நாவல்  தினை               அத்தியாயம் ஒன்பது               CE 5000-CE 300

This entry is part 6 of 7 in the series 9 ஏப்ரல் 2023

                                                                                                      அடிவாரத் தரிசு பூமி. எல்லோரும் தினம் புழங்கினாலும் யாருக்கும் நினைவு இல்லை. கருங்கல் ஒற்றைச் சிற்பமாக நிற்கும் மலையின் கீழே ஒரு காலத்தில் சூரிய வெளிச்சம் உள்ளே வராமல் மறைத்த அடர்ந்த பெருமரத் தோப்புகளும் பரந்து பந்தலித்த கொடிகளும், மூலிகைச் செடிகளும்   வளர்ந்து செழித்திருந்ததை யாரும் நினைவு கொள்வதில்லை.  கேட்டால், அறுதப் பழசுக் கதை என்பார்கள். நடப்பில் இருக்கும் காலத்துக்கு ஆயிரம் வருடம் முற்பட்டது என நம்பிக்கை. மலையின் செழிப்பை எடுத்தோதிக் கொண்டு தினம் […]

நமது இந்த இப்பிறவி பற்றி — ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ வழியாக….

This entry is part 5 of 7 in the series 9 ஏப்ரல் 2023

                                                        ப.சகதேவன்                                  நமது இப்பிறவியை மறுபரிசீலனை செய்யச் சொல்கிறது  லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில்  தமியாளம் மொழியில் வெளிவந்துள்ள ’நண்பகல் நேரத்து மயக்கம்’ இந்தப் பிறவியில் நமது அடையாளமாக இருக்கின்ற எல்லாமும் கேள்விக்குள்ளாக்கப் படுகின்றன. நமது மொழி, இனம், மரபுகள், அந்நியரோடுள்ள உறவுகள் என எல்லாவற்றுனுள்ளும் நிகழும் குழப்பம்- ஒரு வரலாற்றுக் குழப்பம் சினிமா மொழியில் சொல்லப்படுகிறது.               இப்படத்தின் கதை நிகழ்வுகள் தமிழ்நாட்டில் பழனி- ஒட்டஞ்சத்திரத்திற்குஅருகிலுள்ள ஒரு கிராமத்தில் நடக்கின்றன.. அங்கிருந்து […]

புள்ளி

This entry is part 4 of 7 in the series 9 ஏப்ரல் 2023

உங்களுக்கு தெரியுமா? ஆணைப்படைத்த  ஆணவ இறைவன் அகமகிழ்ந்து கொள்ளுமுன்னே அதிரடியாய் பதிலடியாய் பெண்ணே முதலில் வந்து வாசல் திறந்தாள். இவளின் தொப்பூள் கொடியே இன்னும்  அறுபடவில்லை அறுபட‌வில்லை அந்த இறைவனின்  தொப்புள் புள்ளியில்.

அணுமின்னுலைக் கதிரியக்கக் கழிவுகள் நீண்டகாலப் புதைப்பும், கண்காணிப்பும் -1

This entry is part 3 of 7 in the series 9 ஏப்ரல் 2023

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா நாம் எல்லோரும் புரிந்து கொள்ள முடியாத, மிகவும் சிக்கலான இந்தப் பூகோளத்தில் புகுத்தப்பட்டு இருக்கிறோம். மாபெரும் முழுவடிவக் கூண்டின் ஒரு சிறு பகுதியாக மனித இனத்தை எடுத்துக் கொண்டால், சூழ்வெளிக்கு என்ன என்ன தீங்கெல்லாம் நாம் விளைவிக்கிறோமோ, அவை யாவும் நம்மீதே மீண்டும் விழுகின்றன என்பதை நாம் எப்போதும் மறந்துவிடக் கூடாது ! ஏனென்றால் நாம் சூழ்மண்டலத்தின் இறுகிய பிடியிலிருந்து நம்மை என்றும் பிரித்துக் கொள்ளவே முடியாது ! […]

பனித் தூவல்

This entry is part 2 of 7 in the series 9 ஏப்ரல் 2023

                                                                                                                             மீனாட்சி சுந்தரமூர்த்தி.                                                                                                                                                                                                                              பனித் தூவல் வாங்கி வியர்த்திருந்தன தோட்டத்து ரோஜாக்கள். வெற்றிலைக் கொடிக்குப் பக்கத்தில் தன் பங்குக்கு மதிலை வளைத்திருந்த நீலச் சங்குப் பூக்களின்  பனித்துளிகள்  அருகிலிருந்த வாழை இலையில் வழிந்தோடி சொட்டு சொட்டாக  விழுந்து கொண்டிருந்தன. ஐந்து மணிக்கே எழுந்து விட்ட பாமா குளித்து முடித்து, லலிதா நவரத்தினமாலை  பாடி விளக்கேற்றி  வழிபாடு முடித்து விட்டாள். கூடத்து கடிகாரத்தில் சிட்டுகள் மூடி திறந்து ஆறுமுறை ஒலித்து விட்டு உள்ளே சென்று […]

தாய் மண்

This entry is part 1 of 7 in the series 9 ஏப்ரல் 2023

                                                                                                                                               ம.மீனாட்சிசுந்தரம் நாளும் பொழுதும் மகன் கார்த்திக் நினைப்பிலேயே கழிகிறது. அவன் அமெரிக்கா சென்ற நாட்களின் எண்ணிக்கை வாரங்கள் மாதங்கள் என மாறி வருடங்கள் ஆறு ஆகிவிட்டது. ஓரிரு வருடங்களில் வந்துவிடுகிறேன் என அவன் சொன்ன வார்த்தைகள் மதிப்பற்றுப் போயிற்று. மூன்றாண்டுகள் கழித்து அவன் விரும்பிய, அவனோடு பணிபுரியும்  கவிதாவை திருமணம் செய்வதற்காக இங்கு வந்தான். அதுவும் கவிதாவின் பெற்றோர் சம்மதமில்லாமல். அதற்கு  மறுப்பேதும் தெரிவிக்காமல் அவனது விருப்பப்படி திருமணம் செய்து அனுப்பிவைத்ததையும் நினைத்துப் பார்த்தாள் […]

நிற்பதுவே நடப்பதுவே!

This entry is part 7 of 7 in the series 9 ஏப்ரல் 2023

                                       உஷாதீபன் (ushaadeepan@gmail.com).             என்னாங்க…நிறையத் தண்ணி இருக்கிறதாப் பார்த்து வெட்டுங்கன்னா….இப்டி சீவிக் கொடுக்குறீங்களே? …. ஒரு டம்ளர் அளவு கூட இல்ல….             சின்னாண்டி தலையைக் குனிந்தவாறே நின்றான். சமயங்களில் அவன் கணக்கு தப்பி விடுகிறதுதான். அது பிரச்னையாகிவிடுகிறது. ஒன்றும் சொல்லாமல் இளநீரை இரண்டாய் வெட்டிப் பிரித்தான். ஒரே வழுக்கை.   பார்த்ததும் திக்கென்றது. வழுக்கையாய் இருந்தால் நீர் அதிகம் இருக்க வேண்டும்.  அதுவுமில்லை.             ஆனால் இளநீர் என்று வெட்டினால் முப்பது ரூபாய்தான். ஒன்று […]