ஒவ்வொருவராய் கொள்ளிடம் நோக்கி நடந்தார்கள். ராஜேந்திரனும் அவர்கள் பின்னேயே சென்றான். ஒவ்வொரு திக்கில் […]

குறுந்தொகையில் வழிபாட்டுத் தொன்மங்கள்

This entry is part 5 of 28 in the series 29 ஏப்ரல் 2012

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com பண்டையத் தமிழரின் வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டும் காலக் கண்ணாடியாக சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. அவற்றுள் சிறப்பு வாய்ந்த நூலாக விளங்குவது குறுந்தொகை ஆகும். இஃது எட்டுத் தொகையில் இடம் பெறும் அகநூல்களுள் ஒன்றாகும். இதில் கடவுளரைப் பற்றியும், கடவுள் வழிபாடு குறித்தும் பல்வேறு தொன்மக்கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இவை பழந்தமிழரின் சமய நம்பிக்கைகளை எடுத்துரைப்பனவாக உள்ளன. தொன்மம் – விளக்கம் தொன்மம் (Myth) என்பது பழமை […]

”கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார்”

This entry is part 4 of 28 in the series 29 ஏப்ரல் 2012

  சிவனை முழுமுதற்கடவுளாகக்கொண்டு வழிபடுவோர் தமிழ்ச்சைவர்கள். ’தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவருக்கும் இறைவா போற்றி!’ என்பது இவர்கள் கொள்கை. சைவ சித்தாந்த கருத்துக்களை விளக்கும் பதினான்கு நூல்களைப் இவர்கள் போற்றி வருகின்றனர்.  அவை: திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார் சிவஞானபோதம் சிவஞான சித்தியார் இருபாவிருபஃது உண்மை விளக்கம் சிவப்பிரகாசம் திருவருட்பயன் வினாவெண்பா போற்றிப்பஃறொடை கொடிக்கவி நெஞ்சுவிடுதூது உண்மை நெறி விளக்கம் சங்கற்ப நிராகரணம்   என்பனவாம்.   திருவெண்ணைநல்லூர் மெய்கண்ட தேவர், சிவஞான போதத்தையும்; அருணந்தி சிவாச்சாரியார், சிவஞான சித்தியார், […]

தாகூரின் கீதப் பாமாலை – 10 குழம்பிப் போன பயணி !

This entry is part 3 of 28 in the series 29 ஏப்ரல் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா களிப்புப் பூங்காவில் உலாவி வழி தவறிப் போன ஒரு குழம்பிய பயணி நீ ! அங்கே போகிறாய் ! அந்தோ எங்குதான் போகி றாயோ ? உன்னை நீயே சுருட்டித் தூக்கிச் செல்கிறாய் பித்துடன் கண் மூடிய வண்ணம் ஆவேசம் மிகுந்து ! அந்தோ அப்படி நீ வேண்டி விரும்பும் அந்த வேற்று மனிதன் யார் ? எங்கே உன்னிதயம் அலைந்து திரிவது ? […]

சே.ரா.கோபாலனின் “ மை “

This entry is part 2 of 28 in the series 29 ஏப்ரல் 2012

கத்தரி வெயிலின் கொடுமையைக் கொஞ்சம் நீக்கும், கடல் காற்றை அனுபவித் திருக்கிறீர்களா? அப்படி ஒரு சுகமான அனுபவத்தைக் கொடுத்தது “ மை” படம். ஒரு பொட்டலம் சோறு கிடைக்குமா என்று ஏங்கும் ராப்பிச்சையை, உள்ளே அழைத்து விருந்து படைக்கப்பட்டால், எப்படி உணருவான்? அப்படி உணர்ந்திருப்பான், படம் பார்த்த பதினைந்து ரசிகர்களில் ஒவ்வொருவனும்! சுனாமி சுப்பு என்கிற சுப்பிரமணி, பானுமதி, இருவரும் பால்ய வயது நண்பர்கள். பானு படித்து, சொந்தமாக ஒரு தொலைக்காட்சி சேனல் வைத்திருக்கிறாள். சமூகம் சார்ந்த […]

ரங்கராட்டினம்

This entry is part 1 of 28 in the series 29 ஏப்ரல் 2012

  காலையில் ஜம்மென்று வீட்டிலிருந்து கிளம்பிப் போன மணிஅய்யர்  ..வருவதற்குள் மிதுக்க வத்தல் மாதிரி துவண்டு போய் வீட்டுக்குள் நுழைந்தார்.இந்த உடம்புக்குள்ள கடல் போன்ற பரந்த மனசு இருப்பது யாருக்குமே தெரியாது… என்னன்னா…இப்படி வேகாத வெய்யில்ல அலைஞ்சுட்டு வரேளே…..உடம்பு என்னத்துக்காறது….ஒருநாளப்போல இதற்கு வா…இங்க வா…அங்க வா…ன்னு அவா உங்களை இப்படி….அலைக்கழிக்கறாளே..! வயசானவாளாச்சேன்னு  கொஞ்சம் கூட கரிசனம் இல்லாத…அக்ரீமென்ட்டைப்  போட்டோம்மா…. கையெழுத்தப் வாங்கினோமான்னு விடாமல்…வெய்யில் எல்லாம் உங்க  தலைலன்னு எழுதி வெச்சா மாதிரி….! வாங்கோ…. நாழியாறது….வந்து சாப்பிடுங்கோ…பவானி மனைப்பலகை யைப் போட்டு…இலையை […]